Categories
mooka pancha shathi one slokam

முருகன் தனிவேல் முனி நம் குரு

ஆர்யா சதகம் 97வது ஸ்லோகம் பொருளுரை – முருகன் தனிவேல் முனி நம் குரு

सत्कृतदेशिकचरणाः सबीजनिर्बीजयोगनिश्रेण्या ।
अपवर्गसौधवलभीमारोहन्त्यम्ब के‌sपि तव कृपया ॥

ஸத்க்ருததே³ஶிகசரணா:   ஸபீ³ஜநிர்பீ³ஜயோக³நிஶ்ரேண்யா |அபவர்க³ப ஸௌத⁴வலபீ⁴ம் ஆரோஹந்தி அம்பா கேபி தவ க்ருபயா  || 97 ||

இது ஆர்யா சதகத்துல 97வது ஸ்லோகம்

“ஸத்க்ருததே³ஶிகசரணா:” – ஒரு குருநாதருக்கு சரண சேவை செய்து , ஒரு ஸத்குருவின் சரணங்களை புகலிடமாக அடைந்து

“ஸபீ³ஜநிர்பீ³ஜயோக³நிஶ்ரேண்யா” – இது ஸகுணோபாஸனை நிர்குணோபாஸனை னு ஒரு அர்த்தம் சொல்றா, இன்னும் யோக புஸ்தகங்கள் எல்லாம் பல விதமான அர்த்தங்கள் இருக்கு. அப்படி படிப்படியாக   “நிஶ்ரேண்யா” – படிகள் மூலமாக

“அபவர்க³ப ஸௌத⁴வலபீ⁴ம் ஆரோஹந்தி” – “அபவர்க³ம்” னா – மோக்ஷம், “ஸௌத⁴வலபீ⁴ம்” னா – மாளிகையின்  மேல் மாடி அப்டின்னு அர்த்தம். மோக்ஷம் என்ற மாளிகையின் உப்பரிகைக்கு படில தானே ஏறி போகணும், இந்த ‘ஸபீ³ஜநிர்பீ³ஜ யோக³நிஶ்ரேண்யா’  சோபான பஞ்சகம் னு ஆசார்யாள் கூட பண்ணிருக்கார். அப்டி அந்த மோக்ஷத்தை அடையறதுக்கு படிப்படியா மேல போகணும். அந்த படிகள்ல போவதற்கு குரு நமக்கு வழி காண்பிச்சு தரணும். அப்படி நல்ல குருவை அடைந்து அவர் காட்டிய வழில

‘கேபி’   – யாரோ சில புண்யசாலிகள்

அம்பா – ஹே காமாக்ஷி

“தவ க்ருபயா”   – உன்னுடைய க்ருபை இருக்கறதால, மோக்ஷத்தை அடைகிறார்கள். அப்டின்னு எத்தனையோ பேர் முயற்சி பண்ணினாலும் உன்னுடைய க்ருபை இருக்கறவாளுக்கு மோக்ஷம் கிடைக்கறது அப்டின்னு சொல்லறார்.

ஸ்வாமிகள் என்கிட்ட, இத படிக்கும் போது

“அம்பா கேபி தவ க்ருபயா ஸத்க்ருததே³ஶிகசரணா:” – அம்மா உன்னுடைய க்ருபையினால் தான் ஒரு நல்ல குரு கிடைப்பார். அந்த குருவுக்கு ஸுஸ்ரூஷை பண்ணனும், அவருடைய சரணத்தை கெட்டியா பிடிச்சிக்கணும், அப்படிங்கற அறிவே உன்னுடைய அனுக்கிரஹம் இருந்தால் தான் வரும்.

“அம்பா கேபி தவ க்ருபயா ஸபீ³ஜநிர்பீ³ஜயோக³நிஶ்ரேண்யா”  – அப்டி ஒரு குருவை அடைந்து அவருக்கு ஸுஸ்ரூஷை பண்ணி அவர் காட்டிய அந்த ஸகுணோபாசனை நிர்குணோபாஸனை அப்டின்னு அவர் எந்த வழி சொல்லறாரோ அந்த வழில போறதும், ஒவ்வாரு நாளும் ஒவ்வொரு படியில கால வெச்சு ஏறுவதும் உன்னுடைய க்ருபை இருந்தால் தான் முடியும்.

“அம்பா  அபவர்க³ப ஸௌத⁴வலபீ⁴ம் ஆரோஹந்தி”  – அம்மா உன்னுடைய கிருபையினால் அப்படி அந்த படியில்  போகிறவாள்ள யாரோ சில புண்யசாலிகள் அந்த மோக்ஷ மாடியை அடைகிறார்கள்.

அப்டின்னு ஒண்ணொண்ணுத்துக்கும் இப்டி சேர்த்து சொல்லணும்ணு சொல்வார்.

“அம்ப கேபி தவ க்ருபயா ஸத்க்ருததே³ஶிகசரணா:
அம்பா கேபி தவ க்ருபயா ஸபீ³ஜநிர்பீ³ஜ யோக³நிஶ்ரேண்யா
அம்பா கேபி தவ க்ருபயா அபவர்க³ப ஸௌத⁴வலபீ⁴ம் –  ஆரோஹந்தி
அம்பா கேபி தவ க்ருபயா”

இது ஸ்வாமிகள் இப்படி படிப்பார். காசி கண்ணன் என்கிறவர் மஹாபெரியவா அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது பெரியவா அவருக்கு இந்த மாதிரி படிக்கணும்னு சொல்லி கொடுத்திருக்கா. இந்த அம்பாளோட அனுக்கிரஹம் இருந்தால் தான் எதுவுமே பண்ண முடியும் நல்ல குருவை ஆஸ்ரயிக்க முடியும் அவர் காட்டின வழில போக முடியும், அப்டி போனாலும் மோக்ஷம் கிடைக்கறது அம்பாள் அனுக்கிரஹம் தான் அப்டின்னு சொன்னார் பெரியவா சொன்னா எனக்கு அப்படின்னு casette ல கேட்ட போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

ஸ்வாமிகளுக்கும் பெரியவா சொல்லிருப்பார்னு நெனைச்சுண்டேன். ஏன்னா அதனால தான் ஸ்வாமிகள் அப்படி படிச்சு அத நான் தெரிஞ்சுண்டேன். அப்படி ஒரு நல்ல ‘குரு’ங்கற  மாலுமி நம்மளுடைய கப்பலை ஓட்டினாலும், அம்பாளுடைய அனுக்கிரஹம் அப்டிங்கற அனுகூல காற்றும் வீசினால் தான் நம்மளுடைய கப்பல் கரை சேரும் அப்டின்னு இத சொல்லுவா. அதனால தான் பெரிய மஹான்களுக்கு சிஷ்யர்களா இருந்தா கூட சில சமயம் வழி தவறி போய்டறா. அதனால குருவோட அனுக்கிரஹம் வேணும் , தெய்வத்தோட அனுக்கிரஹமும் வேணும் அப்படிங்கறது இந்த ஸ்லோகத்துல தெரியறது.

Recent times ல    இந்த விஷயத்துல ஒரு conflict பாத்தேன் நான். சில பேர் எனக்கு பெரியவா தான் தெய்வம். நான் பெரியவாளை தவிர வேற எந்த கோயிலுக்கு கூட போக மாட்டேன், எந்த ஸ்தோத்திரமும் படிக்க மாட்டேன், அப்படின்னு ஒரு cult மாதிரி பெரியவாளை கொண்டு போகறத பாத்த போது எனக்கு ஆஸ்சர்யமா இருந்தது.

மஹாபெரியவாளே இப்டி பண்ணலயே! பெரியவாளுக்கு இல்லாத ஞானமா, பெரியவாளுக்கு இல்லாத குரு பக்தியா, ஆனா அவாளே அந்த ஆசார்யாள் காமிச்ச ஷண்மத தெய்வங்களையும் வழிபட்டார். நம்ம எல்லாரையும் வழிபட   சொல்லி வழிகாமிச்சார். அதே மாதிரி தான் ‘சிவன் சாரும் . மஹான்களோட சரித்திரம் எல்லாம் அவ்ளோ உருக்கமா எழுதிருக்கார். அந்த சரித்திரங்களிலே எந்த மஹான்கள் எந்தெந்த கோயிலுக்கு போனா, என்ன தெய்வங்களை வழிபட்டா, எந்த தெய்வத்தோட அனுகிரஹத்தினால் ஞானம் அடைஞ்சா அப்டின்னெல்லாம் எழுதிருக்கார். முருக பகவானால் ஆட்கொள்ளப்பட்டார், அப்டின்னெல்லாம் எழுதுவார் சார் புக்லயும் . ஸ்வாமிகள் கேக்கவே வேண்டாம்.

மஹாபெரியவாளையே தெய்வமா வெச்சிருந்தார். மஹாபெரியவாளையும் குருவாயூரப்பனையும் ஒண்ணா பார்த்தார்ன்னு மஹாபெரியவாளே சொல்லிருக்கா. பெரியவாளை யாராவது பழிச்சு பேசினா அந்த பக்கமே தல வெச்சே பாக்க மாட்டார் ஸ்வாமிகள் , அப்டி ஏக பக்தியா இருந்தார் பெரியவா கிட்ட.ஆனா தெய்வங்களை எல்லாம் தூஷணை பண்ண மாட்டார்.

‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’  அப்படின்னு 4 வாட்டி சொல்லி பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணு. பெரியவா ஞானி . பெரியவா அபாரமா புண்ணியங்கள் பண்ணிருக்கார். ஞானிகளுக்கு அவரோட புண்ய பாபம் ஒட்டாது. நமஸ்காரம் பண்றவாளுக்கு கிடைக்கும்.அதனால நீ நமஸ்காரம் பண்ணு அப்டின்னு எனக்கு சொல்லி குடுத்தார். பெரியவா தான் காமாக்ஷி, வேற ஒண்ணுமே நீ யோசிக்க வேண்டாம் அப்டின்னும் சொன்னார். ஆனா பெரியவா காமாக்ஷிக்கும் மேல குருவாயூரப்பனுக்கும் மேல அதனால நான் பெரியவாளுக்கு தான் நமஸ்காரம் பண்ணுவேன் அப்டினெல்லாம் குழப்பிக்கல.

இன்னொன்னும் பாக்கறேன். சிலபேர் அதெப்படி பெரியவாளை காமாக்ஷினு சொல்றது.    அம்பாள் தான் எல்லாருக்கும் மேலான தெய்வம். இந்த மஹான்கள் எல்லாம் அவாவா வந்துட்டு போறா, இப்படி ஒரு படி ரெண்டு படி ஏதாவது வேண்டாதது சொல்லி பெரியவாளை கொறைச்சு பேசறா. அதுவும் அபசாரம். “ஞானிது ஆத்மய்வ மே மதம்”    அப்டின்னு பகவானே சொல்லிருக்கார். ஞானிக்கும் பகவானுக்கும் வித்யாசமே கிடையாது. பெரியவா தான் காமாக்ஷி அப்படிங்கறது நாம அப்படியே எடுத்துக்க வேண்டியது தான்.பெரியவாளும் காமாக்ஷியும் ஒண்ணு. இதுல யாரு உசத்திஅப்படிங்கற பேச்சுக்கே இடம் இல்லை. ரொம்ப உயர்ந்த பக்தர்கள் ஏக பக்தியா குரு பக்தி பண்ணா அப்படின்னு  நம்ம கேள்வி படறோம்.அந்த மாதிரி உயர்ந்த பக்தி நமக்கு வந்திருத்துன்னு நம்ப எடுத்துண்டு தெய்வங்களை எல்லாம் குறைச்சி பேசினா பெரிய  அபச்சாரத்துக்கு ஆளாவோம்னு எனக்கு தோணறது. அது ஒரு cult மாதிரி கொண்டு போய்டுவா அப்படிங்கற கவலையும் இருக்கு. மஹாபெரியவாளோட பக்தர்கள் ஸநாதன தர்மத்துல இருக்கறவா நம்ம அந்த தப்ப பண்ண கூடாது.

சின்ன குழந்தைல “குரு ப்ரஹ்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர: குரு சாஷாத்  பரப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ”  அப்படின்னு குழந்தைலே ஆரம்பிச்சு குரு தான்  பரப்ரஹ்மம் அப்படின்னு “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” அப்டின்னு தமிழ்ல சொல்வா. அங்கேந்து ஆரம்பிச்சு வேத அத்யயணத்தின் போது “மாத்ரு தேவோ பவ , பித்ரு தேவோ பவ , ஆசார்ய தேவோ பவ , அதிதி தேவோ பவ ” அப்படின்னு தைத்ரீய உபநிஷத்தில இருக்கு.அப்படி நமக்கு வேதத்தை சொல்லி கொடுத்த ஆச்சார்யனையும் தெய்வமா நினைக்கணும்.

அப்புறம் பக்தில “பவ ஏவ பாவநிதி மே நிதராம், சம ஜாயத சேதஸி கௌதுகிதா” அப்படின்னு ஆடி பாடறார் தோடகாச்சார்யாள். ஆச்சார்யாளை  தன்னுடைய குருவை ஸாஷாத்  பரமேஸ்வரன் என்று உணர்ந்து   எனக்கு குதூகலம் தாங்கல நான் ஆனந்தத்துல கூத்தாடறேன்  அப்டிங்கறார். அப்படி பக்திலயும் தன்னுடைய குருவை தெய்வமாக கண்டு கொள்வது ஒரு பெரிய பாக்கியம். ஆச்சர்யாளே “தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம  இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ” அப்படிங்கறார். தக்ஷிணாமூர்த்தி தான் என்னுடைய குரு அவருக்கு நமஸ்காரம் பண்றேன். அவருக்கு நமஸ்காரம் பண்ணா எந்த உபநிஷத்திலயும் , ப்ரஹ்மஸூத்திரத்திலயும் , வேதத்திலயும் உயர்ந்த ஞானம்ன்னு சொல்லிருக்கோ அந்த ஆத்மானுபவம் எனக்கு இந்த தக்ஷிணாமூர்த்தி என்ற குருவின் அநுகிரஹத்தினால் கிடைக்கும் அப்படின்னு தானே அர்த்தம். தக்ஷிணாமூர்த்தி எங்கும் நிறைந்து நமக்கு உள்ளும் வெளியும் பரவியிருக்கும்  ஆத்மாவும் அந்த தக்ஷிணாமூர்த்தி தான். அந்த சிதாகாசம் நமக்கு ஹ்ருதய குஹைல இருக்க கூடிய தஹராகாசம் ரெண்டுத்துலயும் இருக்கறது அந்த தக்ஷிணாமூர்த்தி தான். அவரே அந்த தெற்கு நோக்கி சின்முத்திரையோட மந்தஹாசத்தோட அமர்ந்திருக்கும் அந்த ஈஸ்வரனும் அவர்தான். என் குருவாக, மஹாபெரியவாள போல அந்த மாதிரி நமக்கு குருமூர்த்தியாக வந்து  காட்சி கொடுத்து, கூட இருந்து நமக்கு வழிகாட்டி, அப்புறம் அந்த இறைவன் கிட்ட அவா  மறைஞ்சிட்டா கூட, அந்த  தில்லை வெளில அவா கலந்துட்டாலும், நம்மளையும் அங்க அழைச்சிண்டு போறத்துக்கு கூடயே நம்முடைய ஹ்ருதயத்துல இருந்து வழி காட்டறதும் அந்த தக்ஷிணாமூர்த்தி தான், அப்படின்னு ஒரு ஸ்லோகம் இருக்கு.   அதனால  இதுல conflict  இல்லாம புரிஞ்சுக்கணும்.

எல்லா மஹான்களும் எல்லா தெய்வங்களையும், அப்படி தன்னுடைய குருகிட்ட தெய்வத்தையும் , தெய்வத்துக்கிட்ட தன்னுடைய குருவையும் பார்த்துதிருக்கா.

அவ்வை பாட்டி விநாயகர் அகவல்ல ” குரு வடிவாகி குவலயம் தன்னில் திருவடி வைத்து  திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி ”   அப்டின்னு சொல்றா.

அருணகிரிநாதர் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ” அப்படின்னு சொல்றார். அவருக்கு ஏற்கனவே “சும்மா இரு சொல்லற” அப்படின்னு குரு அனுக்கிரஹம் பண்ணிட்டார், ஆனா நமக்காக குருவா வந்து எனக்கு அனுக்கிரஹம் பண்ணனும், குகனே – குஹ்ய பொருளை உள்ளுக்குள்ள இருக்கற அந்த  ஆத்மாவை காமிச்சு கொடுக்கறவர் குரு. அந்த குருவா வரணும்னு பிரார்த்தனை பண்ணறார்.

திருவாசகத்துல மாணிக்கவாசகர் “அறுபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமை ” அப்படின்னு நிறைய குருவா குருந்த மரத்தடில வந்து தனக்கு திருவடி தீக்ஷை பண்ணத நிறைய திருவாசகத்துல பாடறார்.

காளிதாசன் “தேசிக ரூபேண தர்ஷிதாப்பியுதயாம்” அப்படின்னு சொல்றார்.

நம்ம மூக கவி “குருமூர்த்தே த்வாம்   நமாமி காமாக்ஷி ”  அப்படின்னு சொல்றார். ஸ்வாமிகள் என்ன

“குருமூர்த்தே த்வாம்   நமாமி காமாக்ஷி” ங்கறதே  மந்த்ரம். மஹாபெரியவா தான் காமாக்ஷி அவரை நமஸ்காரம் பண்ணு அப்படின்னு சொல்லி குடுத்தார்.

நம்ப அந்த மாதிரி தெய்வங்களையும் ஸ்தோத்திரங்களையும் வேண்டாம் எனக்கு குரு போறும் அப்படின்னு வெச்சா நம்ப levelல  எவ்ளோ பெரிய நஷ்டம். நமக்கோ variety வேண்டி இருக்கு. உலகத்துலயே variety வேண்டி இருக்கு. தெய்வ வழிபாட்டுல இந்த மாதிரி ஸ்தோத்திரங்களை படிக்காம இருந்தா நமக்கு தானே  நஷ்டம். இந்த மாதிரி மூக பஞ்ச சதி படிச்சா அது காமாக்ஷி மேல. அந்த காமாக்ஷி நம்ப பெரியவா அப்படின்னு சுலபமா வெச்சிண்டுறலாம்.

எனக்கு ஏன் இது தோணித்துனா , நேத்து இந்த “கண்ணினும்  சிறுத்தாம்பு” சொல்லிண்டு இருந்தேன். அதுல இரண்டாவது பாசுரத்துல “தெய்வமற்றறியேன்” அப்படின்னு என்னுடைய குருநாதர் தான் தெய்வம் அப்படின்னு சொல்லறார். ஆனா அடுத்த பாசுரத்துலயே என்னுடைய குருநாதரை நான் உபாசனனை பண்ணதுனால எனக்கு எண்ண கிடைச்சதுனா, எனக்கு கிருஷ்ணனே கிடைச்சான், அப்படின்னு சொல்லறார்.

அப்படி அவர் வேதம், சாஸ்திரம் எல்லாம் படிச்ச பெரிய மஹான். அவர் அயோத்தியா, மதுரா   போன்ற ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை போறார். ஆனா தெய்வ வழிபாடு பண்ணிண்டு இருக்கார். அங்க அயோத்தியில அவருக்கு தெற்கு திக்கில ஒரு ஒளி தெரியறது.அந்த ஒளியை பாத்துண்டே வந்து நம்மாழ்வாரை. ஒரு மர பொந்து உள்ள ஒக்காந்திருக்கார் நம்மாழ்வார் தபஸ் பண்ணிண்டு, அவரை வந்து நமஸ்காரம் பண்ணி அந்த குருவும் அவரை ஏத்துண்டு அவருக்கு மந்த்ரோபதேசம் பண்ணி “வைஷ்ணவீம் சித்தீம் ” அப்படின்னு அந்த ஞானத்தை அனுக்கிரஹம் பண்ணறார்.அதுக்கப்பறம் அவருக்கு அந்த குருவினுடைய பெருமை அபார பெருமைனு புரியறது. அவருடைய அந்த ஆயிரம் பாசுரங்களை சேவிக்கறதே தன்னுடைய வாழ்க்கையின் லக்ஷியமாக வெச்சிண்டுடறார். அப்படி பண்ணதுனால அவருக்கு பகவான் கிடைக்கறார். நம்மாழ்வாரே “கண்ணன் கழல் இணைகள் நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” அப்படின்னு சொல்லறார் . கண்ணனை பாக்கணுமா நீங்க நாராயணன் நாமத்தை நெனைச்சுண்டே இருங்கோ, அவ்ளோ தான், வேற ஒண்ணுமே இல்ல அப்படின்னு சொல்லறார். சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு பாட்டி கிட்ட “நாராயண நாராயண” னு சொன்னாலே வண்டி வண்டியா மோக்ஷம் கிடைக்குமே அப்படின்னு சொன்னாராம்.

அப்படி தெய்வத்தையும் குருவையும் பிரிச்சே பாக்க கூடாது.மேல கீழ னு பாக்க கூடாது அப்படின்னு நான் புரிஞ்சுண்டிருக்கேன், எனக்கு ஸ்வாமிகள் சொல்லி குடுத்ததில. இதுக்கு கொஞ்சம் imagination இருந்தா போறும், பேத புத்தி வராது.  அந்த தெய்வமே நம்முடைய குருவா வந்திருக்கு அப்படின்னு நெனைச்சோம்னா,

நமக்கு நம்முடைய குருவிடத்தில் at least ஒரு இடத்துல இந்த உலகத்துல, நமக்கு தெரிஞ்ச கண்ணுக்கு தெரிஞ்ச இந்த உலகத்துல அந்த ‘குரு’ங்கற அந்த ஒரு இடத்துலயாவது, எந்த குற்றமும் பாராட்டாம நம்முடைய egoவ  விடுத்து நாம humbleஆ இருந்து அந்த ஆனந்தத்தை மொதல்ல   அனுபவிக்க கத்துப்போம். அதுக்கப்புறம் எங்குமே பகவானை பாக்கலாம். கண்ணுக்கு தெரியற குரு எல்லா விதத்துலயும் நமக்கு சுலபம், அவர் ஒரு மஹானாகவும்,ஞானியாகவும் இருந்துட்டா பேரானந்தம். அப்படி ஒரு மஹான் குருவாக கிடைச்சா அவர் நமக்காக பகவான் கிட்ட பிரார்த்தனை பண்ணும்போது, நம்முடைய வினைகளை எல்லாம் வெகு விரைவில் போக்கி நமக்கு பகவானுடைய அனுகிரஹத்தை சுலபமா பெற்று கொடுக்கறார். அதனால குருவும் வேணும், அந்த குருவும் வழிபடற அந்த குருவுக்கும் அனுக்கிரஹம் பண்ணற குரு பரம்பரையும் அந்த பரம்பரைக்கே ஆதி குருவான பரமேஸ்வரனும் எல்லாமே நமக்கு வேணும். நாம humbleஆ   குரு பக்தியும் தெய்வ பக்தியும் பண்ணுவோம். அந்த மோக்ஷ மாடில சுலபமா ஏறிடலாம் அப்படின்னு இந்த ஸ்லோகத்துல வரது.

ஸத்க்ருததே³ஶிகசரணா:   ஸபீ³ஜநிர்பீ³ஜயோக³நிஶ்ரேண்யா |அபவர்க³ப ஸௌத⁴வலபீ⁴ம் ஆரோஹந்தி அம்பா கேபி தவ க்ருபயா ||

நம: பார்வதி பதயே !!! ஹர ஹர மஹாதேவா !!

4 replies on “முருகன் தனிவேல் முனி நம் குரு”

ரொம்ப அருமையான ஸ்லோகம். அற்புதமான விளக்கம்👌🙏🏻🌸

உங்களுடைய ப்ரவசனத்தைக் கேட்டவுடனே முதல்ல தோணினது, இந்த உங்களுடைய கருத்து மஹாபெரியவா சொல்றதுக்கு ரொம்பவும் ஒத்துப் போகிறது.🙏🌸

பெரியவா சொல்றார், “குருபக்தி உயர்ந்தது. ஆனால் தெய்வ பக்தியை மறக்கக்கூடாது. இந்த குருவை இவனோடு சேர்த்து வைப்பதே தெய்வந்தானே? தெய்வ அநுக்கிரஹம் இல்லாவிட்டால் இந்த குருவை இவன் எப்படி அடைவான்?
துர்லபம் த்ரயமேவைதத் தேவாநுக்ரஹ ஹேதுகம் |
மநுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷ ஸம்ச்ரய: ||
”தெய்வாநுக்ரஹத்தாலேயே ஒருத்தனுக்குக் கிடைக்கிற மூன்று பெரிய வாய்ப்புகள்: ஒன்று, மநுஷ்ய ஜன்மா கிடைப்பது. இரண்டு, ஸத்ய தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது; மூன்று, மஹா புருஷனான ஒரு குரு கிடைப்பது” என்று ஆசார்யாள் ‘விவேக சூடாமணி’ ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்.

எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான்: தக்ஷிணாமூர்த்தி தான்.

‘காலத்தில் கட்டுப்படாதவனானதால் ஈசனே ஆதி குருவுக்கும் குரு.’(யோக ஸூத்ரம் I.26)
ஒவ்வொருவருக்கும் ஒரு குருவைச் சொல்லிக்கொண்டே போனால் கடைசியில் ஒருத்தருக்கு ஸாக்ஷாத் ஈசுவரனேதான் குருவாக இருந்து ஞானத்தை தந்திருக்க வேண்டும் என்று தெரியும். அதனால்தான் தெய்வத்தை மறக்கக் கூடாது” என்கிறார்.🙏🌸

மஹாபெரியவா இந்த ஸ்லோகத்துக்கு விஸ்தாரமாக விளக்கம் சொல்லி இருக்கிறார். “‘ஸெளதவலபி’ என்றால் அரண்மனை மேல் மாடம். ‘ஸெளதம்’ என்றால் அரண்மனை நேர் அர்த்தம், ‘சுதையால் ஆனது; சுதைக் (சுண்ணாம்புக் கலவை) கட்டிடம்’ என்பது. ஸுதை, ஸுதா ஸம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு அம்ருதம் என்பதுதான் முக்யமான அர்த்தம். ச்லோகத்தில் மோக்ஷத்தைச் சொல்லும்போது சுதை மாளிகை என்று ‘ஸுதா’ போட்டதில் உள்ளர்த்தமிருக்கிறது. அம்பாளை யோக மார்க்கத்தில் உபாஸனை செய்யும்போது முடிவாக சிரஸ் உச்சியில் ப்ராணசக்தி பரமாத்ம சக்தியோடு இரண்டறக் கலந்து மோக்ஷம் சித்திக்கும். அந்த ஸமயத்தில் அங்கே ஸுதா தாரை, அம்ருததாரை, பெருக்கெடுக்கும். அதையும் குறிப்பிடுவதாகவே ‘ஸெளத’ வலபி என்று கவி போட்டிருக்கிறார்.

யோகம் என்று நிர்குணமாகப் பண்ணும்போது ஸுதா தாரை பெருக்கெடுக்கும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு ஸாதனை செய்யப்படுகிறது. அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் ப்ரேம பக்தியிலேயே ஸகுணமாக உபாஸித்தாலும் அவள் அந்த உச்ச ஸ்தானத்துக்கு ப்ராண சக்தியை ஏற்றி அம்ருத தாரையில் முழுக்கடிக்கத்தான் செய்வாள். இந்த ஸகுணம் – நிர்குணம் இரண்டையுமே ‘ஸபீஜம் நிர்பீஜம்’ என்று ச்லோகத்தில் சொல்லியிருப்பது. அடியிலிருந்து உச்சிக்கு ப்ராணசக்தி ஏறுவதால் ஏணியில் ஏறிப்போவதைச் சொல்வதும் பொருத்தமாயிருக்கிறது. ‘நிச்ரேணி’ என்ற வார்த்தைக்கு ‘ஏணி’ என்று அர்த்தம்.

பராசக்தியின் க்ருபை இருந்தால்தான் ஸத்குரு கிடைப்பதும், அவரிடம் சரணாகதி பண்ணத் தோன்றுவதும். அதைத்தான் “ஸத்க்ருத தேசிக சரணா:…. தவ க்ருபயா” என்று சொல்லியிருக்கிறார்.” 🙏🌸

குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கணவனை தெய்வமாகக் கொண்ட ஸ்திரீகளும்,குருவை தெய்வமாகக் கொண்ட சீடர்களும் தெய்வங்களின் அங்கீகாரத்தை பெற்று விடுகிறார்கள்.
அதாவது இத்தகையவர்கள் தெய்வங்களுக்கு ‘இரண்டாவது ஸ்தானம்’ அளித்தாலே போதுமானது என்பது பொருளாகும்.
ஸ்ரீ சிவன் சார் .
ஏணிப்படிகளில் மாந்தர்கள். பக்கம் 560

குரு கடாக்ஷம் என்பது தங்கள் சொற்பொழிவு அருவியில்மூழ்கினவர்கள் அறிவார்கள்! பரிபூர்ண குரு கடாக்ஷம் இன்றி இது போல் விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது! வேறென்ன சொல்ல முடியும் இந்த சொற்பொழிவு பற்றி? பெரியவா, காமாக்ஷி, சுவாமிகள் கன் முன் தோன்றும்படி அற்புதமான விளக்கம்! பெரியவா திருவடி சரணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.