Categories
mooka pancha shathi one slokam

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே

ஆர்யா சதகம் 69வது ஸ்லோகம் பொருளுரை – பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே

கிம் வா ப²லதி மமான்யை: பி³ம்பா³த⁴ரசும்பி³ மந்த³ஹாஸமுகீ² । ஸம்பா³த⁴கரீ தமஸாமம்பா³ ஜாக³ர்தி மனஸி காமாக்ஷீ॥ 69 ॥

இது ஆர்யா சதகத்துல 69வது ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துக்கு நான் முன்னையே அர்த்தம் சொல்லிருக்கேன். இன்னிக்கு இன்னும் இத ஒண்ணு ரெண்டு விதமா புரிஞ்சுக்கலாம் அப்படின்னு தோணித்து.

“பி³ம்பா³த⁴ரசும்பி³மந்த³ஹாஸமுகீ²” – கோவைப்பழம் போன்ற உதடுகளில் மந்தஹாசத்தோடு விளங்கும் காமாக்ஷியினுடைய முகம்

“ஸம்பா³த⁴கரீ தமஸாமம்பா³” – அஞ்ஞான இருளை போக்கி கொண்டு “ஜாக³ர்தி மனஸி” –  என் மனசில் விளங்கும்போது

“கிம் வா ப²லதி மமான்யை” – மத்தவாளால   எனக்கு என்ன ஆக வேண்டியிருக்கு அப்படின்னு ஒரு ஸ்லோகம்.

இது அபிராமி பட்டர்  அப்படித்தானே அம்பாளோட முகத்தை தியானம் பண்ணிண்டு இருக்கும்போது ராஜா வந்து இன்னிக்கி என்ன திதி அப்படின்னு கேக்கறான். ராஜா வரும் போது, இவர் அபிராமி பட்டர் அம்பாளோட த்யானத்துலயே மூழ்கி இருக்கார்.அவர், கோவிலுடைய பஞ்சாங்க படனம் அவருடைய காரியம்.ஏதோ எங்கேயும்  வேண்டாதவா இருப்பாளே யாராவது, அவா இவன் ஒரு சோம்பேறி பணத்தை வாங்கிண்டு ஒண்ணுமே பண்றது கிடையாது. எப்போ பாத்தாலும் ஒக்காந்துண்டு ஏதோ ஜபங்கள் பண்ணிண்டு இருக்கான் அப்படின்னு சொல்லிடறா ராஜாகிட்ட. ராஜா அதனால அவர்கிட்ட இன்னிக்கி என்ன திதின்னு கேக்கறார். அவருக்கு அம்பாளோட திருமுகம் மனசுல பூர்ண சந்திரனை போல “ராகாசந்த்³ரஸமானகாந்திவத³னா”அப்படின்னு ஜபிச்சிண்டு இருப்பார் போலிருக்கு , அதனால இன்னிக்கி  பௌர்ணமின்னு சொல்லிடறார் அமாவாசை அன்னிக்கி. ராஜாக்கு கோபம் வரது . அப்புறம் அம்பாள் தன்னுடைய காதுல இருந்து தோட எதுத்து சாயங்காலம் ஆன ஒடனே வானத்துல  போடறா. அது பௌர்ணமி சந்திரனா எல்லாருக்கும் காட்சி கொடுக்கறது. ராஜா அவர நமஸ்காரம் பண்ணறான். அந்த மாதிரி ” கிம் வா ப²லதி மமான்யை “.

ஸ்ரீதர ஐயாவாள் சரித்திரத்தை “ஏணிப்படிகளில்  மாந்தர்கள் ” ல எழுதற போது சிவன் SAR கடைசியா ஒரு வரி எழுதியிருப்பார். “இப்பேற்பட்ட மஹான்கள் தங்களுடைய அந்தஸ்தை வெளிக்காண்பிக்காமல் இருந்தாலும்  அடக்கத்தை காண்பிக்க தேவையில்லாமல் இருப்பார்கள்”    அதாவது spiritual status அத வந்து அவா யாருக்கும் prove பண்ண வேண்டியதில்ல. ஏன்னா அது வந்து, அவா அம்பாளோட த்யானத்துல தினமும் ஒரு லக்ஷம் சிவ நாமா ஜபம் பண்ணி தெய்வீக பாசத்துல ரொம்ப சித்தம் தெளிஞ்ச ரொம்ப ஒசந்த நிலைல இருக்கார்.பகவானுடைய திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமியோட ஒண்ணா கலந்த மஹான் அவர்.அதனால அவருக்கு இந்த உலகத்துல யார்கிட்டயும் எதுவும் prove பண்ணணும்கற அவசியம் இல்ல. ஏதோ ஒரு சில பக்தர்கள் அவர நமஸ்காரம் பண்ணி அனுக்கிரஹம் பெற்று கொண்டு போவார்கள் பாக்கியசாலிகள்.ஆனா அவா அந்த அடக்கத்தை காமிக்க வேண்டியது இல்ல அப்டின்னு சொல்றார்.

இந்த வரி எனக்கு ஏன் ரொம்ப பிடிக்கும்னா ஸ்வாமிகள் அந்த மாதிரி இருந்தார் . ரொம்ப அவர் எப்பவுமே பாகவதத்தை படிச்சிண்டு மஹான்கள் சரித்திரத்தை பேசிண்டு ரொம்ப அத நெனைச்சு உருகிண்டு இருப்பார்.ஒரு கொழந்தையாட்டம் இருப்பார். அவாளெல்லாம் பத்தி பேசும்போது ரொம்ப பஹுமானத்தோட பேசுவார் . அப்போ நமக்கு அவர் எவ்ளோ humble னு தெரியும். மஹாபெரியவா பத்தி பேசும்போதோ சிவன் SAR பத்தி பேசும்போதோ,மஹான்கள் பத்தி பேசும்போது  ரொம்ப humbleஆ  பேசுவார்.ஆனா உலகத்துல யார்கிட்டயும் அடக்கமா நடந்துக்க முயற்சியே பண்ண மாட்டார். ஏன்னா இங்க உலகத்துல எல்லாம் கொடுக்கல் வாங்கல் , அவருக்கு கொடுக்கல் வாங்கல் எதுவுமே இருக்கல.யார்கிட்டயும் எதுவும் எதிர்பாக்கல. அவருக்கு வேண்டிய தேவைகளை குருவாயூரப்பன் மந்திரத்தில மாங்கா ‘விழுமா’னா , அவருக்கு விழுந்தது. அந்த மாதிரி நேரடியா பகவான் அவருக்கு பண்ணார். அவருடைய எளிய  தேவைகளை பூர்த்தி பண்ணறவா, அவர ரொம்ப தெய்வமா நெனைச்சு  அவருக்கு நமஸ்காரம் பண்ணி   ஏதோ கொஞ்சம் குடுத்துட்டு போனா. அந்த மாதிரி இருந்ததுனால அந்த “கிம் வா ப²லதி மமான்யை”ங்கறது  ஸ்வாமிகளுக்கு ரொம்ப பொருந்தும்கறதால எனக்கு இந்த ஸ்லோகம் ரொம்ப பிடிக்கும்.

இன்னிக்கி எனக்கு இன்னொண்ணும் தோணித்து, “கிம் வா ப²லதி மமான்யை” ங்கறதுக்கு, மத்தவாளால என்ன ஆக போறது அப்படின்னு எடுத்துண்டா மஹான்களோட சரித்திரத்துலேந்து அத புரிஞ்சிக்கலாம். சிவன் SAR புக்ல “பகவானை வழிபடுவதை தவிற மற்ற அணைத்தும் பயனற்றவை என்பதை உணர்ந்தார் தெய்வசாது” அப்படின்னு ஒரு வரி வரும்( பட்டினத்தார் பத்தி சொல்லும்போது) . இது தான் “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” ளோட  சாவினு எனக்கு தோணும். அவர் அவ்ளோ  தேவி மஹாத்ம்யம் எல்லாம் இந்த காலத்துல ரொம்ப துர்லபம், இந்த காலத்துல யாருமே தெய்வீக   உயரவே முடியாது அப்டினெல்லாம் சொல்றார். அது எல்லாமே இருந்தாலும் பகவானை வழிபடுவதை தவிற மற்ற அணைத்தும் பயனற்றவை. so இந்த  “அன்யை:”  அப்படிங்கறது மத்த எல்லாமே. காமாக்ஷி சரண தியானத்தை பண்ணி அதுல ருசி ஏறி ஏறி  அந்த அம்ருதத்தை பாணம் பண்ணும் போது மற்ற எந்த காரியமும் பயனற்றவை ,வேற எந்த பேச்சும் பயனற்றவை அப்டின்னு அந்த அளவுக்கு இதுல ருசி வந்துடுத்துண்னா தெய்வீகம்கறது  தானா வந்துரும்.

நம்ப புருஷ ப்ரயத்னம்னு ஒண்ணு பண்ணனும்னா இந்த மாதிரி பகவானை பஜனம் பண்ணி அந்த பஜனத்துல நமக்கு ருசி வர மாதிரி அந்த பஜனங்களே மஹான்களோட ஸூக்திகளை எடுத்துண்டோம்ன்னா ,இப்போ மூக கவி எடுத்து படிக்கறது, ஒரு நாராயணீயம் படிக்கறது,ஒரு பாகவத ராமாயணம் படிக்கறது  அந்த மாதிரி ரிஷிகளுடைய வாக்கு மஹான்களோட வாக்க படிச்சா அதுல அவா அதைத்தான் பிரார்த்தனை பண்ணறா.

மனசு உன்னோட பாதத்துல இருக்கணும் “மனோப்⁴ருʼங்கோ³ மத்க: பத³கமலயுக்³மே ஜனனி தே | ப்ரகாமம் காமாக்ஷி த்ரிபுரஹரவாமாக்ஷி ரமதாம்” அப்படினு தான் வேணடிக்கறா. அந்த மாதிரி அந்த வேண்டுதலை காது குடுத்து தான் ஆகணும் அம்பாள். அந்த மாதிரி பஜனத்தை பண்ணிண்டே இருந்தா மேலும் மேலும்  அதுல ருசி ஏற்படறதுக்கு ஹேதுவா இருக்கும். “கிம் வா ப²லதி மம அன்யை:” – அப்டிங்கறதுக்கு  வேற எதையும்   பண்ணாமல் உன்னுடைய மந்தஹாசத்தோடு கூடிய திருமுகத்தை மனசுல பார்த்துண்டு இருக்கறதுக்கு அனுக்கிரஹம் பண்ணும்மா அப்டின்னு ஒரு அர்த்தம் எடுத்துக்கலாம். அந்த நிலை வரத்துக்கு ரொம்ப நாள் ஆக போறது. “உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன் , பேர் வேண்டேன் , கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனியமையும், குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குலை கழற்கே கற்றாவின் மனம் போல கசிந்துருக  வேண்டுவனே ” அப்படின்னு மாணிக்கவாசகர் சொல்றார் திருவாசகத்துல . உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன் , பேர் வேண்டேன்,கற்றாரை யான் வேண்டேன் எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.படிச்சவாள் கிட்ட போய் அந்த ஸத்சங்கம் பண்றதோ ஜனங்கள் கிட்ட பேர் வாங்கறதோ , ஒரு உறவுன்னு கொஞ்சம் பேர் கிட்ட குலாவறதோ எதுவுமே வேண்டாங்கறார். அது ரொம்ப highest பற்றற்ற நிலைல தான் அத சொல்ல முடியும். நமக்கு இந்த பந்த பாசங்களோட இருக்கும்போது     இந்த “கிம் வா ப²லதி மம அன்யை:” ங்கறதுக்கு ஒரு அர்த்தம் பண்ணிக்கலாம். முடிஞ்சவரைக்கும் நமக்கு ஒரு உறவுமுறை  மனைவி மகவு ஒரு நண்பர்கள் ஒரு circle ஒரு சின்ன circle இருக்கு. அந்த circleல ரொம்ப நேர்மையே இல்லாம ரொம்ப பண பைத்தியமா அப்டி கயவர்களா இருக்கறவா யாரும் இல்லாம இருக்கணும் அப்படின்னு வேண்டிக்கலாம். அவாளால எனக்கு என்ன ஆகப்போறது எனக்கு வேண்டியதை அம்பாள் கொடுப்பா அப்படின்னு நம்ப கொடுக்கல் வாங்கல்ல இருந்தா கூட ரொம்ப துஷ்டாளா சேத்து விடாதம்மா என்ன அந்த துஸ்சங்கத்துலேந்து எடுத்து விட்டுடு, ஸத்சங்கத்துல என்ன வெச்சு வெய் அப்படிங்கற பிரார்த்தனைக்கு இந்த “கிம் வா ப²லதி மம அன்யை:” ங்கறத    வெச்சுக்கலாம்.

அபிராமி பட்டர் “விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்க பழிக்கே உழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரக குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே” அப்படின்னு சொல்றார். அந்த மாதிரி கூட்டு இல்லாம இருக்கணும் “கிம் வா ப²லதி மம அன்யை:”. அதனால எனக்கு உன்னுடைய அனுக்கிரஹம் போறும்.நம்பளே பாமரனா இருக்கோம், அதனால ரொம்ப பாபிகளோட சேர்ந்தா என்னிக்கு வேணா திரும்ப கீழ விழுந்துருவோம். அந்த மாதிரி ஆகிடாம இருக்கறதுக்கு இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிக்கலாம் அப்படின்னு தோணித்து.

நம: பார்வதி பதயே  !!! ஹர ஹர மஹாதேவா !!

சிவன் சார் புத்தகத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சரித்ரம்

One reply on “பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே”

அபிராமி பட்டர் சொல்கிறார் * பதத்தே உருகி உன் பாதத்தில் லே மனம்.பற்றி உந்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய், இனி ஒருவர் மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் முதல் தேவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே ” என அம்பாள் அபிராமியே தனது புகலிடமாக வேறெந்த சிந்தனையும் அடர்வராகத் தன்னை வெளிப்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல!
மூக பஞ்ச சதியின் பாதாரவிந்தா சதகம் இதனை உறுதிப்படுகிற து !
மூன்று தேவரும்.அம்பாள் பீடத்தில் தம் கிரீடத்தை வைத்து வழிபடுவதாக கூ றுவதால்,(சௌந்தர்ய லஹரி 25 வாது ஸ்லோகம்) எல்லா தேவங்களுக்கும் மேலானவள் என்பது தெளிவாகத் தெரிகிறது !!
இதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய மஹான்கள் ஶ்ரீதர் ஐயாவாள், ஸ்வாமிகள் போன்றோர்!
அழகான விளக்கத்துடன், ஸ்வாமிகள், ஶ்ரீதர் ஐயர்வாள் உதாரணத்துடன் சொல்லப்பட்ட பிரவசனம்!!
ஜய ஜய ஜகதம்ப சிவே …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.