Categories
mooka pancha shathi one slokam

அம்பாளுடைய சரண த்யானம் தான் பண்ண வேண்டிய கார்யம்


பாதாரவிந்த சதகம் 44வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாளுடைய சரண த்யானம் தான் பண்ண வேண்டிய கார்யம்

गिरां दूरौ चोरौ जडिमतिमिराणां कृतजगत्
परित्राणौ शोणौ मुनिहृदयलीलैकनिपुणौ ।
नखैः स्मेरौ सारौ निगमवचसां खण्डितभव-
ग्रहोन्मादौ पादौ तव जननि कामाक्षि कलये ॥

2 replies on “அம்பாளுடைய சரண த்யானம் தான் பண்ண வேண்டிய கார்யம்”

மனோ வாசாமகோசரா அதாவது மனத்தாலோ, வாக்காலோ வர்ணிக்க இயலாதவை அம்பாளின் திருப் பாதங்கள் ! நம் மனதில் அகங்
அஞ்ஞானம் என்ற இருளைப் போக்குகின்ற சூரியன் போன்ற சிவந்த நிறம் கொண்டதும், உலகத்தைத் காக்கும் வல்லமை உடையதும் முனிவர்களின் மனதில் உறைபதும் ,நகங்களின் வெண்மையான ஒளியால் அழகாகச் சிரிப்பது போல் தோன்றுவதாகவும், நம்மை சம்சாரம் என்னும் சாகரத்திலிருந்து விடுவிப்பதாகவும்
வேதங்களின் ஆக்ஞா ரூப மாக உள்ளவையான தேவியின் பாதத்தை நான் தியானிக்கிறேன் வணங்குகிறேன் என்ற பொருள் படும் இந்த ஸ்லோகம் நம்.மனதில் எப்போதும் உரையட்டும் !

அம்பாள் பாத தியானம் இருந்தால் லோகத்தில் நம் மனம் ஈடுபட்டு வேண்டாத நினைவுகள் அகன்று, மனம் நல் வழியில் மட்டும் செல்லும் !
சரண தியானத்தை அனைத்து ஞானிகளும் வலியுறுத்துகிறார்கள் !
அருணகிரியார் பாதம் வைத்திடையா என்று உருகுகிறார் !
மற்றொரு திருப்புகழில் சரண கமலாயத்தை அறை நிமிட நேர மட்டில் தவ முறை தியானம் செய்ய அறியாத சட கசட மூட மட்டி பவா வினையிலே என்று நம் பூர்வ கர்மாவினால் நாம் படும் துயரங்களைக் களைய பகவான் பாதம் ஒன்றுதான் சிறந்த வழி என்று சொல்லி நம்மையும் கரையேற்றுகிரார் !!

அழகான விளக்கம் பொருள் பொதிந்த ஸ்லோகம் !
நாமும் பாராயணம் செய்து உய்வோமாக !
ஜய ஜய ஜகதம்பா சிவே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.