Categories
mooka pancha shathi one slokam

மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு


ஆர்யா சதகம் 16வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு (9 min audio)

मधुरधनुषा महीधरजनुषा नन्दामि सुरभिबाणजुषा ।
चिद्वपुषा काञ्चिपुरे केलिजुषा बन्धुजीवकान्तिमुषा ॥

மது⁴ரத⁴னுஷா மஹீத⁴ரஜனுஷா நந்தா³மி ஸுரபி⁴பா³ணஜுஷா
சித்³வபுஷா காஞ்சிபுரே கேலிஜுஷா ப³ந்து⁴ஜீவகாந்திமுஷா .. 16.

இது ஆர்யா ஶதகத்தில் 16வது ஸ்லோகம்.

சொல்றதுக்கே ரொம்ப sweetஆக இருக்கு.

‘மது⁴ரத⁴னுஷா‘ – தித்திப்பான ஒரு வில்லை வைத்து கொண்டு இருப்பவள். கரும்பு வில்லை கையில் வைத்து கொண்டு இருக்கிறாள்.

‘மஹீத⁴ரஜனுஷா’ – பர்வத ராஜனுடைய குமாரி. பர்வத ராஜனிடத்தில் இருந்து பிறந்தவளும்

‘ஸுரபி⁴பா³ணஜுஷா’ – கரும்பு வில் என்றால் அப்போ என்ன பாணம்? அப்படினு கேட்டேள்னா, ஸுரபி⁴பா³ணஜுஷா – நல்ல வாசனையான மலர்கள், பஞ்ச புஷ்ப பாணங்கள்

‘காஞ்சிபுரே கேலிஜுஷா’ – காஞ்சிபுரத்தில் திருவிளையாடல்கள் புரிபவளும்,

‘ப³ந்து⁴ஜீவகாந்திமுஷா ‘ – செக்கசெவ்வேள்னு இருப்பதால், செம்பருத்தி பூவினுடைய காந்தியை அபகரிக்கிறாள். அந்த காந்தியை எல்லாம் காமாக்ஷி எடுத்துண்டா. இது நமக்கு கண்ணுக்கு தெரிகின்ற காமாக்ஷி. இந்த காமாக்ஷினுடைய அழகே,

‘சித்³வபுஷா’ – ஞானம் ‘சித்³வபுஷா’ அப்படினு சொல்றார்

‘நந்தா³மி’ – அப்பேற்பட்ட காமாக்ஷினிடத்தில் நான் மிகவும் ஆனந்தப்படுகிறேன்.

ரொம்ப அழகான ஸ்லோகம். இதை மஹாபெரியவாளுக்கு பொருத்தி பார்க்கணும்னா

‘மது⁴ரத⁴னுஷா’ பெரியவா காலத்தில் மட்டும் இல்லை. இப்போ 25 வருஷம் அப்புறம் கூட, பெரியவாளை நினைத்தாலே நமக்கு எல்லாம் திதிக்கறது. கரும்பு மாதிரி திதிக்கறது. வெல்ல கட்டி மாதிரி தித்திக்கறது. மஹாபெரியவானு அவருடைய பெயரை சொன்னாலே தித்திக்கறது, அவருடைய கதைகளை சொன்னா தித்திக்கறது, அவருடைய ஸ்தோத்திரம் பண்ணா தித்திக்கறது, அவருடைய அபிஷேகத்தை பார்த்தால் தித்திக்கறது, அபிஷேக பாலை குடித்தால் தித்திக்கறது, அப்படி மதுரமான வஸ்துவாக எப்படி பெரியவா இருக்கான்னா பெரியவா காமாக்ஷி ஸ்வரூபம், அதனால் தான்.

மஹீத⁴ரஜனுஷா’ ங்கிறது காமாக்ஷிக்கே ரொம்ப பொருத்தம். பெண்களுக்கு அம்மாவினுடைய அழகு, புத்திசாலிதனம் எல்லாம் வரும், அப்பாவினுடைய காம்பீரம் வரும், கம்பீரமான ஹிமவானுடைய பெண் காமாக்ஷி. மஹாபெரியவாளுக்கு சொல்லும் போது

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

அப்படினு வள்ளுவர் சொல்றார்.

தன்னுடைய நிலைமையிலிருந்து திரிய கூடாது, மாற கூடாது, பணம் வந்தாலோ, புகழ் வந்தாலோ, கௌரவம் வந்தாலோ, இல்லை பணம் போனாலோ, இல்லை அவமானம் ஏற்ப்பட்டாலோ, எல்லா நேரத்துலையும் ஒரே மாதிரி ஒழுக்கம், அது ‘நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்’ அது எங்க இருந்து அந்த நடத்தை வருதுனா? உள்ளுக்குள்ளே இருக்குற அந்த ஆணவமே இல்லாத அடக்கம், அப்பேற்பட்டவர்களுடைய தோற்றம்,

‘மலையினும் மாணப் பெரிது.’

மலையை காட்டிலும் உயர்ந்ததுனு வள்ளுவர் சொல்றார். அந்த மாதிரி நம்ம பெரியவா,

‘ஸுரபி⁴பா³ணஜுஷா .’ பஞ்ச புஷ்ப பானங்களும் கரும்பு வில்லும், 5 புலன்களும், மனசுக்கும் சமமாக சொல்லுவா. மஹாபெரியவா தன்னுடைய புலன்களை எல்லாம் வெளியிலேயே பார்க்காம, புலன்களையும் மனசையும் காமாக்ஷினுடைய பாதங்களில் வைத்ததுனால், பெரியவாளே காமாக்ஷியோதட லயமாகி,

‘‘சித்³வபுஷா’ அப்படி பெரியவாளே ஞான வடிவமாக இருந்து கொண்டு, நமக்கு எல்லாம் அனுக்கிரஹம் பண்ணா.

‘காஞ்சிபுரே கேலிஜுஷா’ பெரியவான்னு இருந்துண்டு, உலகத்தில் எல்லா பக்தர்களுக்கும் அனுக்கிரஹம் பண்றதுங்கிற லீலையை பண்ணின்டு இருக்கா.

‘நந்தா³மி’ அந்த பெரியவனிடத்தில் நான் ரொம்ப ஆனந்திக்கிறேன். அப்படினு ஒரு ஸ்லோகம்.

இந்த ‘ப³ந்து⁴ஜீவகாந்திமுஷா’ செம்பருத்தி பூவினுடைய சிவப்பை திருடிகிறது, அப்படிங்கிறது எனக்கு, இன்னிக்கு இந்த ஸ்லோகத்தை எடுத்ததே, இந்த வரியை expand பண்றதுக்காக தான். மஹாபெரியவா 100 வருஷம் அருளாட்சி பண்ணா, ஆனால் எந்த ஒரு controversyளையும் மாட்டிக்கவில்லை, தன்னுடைய உள்ளத்தில் இருந்ததை ரொம்ப தெளிவாக, உறுதியாக வெளிப்படித்திண்டே இருந்தா. கொல்கத்தா காளி கோவிலில் காந்தி வந்து, பலி கொடுக்கக்கூடாது, அப்படினு சொல்லிட்டு போன பின்ன, பெரியவா அதே காளி கோவிலில் ‘எத்தனையோ கசாப்பு கடைகளில், ஜீவ ஹிம்ஸை பண்றா. நாங்கள் ஹிந்து மதத்தில், இந்த தெய்வத்துக்கு பலி கொடுத்து, அதை நிவேதனமாக எடுத்துண்டா, அந்த ஜீவனுக்கும், உயிரை கொடுத்த அந்த ஜீவனுக்கும், இதை சாப்படறவாளுக்கும், பாபம் இல்லைனு நம்பறோம். எங்களோட விஷயத்தில் ஏன் தலையிடனும்?’ இது என்னோட உண்மை, நான் வாழறேன், பேசறேன் அப்படினு, ரொம்ப தைர்யமாக மஹாபெரியவா பேசிண்டு இருந்தா, தன்னுடைய சிஷ்யர்களுக்கு சொல்லிண்டு இருந்தா.

ஆனால், எந்த சர்ச்சையிலும் பெரியவா மாட்டிக்கவில்லை, அது ஏன்னா ? மற்றவர்களுடைய நம்பிக்கை மேல பெரியவாளுக்கு விருப்பு, வெறுப்பு இல்லை. அதனால், அதை எதிர்த்து, தான் ஒரு பக்ஷத்தை ஸ்தாபிக்கணும் அப்படினு பெரியவா முயற்சி பண்ணவில்லை. தன்னுடைய பக்ஷத்தை வெளிப்படுத்தி, அங்கேயே அதை முடிச்சுன்ட்டா. மற்றவர்களுடைய நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும்படியாக, எந்த பேச்சும் பெரியவா பேசவில்லை. அவாளுடைய நம்பிக்கை அவாளுக்கு, மதிப்பு கூட கொடுத்தா. நம்மளுடைய வேதம், தர்மம், சாஸ்த்திரங்களுக்கும், புராணங்களுக்கும், ஒத்து வந்ததுனா, ஆதரிச்சு கூட பெரியவா பேசினா. அதுல ஆராய்ச்சிக்கு போகவில்லை. ஒரு உதாரணம் சொல்றேன்.

ஸ்ரீமத் பாகவதம், ரொம்ப பின்னாடி காலத்தில் யாரோ எழுதினது வ்யாஸர் எழுதினது கிடையாது அப்படினு ஒரு அபிப்ராயம் ஆராய்ச்சிக்காராளுக்கு. இதை தேவி பக்தர்கள் ரொம்ப strong ஆக பேசினால், விஷ்ணு பக்தர்களுக்கு கோவம் வந்து, அவா தேவி பாகவதத்தை பற்றி இதே மாதிரி கருத்துகள் பேசறா. இந்த மாதிரி சர்ச்சையா ஓடிண்டு இருக்கும். இந்த மாதிரி சர்ச்சைகளினால் ஆத்ம லாபமும் கிடைக்காது, மதத்துக்கும் ஹானி ஏற்படும், கேட்பவர்களில் ரொம்ப பாகவதத்தில், நாராயணீயத்தில் பக்தியாக இருக்கிறவா, அதுக்கு அப்புறம் நம்ம பேச்சை கேட்கவும் மாட்டா. அதே மாதிரி தேவி பாகவதத்தில் ரொம்ப பக்தியாக இருக்கிறவா, சர்ச்சை ஒண்ணு வந்தா விலகிடுவா. அதெல்லாம் ஒரு ஞானம், வைராக்கியம் இருந்தா தான் இதிலிருந்துலாம் நாம விலகி இருக்கணும்னுங்கறது தெரிகிறது. பெரியவா தேவி பாகவதம், சண்டியும் பாராயணம் பண்ணுவா, ஸ்ரீமத் பாகவதத்தையும் பாராயணம் பண்ணுவா, ஸ்வாமிகள்கிட்ட கேட்டு இருக்கா. இந்த மாதிரி சர்ச்சையில் ஈடுபடறது ப்ரயோஜனம் இல்லை, அப்படிங்கறது பெரியவா சொல்லி கொடுத்து இருக்காங்கறதுக்கு ஒரு example சொல்றேன்.

ஸ்வாமிகள் மடத்தில் போய் பெரியவாளுக்கு ஸ்ரீமத் பாகவதம் படிக்கிறா. பெரியவா ஸ்வாமிகளை சுக ஸ்வரூபமாக கௌரவிச்சு, உட்கார்ந்து பெரியவாகிட்ட கேட்கறா. ஆனால் பக்கத்தில் இருந்த ஒருத்தர் ஸ்வாமிகள் நமஸ்காரம் பண்ண போது, இந்த பாகவதம் ஒண்ணும் வ்யாஸர் எழுதினது கிடையாது. என்கிறார். ஸ்வாமிகள்,பாகவதத்தில் இருக்கு, 18 புராணங்கள் எழுதி, வ்யாஸர் அதெல்லாம் தனக்கு த்ருப்தி ஏற்படவில்லை என்று சொல்லி, இந்த பாகவத புராணம் எழுதினார் அப்படினு இந்த பாகவத புராணத்தில் வருகிறதுனு சொன்னா, உங்க பாகவதத்தில் வருது அப்படி, அப்படினு சொல்றார் அவர். ஸ்வாமிகள் நமஸ்காரம் பண்ணிட்டு வந்து விடுகிறார். யாரோ ஒரு தனிகர், நிறைய வேஷ்டி கொண்டு வரார்.ஸ்வாமிகள் திருப்பி வந்து தன்னுடைய பாராயணத்தை ஆரம்பித்துவிட்டார், மஹாபெரியவா கேட்டுண்டு இருக்கார். அந்த தனிகருக்கு ஸ்வாமிகளுடைய எளிமையான தோற்றத்தை பார்த்த போது, அவரைப்பத்தி தெரியவில்லை, அதனாலே அவருக்கு அந்த வேஷ்டியை கொடுக்கணுமா? அப்படிங்கிறா மாதிரி பெரியவாளை பார்க்கறார். பெரியவா சொன்னாளாம், ‘இவா பாகவத சாஸ்த்திரத்தில் மூழ்கி இருக்கார்’ சர்வ சாஸ்த்திர விசாரத:’ எவ்ளோ பேர் வஸ்த்ரம் கொடுப்பா, அதனால், நீ அங்க போய் மற்றவர்களுக்கு போய் கொடு, இந்த வஸ்த்ரத்தை அங்க பண்டிதர்களெல்லாம் உட்கார்ந்து இருக்கா. அந்த சதஸ்ல போய் கொடு. அப்படி ஸ்வாமிகளுடைய மனஸை உடனே ஆறுதல் ஒரு படுத்தியிருக்கா, அப்படி பாகவதத்துக்கு கெளரவம் கொடுத்துயிருக்கா.

மஹாபெரியவா நினைத்தால் இந்த மாதிரி சர்ச்சையில் ஈடுபட முடியாதா? பெரியவா, இந்த ஸ்லோகத்தில் ‘சித்³வபுஷா’ சொல்லியிருக்கோமே, அந்த மாதிரி ஞானத்தோடு இருந்துண்டு, ‘ப³ந்து⁴ஜீவகாந்திமுஷா’ அப்படினு அந்த சிவப்பை ரஜஸ்ஸை விலக்கி, ‘மஹீத⁴ரஜனுஷா’ அப்படினு ஹிமவானை போல, அவ்வளவு கம்பீரமா இருந்துண்டு. அப்படினு “மது⁴ரத⁴னுஷா’ கரும்பு போல எல்லாருக்கும், இன்னிக்கும் ‘நந்தா³மி’னு சொல்லி, இன்னிக்கும் பெரியவாளை நினைத்தால் நமக்கு எல்லாம் அவ்வளவு ஆனந்தம் ஏற்படறது, எந்த சர்ச்சையிலும் போகாம, இந்த ஸ்தோத்திரங்களை பாராயணம் பண்ணி பெரியவாளை அனுபவிப்போம்.

பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ

5 replies on “மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு”

बन्धुजीवकान्तिमुषा – என்னே ஒரு அற்புதமான உவமை! மூககவி காமாக்ஷியை போற்றினாலும், இது நமது மஹாபெரியவாளுக்கும் அப்படியே பொருந்தும் (மஹாபெரியவாளுக்கு மட்டுமே பொருந்தும்). செம்பருத்தி என்றவுடன் உடனே நினைவிற்கு வருவது மூககவியின் மிக அற்புதமான கற்பனையில் உதித்த, காமாக்ஷி நடத்தும் ஐந்த்திரஜாலம் (மாயாஜாலம்) பற்றி விளக்கும் ஸ்துதி ஶதகம் 69-வது ஸ்லோகம் 🌺🌺

கல்கத்தா காளிக்கு பலி கொடுக்கும் நிகழ்வுக்கு மஹாபெரியவாளின் கருத்து ப்ரமாதம், அதுவும் மஹாத்மா காந்தியின் முந்திய கருத்துக்கு ஒத்துப்போகாமல்).

सर्वशास्त्र विशारद: – எத்தனை முறை கேட்டாலும் கரும்பைப்போல இனிக்கும் நிகழ்வு, மஹாபெரியவா நமது ஸ்வாமிகளையும் ஸ்ரீமத் பாகவதத்தையும் போற்றி கௌரவப்படுத்தியது.

மஹாபெரியவா கட்டிக்கரும்பு தான் – எப்பொழுது ஸ்மாரித்தாலும் தனது மந்தஸ்மிதத்தால் நம் அனைவர் மனதிற்கு நிம்மதியை அளிக்கும் மஹாபெரியவா பாதாரவிந்தங்களில் சரணைடைவோமாக 🙏

குறிப்பு (பூ): புஷ்பங்களில் எனக்கு மிகவும் இஷ்டமானவை செம்பருத்தி மற்றும் அரளி. எங்கள் க்ருஹ மஹாபெரியவாளுக்கு நித்யம் ஒரு செம்பருத்தி புஷ்பம் வைப்போம் (சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு). நாளை முதல் புஷ்பம் வைக்கும் பொழுது எல்லாம் ஆர்யா ஶதகம் 16-வது ஸ்லோகம் தான் நினைவுக்கு வரும்.

ஸ்ரீ காமாக்ஷி சரணம் 🌺 🙏
ஸ்ரீ மஹாபெரியவா சரணம் 🌺 🙏

மதுரமான ஸ்லோகம். மிகவும் அற்புதமான விளக்கம். தலைப்பும், அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படமும், காமாக்ஷி ஸ்வரூபமான மஹாபெரியவாளுக்கும் பொருந்தும் விதமாக சொன்னதும் அதிமதுரம்👌🙏🌸

மஹாபெரியவா – ஸ்வாமிகள் இடையே நடந்த அற்புதமான நிகழ்வு கேட்க மிகவும் ஆனந்தமாக இருந்தது. தர்மத்தின் ஸ்வரூபமாக பொதுவாக நாம் ராமரை தான் சொல்வோம். அவரை நாம் கதைகளில் கேட்டு மகிழ்கிறோம். மஹாபெரியவா நம்முடனே இருந்து அந்த தர்மத்தின் ஸ்வரூபமாகவே வாழ்ந்து காட்டினார். எப்பொழுதும் சத்தியத்தையே சொல்லி தன்னுடைய நிலையிலிருந்து கொஞ்சம் கூட மாறாமல் வாழ்ந்து காட்டினார்.🙏🌸

அம்பாளை சிவப்பு நிறத்துடன் ஒப்பிட்டு கவிகள் ஸ்தோத்திரம் செய்கிறார்கள். லலிதா ஸஹஸ்ரநாமத்தில், எப்போதும் உதயகாலம் போலப் பிரஸன்னமாக இருப்பவள் ‘ஸதோதிதா’. உதய ஸூர்யன் மாதிரி ஜோதிச் சிவப்பாக இருப்பவள் ‘தருணாதித்ய பாடலா’ என்று நாமாக்கள் வருகிறது. இங்கே மூக கவி அம்பாளுடைய முக காந்தி, செம்பருத்திப் பூவின் சிவப்பையே தோற்கடிக்கிறது என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.

லோகத்தில் பரம மதுரம் கரும்பு. லோகத்தில் பரம ம்ருது புஷ்பம். நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கி வந்திருக்கிறாள்.

பர்வதராஜ புத்திரியான அம்பாள் லோகாநுகிரகத்தை முன்னிட்டு காமாக்ஷியாகி, ‘ஸத்’தாக இருந்து கொண்டிருக்கிற பரமேஸ்வரனின் ‘சித்’சக்தியாகி ‘ஆனந்த’ அநுபவத்தை தரும் மூர்த்தியை கண்டு ஆனந்திக்கறேன் என்கிறார் போலும்.🙏🌸

வதனம் மதுரம் அதரம் மதுரம்,
நயனம் மதுரம் மதிராதிபதே
ஸர்வம் மதுரம் எனப்.பாடத்த் தோன்று கி றார்போல் ஒரு இனிமையான தோற்றம், பேச்சு, கனிவான பார்வை, அதிராத நடை
இதுதான் பெரியவா !!
அம்பாள் நிறம் மாதிரியே செம்பருத்தி, செம் மாதுளை நிறம் கொண்ட சரீரம் !
கணபதி சொன்னார்போல் த்ரிமதுரம் !!
அதனால் காமாக்ஷி அம்மன்,பெரியவா இருவரும் வேறல்ல ஒன்றேதான் !!
மேற்கண்ட ஸ்லோகம்
பர்வதராஜகுமாரியான காமாக்ஷி கரும்பு வில் என்ற ஆயுதத்துடன் பஞ்ச புஷ்ப பாணங்கள் ஏந்தி மந்திரிணி என்ற ராஜ மாதங்கியாக vum தேர்ப்படை அதிகாரியாகவும் , வாராஹி என்ற சேனாதிபதி யாகவும், சேனைகள் அனைத்திற்கும் தலைவியாக இருப்பதுடன், சும்ஹாசனத்தில் அமர்ந்திருக்கும்போது, ஆயுதங்களாக செயல்படும்போது ரத காஜா துரக, பதாதி என்ற நால்வகை சேனைகளாகவும் காஞ்சியில் திருவிளையாடல் புறிது கொண்டுள்ளாள்!!
பெரியவாளும் கையில் தண்டத்துடன், லோக நன்மைக்காக ஸதா நல்ல உபதேசம் செய்து கொண்டு அங்கு நல்லாக்ஷி நடத்தி வந்தார் என்பது அம்பாளும் பெ ரியவாளும் எல்லா விதத்திலும் ஒரே ஒருத்தர்தான் என்பதை நிரூபணம் செய்வது போல் அவ்வளவு இனிமையாக உள்ளது!
கணபதியின் பிரவசனம்!!
மனம் நிரம்பி மதுரமாகத் தேன் வழிந்தோடியது ! கண்களில் நீர் !
ரொம்ப அருமை !!

பெரியவா சுவாமிகளை எத்தனை மதிப்புடன் நடத்தினார் என்ற நிகழ்வும், காந்தியின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை வலிமையாக சொல்லி தன் நிலை கெடாமல், எந்த ஒரு controversy kkum idam தராமல் செயலாற்றிய விதமும்.அவர் மட்டுமே செய்யக் கூடிய அருமையான செயலாகும் ! எதிலும் எளிமை அதே நேரத்தில் வலிய தன் சொல்லால் நிலைமையை சீர் செய்வது பெரியவாளுக்கே முடியும் அற்புதமான செயல் !
நாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவர் சுவாசத்தை சுவாசித்து, அவர் நடந்த பூமியில் நடப்பதற்கே மா தவம் செய்திருக்க வேண்டும்

பெரியவா சரணம் ஸ்மரணம ஸதா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.