Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி தேவி என்னும் அதிசய மின்னற்கொடி


ஸ்துதி சதகம் 43வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி தேவி என்னும் அதிசய மின்னற்கொடி

अनाद्यन्ता काचित्सुजननयनानन्दजननी
निरुन्धाना कान्तिं निजरुचिविलासैर्जलमुचाम् ।
स्मरारेस्तारल्यं मनसि जनयन्ती स्वयमहो
गलत्कम्पा शम्पा परिलसति कम्पापरिसरे ॥
இது ஸ்துதி சதகத்தில் 43வது ஸ்லோகம். ரொம்ப அற்புதமான ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துல காமாக்ஷி தேவியவே ஒரு மின்னல் கொடியா வர்ணிக்கறார். ஆனா, இது மேகத்துக்கு பக்கத்துல வர ஒரு க்ஷணம் மின்னற மின்னல்கொடி கிடையாது. காமாக்ஷி ஒரு அதிசய மின்னல் கொடிங்கறார். எப்படீன்னா? ‘கம்பா பரிசரே’ – கம்பா நதியின் அருகில் ‘காசித் சம்பா பரிலசதி’ – ஒரு மின்னல் ஒளி விடுகிறது. இந்த மின்னல் ‘அநாத்யந்தா’ – மின்னலங்கறது ஒரு க்ஷணத்துல தோன்றி ஒரு க்ஷணத்துல மறையற விஷயம். ஆனா, இந்த காமாக்ஷிங்கற மின்னல் ஆதியும் அந்தமும் இல்லா பெருஞ்ஜோதின்னு / அரும்பெரும்ஜோதின்னு சொல்றாரே மணிக்கவாசகர். அந்த மாதிரி ஆதி அந்தமில்லாத / உற்பத்தியோ முடிவோ இல்லாத ஒரு மின்னல் அப்படீங்கறார்.

‘சுஜன நயநாநந்த ஜனனீ’ – மின்னல் வந்துதுன்னா கண்ணை கூசும், கண்ணுக்கு கெடுதல் பண்ணும். ஆனா, இந்த காமாக்ஷிங்கற மின்னல் ‘ சுஜன நயந ஆனந்த ஜனனீ’ – புண்ணியசாலிகளினுடய கண்களுக்கு ஆனந்தத்தை கொடுக்கும். ரொம்ப புண்ணியம் பண்ணினாதான் காமாக்ஷி தர்ஷணம் கிடைக்கும். காமாக்ஷி தர்ஷணம் கிடைச்சா அவ்ளோ கண் பெற்ற பாக்யம் அப்படீன்னு பேரானந்தம் ஏற்படும்.

‘நிருந்தானா காந்தீம் நிஜ ருசி விலாசைஹி ஜலமுசாம்’ – ஜலமுச: அப்படீன்னா ஜலத்தை கொட்டக்கூடிய மேகம். அந்த மேகத்தினுடைய காந்தியை மின்னல் என்ன பண்ணும்? பெருமைபடுத்தி காண்பிக்கும். மின்னல் வரும்பொழுது மேகம் ரொம்ப அழகா தெரியும். ஆனா, இந்த காமாக்ஷி கருப்பு நிறமா இருக்கா, காமாக்ஷியினுடைய காந்தி நிஜ ருசி ‘விலாசை:’ – தன்னுடைய காந்தி விலாசத்தினால் இந்த காமாக்ஷிங்கற மின்னல் ‘ஜலமுசாம் காந்தீம் நிருந்தாநா’ – மேகத்தினுடைய காந்தியை தடை பண்ணிடறது அதாவது குறைச்சுடறது.

‘ஸ்மராரே: ஸ்தாரல்யம் மனசி ஜனயந்தி’ – ‘ஸ்மராரின்னா’- மன்மதனை எரித்த பரமேஸ்வரன். பரமேஸ்வரனுடைய ‘மனசி’- மனத்தில் ‘தாரல்யம் ஜனயந்தி’ – ஒரு சஞ்சல தன்மையை உண்டாக்கறது. மின்னல்ங்கறத பார்த்தா உடனே நம்மள ஸ்தம்பிக்க பண்ணும். ஆனா, காமக்ஷிங்கற மின்னல பார்த்து பரமேஸ்வரனுக்கு காமம் ஏற்படறது. அதனால அவருக்கு சஞ்சலம் ஏற்ப்படறது. அப்படி இந்த மின்னலானது ரொம்ப ஆச்சரியமான ஒரு மின்னலா இருக்கு. ‘ஸ்வயம் பரிலஸத்தி’ – மின்னல்ங்கறது மேகம் இருக்கும்போதுதான் வரும். ஆனா, இந்த காமாக்ஷிங்கற மின்னல் மேகம் இல்லாம சுதந்திரமா தானே பிரகாசிக்கறது அப்படீங்கறார். ரொம்ப நிறைய கவித்துவமா இருக்குங்கறதுக்கு மேல ரொம்ப நிறைய பொருட்பொதிந்த ஒரு கவிதை இது. ‘சுஜன நயனாநந்த ஜனனீ ‘ங்கறார் -புண்ணியசாலிகளினுடைய கண்களுக்கு காமாக்ஷினுடைய தரிசனம் கிடைக்கும். அந்த தரிசனம் கிடைச்சா பேரானந்தம் ஏற்படும்.

இன்னிக்கு ஆருத்ரா தரிசனம். சிதம்பரத்துல நடராஜருடைய அந்த அபிஷேகத்தை இன்னிக்கு கார்த்தல பார்க்கிறது ரொம்ப விசேஷம்.
“குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காண பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.”

இந்த உலகத்தில் மனித பிறவிங்கறது otherwise வேண்டாம். Mundane ரொம்ப vexing இந்த வாழ்க்கைல ஒரு பயன் இருக்கற மாதிரி தெரியலை. ஆனால், அந்த சித் சபேசனுடைய நாட்டியத்தை பார்க்க முடியுமானால் அந்த சிதம்பர நடராஜாவுடைய தரிசனம் கிடைக்குமானால் இந்த வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கு அப்படீங்கறார் அப்பர் பெருமான்.

மஹாபெரிவாக்கூட நம்ம ஒரு கார்யம் பண்றோன்னா ஒரு காரியத்துக்கும் அடுத்த காரியத்துக்கும் நடுவுல இருக்கற Intervalல பகவானை தியானம் பண்ணனும், ரூப தியானம் பண்ணனும், நாமத்தை ஸ்மரிக்கனும், நாமத்தை ஜபிக்கனுன்னு சொல்றா. அந்த ரூப தியானங்கறது மஹான்கள் எல்லாரும் கொண்டாடி இருக்கா. அப்பர் பெருமான் இந்த மாதிரி சிதம்பர நடராஜாவை தரிசனம் பண்ணி சந்தோஷ படறார். வாழ்க்கைக்கே பொருள் (meaning) கிடைக்கறதுங்கறார். அப்படி ஸ்வாமிகளுடைய தரிசனம் தான் ‘சுஜன நயன ஆனந்த ஜனனீ ‘ அப்படீன்னு மஹான்களுடைய கண்களுக்கு ஆனந்தத்தை குடுக்கறது. நாமும் காமாக்ஷிங்கற அசயாத ‘களத்கம்பா’ அப்படீங்கறார் – நடுக்கமே இல்லாத ஒரு மின்னல் இது அப்படீன்னு சொல்றார். மின்னல்ங்கறது நடுங்கும் இல்லயா? அப்படி அசைவில்லாத மின்னலான காமாக்ஷியினுடைய தரிசனம் கிடைக்கனும் மஹாபெரிவாளுடைய தரிசனம் கிடைக்கனும் அப்படீன்னு நம்ப இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிக்கனும்.

अनाद्यन्ता काचित्सुजननयनानन्दजननी
निरुन्धाना कान्तिं निजरुचिविलासैर्जलमुचाम् ।
स्मरारेस्तारल्यं मनसि जनयन्ती स्वयमहो
गलत्कम्पा शम्पा परिलसति कम्पापरिसरे ॥

தக்ஷிணாமூர்த்தியா இருந்த பரமேஸ்வரனை நடராஜாவா பண்ணினதே காமாக்ஷிதானே? ‘ஸ்மராரேதாரல்யம் மனஸி ஜனயந்தின்னு’ சொல்றாரே மூக கவி அப்படி தபஸ்வீயா இருந்தவரை குடும்பியா ஆக்கினது காமாக்ஷி. இன்னொரு விஷயம் நம்ப ஞாபகம் வெச்சுக்கணும் உலகத்துல சில ரூபங்களை எல்லாம் பார்க்கும்போது நமக்கு சந்தோஷம் ஏற்படுமா இருக்கும் ஆனா, அதெல்லாம் அந்த மேகத்துக்கு பக்கத்துல வர மின்னல் மாதிரிதான். ஒரு க்ஷணத்துல அழகா இருக்கும் அடுத்த க்ஷணம் துக்கத்தை குடுக்கும். அது மேல பாசம் வெச்சோன்னா நமக்கு அதிலிருந்து பல சிரமங்கள்தான் வரும். அதனால் ஸ்வாமியோட ரூபம், குரு காமிச்சு குடுத்த அந்த தெய்வத்தோட ரூபத்தை அது திவ்ய மங்கள விக்ரஹம் அப்படீன்னு ஞாபகம் வெச்சுண்டே இருக்கணும். நாராயணீயத்துல இரண்டாவது தசகம் மூன்றாவது ஸ்லோகத்துல

யத்-த்ரைலோக்ய-மஹீயஸோSபி மகிதம்ஸம் மோஹநம்மோஹநாத் காந்தம்காந்திநிதாநதோSபி மதுரம் மாதுர்யதுர்யாதSபி |
ஸௌந்தர்யோத்தர- தோபிஸுந்தரதரம் த்வத்ரூப-மாச்’சர்யதோSபி
ஆச்’சர்யம் புவநேந கஸ்யகுதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ ||

அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி உலகத்துல ரொம்ப ஒரு மதுரமா தோணித்துன்னா அதை காட்டிலும் நூறு மடங்கு மதுரம் என்னுடைய குருவாயூரப்பனுடைய ரூபம். ரொம்ப மோஹனமா ஒன்று இருந்துதுன்னா அதை காட்டிலும் ரொம்ப மனத்தை கவருவது என்னுடைய க்ருஷ்ணனுடைய ரூபம் அப்படீன்னு மனசை பழக்கனும். அதுக்கு இந்த ஸ்லோகத்தில சொல்லியிருக்கற சலிக்கற மின்னலும் சலிக்காத மின்னலும் அதிசய மின்னலான காமாக்ஷி அப்படீங்கறதை ஞாபகம் வெச்சுண்டோன்னா நமக்கு அந்த விவேகம் இந்த பகுத்தறிவுங்கறது. எது பார்க்கும்போது கவர்ச்சியா இருக்கும் ஆனா பின்னால துக்கத்தை குடுக்குமோ அதுக்கிட்ட நம்ம மனசை வெக்காம எது பழக பழக இனிமையா இருந்து நம்ம ஜென்ம ஜென்மமாவா ஒரு ரூபத்தை ஆராதனை பண்ணின்டே வருவோம். அந்த ஸ்வாமியோட ரூபம் தானா நம்மக்கிட்ட வந்து சேரும். அந்த கணபதியோட ரூபம்தான் தானா மனசுக்குள்ள திரும்பி திரும்பி வந்துண்டே இருக்கும். அந்த ரூபத்தை நம்ம கெட்டியா புடிச்சுக்கனும். சாஸ்த்ரோக்தமான குரு காண்பிச்ச ரூபத்துல மனசை வெக்கனும். அதுக்கு ஆரம்பத்துல அந்த நாமத்தயும் அந்த ஸ்தோத்ரங்களயும் கெட்டியா பிடிச்சுண்டோன்னா அது பண்ண பண்ண அந்த ரூப தியானம் தானா மனசுல வரும். அதுதான் ரொம்ப சேஃப் (safe). அப்படி அந்த அதிசய மின்னல் கொடியான காமாக்ஷி நமக்கு நம்முடைய இஷ்ட தெய்வமா நம்முடைய குருவா சாக்ஷாத்தா கண்ணு முன்னாடி தரிசனம் குடுக்கனும்னு இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்தனை பண்ணிப்போம்.

நம: பார்வதி பதயே | ஹர ஹர மஹாதேவா ||

3 replies on “காமாக்ஷி தேவி என்னும் அதிசய மின்னற்கொடி”

அடி முடி கான முடியாத,மிக நிகறறவளும் ஒரு மின்னல் கொடிபோல் நல்லவரகள் கண்களுக்குக் காட்சிகொடுப்பவளும்,தன் மேனியின் காந்தியால் மேகத்தின் ஒளியையே மங்கச் செய்கிறாள்.காமாக்ஷி என வர்ணிக்கிறார் மூக கவி. மன்மதனை ஜெயித்த ஈசனின்.மனதில்.கசன காலம்.தோன்றி, மறைந்து அனைவர் கண்களையும் கூடச் செய்யும். அன்னை.அசையாத மின்னல்.கொடி.போன்று க்கம்பா நதி தீரத்தில்.ஒளிற்கி ராள்!
மின்னல்.கொடி எல்லார் கண்களையும். கூச வைத்து
கார் மே கங்களுக்கு. அழகையும் பெருமையும் அளிக்கிறது! ஆனால்.தேவி எனும்.மின்னல்கொடி தோன்றுவதும், மறைவதும் இல்லை ! எப்போதும் ஒளிரும்.தன்மையுடையது !
பாக்யவாங்கள் தரிசிக்கும் படியாக காஞ்சியில் ஸ்திர வாசம் செய்கிறது ,!
அற்புதமான வர்ணனை தேவியின் தேக ஒளியைக்கண் மும் தோன்றச் செய்யும் அற்புதம் !!
ஒவ்வொரு ஸ்லோகமும் தேவியின் கீர்த்தி, அவள் ஒளி, முக மண்டலம் இவற்றை வர்ணிப்பது ரொம்ப இனிமை ! அதனை விளக்கியது அதைவிட அற்புதம் !
ஜய ஜய ஜகதம்ப சிவே …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.