Categories
mooka pancha shathi one slokam

என் மனோரத்னதை காக்கும் பெட்டகம் காஞ்சி காமாக்ஷி

ஆர்யா சதகம் 65வதுஸ்லோகம் பொருளுரை – என் மனோரத்னதை காக்கும் பெட்டகம் காஞ்சி காமாக்ஷி

3 replies on “என் மனோரத்னதை காக்கும் பெட்டகம் காஞ்சி காமாக்ஷி”

அம்பாள் தன் கண்களாலேயே மன்மதனை உயிர்ப்பித்து, சிவனையும் ஜெயிக்க வைக்கிறாள் ! அதனால் அவனுக்கு நிரம்ப கர்வம் வந்ததில் ஆச்சர்யம் இல்லை,. மன்மதனின் பொக்கிஷமாய காமாக்ஷியின் கஜானாவில் நம் மனதையும் போட்டி வைப்போம் என்று கவி நயம்பட உரைக்கிறார் ! மிக்க கவித்வமான ஸ்லோகம் இது !

அம்பாள் பாதங்கள் எப்படிப்பட்டது?
அடியார்களை மோகவலையில் வீழாமல் காக்கக் கூடிய கர்தவ்யம்
உடையது! அடியார்களின் மனம் என்னும் ரத்தினத்தை moahm என்ற திருடன் அபகரிக்க இரவும் பகலும்
காப்பாற்றுகிற உன் திருவடி செம்மை மீது ஆசை வைத்து, tதளிரின் ஒளியை விரைந்து படித்துச் செல்கிறது ஏன் ? பாதங்கள் என்ற தளிரின் சிவப்பு திருடிச் செல்வது போன்ற ஓர் தோற்றமே !
பாதத்தின் செம்மையை அழகு பட வர்ணிக்கிறார் கவி !
அம்பாள் சரணாரவிந்தம் எப்போதும் இலந்தலிராகவும், செம்மை நிறமுடையதாகவும்
வர்ணிக்கிறார்கள் கவிகள் !
எப்போதும் பாத தியானம் செய்தால் அங்கு அம்பாள் பிரசன்னமாவாள் !
நாக்குக்கும், மனதிற்கும் இனிமை! Positive energy என்று சொல்லக் கூடிய மனத் தெம்பு அளிக்கும் வல்லமை உடையது ! சுற்று ப்புற சூழ் நிலை தெய்வீகமாக மாறும்!!
நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அஸ்வினி தேவதைகள் கேட்டு ததாச்து (அப்படியே ஆகட்டும்) என மொழிககிறார்கள். அவளைத் துதித்தால் அதனைக் கேட்டு நல்ல ஆசி கூறுவர் !
என் வாழ்வில் பல போதுகளில் அனுபவித்திருக்கிறேன்!
பெரியவா சொல்வார் நீ எந்த வேலை செய்தாலும், இடைவெளி கிடைத்தாலும் நாமா ஜெபம் செய் ” என்று!
அப்போதான் கடைசி காலத்தில் இழைக்கும் வினை வழியே அடுங்காலன் எனை நடுங்க அழைக்கும்போது அஞ்சல் என அம்மை வருவாள் !
இராமாயணத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி ராம நாமாவைச் சொல்லி அம்பாளுக்கு நம்பிக்கை வந்ததை விளக்கும்போது மனம் நெகிழவைக்கிறது !
அருமையான விளக்கம் !
அம்பாள் சரணம்..

🙏 🙏 ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம்!

மனம் என்னும் மாயப்பொருள் ரத்தினமாக மாற்றம் பெற்று காமாக்ஷி என்னும் பெட்டகத்தில் காபந்து செய்யும் வகை அறிய பெற்றோம்.
மனம் என்பது ஒரு கண்ணாடி போல, பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
அதில் அம்பாள் சரண ரத்தினத்தைப் புதைத்து அம்பாள் நாமத்தை , பாராயணம் போன்ற துதிகளால், பக்தி புஷ்பம் கொண்டு அர்ச்சிக்க , அந்த மனம் அம்பாளுடைய குணங்களை பிரதிபலிக்கும் தன்மையாக மாறும்.
சீதைக்கு ஹனுமார் நமஸ்காரம் செய்து ஸ்ரீ ராம குணங்களைக் கூறும் இடம் மற்றும் அபிராமி அந்தாதி ஸ்லோகம் மேற்கோள் கேட்கும் போது மனம் தழு தழுக்கின்றது.
இந்த ரத்தினமான உரையை புத்தி என்ற அன்னை காமாக்ஷி அருளால் பேணி பாதுகாப்போம்.
🙏🙏

அம்பாளின்.பெட்டகத்தில் நம் மனோரத்னத்தை வைத்துவிட.வேண்டும் என்று கேட்ட போது ஒரு.கவலை வந்தது. மகான்கள் அப்படி செய்யலாம்.. நமக்கு எப்படி முடியும் என்று. ஆனால் அதற்கும் வழி என்ன என்று உடனே சொல்லி விட்டீர்கள். அம்பாள் நாமா சொல்லிக் கொண்டே அவள் பாதத்தில் சரண் அடைந்து விடலாம் என்று. அவள் நாமம் சொல்ல மனம் ஈடுபட வேண்டும் – அதற்கும் அவள் தான் க்ருபை செய்ய வேண்டும். “அம்பா.கேபி தவ க்ருபயா” . அதற்கு குரு அருள் வேண்டும். “குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி”. இந்த உபன்யாசம் கேட்டதே நம் பாக்கியம். நன்றி. நமஸ்காரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.