Categories
mooka pancha shathi one slokam

மாதர்ஜயந்தி மமதாக்ரஹ மோக்ஷணானி


கடாக்ஷ சதகம் 2வது ஸ்லோகம் பொருளுரை – மாதர்ஜயந்தி மமதாக்ரஹ மோக்ஷணானி

मातर्जयन्ति ममताग्रहमोक्षणानि
माहेन्द्रनीलरुचिशिक्षणदक्षिणानि ।
कामाक्षि कल्पितजगत्त्रयरक्षणानि
त्वद्वीक्षणानि वरदानविचक्षणानि ॥

3 replies on “மாதர்ஜயந்தி மமதாக்ரஹ மோக்ஷணானி”

காமாக்ஷியின் கடாக்ஷம் மமதையைப் போக்கி, மூவுலகங்களையும் காத்து, கோரும் வரங்களை கொடுப்பதில் திறமை மிக்கதாக இருக்கிறதாக மூககவி ஸ்தோத்திரம் செய்யும் அருமையான ஸ்லோகம் 🙏🌸

“எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவன அதீதம் அருள்வாயே” – ‘மமதையும் அகங்காரமும் நீங்கி, எல்லாரும் எல்லாமும் நானே என்றாகும் மனோபாவத்திற்கு எட்டாத நிலையை அருள் புரியுமாறு ப்ரார்த்திக்கிறார்’ அருணகிரிநாதர்.

மமதையில்லாமல் எப்படி மஹா பெரியவாளும், ஸ்வாமிகளும், சிவன் சாரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்று அழகாக மேற்கோள் காட்டினீர்கள். 👌🙏🌸 மஹான்கள் எல்லாரும் ‘எல்லாமுன் உடைமையே எல்லாமுன்னுடைய செயலே’ங்கற சரணாகதி பாவத்தோட ஆத்மார்ப்பணம் பண்ணி உதாரண புருஷர்களா இருந்திருக்கா. 🙏🌸

ஸகலத்தையும் தனக்கு அர்ப்பணம் பண்ணும்படி பகவானே கீதையில் சொல்கிறார். “எதைச் செய்தாலும், எதைத் தின்றாலும், எதை ஹோமமோ தானமோ செய்தாலும், எந்தத் தபஸ் பண்ணினாலும் (எந்த விஷயத்தையும் தீவிரமான ஈடுபாட்டோடு பண்ணினால் அது தபஸ்தான்) அதையெல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்’ என்கிறார். (யத் கரோஷி யத் அச்நாஸி)🙏🌸

நாமும் சரணாகதி பாவத்தோடு பக்தி செய்து, அம்பாளுடைய கடாக்ஷம் கிடைக்கப் ப்ரார்த்திப்போம்🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.