இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்


மந்தஸ்மித சதகம் 68வது ஸ்லோகம் பொருளுரை – இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்

श्रीकाञ्चीपुररत्नदीपकलिके तान्येव मेनात्मजे
चाकोराणि कुलानि देवि सुतरां धन्यानि मन्यामहे ।
कम्पातीरकुटुम्बचङ्क्रमकलाचुञ्चूनि चञ्चूपुटैः
नित्यं यानि तव स्मितेन्दुमहसामास्वादमातन्वते ॥

நீலா மாமியின் – நான் கண்ட பூஜ்யஸ்ரீ மகாபெரியவா புஸ்தகம் கீழே. (36 mb). மொபைலில் திறக்காது. கணினி Browserல் தான் திறக்க முடியும். மொபைல் browserல் திறக்க முடியும். https://www.dropbox.com/s/ey456sqpb6ch2h2/Anugraham-Naan-Kanda-Poojya-Sri-Maha-Periavaal-Smt-Neela-Subramanian-Dr-MS-Narayanan.pdf

Share

Comments (1)

  • Sowmya Subramanian

    அருமையான ஸ்லோகம். அற்புதமான விளக்கம். நீலா மாமியின் மஹாபெரியவா அநுபவங்களை மேற்கோள் காட்டியது மிக அருமை 👌🙏🌸

    மூக கவி காமாக்ஷியை சராசர ஈஸ்வரி என்று அழைக்கிறார். ஸகல ஜீவ ப்ரபஞ்சம், ஜட ப்ரபஞ்சத்திற்கும் ஈச்வரி. ஈஸ்வரி என்றால் பொதுவாக ஆள்பவள், தலைவி என்றே அர்த்தம் இருந்தாலும், திரோதானத்துக்கு பொதுவாக ஈச்வரியைத் தான் சொல்வார்கள். திரோதானகரி – ஈச்வரி (மஹேஷ்வர சக்தியாக மாயை ஆகிறாய்) என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. நம்முடைய நிஜ ஸ்வரூபமேயான ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து, ஜீவ-ஜகத்துக்களை உண்டாக்கி, அகிலாண்டங்களையும் மாயையிலே கட்டிப் போட்டு ஆள்பவள், காஞ்சிபுரத்தில் ரத்ன தீபச் சுடராக நம்முடைய அஞ்ஞானத்தைப் போக்கி அநுக்ரஹம் செய்கிறாள்.

    ஸாக்ஷாத் ஞானாம்பாளின் மந்தஹாஸ ஒளிக்கிரணங்களை பானம் பண்ணியதால் சகோர பக்ஷிகள் என்னும் பக்தர்கள், மாயை நீங்கி, ஞானிகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களே பாக்கியசாலிகள் என்று சொல்வது போல இருக்கிறது.🙏🌸

    மஹாபெரியவா, ஒரு ‘ஸெளந்தர்ய லஹரி’ ஸ்லோகத்திற்கு அர்த்தம் சொல்லும் போது, “ஆசார்யாள், அம்பாளின் மந்தஹாஸ காந்தியை வர்ணிக்கும்போது சகோரத்தை சொல்கிறார். அம்பாளுடைய மதி வதனத்திலிருந்து சந்த்ரிகையாக அவளுடைய சிரிப்பொளி வீசுகிறது. அந்த சந்த்ரிகையை சகோர பக்ஷி பானம் பண்ணியதும், அந்த தித்திப்பில் அதன் அலகு மரத்தே போய்விட்டதாம்! திகட்டாமலிருக்க ஒரு வாய் புளிக் கஞ்சி குடிக்கலாமே என்று ஆகாசத்துச் சந்த்ரனுடைய நிலாவை ருசி பார்த்ததாம். அது புளிக்கஞ்சி மாதிரியே இருந்ததால், மரத்துப்போன உணர்ச்சியும் போயிற்றாம்! அதற்கப்புறம் தான் சகோர பக்ஷி நிலாவைக் குடிப்பது என்று ஏற்பட்டது என்று விநோதக் கற்பனையாகப் பாடியிருக்கிறார். நிலவான அம்ருதமும் வெறும் புளிக்கஞ்சியாக, காடித் தண்ணியாக ஆகிவிடுகிற அப்பேர்ப்பட்ட மாதுர்யம் அம்பாளுடைய மந்தஸ்மிதத்திற்கு இருக்கிறதாக ஸ்தோத்ரம் செய்கிறார் ஆசார்யாள். அம்பாளுடைய மந்தஸ்மிதம் என்கிற ப்ரேமாம்ருதத்தையே, ப்ரேம சந்த்ரிகையையே பானம் பண்ணிக்கொண்டிருக்கும் சகோரக் குஞ்சுகளாக நாமெல்லாம் ஆக வேண்டும் என்பதுதான் தாத்பரியம்!” என்கிறார்.🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.