Categories
mooka pancha shathi one slokam

அம்பாள் மடியில் கணபதி

மந்தஸ்மித சதகம் 42வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாள் மடியில் கணபதி

कामाक्षि स्मितमञ्जरीं तव भजे यस्यास्त्विषामङ्कुरान्
आपीनस्तनपानलालसतया निश्शङ्कमङ्केशयः ।
ऊर्ध्वं वीक्ष्य विकर्षति प्रसृमरानुद्दामया शुण्डया
सूनुस्ते बिसशङ्कयाशु कुहनादन्तावलग्रामणीः ॥

One reply on “அம்பாள் மடியில் கணபதி”

அம்பாளின் புதல்வன் கணபதி அவள் மடியில் படுத்துக்கொண்டு,
கூச்சமின்றி ஸ்தன்ய பானம் செய்கிறார்! இது குழந்தைகளுக்கு
அம்மாவிடம் உள்ள சலுகை! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது
தாயார் தன் குழந்தையை அணைத்து மலர்ந்த புன்னகையுடன்
நோக்குவதும் உலக இயல்பு!
இங்கு லோக மாதாவான காமாக்ஷி தன் குழந்தையின் முக
மண்டலத்தை அன்புடன் பார்த்து புன்னகை செய்கிறாள்!
அந்த புன்சிரிப்பினொளிக் கற்றைகள் தாமரைத் தண்டு போல்
தோற்றமளிக்க கணபதி தன் துதிக்கையால் இழுத்துப் பார்க்கிறார்!
பொதுவாகவே யானைக்கு தாமரைத் தண்டில் ப்ரியம் அதிகம்!!
அதனால் தாமரைக் குளத்திலிறங்கி விளையாடுவது சகஜம்!

இதே கருத்துள்ள பாடல் ஸௌந்தர்யலஹரியில் 72, 73 வது
ஸ்லோகங்களில் காணலாம்.
அம்பாள் ஸ்தந்ய பானம் செய்யும் வினாயகரும்,குமரக்கடவுளும்,
ஸ்த்ரீ சங்கமம் அறியாத யௌவன சுகமறியாத என்றும் இளமைப்
பருவத்தில் இருப்பதாக ஆசார்யாள் இங்கு சொல்கிறார்!

ஸாதாரன மனிதக்குழந்தைகள் ஸ்தன்ய பானம் செய்து
பால்யத்திலிருந்து, இளமை முதலிய பல கட்டங்களைத்
தாண்டி பருவ மாறுதல்கள் அடைபவராவார்கள். ஆனால்
அம்பாள் பாலை அருந்திய இவ்விருவரும் இந்த பருவ
மாற்றங்களேதுமின்றி, மோக்ஷ சாதனமென்ற அமிர்தம்
அல்லவா பருகினார்கள்!
ஸித்த லக்ஷ்மி என்ற பத்னியை கணபதியும், தெய்வயானை
என்ற பத்னியை குமரக் கடவுளும் மணந்தார்கள் ஆனாலும்
ப்ரம்மசாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் இன்னும்
குழந்தையாகவே எனும்பொருள்பட ஆசார்யாள் சொல்கிறார்!

ஏன்றும்மாறாத இளமையுடன் அம்பாளிருக்கிறாள்!! ஸஹஸ்ர நாமா
வயோவஸ்தா விவர்ஜிதா என அம்பாளை அழைக்கிறது! மாறாத இஅளமை!
அதேபோல்அவள்குமாரர்களும்மாராத இளமையுடன் இருக்கிறார்கள்

கணபதி தன் துதிக்கையால் அவள்புன்சிரிப்பை தாமரைத் தண்டென இழுப்பது
குழந்தைகள்பால் குடிக்கும்போது செய்யும் சேட்டையைக் குரிப்பிடுகிறது !

இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தால் பிறந்த குழந்தைக்குப் பால்
அற்றுப் போனால் அமுதம் போல்பால் பெருகுமென்பது சத்ய வாக்கு!
ணான் இதை சில பெண்களுக்கு கூறி அவர்கள் பலனடைந்தார்கள்
என்பதைசொல்லவும் வேண்டுமோ?
மிக அழகான அர்த்தம் பொதிந்த ஸ்லோகம்! அழகான விரிவுரை!
கணப்தியின் வ்யாக்யானம் மிக அருமை!!

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.