Categories
mooka pancha shathi one slokam

கண்ணி நுண் சிறுத்தாம்பு


பாதாரவிந்த சதகம் 43வது ஸ்லோகம் பொருளுரை – கண்ணி நுண் சிறுத்தாம்பு

जगद्रक्षादक्षा जलजरुचिशिक्षापटुतरा
समैर्नम्या रम्या सततमभिगम्या बुधजनैः ।
द्वयी लीलालोला श्रुतिषु सुरपालादिमुकुटी-
तटीसीमाधामा तव जननि कामाक्षि पदयोः ॥

One reply on “கண்ணி நுண் சிறுத்தாம்பு”

ஜகத்தை ரக்ஷிக்கும் திறமை கொண்டது , தாமரைக்கு நிறம், ஒளி, மென்மை வாசனை எல்லா குண நலன்களையும் அளிக்க வல்ல குருவாகவும், தேவர்கள் அனைவராலும் வணங்கத் தக்க பேரழகு உடையதும், பேறரிவாளர்களால் எப்போதும் விரும்பத்தக்கது, வானந்தமான வடிவுடையான் மறை நாங்கினுக்கும் தானந்தமான சரனாரவிந்தம் என்று பட்டர் வர்ணிக்கிறார் போல்,வேதங்களில் நடை பழகிச் சிவந்த பாதாம்புத்தாளான, உபநிஷத் உத்யான கேளி கலகண்டி என்று ஆசார்யாள் வர்ணிக்கிறார் போல், வேதம் என்ற உத்யாவனத்தில் நடை பழகிய காமாக்ஷியின் திருவடிகளை முத்தேவரும் தங்கள் கிரிடங்களை அவள் பாத பீடத்தில் வைத்து நமஸ்கரிகக உறைவிடமாக கொண்டது! ச்ருதி சீமந்த சிந்தூரீ கருத பாதாப்ஜ தூலிகா, சகலாகம ஸந்தொஹ சுத்தி ஸம்புட‌மௌக்திகா, ஸர்வ உபனிஷத்குஷ்டா என்று சஹஸ்ர நாமா அவளை வர்ணிக்கிறது !
இங்கு நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம், குருவின் பெருமையை அளவிட முயலாததாக சொல்லியிருப்பது எனக்கு ஸ்வாமிகளின் அருகாமையால் கணபதி அவர்தம் பெருமையை உலகுக்கு எடுத்துரைத்து, யாவருககும் நன்மை பயக்கும் வகையில் அவர் சிந்தனையோடு, எல்லா கல்யாண குணங்களையும் எடுத்துரைத்து வருவதை நினைவுபடுத்துகிறது!
குரு சரணம் எப்போதும் கல்யாண குணங்களையே பயக்கும் !!

அம்பாள் சரணம்..குரு சரணம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.