Categories
mooka pancha shathi one slokam

எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே


ஆர்யா சதகம் 28வது ஸ்லோகம் பொருளுரை – எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே

एणशिशुदीर्घलोचनं एनःपरिपन्थि सन्ततं भजताम् ।
एकाम्रनाथजीवितमेवम्पददूरमेकमवलम्बे ॥

One reply on “எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே”

மிகவும் அருமையான ஸ்லோகம்‌ உங்களுடைய விளக்கம் அற்புதம். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.👌🏻🙏🌸

மஹா பெரியவாளுக்கும்  அழகாக பொருந்துகிறது! ராமாயணம் மேற்கோள்கள் மூலம் குரு-சிஷ்ய உறவு – மிக அருமை. 👌🏻🙏🌸

“சிவன் ஜட சரீரம் என்றும் அம்பாள்தான் அதை இயக்குகிற சைதன்யமான உயிர்” என்கிற ரீதியில் ஆசார்யாள் ஸௌந்தர்யலஹரி முதல் ஸ்லோகத்தில் சொன்ன மாதிரி, இங்கே மூககவி, ‘எகாம்ரநாத ஜீவிதம்’ என்கிறார். 🙏🌸

இடைவிடாது அம்பாள் ஏகம்பனை தபஸ் பண்ணிய காட்சியையும் நம் கண்முன் கொண்டுவந்து விடுகிறார் கவி.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, ‘ஏகமான பரம்பொருளை சரணடைகிறேன்’ – ‘ஏகம் அவலம்பே’ என்கிறார். அம்பாளை மாத்திரம் ஏகமூர்த்தியாக சொல்வதற்கு ஸெளந்தர்ய லஹரியில் (ஸ்லோகம் 23) ஆசார்யாள், விளையாட்டாக அம்பாளுக்கு திருட்டுப் பட்டமே கட்டி விடுகிறார்! ஒரே மூர்த்தியான அர்த்த நாரீச்வர ரூபத்தில் பதியின் இடது பக்கத்தைத் திருடிக் கொண்டது மட்டும் அம்பாளுக்குத் திருப்தி தரவில்லையாம். அதனால் அவருடைய வலது பக்கத்தையும் அவளே கவர்ந்து கொண்டு விடுகிறாளாம். அதனால்தான் ஏக மூர்த்தியாகத் தன்னுடையதான அருணச் சிவப்பு நிறமாகவே இருந்து கொண்டு, ஆனால் ஈச்வர லக்ஷணமாக நினைக்கப்படும் நெற்றிக்கண், சந்த்ரகலை ஆகியவற்றையும் தரித்துக்கொண்டு காட்சி கொடுக்கிறாளாம்! மஹாபெரிய திருட்டு!” என்கிறார்.🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.