Categories
mooka pancha shathi one slokam

கல்யாண ஸூக்தி லஹரீ


கடாக்ஷ சதகம் 13வது ஸ்லோகம் பொருளுரை – கல்யாண ஸூக்தி லஹரீ

संस्कारतः किमपि कन्दलितान् रसज्ञ-
केदारसीम्नि सुधियामुपभोगयोग्यान् ।
कल्याणसूक्तिलहरीकलमाङ्कुरान्नः
कामाक्षि पक्ष्मलयतु त्वदपाङ्गमेघः ॥

3 replies on “கல்யாண ஸூக்தி லஹரீ”

காமாக்ஷி தேவியின் கடை க்கண் என்ற மேகம் தன்னுடன் வயப்படும் பக்தர்களின் ரசங்களை அறியும் தன்மையுடைய நாக்கு என்னும் ஈர வயலில் மங்களகரமான பாசுரங்களாக விளையாட்டும் ! தேவி ஸ்துதிகள் யார் சொன்னாலும் அழகு ! அதுவும் ஞானிகள் வாயிலாக வந்தால் ?
இங்கு தேவியின் காடாக்ஷத்தால் சிறந்த கவிகளின் நாக்கில் அவள் துதிகள் உண்டாவதால் அவை செந்நெல் மணி என்று போற்றப்படுகிறது!!
மனம் என்னும் வயலில் பக்தி எனும் செந்நெல் செழிப்பாக வளரும்! அறுசுவையும் அறியும் நாவிலன்றோ அது உற்பத்தியாகும் என்ற மிக அழகான பொருள் வளம் கொண்டது இந்த ஸ்லோகம்! கணபதியின் மேற்கோள்கள் சுந்தர காண்டம் கீதை இவற்றுடன் மேலும்.அழகுக்கு அழகோட்டுவதாக அமைந்துள்ளது.!
ஜய ஜய ஜகதம்ப சிவே…

நமஸ்காரங்கள் அண்ணா 🙏
மிக அழகான வர்ணனை.
ஸ்ரீ காமாக்ஷி கடாக்ஷம் கவிகள் நாவில் நடனம் புரியும். நாக்கு என்ற நிலத்தில் விளையும் செந்நெல் மணிகளே, சிறந்த கவியின் புலமை திறமை என்று அருமையான உவமை.
ஸ்ரீ பெரியவாள் ,ஸ்ரீ ஸ்வாமிகள் தரிசனம் ஒவ்வொரு ஒலியிலும் ஒளிர்கிறது. மேலும் தரிசனங்கள் கிடைக்க காத்திருக்கும் ஸ்ரீ சரண் அடிமை.🙏🙏

அருமையான பதிவு. ஸ்ரீ ஆசார்யாளின் அற்புதமான் கடாக்ஷ சதகத்தில் 13 வது ஸ்லோகத்தை விவரித்து அதனுடன் சுந்தர காண்டத்தில் சீதம்மாவின் அவநம்பிக்கையை தொடர்பு படுத்தி நமஸ்தேஷாம் மஹாத்மானாம் என்று தனக்கு நல்லது ஏற்பட அசஞ்சல குணவான்களை நமஸ்கரிக்கிறாள். உடனே ஸ்திதப்ரக்ஞர் பற்றிய பவகத்கீதை ஸ்லோகமும் வந்து விட்டது. அந்த மஹாத்மா யாரென்று இந்த கலிகாலத்தில் பளிச்சென்று தெரியும் நம் மஹா பெரியவா தான் என்று ஸ்வாமிகள் திடமான நம்பிக்கையில் சொல்வது என்னை அப்படியே வானில் பறக்க விட்டது. என்னுடைய அதே அனுபவத்தை அந்த ஆங்கரை ஸ்வாமிகள் போன்ற ஞானியும் உறுதி செய்தது பரம பாக்கியம், சந்தோஷம். மஹாபெரியவா பிக்ஷை செய்கையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் சொல்லிக் கேட்பதும் அதுபோல இவரும் ஆகாரம் சாப்பிடும் வேளையில் கோவிந்தனை நினைப்பதும் அதனால் முக்தி என்று நம்புவதும் நல்ல அறிவுரை. மொத்தத்தில் இந்த சிறிய பதிவில் ஏகப்பட்ட ரத்தினங்கள். அவசரத்தில் கேட்காமல் அனுபவித்துக் கேட்க வேண்டும். ஸத் ஸங்கம் என்றால் இதுபோல் இருக்க வேண்டும்.🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.