Categories
mooka pancha shathi one slokam

அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

கடாக்ஷ சதகம் 42வது ஸ்லோகம் பொருளுரை – அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

कामाक्षि काष्णर्यमपि सन्ततमञ्जनं च
बिभ्रन्निसर्गतरलो‌sपि भवत्कटाक्षः ।
वैमल्यमन्वहमनञ्जनतां च भूयः
स्थैर्यं च भक्तहृदयाय कथं ददाति ॥

கடாக்ஷ சதகத்துல 42வது ஸ்லோகம்.
காமாக்ஷி கார்ஷ்ண்யமபி ஸந்ததம் அஞ்சனம் ச
விப்ரன்னிஸர்க தரலோபி பவத் கடாக்ஷ: |
வைமல்யமன்வஹம் அஞ்சனதாம் ச பூய:
ஸ்தைர்யம் ச பக்தஹ்ருதயாய கதம் ததாதி ||
இதோட அர்த்தம் என்னன்னா, “காமாக்ஷி பவத்கடாக்ஷ:” உன்னுடைய கடாக்ஷம் “கார்ஷ்ண்யமபி”, க்ருஷ்ணம்ங்ற பதத்துல இருந்து வரது. க்ருஷ்ணம்னா கருப்புன்னு நமக்குத் தெரியும். “கார்ஷ்ண்யமபி”, கண்ணு கருப்பா இருக்கு, “சந்ததமஞ்சனம் ச விப்ரன்”, எப்பவும் மை இட்டுண்டுருக்கா அம்பாள். “நிஸர்க தரலோபி” இயல்பாவே சலித்துண்டே இருக்கு. கண்ணு அப்படியே ஒரு இடத்துல இருக்காது. பார்வை இங்கயும் அங்கயும் பார்வை போயிண்டே இருக்கும். அந்த மாதிரி அசஞ்சுண்டே இருக்கு. “பவத் கடாக்ஷ:” இப்பேர்ப்பட்ட உன் கடாக்ஷம் “பக்த ஹ்ருதயாய”, பக்தர்களுடைய ஹ்ருதயத்துக்கு “வைமல்யம்” விமலம்னா வெள்ளை. கருப்பா இருக்கற உன்னுடைய கண்ணு வெள்ளைய குடுக்கறது. அப்படீன்னு. இந்த “கார்ஷ்ண்யம், வைமல்யம்” ங்கற வார்த்தைய use பண்றது அவ்வளவு அழகு. ஏன்னா கார்ஷ்ண்யம்ன்றது ஏதோ ஒரு தோஷத்தோட இருக்குன்னு அர்த்தம். வைமல்யம்ன்றது அப்பழுக்கில்லாத தூய்மைன்னு அர்த்தம். அது வெள்ளை கருப்புங்கற அர்த்தம் தவிர இப்படி ஒரு subtle meaning இருக்கு. அதுனால அந்த ஒரு பதங்கள use பண்றார். உன்னுடைய கடாக்ஷம் கருப்பா இருந்தாலும், அது தன்னுடைய பக்தர்களுக்கு அப்பழுக்கற்ற தூய்மையக் கொடுக்கறது.

“அனஞ்சனதாம் ச” அது மை இட்டுட்டுருந்தாலும், அனஞ்சனதாம் ன்னா ஈஷிக்காத தன்மையைக் கொடுக்கறது. “ஸ்தைர்யம் ச பக்த ஹ்ருதயாய கதம் ததாதி”. ஸ்தைர்யம் – உறுதியும் குடுக்கறதே. எப்படி, அப்படீன்னு ஆச்சர்யப்படறார்.

இந்த ஸ்லோகமும் படிக்கும்போது எனக்கு ஸ்வாமிகளுடைய குணங்கள்லாம் ஞாபகம் வரது. ஸ்வாமிகள் ரொம்ப தூய்மையா இருப்பார். அவர் ஆசாரமா இருந்து physical ஆ தூய்மையா இருக்கறது பெரிய விஷயம் இல்ல. பற்றற்று இருப்பார். பணத்துல அவர்க்கு பற்றற்ற தன்மை தான் எனக்கு தூய்மையாப் படும். ஜானகிராம் மாமா எனக்கு சொல்லியிருக்கார். ஒரு வாட்டி ஜானகிராம் மாமாவுடைய colleague ஒருத்தர் Chromepet ல இருக்கறவர். எங்காத்துலயும் வந்து ராமாயணம் படிக்கணும். அப்படீன்னு பிரார்த்தனை பண்றார். ஸ்வாமிகள், ஜானகிராம் மாமா ரெண்டு பேரும் முந்தின நாளே train பிடிச்சு அவாத்துல போய் தங்கிண்டு அன்னிக்கு காத்தால எழுந்து ஸ்வாமிகள் தன்னுடைய பூஜைகள்லாம் முடிச்சு, அப்புறம் 5 மணி நேரத்துல சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணி முடிச்சு, அப்புறம் பட்டாபிஷேகம் படிச்சு பூஜை எல்லாம் பண்ணி அப்புறம் அவர் கொஞ்சம் பேர கூப்ட்ருக்கார். எல்லார்க்கும் சாப்பாடு எல்லாம் போடறா. ஸ்வாமிகளுக்கு 5 ரூபா தக்ஷணை வெச்சு குடுத்தாராம். அத ஸ்வாமிகள் கொஞ்சம் கூட எந்த ஒரு மாறுபாடில்லாம வாங்கிப்பார். வாங்கிண்டு திரும்பி வரும் போது ஜானகிராம் மாமா சொன்னாராம். பஸ் charge க்கு கூட போறாதே. இப்படி பண்றாரே. அப்படீன்னு சொன்ன போது ஸ்வாமிகள் வந்து நீ ஏன் அப்படி நெனக்கற? இனிமே, இந்த பண விஷயத்த நீ நெனக்கவே நினைக்காத. ஏன்னா, நமக்கு ஒரு சுந்தர காண்டம் பாராயணம் பண்றதுக்கு ஒரு ஹேதுவா இருந்தது. அவர் 10 பேர கூப்பிட்டு சாப்பாடு போட்டார். அந்த புண்யம். அவரால இத குடுக்க முடிஞ்சுது குடுத்தார். இன்னிக்கு நமக்கு இது கிடைக்கணும்னு இருக்கு. கெடச்சுது. நம்ப படிக்கறத ஹனுமார் record பண்ணிக்கறார். நான் படிச்சேன். நீ கேட்ட. இதுக்கான புண்யம் பகவான் record பண்ணிப்பார். அது கிடைக்கும் போது கிடைக்கும். அப்படீன்னு சொல்லி ஸ்வாமிகள் சொன்னாராம். அத்தன பற்றற்று இருந்தார் ஸ்வாமிகள் பண விஷயத்துல. அப்புறம் அடுத்த வாரம் இன்னொருத்தர் படிக்க சொல்லி சுந்தர காண்டம் படிக்க சொல்லி 500 ரூபா குடுத்தாராம். அதையும் அதே பாவத்தோட ஸ்வாமிகள் வாங்கிப்பார். இன்னிக்கி மாருதி இத குடுக்கறார். அப்படீன்னு வாங்கிப்பார். இது ஸ்வாமிகளுடைய அந்த தூய்மைக்கு.

ஈஷிக்காத தன்மைக்கு ஒரு incident சொல்றேன். எனக்கும் தெரிஞ்ச ஒரு, ஸ்வாமிகள் கிட்ட வரக் கூடியவர். அவருக்கு ரொம்ப நாள் கழிச்சு ஒரு குழந்தை பொறந்தது. கல்யாணம் ஆயி பல வருஷங்கள் கழிச்சு தான் குழந்தை பொறந்தது. அவர் திருப்புகழ் பாடுவார். அவர் திருப்புகழ் பாடி குழந்தை பிறந்தது. அப்படீங்கறது என் காதுல விழுந்திருக்கு. ஸ்வாமிகள் கிட்ட பேசிண்டிருக்கும் போது ஒரு நாளைக்கு “அவா அப்பா அம்மால்லாம் கூட எனக்குத் தெரியும். அவர் அப்பா வைதீகர். அவர் என்கிட்ட பிள்ளைக்கு குழந்தை பொறக்கலன்னு சொல்லிண்டிருந்தார். சுந்தரகாண்டம் படிக்க சொல்லுங்கோன்னு சொன்னேன். சுந்தரகாண்டம் படிச்சார். அப்புறம் கொழந்த பொறந்தது” அப்படின்னு சொன்னார். நான் வந்து, “இத எங்கிட்ட சொல்லவே இல்லயே யாருமே, நீங்க சுந்தர காண்டம் சொல்லி குழந்தை பொறந்ததுன்னு சொல்ல வேண்டாமா?” அப்படீன்னு நான் சொன்னேன். ஸ்வாமிகள் “இல்லல்ல. நீ உனக்கு சுந்தரகாண்டம் படிக்கறதுல பக்தி வரணும்ங்கறதுக்காக இத சொன்னேன் தவிர எனக்கு அவாள்ட்ட ஒரு தாங்கலும் கிடையாது. அவா அப்பாவே சொல்லியிருப்பார். யதேச்சையா நான் சொன்னேன். அவர் படிச்சார். குழந்தை பொறந்தது. அதனால நாம சொல்றதுக்கும் அவாளுக்கு படிக்கணும்னு தோணனும், அந்த படிச்சதுக்கும் அதுக்கப்புறம் குழந்தை பொறந்ததுக்கும், அது ஈஸ்வர சித்தம்.இதுல எனக்கு ஒண்ணும் நான் Credit எடுத்துக்கவும் விரும்பல. அவா எனக்கு Credit குடுக்கலங்கற தாங்கலும் கிடையாது. எனக்கு அவர் மேல ரொம்ப ப்ரியம் உண்டு.” அப்படீன்னு சொன்னார். அந்த ஈஷிக்காத தன்மை. நாம, ஒரு, சாப்பாடு ஒருத்தர் போட்டாக் கூட நம்ம அவாள்ட்ட ரொம்ப த்ருப்தி அப்படீங்கறத தெரிவிப்போம். அந்த த்ருப்தி தெரிவிக்கறதுல கூட அடுத்த வாட்டி நம்ம இந்த மாதிரி சாப்பாடு கிடைச்சா சந்தோஷம் அப்படீன்ற message குடுத்துடறோம். அந்த அளவுக்கு கூட ஸ்வாமிகள் வந்து excite ஆக மாட்டார். ஏன்னா அவாளுக்கு அடுத்த வாட்டி அந்த மாதிரி சாப்பாடு போட முடியுமாங்கறது தெரியாது. ஆனா கூப்பிட்டு சுந்தரகாண்டம் படிக்க சொல்லணும்ன்ற எண்ணம் இருக்கும். அப்படீங்கறது அவருக்குத் தெரியும். அதனால அவர் அந்த பண விஷயத்துலயோ, தனக்கு குடுக்கற கௌரவ விஷயத்துலயோ தனக்கு கிடைச்ச புகழ்ல்லயோ கொஞ்சங்கூட excite ஆக மாட்டார். நிந்தையோ, ஸ்துதியோ அவர பாதிக்கவே செய்யாது. அந்த மாதிரி ஒரு ஈஷிக்காத தன்மை.

நம்மள்ட்ட இத்தன வருஷம் பழகுவார். அப்படி unconditional love ன்னு சொல்லி அவ்ளோ கட்டற்ற அன்பு பொழிவார். ஆனா, அவருக்கு அதுக்கு equivalent ஆ ஏதாவது பண்ணனும்னு எதிர்பார்க்கவே மாட்டார். பணத்துலயோ நம்ப திரும்பி அவர்கிட்ட அன்பு காமிக்கணும்னு. அதே நேரத்துல கொஞ்சம் அந்த பஜனத்துல ஒரு ஆர்வம் காமிச்சா சந்தோஷப்படுவார். encourage பண்ணுவார். அது ஏன்னா அது நமக்கு ஜன்ம லாபமா இருக்கும்ங்கறதுக்குத் தானே தவிர அதுல கூட அவருக்கு ஒரு பற்றுனால கிடையாது.

“ஸ்தைர்யம் ச பக்தஹ்ருதயாய கதம் ததாதி”. இந்த ஸ்தைர்யம்ங்கறதுக்கு ஒண்ணு சொல்றேன். ஸ்வாமிகள்க்கு பணக்கஷ்டம் ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லி, விசாகப்பட்ணத்துல ஒருத்தர் கூப்ட்டு அவாத்துல 48 நாள் தினமும் சுந்தரகாண்டம் படிச்சு அவர் ஒரு கோயில் மாதிரி கட்டியிருந்தார். அனுமாரோட கோயில். அதுல தினம் 48 நாள், தினம் சுந்தர காண்டம் முழுக்க பாராயணம் பண்ணி அவருக்கு ரொம்ப திருப்தி. அவரும் விஸ்வநாத ஐயரும் V.J.R.ம் எல்லாரும் சேர்ந்து ஸ்வாமிகளுக்கு ரொம்ப பணக்கஷ்டம் இருக்கு. அதப் போக்கணும் அப்படீன்னு Maruthi Trust அப்படீன்னு ஒண்ணு form பண்ணி deed எல்லாம் ready பண்ணி ஸ்வாமிகள்ட்ட சொல்றா. ஸ்வாமிகள் சொன்னாராம். “I trust Maruthi”. Trust வேண்டாம். அப்படின்னு. அந்த அளவுக்கு ஸ்வாமிகள் பற்றற்று இருந்தார். இது ஒரு நாள், 2 நாள் கிடையாது. 1950ல இருந்து 1986 வரைக்கும் பணக் கஷ்டத்துல இருந்தார். சபா செக்ரட்டரி ஒருத்தர் letter போட்டிருந்தாராம். இவர் என்னென்ன ப்ரவசனங்கள் பண்ணுவார் எங்கெங்க பண்ணியிருக்கார், அவாளோட contact details, references எல்லாம் குடுங்கோன்னு. ஸ்வாமிகள் “இதுக்கு நீ பதில் போடாத. ஏன்னா, இந்த காலத்துல வேலைக்கு apply பண்ற மாதிரி ஒரு resume, அதுல வந்து testimonial, அதுல வந்து reference மாதிரி கிடையாது பாகவத ப்ரவசனம், ராமாயண ப்ரவசனம்ங்கறது. எல்லா புராணங்கள்லயும் அந்த சூத பெளராணிகர் கிட்ட போய் நமஸ்காரம் பண்ணி எனக்கு தகுதியிருந்தா சொல்லுங்கோ அப்படீன்னு கேட்டதா தான் வருதே தவிர உங்களுடைய தகுதி என்னன்னு கேட்டதா வரல. அதனால இப்படி அத approach பண்ணக் கூடாது. அவாளுக்குத் தெரியல. நம்ம விட்டுடலாம்”, அப்படீன்னு சொல்லி விட்டார்.

இப்படி ஸ்வாமிகள் நிறைய conditions வெச்சுண்டதனால, ப்ரவசனத்துக்கு நடுவுல தட்டு கொண்டு போகாதீங்கோ, ப்ரவசனத்துக்கு கடைசில இந்த தட்டுல ஏதாவது போடலாம்னு சொல்லி ஒரு தட்டு ஸ்வாமி கிட்ட வைங்கோ, முடிஞ்சவா வந்து போட்டு போகட்டும். ஏன்னா பணம் கைல கொண்டு வரலன்னா, அவா முன்னாடி தட்டு நீட்டுனா அவா embarrass ஆயிடுவா. இப்படியெல்லாம் நிறைய conditions வெச்சுருவா, அதனால சபாக்கள்லாம் அவர கூப்பிடுறத விட்டுட்டா. அவரும் ரொம்ப சந்தோஷம். தனி தனியா ஆத்துல கூப்பிட்டு படிக்கறவா கிட்ட போய் படிச்சிட்டிருந்தார். அப்புறம் தானே தன் ஆத்துல உக்காந்து படிச்சிண்டிருந்தார். அப்படி ஒரு ஸ்தைர்யம். அப்பேர்ப்பட்ட அந்த ஸ்தைர்யமும், அந்த தூய்மையும், அந்த ஈஷிக்காத தன்மையும் எங்கேர்ந்து வந்ததுன்னா, காமாக்ஷியோட கடாக்ஷம் கிடைச்சதுனால அவருக்கு வந்தது.

காமாக்ஷி கார்ஷ்ண்யமபி ஸந்ததம் அஞ்சனம் ச
விப்ரன்னிஸர்க தரலோபி பவத் கடாக்ஷ: |
வைமல்யமன்வஹம் அஞ்சனதாம் ச பூய:
ஸ்தைர்யம் ச பக்தஹ்ருதயாய கதம் ததாதி ||

நமக்கும் அந்த மாதிரி தூய்மையும், ஈஷிக்காத தன்மையும் உறுதியான பக்தியும் வரணும்னு வேண்டிப் போம். நம: பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா ||

5 replies on “அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு”

அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – பொருத்தமான தலைப்பு 🙏🌸

அழகான ஸ்லோகம். அருமையான விளக்கம். அம்பாள் பக்தர்களுக்கு கடாக்ஷிக்கிற தூய்மையும், ஈஷிக்காத தன்மையும், உறுதியும், ஸ்வாமிகளுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கொண்டு, அவருடைய குணங்களில் எப்படி பிரதிபலிக்கிறது என்று சொன்னது மிக அற்புதம். 👌🙏🌸

‘சிவசிவ பச்யந்தி சமம்’ங்கற ஆர்யா சதகம் ஸ்லோகம் தான் ஞாபகத்திற்கு வர்றது. மஹாபெரியவா, ஸ்வாமிகள் போன்ற மஹான்கள் அதுக்கேத்தபடி எப்படி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்னு தெரியறது.🙏🌸

‘நாம படிக்கிறத ஹநுமான் record பண்ணுகிறார்’, ‘I trust மாருதி’ – இந்த வார்த்தைகள் ஸ்வாமிகளுடைய உறுதியான பக்தியை மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது.👌🙏🌸

முககவி எதிர்மறையான வார்த்தைகளைப் போட்டு ஸ்லோகத்தை கவிநயம் பட சொல்கிறார். ‘கருமையான கண்கள் – பக்தர்களுக்கு வெண்மையையும் தூய்மையையும் கொடுக்கிறது’. ‘அலைபாய்கிற கண்கள் – பக்தர்களுக்கு உறுதியான தன்மையை கொடுக்கிறது’.👌👌

‘ஏன் அம்பாளுடைய கண்கள் இப்படியும் அப்படியும் சஞ்சரித்துக் கொண்டே இருக்கின்றன?’. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் ‘லோலாக்ஷி’ என்ற நாமா வருகிறது. மஹாபெரியவா “ஒருத்தரும் விட்டுப்போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரகம் செய்ய வேண்டும் என்பதால் சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றன !” என்று விளக்கம் சொல்கிறார்.🙏🌸

ஸ்ரீ ராமஜயம்.
ஸ்ரீ ஸ்வாமிகள் எப்பேர்பட்ட ஓர் நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதிலிருந்து கொஞ்சம் யூகிக்க முடிகிறது. ஸ்தைர்யம் என்ற பதத்திற்கு ஏற்றார் போல அவர் எதன் மீதும் (பெயர், புகழ், பணம்) முதலியவற்றில் பற்றற்று விளங்கினார் என்று கேட்கும் போது நமக்கும் இது போல ஒரு பற்று இல்லாத நிலை நாட மனம் விழைகிறது.
இதுவே ஓர் உத்தமமான தூய்மை.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சாதாரண நிலையில் யாரும் தான் அடைந்ததை claim செய்வார்கள்.
ஆனால் ஸ்வாமிகள், தான் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரே நிலையில் இருந்துள்ளார். ஈஷிக்காமல் இருப்பது என்பதற்கு ஸ்ரீ பெரியவா சொன்ன Equipoise என்ற பதம் சரியாக இருக்கலாம்.
காமாக்ஷியின் அருளும், ஸ்ரீ ஸ்வாமிகளின் அருளும் ஒருங்கே நம்மை வழி நடத்திச் செல்லட்டும்.

ஸ்வாமிகளின் பூர்வாசிரம நாமம் ஸ்ரீ கல்யாணராமன். அவருடைய பெற்றோர்கள் தீர்க்க தரிசி. ஏனென்றால் இவர் கல்யாண குணங்கள் நிறையப்பெற்றவர்.

பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ என்று பாடுகிறார் அருணகிரிநாதர் .
அப்படிப்பட்ட பற்றற்ற தன்மை எல்லாருக்கும் வாய்க்காது ! மனிதரில் சில உத்தம சீலருக்கே கிடைக்கும் பேறு ! சிறு வயதிலிருந்தே ஸத் சங்கம் அமைந்து மோகம் ஒழிந்து சஞ்சலமற்ற தன்மை எய்த ஒரு சில ஆத்மாவுக்கே அமையும் பேறு !!அதுதான் ஞானம் !
அப்படிப்பட்ட ஞானி ஸ்வாமிகள் !

தேவி காமாக்ஷியின் கண்கள் கருமை நிறம் கொண்டதானாலும், பக்தர்களுக்கு மாசற்ற மனதையும், பாச பந்தமற்ற தூய நிலையும் அருளிகிறாள்!
அதற்கும் மேலே சலித்துக் கொண்டிருக்கும் கண்கள் திடத்தன்மையையும் அளிக்கிறது! எதிர் மறையாகக் கூறி மனதில் பதியச் செய்யும் அழகு இங்கு தெரிகிறது !
சுவாமிகளின் வாழ்க்கைத் தூய்மை எளிமை இவற்றைக் கண்முன் கொண்டு நிறுத்தும் பதிவு !

ஜய ஜய ஜகதாம்ப சிவே….

ஸ்ரீ ஸ்வாமிகள் துணை.🙏🙏 !
அருமையான பதிவு.நேற்று பூரட்டாதி, ஸ்ரீ ஸ்வாமிகள் திரு நக்ஷத்திரம் இந்த ஒலிப்பதிவு கேட்டது என் பாக்கியம்.
ஸ்வாமிகள் எளிமையின் உருவாய், பற்றற்றான் தாளினைப் பற்றி, பணம், பெயர், புகழ் இவைகளிடம் ஒரு பற்றுமின்றி வாழ்ந்த மஹான்.
48 நாட்கள் ஏக தின ஸுந்தர காண்ட பாராயணம், அப்பப்பா !! கடவுள் உள்ளத்தில் குடி கொண்டதை, எப்போதும் அனுபவத்தில் உணர்ந்த ஒருவர் மட்டுமே இது போல் பக்தி செய்ய சாத்யம்.
மனித பிறவியின் பயனை அடைய, தாமரை இலை தண்ணீர் போல வாழ, ஸ்ரீ ஸ்வாமிகள் அந்த பக்தியை அருள, உளமாற அவரின் அடிப் பணிகின்றேன்.🙏🙏🙇🙇

Leave a Reply to Sowmya SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.