Categories
mooka pancha shathi one slokam

கிருஷ்ணனுக்கே கிருஷ்ண கதை சொன்ன வைபவம்

மந்தஸ்மித சதகம் 25வது ஸ்லோகம் பொருளுரை – கிருஷ்ணனுக்கே கிருஷ்ண கதை சொன்ன வைபவம்

मध्येगर्भितमञ्जुवाक्यलहरीमाध्वीझरीशीतला
मन्दारस्तबकायते जननि ते मन्दस्मितांशुच्छटा ।
यस्या वर्धयितुं मुहुर्विकसनं कामाक्षि कामद्रुहो
वल्गुर्वीक्षणविभ्रमव्यतिकरो वासन्तमासायते ॥

மத்⁴யேக³ர்பி⁴தமஞ்ஜுவாக்யலஹரீமாத்⁴வீஜ²ரீஶீதலா

மந்தா³ரஸ்தப³காயதே ஜனனி தே மந்த³ஸ்மிதாம்ʼஶுச்ச²டா .

யஸ்யா வர்த⁴யிதும்ʼ முஹுர்விகஸனம்ʼ காமாக்ஷி காமத்³ருஹோ

வல்கு³ர்வீக்ஷணவிப்⁴ரமவ்யதிகரோ வாஸந்தமாஸாயதே

இது மந்தஸ்மித ஶதகத்தோட 25 ஸ்லோகம் …

மந்தா³ர புஷ்பம்ங்கறது வெள்ளையா இருக்கும். “மந்தார குஸும ப்ரியா” னு அம்பாளுக்கு ஒரு நாமாவளி இருக்கு. மந்தார முக்கிய பூஜிதாயனு  ஸ்வாமிக்கு பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தில வருது..மந்தார புஷ்பம் ரெண்டு பேருக்கும் பிரியமானது. இங்க காமாக்ஷினுடைய மந்தஸ்மிதத்தை, தூய்மையா இருக்குங்கறதுக்கு, மந்தார புஷ்பம் போல இருக்குனு சொல்றார். அத எவ்ளோ அழகா சொல்றார்.

“மந்தா³ரஸ்தப³காயதே ஜனனி தே மந்த³ஸ்மிதாம்ʼஶுச்ச²டா” –
ஹே காமாக்ஷி ! உன்னுடைய மந்தஸ்மிதத்தினுடைய காந்தியின்னுடைய ஸமூஹம்,

“மந்தா³ரஸ்தப³காயதே” – மந்தார பூங்கொத்து போல இருக்குனு அப்டிங்கறார். அதுக்கு மேல, எப்பேற்பட்ட பூங்கொத்துன்னா.,
“புஷ்பம்” னா அதுல தேன் இருக்கும்,

“மத்⁴யேக³ர்பி⁴தமஞ்ஜுவாக்யலஹரீமாத்⁴வீஜ²ரீஶீதலா” – இந்த மந்தார புஷ்பத்துக்கு எது தேன்னா…?

காமாக்ஷினுடைய “மஞ்ஜுவாக்யலஹரீ” – அழகான பேச்சு. அந்த சொற்பெருக்கு, அப்படினு சொல்லனும். “வாக்யலஹரீ”, அப்படிங்கிற

“மாத்⁴வீஜ²ரீ” – தேன்னு சொல்லல.. தேன் அருவி போல அவ்ளோ இனிமையா இருக்கு. அதனால் குளிர்ந்து,

“ஶீதலா” – குளிர்ந்து, அந்த மலர் முழுக்க, அந்த தேன் நிறம்பியிருக்கு.

“மத்⁴யேக³ர்பி⁴தமஞ்ஜுவாக்யலஹரீமாத்⁴வீஜ²ரீஶீதலா” அப்படிங்கிறார், என்ன அழகு !

காமாக்ஷினுடைய அதாவது  மந்தஸ்மிதம்ங்கறது, பேசிண்டு இருக்கும் போது தான நடுல ஒரு சிரிப்பு வரும். அந்த மாதிரி, அந்த மந்தஸ்மிதம்ங்கிற மந்தார புஷ்பம், இனிமையான பேச்சுங்கிற தேனொட கூடி இருக்கு.

இன்னும் அந்த கவிதையை elevate பண்றார். இந்த மந்தார புஷ்பம் இவ்ளோ அழகா இருக்கு. இதோட இந்த “விகஸனம்” – இதோட இந்த மலர்ச்சியை,

“முஹு:வர்த⁴யிதும்” இன்னும் மேலும் ஜாஸ்திபண்றதுக்காக, இன்னும் நன்னா மலரதுக்காக, ஒரு வசந்த ரு’து வந்துவிட்டது அப்படிங்கிறார்…

“காமத்³ருஹ:வல்கு³ர்வீக்ஷணவிப்⁴ரமவ்யதிகர:” – காமனை எரித்த பரமேஸ்வரன், அந்த பரமேஸ்வரனுடைய,

“வல்கு³ர்வீக்ஷணவிப்⁴ரமவ்யதிகர:” – அழகான கண் பார்வையினுடைய சுழற்சி, தன்னிடத்துல ஒரு பார்வையை வீசறாராம் பரமேஸ்வரன். அந்த கண் பார்வைங்கிற வசந்த ருது வந்தவுடனே, காமாக்ஷினுடைய மந்தஸ்மிதம் அப்படிங்கிற மந்தார புஷ்பம் இன்னும் ரொம்ப அழகா மலரது….அதிகமா மலரது …அப்படிங்கிறார். என்ன அழகு…!

ஸ்வாமிகளையும், மஹாபெரியவாளையும் , இந்த வாரம் நினைச்சுண்டு இருக்கறதுனால, இந்த ஸ்லோகமும் எனக்கு அந்த ஸ்லோகத்தையே ஞாபகம் படுத்தறது .

ஸ்வாமிகள் பேசறது, தேன் அருவி போல தான் இருக்கும், அவர் சுத்த ஸத்வம். அதனால அந்த வெண்மை, மந்தார மலர், அதுல தேன்ருவி, அப்படிங்கறது ஸ்வாமிகளுக்கு பொருந்தும். அந்த ஸ்வாமிகள்,  மஹாபெரியவா முன்னாடி உட்காந்துண்டு, கிருஷ்ண கதையை பேசினா, என்னமா இருந்துருக்கும் ! ?

ஸ்வாமிகள், அந்த பால லீலை சொல்றது ரொம்ப sweetஆ இருக்கும். ஸ்வாமிகள் என்ன சொல்லுவார்…, அந்த பால லீலையை கேட்டு தான், கோபிகைகளுக்கு பக்தி வந்தது. கோபிகைகளுக்கு மத்தில வந்து ஸ்வாமி  பிறந்தார். கிருஷ்ண பகவான் வந்து அவதாரம் பண்ணார். குழந்தை பிறந்து இருக்கா? நந்தகோபன்னுக்கு பிறந்து இருக்கா? னு எல்லாரும் போய் பார்த்தா, ஆத்ம ஸ்வரூபமா இருக்கறதுனால, அவாளோட உள்ளத்தை  கவர்ந்துட்டான். அதுக்கு அப்புறம், அவாளுக்கு பார்க்கணும், பார்க்கணும்னு இருந்தது, ஓடி, ஓடி போய் பார்த்துண்டே இருந்தா …. “நந்தலால் ! நந்தலால்!”னு….

பார்த்து பார்த்து அப்புறம் அவனுடைய  பால லீலைகளை எல்லாம்  கேட்டு,  அதே பேசிண்டுயிருந்தா… அப்புறம், அவன், அவா ஆத்துக்குள் எல்லாம்  வந்து, பானையை ஒடச்சு, வெண்ணெயை திருடி, இப்படிலாம் விளையாட்டு பண்ணிண்டு இருந்தான். அப்படி, அவனையே நினைச்சுண்டு, மாடு மேய்க்க போனா  கூட, எப்ப வருவான் ? கண்ணா, கண்ணானு காத்துண்டுயிருந்தா.

அப்புறம், கார்யங்கள் எல்லாம் பண்ணின்டே அவனை நினச்சுண்டுயிருந்தது போக…. கார்யங்கள்ளாம் அவாளால பண்ண முடில. கடைசில, அவா கணவன்மார்கள் குழந்தைகளைக்கூட அவாளால கவனிக்க முடியலை. அவன் கூப்பிட்டவுடனே ராஸலீலைக்கு போனா.. பகவானுடைய பேரானந்தத்தை அனுபவிச்சா, அப்படினு சொல்லுவார்.

அந்த பால லீலைய கேட்டதுனால தான்  கோபிகைகளுக்கு பக்தி வளர்ந்தது. க்ருஷ்ணனுடைய பால லீலையை கேட்கணும், ஸுக ஸ்வாமியும்,  சதாசிவ ப்ரும்மேந்திராள், வில்வமங்கலாச்சார்யாரும், நாராயண தீர்த்தரும்  எல்லாம், அத அனுபவிக்கறா. அதனால, பால லீலை பக்தியை வளர்க்கும், அப்படினு சொல்வார்.

அந்த நாராயணீயத்துலயே, 34 தசகங்கள் க்ருஷ்ணனுடைய பால லீலை வரது, 100 தசகத்துல , 34 தசகங்கள் பால லீலைக்கு மட்டும்னா பார்த்துகோங்கோ! அதை ஸ்வாமிகள் படிச்சு கேட்கணும்! அவ்ளோ, பேரானந்தமா இருக்கும். அது  தான் தேனருவி மாதிரி இருக்கும். அந்த தேனருவி, மஹாபெரியவாங்கிற வசந்த ருது, மஹாபெரியவாளுடைய  கடாக்ஷம்ங்கிற வசந்த ருதுவும், வந்ததுனா என்னமா பெருகி ஓடியிருக்கும்னு, நான் நினைச்சு பார்க்கறேன்  !!!!!!!!

பாலு மாமா புஸ்தகத்துல எழுதி இருக்கார், பெரியவா கொஞ்சம் மறைவா உட்கார்ந்து ஸ்வாமிகளுடைய பாகவதத்தை கேட்டுண்டு இருந்தாராம். ரொம்ப ‘சல ,சல’னு ஜனங்கள் சத்தம் பண்ண உடனே, பெரியவா, “புண்டரீகம் போடுங்கோனு” சொல்லியிருக்கா. அப்புறம் ஜனங்கள் கிட்ட பெரியவா பிரார்த்தனை பண்ணிக்கறாராம். வயசாயிண்டு இருக்கு, பாகவதம் கேட்கணும், பொழுதெல்லாம் தூக்கத்துலயும், பல காரியங்களையும் போயிண்டு இருக்கு. பாகவதம் கேட்கணும் ஆசைப்படறேன்..எனக்கு கொஞ்சம் ஒத்தாச பண்ணுங்கோ ! அப்படினு சொல்றாளாம். அந்த அளவுக்கு பெரியவாளுக்கு பாகவதத்தில ஒரு பிரியம் இருந்துருக்கு. அப்படி ஸ்வாமிகள்ட்ட பாகவதம் கேட்கணும்னு பெரியவா ஆசையா கேட்டுயிருக்கா…  க்ருஷ்ணனே க்ருஷ்ண கதை கேட்டா மாதிரி தானே !?

இந்த 25வது ஸ்லோகம் மந்தஸ்மித ஶதகம், மஹாபெரியவா சன்னிதில, ஸ்வாமிகள் பால லீலை சொன்னது எனக்கு ஞாபகப்படுத்தறது. ஸ்வாமிகள் இன்னும் ஒன்னு சொல்லுவார்…, நம்ப குழந்தையாட்டம் ஸ்வாமிட்ட பக்தி பண்ணா, ரொம்ப சுலபம்.

குழந்தைக்கு ஏதாவது வேணுன்னா, அது என்ன பண்ணும் ? வேணும்! வேணும்னு! பிடிவாதம் பிடிக்கும். வேற என்ன பண்ண முடியும் ? அதுக்கு வந்து சம்பாதிக்கற்கு உபாயம் கிடையாது, திறமையும் கிடையாது, அப்ப குழந்தைக்கு ஒரு விஷயம் வேணும்னா, அது ஆசை படறது அப்படிங்கறதுதான், அதோட உபாயம். அதுக்கு வேற method ஒண்ணும் தெரியாது. அதுஅம்மா அப்பா அதுகிட்ட, ஐயோ பாவம் பார்த்து, அந்த மிட்டாயோ, பொம்மையோ, வாங்கி கொடுக்கறானா. அந்த பெரியவாளோட க்ருபை தான், சாதனம், பலம், மதுரம். அந்த குழந்தைக்கு அந்த மிட்டாய் கிடைச்சுருது, அந்த மாதிரி, நம்ம ஸ்வாமிகிட்ட…

பகவான் ராமக்ருஷ்ண பரமஹம்சர் எப்படி “ அம்மா  அம்மா” னு காளி  கிட்ட, காளி  தரிசனத்துக்கு ஆசைப்பட்டாரோ, அந்த மாதிரி நம்ம பேராசை பட்டோம்னா, ஸ்வாமியுடைய க்ருபைங்றது, அதுல சாதனமாயிருந்து, அந்த காட்சிங்கிற மதுரமான பலன் கிடைக்கும், அப்படினு சொல்லுவார்.

அந்த மாதிரி, ஸ்வாமிகள் பேச்சு, எல்லாமே ரொம்ப ஆறுதலா இருக்கும். ஸ்வாமிகள் இவ்ளோ, அவர் சொல்லி நாம பஜனம் பண்றோமே, ஒண்ணும் பக்தி வந்தாமாதிரியே தெரிலையேன்னு, நம்ம levelல அப்படி தோணின்டே இருக்கு இல்லையா!? அதுக்கு ஒரு ஆறுதலா ஒண்ணு சொல்லுவார், பகவத் கீதையில, 5வது அத்தியாயம், 23வது ஸ்லோகம்,

ஶக்நோதீஹைவ ய ஸோடும் பராக் ஶரிரவிமோக்ஷணாத் |

காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த:ஸ ஸுகி நர: ||

அப்படினு ஸ்வாமி சொல்றார். அவர் சொல்றது, எவன் ஒருவன், இந்த உடம்பு கீழ விழறத்துக்கு முன்னாடி, “காமக்ரோதோத்பவம் வேகம் ” காமக்ரோததுனால உண்டான வேகத்தை,

“ஸோடும்  ய :ஶக்நோதீ இஹைவ” – இந்த உலகத்திலயிருந்து அப்புறம் வேற உலகத்துக்கு போன அப்புறம் இல்லை, இங்கேயே, எவன் ஒருவன், உடம்பு இருந்தாலும், தன்னுடைய காம க்ரோதத்தை, தடுத்து கொள்கிறானோ,

“ஸ யுக்த:” அவன் தான்  யோகி,

“ஸ ஸுகி நர:” அவன் தான் சாந்தத்தோடயிருக்கான், அப்படினு சொல்றார். ஸ்வாமிகள் இந்த ஸ்லோகத்தை வச்சு ஆறுதலா சொல்லுவார், “பண்ணிண்டே போ!, நீ  பஜனம் பண்ணிண்டே போ!, பக்தி வந்துரும் .

“காமக்ரோதோத்பவம் வேகம் ய ஸோடும் ஶக்நோதீ”னு சொல்றார்……. இந்த காமம், க்ரோதம்லாம் போறதா தெரியலை, அதோட வேகம் கொறைஞ்சாலே, நாமகலாம். அதுக்காக பண்ணு!, அப்படிம்பார். இந்த மாதிரிலாம் ஸ்வாமிகள் ஆறுதலா சொல்லுவார். அவருடைய kindnessகும், அவருடைய அந்த இனிமையான பேச்சுக்கும் சொல்றேன். அப்பேர்ப்பட்ட ஸத்குரு!

மத்⁴யேக³ர்பி⁴தமஞ்ஜுவாக்யலஹரீமாத்⁴வீஜ²ரீஶீதலா
மந்தா³ரஸ்தப³காயதே ஜனனி தே மந்த³ஸ்மிதாம்ʼஶுச்ச²டா .
யஸ்யா வர்த⁴யிதும்ʼ முஹுர்விகஸனம்ʼ காமாக்ஷி காமத்³ருஹோ
வல்கு³ர்வீக்ஷணவிப்⁴ரமவ்யதிகரோ வாஸந்தமாஸாயதே

நம: பார்வதி பதயே! ஹர ஹர  மஹாதேவ !!

6 replies on “கிருஷ்ணனுக்கே கிருஷ்ண கதை சொன்ன வைபவம்”

It is so peaceful just to listen to this – ahobhagyam. It is also nice to see the picture – this was drawn by my brother Keshav when he was a boy and I was even younger. We used to listen as kids with rapt attention and those stories are still ringing in our ears. It was thrilling moment when he actually saw the drawing with a ever present smile and obliged with his autograph. Thanks for publishing this.

கோவிந்தா தாமோதர சுவாமிகள் திருவடிகளுக்கு நமஸ்காரம்
குரு மூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி

மிகவும் அழகான வருணனை மனதை மிகவும் குளிர் படுத்திய பதிவு. ஸ்வாமிகளின் வெள்ளை மனதை பற்றி அழகான விளக்கம்.
ஸிவ ஸிவ பஸ்யந்தி சமம் ஸ்ரீ காமாக்ஷி கடாக்ஷிதா: புருஷாஹா :
விபினம் ப4வனமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபி3ம்போ3க்ஷ்ட2ம்.

மிக அருமையான ஸ்லோகம். அற்புதமான விளக்கம். 

காமாக்ஷியுடைய மந்தஸ்மிதத்தினுடைய காந்தி மந்தார பூங்கொத்து போல இருக்கு என்றும், அதிலிருந்து பெருகும் தேனருவி காமாக்ஷியுடைய அழகான சொற் பெருக்கு என்று மிக அழகாக உவமிக்கிறார். 

மடத்தில் ஸ்ரீமுகம் கொடுக்கும்போது ஆச்சார்யாளைப் பற்றி வர்ணிக்கிற வாசகத்தில் “ஸரஸ்வதி தேவியினுடைய கூந்தலில் அணிந்திருக்கும் மல்லிகை ஸரங்களில் இருந்து பொழியும் தேன் பெருக்கும் மாதுர்யத்தையும் மிஞ்சுவதாக இருக்கிறதாம் ஆசார்யாள் வாக்கு. அப்படிப்பட்ட அம்ருத ரஸம் போன்ற அருமையான வாக்கை ஆசார்யாள் ஆனந்தமாக மலர்த்திக் கொண்டு வித்வத் ஸமூஹத்தையெல்லாம் பூரிக்கும்படிச் செய்கிறார்” என்று சொல்லி இருக்கும். ஆசார்யாளுடைய ஸர்வஜ்ஞத்வம் லோகத்திற்குத் தெரிவதற்காக ஸரஸ்வதியே அவரிடம் வாக்குவாதம் பண்ணித் தோற்றுப் போய்க் காட்டினாள்.

மூககவி “பரமேஸ்வரனின் கண் பார்வை என்கிற ‘வஸந்த ரிது’ வந்தவுடன், காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதம் என்கிற மந்தார புஷ்பம் இன்னும்  அழகா மலர்கிறது” என்கிறார். 

ஆசார்யாள் அவதரித்தது ‘வஸந்த ரிது’வில். மஹாத்மாக்கள் வஸந்த காலம் மாதிரி ப்ரதிப்ரயோஜனமே எதிர்பார்க்காமல் லோகத்துக்கு ஹிதம் செய்கிறார்கள் என்று சொன்னவர் அவர். அவரும் அப்படிப்பட்டவர் தான். அவரைப் பின்பற்றியே மஹாபெரியவாளும் ஸ்வாமிகளும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

கிருஷ்ணனுக்கே கிருஷ்ண கதை சொன்ன வைபவம் என்று இந்த ஸ்லோகத்தோடு ஒப்பிட்டு கூறியது மிகப் பொருத்தம்.

🙏🙏🙏🙏

அம்பாளின் முக மலர்ச்சியை, மந்தாஸ்மிதம் என்ற புன்சிரிப்பு அதிகப்படும் எப்போது? பரமசிவனின் அழகிய பார்வை அவள் மேல் விழும்போது ! சிவனின் பார்வையின் நோக்கு எப்படியிருக்கிறது? அவர் பார்வையால் வசதருதுவின் மாசமாகிறதோ அந்த இநகையின் விளைவால் அழகிய
இள கிய வெண்மையானன மந்தாரப் புஷ்பம் போல் மருதுலமா இருக்குன்னு சொல்றார் கவி !
காமாக்ஷியின் மந்தாஸ்மிதம் ன்கிற இனிய புன்சிரிப்பு அவ்வளவு இனிமையாக வசந்த கால புஷ்பம் எப்படி தேன் நிரம்பி மிக்க மலரசியோட இருக்குமோ அது போல் மிக்க மருதுளமா இனிமையாக இருக்கும் என்பதை அழகா வர்ணிக்கிறார் மூகா ஆசார்யாள் !
பெரியவாளை கிருஷ்ணன் என்பதாக பாவித்து, குழந்தை கிருஷ்ணா லீலைகளை அவரிடமே ஸ்வாமிகள் சொன்னதாக ஒப்பிட்டு சொன்னது தங்கள் அழகான நயம் மிக்க கற்பனை !!மொத்தத்தில் மிக்க அழகான ஸ்லோகத்தில் விளக்கம் அழகான கற்பனையாக விரிந்தது பாராட்டிற்குரியது !!
ஜெய் குரு நாதா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.