ஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது?


மந்தஸ்மித சதகம் 12வது ஸ்லோகம் பொருளுரை – ஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது?

नित्यं बाधितबन्धुजीवमधरं मैत्रीजुषं पल्लवैः
शुद्धस्य द्विजमण्डलस्य च तिरस्कर्तारमप्याश्रिता ।
या वैमल्यवती सदैव नमतां चेतः पुनीतेतरां
कामाक्ष्या हृदयं प्रसादयतु मे सा मन्दहासप्रभा ॥

நித்யம் பா3தி4த ப3ந்து4 ஜீவமத4ரம் மைத்ரீஜுஷம் பல்லவை:
ஶுத்3த4ஸ்ய த்3விஜமண்ட3லஸ்ய ச திரஸ்கர்தாரமப்யாஶ்ரிதா ।
யா வைமல்யவதீ ஸதை3வ நமதாம் சேத: புனீதேதராம்
காமாக்ஷ்யா ஹ்ருʼத3யம் ப்ரஸாத3யது மே ஸா மந்த3ஹாஸப்ரபா4 ||

இது மந்தஸ்மித சதகத்துல 12 ஆவது ஸ்லோகம். மந்தஸ்மித சதகத்துல, நிறைய ஸ்லோகங்கள் கடைசி வரி மட்டுமே ஒரு ப்ரார்த்தனையா இருக்கும்.

“காமாக்ஷ்யா ஹ்ருʼத3யம் ப்ரஸாத3யது மே ஸா மந்த3ஹாஸப்ரபா4 ” – ஹே காமாக்ஷி! உன்னுடைய மந்தஹாசத்தின் ஒளி, என்னுடைய மனதை, “ப்ரஸாத3யது” – தெளிவடையச் செய்யணும். என் மனத்தில் தெளிவைக் கொடு என்று ஒரு அழகான பிரார்த்தனை.

அதுக்கு முந்தின வரி, “யா வைமல்யவதீ ஸதை3வ நமதாம்” – எந்த உன்னுடைய “மந்த3ஸ்மித ப்ரபா4”, “வைமல்யவதீ” – வெண்மையா இருந்ததுண்டுனு ஒரு அர்த்தம். தூய்மையை இருந்துண்டுனு ஒரு அர்த்தம். “ஸதை3வ நமதாம் சேத: புனீதேதராம்” – எப்போதும் நமஸ்காரம் பண்றவாளுடைய மனதைத் தூய்மைப்படுத்தறதோ, அந்த உன்னுடைய மந்தஸ்மிதம் என் மனத்திலேயும் தெளிவைக் கொடுக்க வேண்டும்னு இரண்டு line .

ஆனா, இதுல முதல் இரண்டு lineஐ பார்த்தா, ரொம்ப வேடிக்கை பண்ணறார் ஸ்லேஷைகள் எல்லாம் வெச்சுண்டு. அதுல ஒரு பெரிய தத்துவமும் இருக்கு. தான் வெண்மையா இருந்து, மத்தவாளை தூய்மை படுத்தணும்னா, சில basic குணங்கள் எல்லாம் வேணும். எல்லார்கிட்டயும் பிரியமா இருக்கணும், நல்லவாளோட சங்கம் வெச்சுக்கணும், பெரியவாளை எல்லாம் கௌரவிக்கணும், நமஸ்கரிக்கணும், இப்படியெல்லாம் இருக்கணும். ஆனா உன்னோட இந்த மந்தஸ்மிதம் ரொம்ப விபரீதமா இருக்குனு சொல்றார்!

“நித்யம் பா3தி4த ப4ந்து ஜீவமத3ரம்” – பந்து ஜனங்களோட உயிரை எடுக்கறதுனு சொல்றார்.

“அத3ரம்” – ரொம்ப கீழ இருக்கு.

“மைத்ரீஜுஷம் பல்லவை:” – ‘பல்லவ:’ என்றால் துஷ்டர்கள்னு அர்த்தம். துஷ்டர்களோடு friendship வெச்சுண்டு இருக்கு!

“ஶுத்3த4ஸ்ய த்3விஜமண்ட3லஸ்ய” – சுத்தமான ப்ராமண சமூகத்திடம்,

“திரஸ்கர்தாரமப்யாஶ்ரிதா” – அவாளை திரஸ்காரம் பண்ணி, அதாவது அவமானப்படுத்தி அல்லது விலக்கி வெச்சு, இந்த மாதிரி எல்லாம் உன்னுடைய மந்தஸ்மிதம் பண்ணறது! தான் தூய்மையை இருக்கு! ஆனா இந்த மாதிரி எல்லாம் அதோட behaviour. ஆனா நமஸ்காரம் பண்ணறவாளைத் தூய்மைப் படுத்தறது! அந்த உன்னுடைய மந்தஸ்மிதம், என் மனத்திலும் தெளிவைக் கொடுக்க வேண்டும்னு கொண்டு போய் முடிக்கறார்.

இதுக்கு காமாக்ஷியோட மந்தஸ்மிதம்னு பார்க்கும் போது, “ப4ந்து ஜீவம்”னா – செம்பருத்தம் பூ. செம்பருத்தம் பூவை,

“நித்யம் பா3தி4த ப4ந்து ஜீவமத3ரம்” – அம்பாளுடைய அதரம், அதாவது உதடு, செம்பருத்தம் பூவையும் பழிக்கும் படியா அவ்வளவு அழகான உதடு! “திரஸ்கர்தாரம்”னா ‘திரை’ன்னு அர்த்தம்.

“ஶுத்3த4ஸ்ய த்3விஜமண்ட3லஸ்ய” – சுத்தமான “த்3விஜமண்ட3லம்”னா பற்களோட வரிசை. அழகான பல்வரிசையை “திரஸ்கரம்”னா மறைக்கறது. செம்பருத்தி போன்ற அழகான உதடுகள், பல்வரிசையை மூடி இருக்கு.

“மைத்ரீஜுஷம் பல்லவை:” – அந்த உதடுகள், தளிரைப் போல மென்மையா இருக்கு!

“அத3ரம்” – அதுல கீழ்வரிசையில் உதடுகள்ல இருக்கற உன்னுடைய மந்தஸ்மிதம், எனக்கு தெளிவை தர வேண்டும், அப்படினு மந்தஸ்மிதத்துக்கு வரும் போது அர்த்தம். இப்படி வேடிக்கை பண்ணறார்!

ஆனால் இதுல ஒரு பெரிய தத்துவம் இருக்கு. மஹான்கள் தங்களிடத்தில் வரவாளை எப்படி தூய்மைப் படுத்தாறான்னு சொல்லாம சொல்லறார்!

“நித்யம் பா3தி4த ப4ந்து ஜீவமத3ரம்” – நம்ம மஹா பெரியவாளுடைய வாழ்க்கையை எடுத்துண்டு, அதை உதாரணமா கொண்டு பார்த்தா, இது புரியும். பந்துக்கள் உயிர் எடுக்கறதுனா ச்ரமப்படுத்தறதுனு வெச்சுக்கலாம். மஹா பெரியவளுடைய பந்துக்கள் எல்லாரும் அந்த மடத்துக்காக அவ்ளோ சேவை பண்ணி இருக்கா. மஹா பெரியவா, “சந்திரமௌலீஸ்வரரோட விபூதியை தவிர வேற ஒண்ணும் எடுத்துக்க மாட்டேன்னு இந்த மடத்திலிருந்து”னு இருந்திருக்கார்! பிக்ஷை கூட யாராவது வந்து “இன்னிக்கு நான் பெரியவாளுக்கு நான் பிக்ஷை பண்ணறேன்”னு சொன்னா அன்னைக்கு சாப்பிடுவார்! இல்லேன்னா பட்டினி கூட இருந்திருக்கார். அவ்வளவு வைராக்கியம் பெரியவா! பெரியவளோட அண்ணா தம்பிக்கள், அவாளுடைய பிள்ளைகள் எல்லாரும் மடத்துக்கு service தான் செஞ்சிருக்கா. சாப்பிடலாம், அவ்வளவுதான். மத்தபடி உயிரையே கொடுத்திருக்கா. அப்படி சர்வீஸ் பண்ணியிருக்கா அவா. Literalஆவே சாம்பமூர்த்தி சாஸ்திரிகளோட பிள்ளை ‘மணி’ என்கிறவர் உயிரையே கொடுத்தார். மத்தவா எல்லாரும் பெரியவா சொல்லி, பெரியவளுடைய பூர்வ ஆச்சார்யர்களுக்கெல்லாம் ஆராதனை பண்ணியிருக்கா! சிவன் sir கும்பகோணத்துல libraryயை பாத்துண்டிருக்கார். நந்தவனம் போட்டிருக்கார். இப்படி Life of Service ! இது பெரியவானு இல்ல. மஹாபெரியவளுடைய தாத்தா பேர் கணபதி சாஸ்திரிகள். அவரும் மடத்துக்கு உழைச்சிருக்கார். அதுக்கு முன்னாடி எத்தனையோ தலைமுறையும் lifeஐயே மடத்துக்காக dedicate பண்ணவா. அதுமாதிரி, பெரியவாளை நெருங்கணும்னா, இது பந்துக்கள். பெரியவாளுக்கு நெருங்கி அணுக்க தொண்டர்கள், கைங்கர்யம் பண்ணவாளும் ரொம்ப ச்ரமப்பட்டிருக்கா. ஆனா அவா அதை சிரமமா நினைக்கல!

ஸ்வாமிகளும் சரி, ஸ்வாமிகளோட குடும்பமும் சரி, ரொம்ப கஷ்டம் தான் பட்டிருக்கா. யாராவது தங்களை முழுமையா ஞானிகள்கிட்ட தன்னை ஒப்படைச்சுண்டா, அவாளோட ஸம்ஸாரம் குறையத்தான் செய்யும். அது அந்த பக்தருக்கும் சரி, அந்த பக்தரை சுத்தி இருக்கற உறவுக்காராளுக்கும் சரி, சிரமமாத்தான் இருக்கும். அது வெளில சிரமம். உள்ளுக்குள்ள பேரானந்தம்! அதை அவா மட்டும் தான் அனுபவிப்பா!

ரமண பகவான்கிட்ட, டாக்டரா இருக்கறவா, வக்கீலா இருக்கறவா, நல்ல high postsல இருக்கிறவா, வாத்தியாரா இருக்கிறவா அப்படி எல்லாரும், பகவான்கிட்ட பந்து சேர்ந்துட்டா, அவா எல்லாத்தையும் விட்டுடறா. அவருக்கு service பண்ணிண்டு, அவா சொன்ன விசார மார்கத்தையோ, நாம ஜபத்தையோ, ஏதோ ஒரு வழில, எல்லாத்தையும் விட்டுட்டு அவர் கிட்ட வரா.

“ப்ரரோஹத் ஸம்ஸார ப்ரஸர க3ரிம ஸ்தம்ப3ன ஜப:” அப்படின்னு சொல்லி, மகான்களைப் போய் பார்த்த பின்ன, ஸம்ஸாரம், அதுக்கு மேல வளரவொட்டாம அடிச்சுடறா அவா. திரும்ப சம்பாதிக்கணும், திரும்ப பெரிய பதவி அப்படின்னு, பேராசையினால அது வளர்ந்து வளர்ந்து ஜனங்கள், பாமர ஜனங்கள் ஸம்ஸாரத்தால போய் அல்லல் படற மாதிரி, மகான்களை அண்டினவா, அல்லல் படமாட்டா! ஏதோ ப்ராரப்தமா என்ன இருக்கோ அதை அனுபவிப்பா. மத்தபடி காரியங்கள் எல்லாம் சுருங்கிண்டேதான் வரும்.

“மைத்ரீஜுஷம் பல்லவை:” – இந்த இடத்தில் துஷ்டர்களோடு தோழமை பூண்டு அப்படின்னு அர்த்தம். அந்த மகான்கள் பக்கத்துல யாரு நெருங்கி வந்தாலும், அவளோட குணத்தை மட்டுமே பார்ப்பா, நட்பா இருப்பா. மஹாபெரியவாகிட்ட, சிவாஜி கணேசன், MGR , கண்ணதாசன் இன்னும் எத்தனையோ பேர், அவாள்ளாம் வந்து நமஸ்காரம் பண்ணா, “நீ அந்த கோவிலுக்கு யானை வாங்கி கொடுத்த இல்லையா! உன்னோட அப்பா கூட நிறைய service பண்ணிருக்கா!” அப்படின்னு ஆரம்பிச்சு, அவ்வளவு அன்பு பாராட்டி, “நீ மூகாம்பிகை கோவிலுக்கு பண்ணு!” அப்படின்னு direct பண்ணிவிடுவா. “நீ இங்கெல்லாம் வரலாமான்னு யோசிக்காதே! ‘பதிதபாவனன்’னு தானே பகவானுக்கு பேரு. அடிக்கடி வந்திண்டு இரு”ன்னு சொல்லி, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுத வெச்சா! இவாளோட peronal life , public life பார்த்தா அப்படி ஒண்ணும் ஓஹோன்னு இருக்காது. ஆனா தன்கிட்ட வந்தா, பெரியவா அன்பு மட்டுமே பாராட்டியிருக்கா! எல்லா மகன்களும் அப்படி தான்.

ஸ்வாமிகளும் அப்படிதான். எத்தனையோ வருஷங்கள் இவரோட கொள்கைகளெல்லாம் கடிஞ்சு பேசிண்டு, இவரைப்பற்றி தப்பான அபிப்ராயம் தான் வெச்சுண்டு இருப்பா. அப்பறம் ஒரு நாள், ஸ்வாமிகள் கிட்ட வந்து நமஸ்காரம் பண்ணா, ஸ்வாமிகள் அன்பே வடிவா அவாகிட்ட பேசிண்டு இருப்பார்! அதெல்லாம் நான் பார்த்திருக்கேன்.

பகவானும் அப்படிதான். பகவான் கிட்ட, யாராவது காலமாயிட்டான்னு சொன்னா பகவான், அவாளைப் பத்தி ஏதாவது ஒரு நல்ல குணத்தை எடுத்து சொல்லுவாராம்! ஒருத்தன் ரொம்ப பொல்லாதவனா இருக்கான். அவன் காலமாயிட்டான் அப்படின்னு பகவான்கிட்ட சொன்னா, “அவன் ரொம்ப punctual !”, அப்படின்னு சொன்னாராம்!

அதுமாதிரி மகான்களுக்கு நல்லது மட்டுமே தெரியறது. அவா “மைத்ரீஜுஷம் பல்லவை:”னு, துஷ்டர்கள் கிட்டயும் “மைத்ரீம் ப4ஜத”னு ஒரு குணம் வெச்சுண்டு இருக்கா!

“ஶுத்3த4ஸ்ய த்3விஜமண்ட3லஸ்ய ச திரஸ்கர்தாரமப்யாஶ்ரிதா” – ப்ராமணர்கள்கிட்ட indifferentஆ இருக்கறது. மஹாபெரியவா, ப்ராமணர்களுடைய குரு பீடமா தான் இருந்தார், ப்ராமண மடமாத்தான் வெச்சிருந்தார். வர்ணாச்ரமம் எல்லாம் பார்த்துண்டு இருந்தார். ஆனா, யாராவது foreign போயிட்டு வந்தா, அவாளுக்கு தீர்த்தம் கொடுக்கமாட்டார். பஞ்சகச்சம், குடுமி எல்லாம் இல்லைனா, ரெண்டாம் பக்ஷம் தான்! விதந்துகள் மடி பண்ணிண்டு வந்தாதான் எதிர்ல வரலாம். ஓட்ட ஓட்ட பட்டினி கிடந்தா தான், மத்தியானம் தீர்த்தம் கொடுப்பார். இப்படி அவர் தள்ளி விட்டது தான் ஜாஸ்தி! இதையும் மீறிண்டு, தன் பக்கத்தில் வந்தளைத்தான் பெரியவா நெருங்க விட்டா. ஆனா எங்க இருந்தாலும் பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, அநுகிரஹம் அடைஞ்சவா எத்தனையோ கோடிபேர்! ஆனா இந்த மாதிரி ரொம்ப orthodoxஆ இருந்து, ‘so called aristrocrat brahmins ‘ எல்லாம் பெரியவா ஒண்ணும் ரசிக்கவே இல்ல. அவாளுக்கு எல்லாம் முதலிடமே கிடையாது. ஏதோ அழுக்கு வேஷ்டி கட்டிண்டு, ஸ்வாமிகளே அப்படித்தான். ரொம்ப சாதுவா இருந்தார். ஆனா அந்த பக்தி இருந்தது! ஸ்வாமிகள், கிருஷ்ணன் கதை சொல்லறார்னு ஸ்வாமிகள் கிட்ட அப்படி அன்பு பாராட்டினார். “தான் என் பேச்சைக் கேட்டுண்டு ப்ராஹ்மணா எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கான்! 4, 5 பேர் இருக்கா. அதுல இந்த கல்யாணராம பாகவதர், அந்த மாதிரி இருக்கார்!” அப்படின்னு அவ்வளவு சந்தோஷம் பட்டுண்டு, அதே நேரத்துல எவ்வளவு பணத்தைக் கொண்டு வந்து கொட்டினாலும், குணம் இல்லைன்னா, அவாளை ஒதுக்கி வெச்சு, அந்த மாதிரி மஹான்களுடைய குணம்!

ஸ்வாமிகளே , பக்தில அதிகமா மூழ்கி இருந்ததுனால, வைதீகாளா இருந்தாலும் சரி, இல்லேன்னா ஆனந்தா யோகி மாதிரி இருந்தாலும் சரி, greedyஆ இருந்தாலோ, இல்ல dishonestஆ இருந்தாலோ, மெதுவா ஸ்வாமிகள் விலக்கிடுவார் அவாளை! இது மஹான்களுடைய குணம்!

அதைத்தான், இந்த ரெண்டாவது lineல சொல்லற மாதிரி இருக்கு! இந்த மாதிரி அவாளுடைய குணத்துனால, யாரு இதெல்லாம் மீறிண்டு வந்து நமஸ்காரம் பண்றாளோ, “யா வைமல்யவதீ ஸதை3வ நமதாம் சேத: புனீதேதராம்” – அந்த மாதிரி மஹான்களுடைய behaviourக்கு இன்னொரு reason, தங்களுடைய தூய்மையை maintain பண்றதுக்காகவே அவா அந்தமாதிரி carefulஆ இருந்தா! துஷ்டனா இருந்தாலும் அவன் கிட்ட இருக்கற நல்லதை பார்க்கறது, அன்பு பாராட்டறது, அதே நேரத்தில நெருங்கி வந்து சிஷ்யர்கள்ன்னு இருந்தாலும் அவாகிட்ட தோஷங்கள் இருந்தா, அந்த தோஷங்களை எடுத்துக்காட்டறது, தன்னுடைய பந்துக்கள்னு எந்த ஒரு attachmentஉம் இல்லாம இருக்கறது.

“அத3ரம்” னா ரொம்ப கீழானது அப்படின்னு அர்த்தம். கீழ் உதடுல இருக்குனு மந்தஸ்மிதத்துக்கு. மஹான்களுக்கு சொல்லும் போது, அவா ரொம்பவே எளிமையா இருந்தா! மஹாபெரியவாளை கனகாபிஷேகம் பண்ணி இருக்கா ரெண்டு மூணுவாட்டி. ஆனா அவர் அதெல்லாம் விட்டுட்டு, நடையா நடந்து, எங்கெங்கேயோ கோவில்லேயும், மரத்தடிலயும் படுத்துண்டு, ரெண்டே ரெண்டு பேரை கூட வெச்சுண்டு, மழையிலேயும் வெயில்லயும் இங்கேர்ந்து பிச்சைக்காரன் மாதிரி literalஆ நடந்து நடந்து ‘சதாரா’க்குப் போனார்!

ஸ்வாமிகளும் அப்படித்தான். ரொம்ப ஏழைகளுக்கு எளியவரா இருந்தார். ஸன்யாசம் வாங்கிண்ட பின்னர், அவரை எவ்வளவோ சௌகர்யமா வெக்கறதுக்கு எவ்வளவோ பக்தர்கள் எல்லாரும் விரும்பினா. ஆனா அவர் “அதெல்லாம் இல்ல. இதே திருவல்லிக்கேணில, சிவன் sir இருக்க சொன்னார்! நான் இங்கயே இருந்துக்கறேன்!”னு இருந்தார். அது எல்லாருக்கும் அநுகிரஹமா ஆச்சு. அதுமாதிரி, உலக அளவுல ‘அத3ரம்’ங்கிற மாதிரி ரொம்ப எளிமையா, இந்த குணங்களெல்லாம் பார்த்து நமஸ்காரம் பண்ணற பக்தர்களுக்கு, “சேத: புனீதேதராம்” – அவாளுடைய மனதில் தூய்மை ஏற்படும்! எப்பேர்ப்பட்ட தூய்மைன்னா, “எங்கயும் எதுலயும் ராமனைப் பார்க்கணும்! நீ ராம நாம ஜபம் பண்ணு! எங்கும் எதிலும் நீ ராமனை பார்த்து service பண்ணு!” அப்படின்னு ஒரு மஹான் சொல்லி கொடுத்தார்னா, கோபமா இருக்கறவா, ரொம்ப வெறுப்பை காமிக்கறவா, அவா கிட்டயும் ராமனை பார்க்கணும்! ரொம்ப பிரியமா இருக்கறவா, ரொம்ப அழகா இருக்கறவா, ரொம்ப த்ருப்தியா நடந்துக்கறவா அவாகிட்டயும் ராமனை பார்க்கணும்னா, ‘இந்த த்ருப்தியா இருக்கறவா கிட்ட பிரியமும் வெக்கக்கூடாது! நம்ம கிட்ட வெறுப்பை காமிச்சு ரொம்ப தப்பா behave பண்ணறவா கிட்ட, தப்பையும் பார்க்க கூடாது!’ அப்படிங்கற தெளிவையும் அவா கொடுக்கறான்னு இந்த ஸ்லோகத்துல சொல்லறார்.

நித்யம் பா3தி4த ப3ந்து4 ஜீவமத4ரம் மைத்ரீஜுஷம் பல்லவை:
ஶுத்3த4ஸ்ய த்3விஜமண்ட3லஸ்ய ச திரஸ்கர்தாரமப்யாஶ்ரிதா ।
யா வைமல்யவதீ ஸதை3வ நமதாம் சேத: புனீதேதராம்
காமாக்ஷ்யா ஹ்ருʼத3யம் ப்ரஸாத3யது மே ஸா மந்த3ஹாஸப்ரபா4 ||

ராமாயணத்தை எடுத்துண்டாலும், ராமர், ” பா3தி4த ப3ந்து4 ஜீவம்”னு தான் காட்டுக்கு போகும் போது, லக்ஷ்மணனும் சீதையும் கூட காட்டுக்கு வந்து, அவாளும் காட்டுல ச்ரமப்படறா!

“மைத்ரீஜுஷம் பல்லவை:” – எதிரிகள்கிட்டயும், துஷ்டர்கள்கிட்டயும் கருணை காமிக்கறதுங்கறது, “வந்து சரணாகதி பண்ணற விபீஷணனுக்கு மட்டும் இல்ல, வந்திருக்கறவன் ராவணனா இருந்தாலும் அழைச்சுண்டு வா, நான் அவனுக்கு அபயம் கொடுப்பேன்!”னு சொன்னார்.

“ஶுத்3த4ஸ்ய த்3விஜமண்ட3லஸ்ய ச திரஸ்கர்தாரமப்யாஶ்ரிதா”னு, நெருங்கி இருக்கறவா கிட்டயும், தூய்மையா இருக்கறவா கிட்டயும், ஏதாவது ஒரு தோஷம் இருந்தா “திரஸ்கர்தாரம்” பண்ணுவார்ங்கற மாதிரி, லக்ஷ்மணன் பரதனை சந்தேகப்பட்டு பேசின போது, கடுமையா பேசினார்! சீதாதேவி, லக்ஷ்மணை வேஷதாரின்னு பேசினபோது, லக்ஷ்மணனுடைய characterஐ assasinate பண்ணதால, அடுத்தவாட்டி பார்த்தபோது, “உன் character மேல எனக்கு சந்தேகமா இருக்கு! அதுனால நீ பத்து திக்குல, நீ யார்கிட்ட வேணாலும், எங்கவேணாலும் போலாம்!”னு சொல்லறார். அப்படி ராமர் பற்றற்று சம நோக்கோட இருந்ததால், ராமரை வந்து நமஸ்காரம் பண்ண ஹனுமார், “நமதாம் சேத: புனீதேதராம்” அப்படின்னு கிஷ்கிந்தா காண்டத்தோட ஆரம்பத்துல ஹனுமார் ராமரை வந்து நமஸ்காரம் பண்ணார். அதிலிருந்து அவ்ளோ உள்ள தூய்மையோடு, அவ்வளவு தெளிவோடு, ஆச்சர்யமான கார்யங்களெல்லாம் பண்ணறார் இல்லையா! இன்னிக்கு ‘ஹனுமத் ஜயந்தி’! மார்கழி மூலம். ஹனுமாரையும் இந்த ஸ்லோகத்தின் மூலமா ஸ்மரிப்போம்னு ஒரு ஆசை. நமக்கும் அந்த மாதிரி ஒரு தெளிவு, அந்த மாதிரி ஒரு தூய்மை கொடுக்கணும்னு வேண்டிப்போம்.

நம: பார்வதி பதயே… ஹர ஹர மஹாதேவா

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.