Categories
mooka pancha shathi one slokam

மற்றறியேன் பிற தெய்வம்

கடாக்ஷ சதகம் 46வது ஸ்லோகம் பொருளுறை – மற்றறியேன் பிற தெய்வம் (12 min audio)

प्रेमापगापयसि मज्जनमारचय्य
युक्तः स्मितांशुकृतभस्मविलेपनेन ।
कामाक्षि कुण्डलमणिद्युतिभिर्जटालः
श्रीकण्ठमेव भजते तव दृष्टिपातः ॥

2 replies on “மற்றறியேன் பிற தெய்வம்”

மிகவும் அழகான ஸ்லோகம்.
எத்தனை அழகா அம்பாளுடைய கடாக்ஷத்தை ஒரு தபஸ்வினு உருவகப்படுத்தறார் மூககவி. 👌🙏🌸

‘மாற்றறியேன் பிற தெய்வம்’ – மிகப் பொருத்தமான தலைப்பு 👌👌 அபிராமி பட்டரின், ‘பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே’,
‘கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது’, ‘கண்டிலேன் ஒரு தஞ்சமுமே’ வரிகளை நினைவூட்டுகிறது 🙏🌸

காமாக்ஷியினுடைய குண்டலத்தையும், ஸ்ரீகண்டம் என்கிற பரமேஸ்வர நாமாவையும் பதங்களா போட்டிருக்கறதைப் பார்க்கும்போது, ஆசார்யாள் சௌந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தில், “பரமேஸ்வரன் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. இது உன் தாடங்க மகிமையம்மா!”னு சொல்றது ஞாபகம் வர்றது. ‘தவ ஜனனி தாடங்க மஹிமா’. அம்பாளுடைய குண்டல மகிமையை உணர்த்துறதுக்காக இங்கே ‘ஸ்ரீகண்ட:’ங்கற பதத்தை போட்டு இருக்காரோ!

ஏக பக்தி, சிவ விஷ்ணு அம்பாள் அபேதம், பக்தர்களுடைய பக்தியில் வித்யாசம் பார்க்காமல் இருப்பது பற்றிய விளக்கங்கள் மிக அருமை👌🙏🌸

ஸ்வாமிகள் பகவானிடம் ஏக பக்தி வைப்பது பற்றி சொன்னாலும், ஏனைய தெய்வங்களுக்கும் முக்யத்வம் அளித்து, நம் நித்யபடி பூஜையான பஞ்ஜாயதன பூஜை செய்யும் பழக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி உள்ளார் !!
ஒவ்வொரு தெய்வத்துக்கு ஒர் சிறப்பம்சம் உண்டு நம் ஹிந்து பண்பாட்டில் ! நாம் இஷ்ட தெய்வம் என ஒரு தெய்வத்தின் மேல் அதிக ஈடுபாடு கொண்டால் மனம் ஒன்றி மேல் மேல் பக்தி அதிகரிக்கும்.

சௌந்தர்ய லஹரியில் அம்பாள் கண்கள் பற்றி நிறைய ஸ்தோத்திரங்கள் வர்ணிக்கிறது! அதில் இந்த ஸ்லோகம் கடாக்ஷ சதகம் 46 ஸ்லோகத் தின் பொருள் வருமாறு சொல்லப் பட்டுள்ளது 54 வாது ஸ்லோகமான பவித்ரீ கர்தும் ந: என்று தொடங்கும் ஸ்லோகம் kataksha சதகம் 46 வது :ஸ்லோகத்தை ஒத்த பொருள் கொண்டது !
தேவியின் கண்களில் உள்ள நிறங்கள் மூன்று புண்ணிய நதிகளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளன! யமுனை கருப்பு, கங்கை வெளுப்பு, சோண பத்ரை சிவப்பு , இந்த மூன்று நதிகள் ஒன்று பட்டால் எப்படியிருக்கும , அப்படி இருக்கு மூன்று கண்கள் உடைய தேவியின் முகம்! அப்படி மனதில் தியானித்தால்.மூன்று நதிகளில் நீராடிய புண்ணியம் கிட்டும் என்கிறார் ஆசார்யாள்!
மேலே சொன்ன 46 வது ஸ்லோகமும் இதே கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது !
தேவியின் கண்கள் புநிதமான கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்றும் ,பிரம்மா, விஷ்ணு சிவன் லயமாகும் இடம் என்றும் , அவள் கண்ணோக்கம் இரத்னங்கள் ஒளியால் சிவனைப் போலவும், அவள் கண்களில் பெருகும் அன்புப்ரவாகம் எனும் தீர்த்தத்தில் அபிஷேக பிரியரான சிவன் ஸ்னானங்கள் செய்வதாகவும் அவள் புன்முறுவல் என்ற மந்தஸ்மிதம் என்ற ஒளியால் விபூதி பூசியவராக ஸ்ரீ கண்டனாகவும் திகழ்கிறார் என்ற பொருள் படும் படி அமைந்துள்ளது !
படிக்கும்போதே மனதில்.பரவசம்,! கணபதி சொல்லிக் கேட்க இதம் !
ஜய ஜய ஜகதம்ப சிவே

Leave a Reply to Sowmya SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.