மஹாபெரியவாளை வணங்கித் துதிப்போம்


ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவாளை வணங்கி துதிப்போம்

भुवनजननि भूषाभूतचन्द्रे नमस्ते
कलुषशमनि कम्पातीरगेहे नमस्ते ।
निखिलनिगमवेद्ये नित्यरूपे नमस्ते
परशिवमयि पाशच्छेदहस्ते नमस्ते ॥                

Share

Comments (1)

 • Sowmya Subramanian

  அம்பாளுக்கு நமஸ்காரம் சொல்கிற மிக அருமையான ஸ்தோத்திரம். பெரியவாளுக்கு இது எப்படி பொருந்தும் என்று சொன்ன விதம் அற்புதம்.👌🙏🌸

  ‘மங்களமான சிவனும் நீயே!’ என்று ஸத்தை விட்டு பிரியாத சித்தாக அம்பாளை சொல்லி, பாசத்தை அழிப்பவளான உனக்கு நமஸ்காரம் என்று சொல்கிறார் முக கவி. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் ‘பாச ஹஸ்தா’, ‘பாச ஹந்த்ரி’ என்ற நாமாவளிகள் இடம்பெறுகின்றன.

  “எவ்வளவு பிரயத்தனம் பண்ணினாலும் மாயை, மனசு, இந்த லோகம் போகவில்லையே!” என்று அழுதால், அம்பாளின் வாக்காக மஹாபெரியவா சொல்கிறார், “நீ ஏன் அழறே! இந்த லோகம், மாயை, லட்சக்கணக்கான ஜீவராசிகள், எல்லாம் நான் பண்ணினது தான். இதை போக்கடிப்பது உன் சக்தியால் முடியாத ஸமாச்சாரம். என் கிருபையாலே நடக்க வேண்டிய விஷயம்! என்கிட்ட பக்தியில் வா. கொஞ்சம் கொஞ்சமாக போக்கடிக்கிறேன்.

  அம்மா என்று என் கிட்ட வந்துட்ட இல்லையா? நான் உன்னை பாத்துக்கறேன். இந்த பந்தத்திலிருந்து நானே உன்னை மீட்கிறேன்.

  என்கிட்ட அன்பு வைத்து அந்த அன்பினாலே எல்லாவற்றையும் அணைச்சு பார் . நான் உனக்கு உயர்ந்த அநுகிரஹத்தைப் பண்ணி ஞானத்துக்கு தூக்கி விடுகிறேன்” இப்படி பக்தி வழியில் போனாலும் நிறைவான அநுபவத்தை கொடுப்பாள் என்று சொல்கிறார்.🙏🌸

  குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 🙏🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.