Categories
mooka pancha shathi one slokam

எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்


கடாக்ஷ சதகம் 30வது ஸ்லோகம் பொருளுரை – எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்

उद्वेल्लितस्तबकितैर्ललितैर्विलासैः
उत्थाय देवि तव गाढकटाक्षकुञ्जात् ।
दूरं पलाययतु मोहमृगीकुलं मे
कामाक्षि सत्वरमनुग्रहकेसरीन्द्रः ॥

One reply on “எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்”

அருமையான ஸ்லோகம். மிக அருமையான விளக்கம். 👌🙏🌸

காமாக்ஷியின் கடாக்ஷம் என்னும் புதரிலிருந்து அநுகிரகம் என்ற சிங்கம் வெளிவந்து நம் அஞ்ஞானம் என்ற மான் கூட்டத்தை விரட்டட்டும் என்கிறார் மூககவி.🙏🌸

ஆச்சார்யாள் சிவானந்த லஹரியில், ‘மானை கையில் ஏந்திக் கொண்டிருக்கும் சிங்கம் என் மன குகையில் இருக்கும் போது எனக்கு என்ன அச்சம்?’ என்று பாடுகிறார். பரமசிவனை சிங்கமாகவே உருவகித்து, எப்பொழுதும் சஞ்சலத்தோடு இருக்கும் நம் மனமாகிய மானை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார்!🙏🌸

‘பிடரி மயிர்களை அழகான சேஷ்டையோடு’ என்கிறார் மூககவி. ஆண்டாளும் ‘மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா’ – “பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது” என்று பாடுகிறாள்.🙏🌸

Leave a Reply to Sowmya SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.