Categories
mooka pancha shathi one slokam

குண்டலி குமாரி குடிலே

ஆர்யா சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – குண்டலி குமாரி குடிலே

कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।
गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥46॥

குண்ட³லி குமாரி குடிலே சண்டி³ சராசரஸவித்ரி சாமுண்டே³ ।
கு³ணினி கு³ஹாரிணி கு³ஹ்யே கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி || 46 ||

இது ஆர்யா சதகத்துல 46வது ஸ்லோகம். இன்னிக்கு இந்த ஸ்லோகத்துடைய அர்த்தம் சொல்றேன்.
குண்ட³லி – அப்டின்னா அழகான குண்டலங்களை அணிந்து கொண்டிருப்பவள் அப்டின்னு அர்த்தம். காமாக்ஷி காதுல குண்டலங்கள் அணிந்துகொண்டிருக்கிறாள்.
குமாரி – அப்டின்னா இந்த 12 வயசு 15 வயசு… பாலா த்ரிபுரசுந்தரியா இருக்கற அந்த அவசரத்துக்கு ‘குமாரி:னு பேரு.
குடிலே – அப்டின்னா வளைந்து.. ‘குண்டலினி’ அப்டீனு மூலாதாரத்துல காமாக்ஷி அந்த பாம்பு ஸ்வரூபத்துல இருக்கும் போது சுருட்டிண்டு அல்லது வக்ரமாக வளைந்து அப்டிங்கற அர்த்தத்துல ‘குடிலே’ அப்டின்னு சொல்றார்.
சண்டி³ — அப்டின்னா அடங்காத கோபம் கொண்டவள்னு அர்த்தம். பக்தர்களுடைய எதிரிகளிடத்தில் காமாக்ஷி கடுமையான கோபத்தை காமிப்பா.
சராசரஸவித்ரி – ‘சரம்’னா அசையும் பொருட்கள் ‘அசரம்’னா அசையாத பொருட்கள். உலகத்துல இருக்கற எல்லா அசையும் அசையாத பொருட்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டி பண்ணின எல்லாருக்கும் அம்மா காமாக்ஷி. ‘சராசரஸவித்ரி’.
சாமுண்டே³ — அப்டின்னா சண்டன் முண்டன்னு ரெண்டு அசுரர்களை காளி தேவியாக வதம் பண்ணின அந்த அவசரத்துல, காமாக்ஷிக்கு ‘சாமுண்டி’னு பேரு
குணினி – அப்டின்னா முக்குணங்கள். “ரஜஸ் தமஸ் சத்வம்” அப்டிங்கற மூணு குணங்களும் காமாக்ஷியிடம் தான் அல்லது ‘குணினி’னா எல்லா நல்ல குணங்களும் கொண்டவள் அப்டின்னும் அர்தம் வச்சுக்கலாம்.
குஹாரிணி – அப்டின்னா ‘கு3’னா அந்தகாரம். ‘ஹாரிணி’னா அதை போக்குபவள். ‘குஹாரிணி’னா அஞ்ஞான இருளை போக்குபவள்.. ஞானத்தை அருளுபவள் அப்டின்னு அர்த்தம்.
குஹ்யே – அப்டின்னா ரகசியமானவள். நம் ஹ்ருதய குஹையில் காமாக்ஷி வசிக்கிறாள். ஆனா அது நமக்கு தெரியல. அது ஏன் தெரியலைனா அந்த அஞ்ஞானத்தால தான்.
அந்த அஞ்ஞானத்தை போக்கி, நமக்குள்ளேயே அந்த காமாக்ஷியை பாக்கறதுக்கு நமக்கு குருமூர்த்தியாக வந்து அனுக்ரஹம் பண்றாள். அப்படி அந்த குருமூர்த்தியாக வந்து அனுக்ரஹம் பண்ணின அந்த அவசரத்தை, அந்த குருவை, “ஹே காமாக்ஷி! நான் வணங்குகிறேன்”.
‘கு3ருமூர்தே’ – என் குருமூர்த்தியிடத்தில், ‘த்வாம் நமாமி காமாக்ஷி’ – “ஹே காமாக்ஷி! உன்னை நான் நமஸ்காரம் பண்றேன்” அப்டின்னு ஒரு அழகான ஸ்லோகம்.

இதுல நிறைய நாமாவளி இருக்கு. இதை ஒரு நூற்றெட்டு ஆவர்த்தி பண்ணினால், காமாக்ஷி மேல ஒரு ஸஹஸ்ரநாமம் ஆகிவிடும்.
ஸ்வாமிகள் இந்த கடைசி பாதத்தை ‘கு3ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ அப்டிங்கறதை “மஹாபெரியவா தான் காமாக்ஷி!”… நீ நாலு தடவை சொல்லி பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணு. அபார புண்யம்னு சொல்வார்.
“கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி”
“கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி”
“கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி”
“கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி”
அப்டின்னு படிக்கும் போது நாலு தடவை படிப்பார்.

நமக்கு தெரிஞ்ச ஒரு பெண்ணே சின்ன வயசுலேர்ந்து குழந்தையா இருக்கும் போது ஒரு பேர் வெச்சு கூப்பிடறோம். அவ பா³லையா இருக்கும் போதும் அதே பேர் தான். அப்புறம் ப்ரௌடை ஆன பின்ன.. அப்புறம் அம்மா ஆன பின்ன.. ரூபம் மாறறது. ஆனாலும் அதே பேர் வச்சு தானே கூப்டறோம். அது மாதிரி “பல விதமான ரூபங்களும் காமாக்ஷி தான்” அப்டிங்கறதை புரிஞ்சுக்கறதுக்கு ஒரு குரு வந்து நமக்கு ஞானத்தை அநுக்ரஹம் பண்ணனும். அப்படி ஒரு குரு கிடைச்சுட்டார்னா, நம்ப அந்த குருவினிடத்திலேயே எல்லா நல்ல குணங்களையும் பார்த்து, அவரையே காமாக்ஷியா நெனைச்சு நமஸ்காரம் பண்ணின்டே இருக்கணும். நமக்கு ஞானம் ஏற்படற வரைக்கும் அந்த குருவை நமஸ்காரம் பண்ணிண்டே இருக்கணும்.

நேத்திக்கு சொல்லும் போது, குருவும் தெய்வமும் ஒண்ணு தான். பேதம் பாராட்டக்கூடாது. எனக்கு பெரியவாகிட்ட தான் ஏக பக்தி. அதனால நான் கோவிலுக்கெல்லாம் போகமாட்டேன் அப்டின்னு சொல்றது அவ்வளவு ஸாது இல்லைனு சொல்லிண்டிருந்தேன். ஆனா யாரோ ஒருத்தர் “எனக்கு பெரியவாகிட்டயே தான் மனசு லயிக்கறது! அப்படி அந்த பெரியவாளோட அனுபவங்களை கேட்டு, எனக்கு மத்தபடி எனக்கு ஆச்சார அனுஷ்டானம் எல்லாம் தெரியல. எனக்கு வேத தர்ம சாஸ்த்ரமெல்லாம் தெரியல. பெரியவாகிட்ட ஆனா என் மனசு ரொம்ப லயிக்கறது. பெரியவாளையே நான் தெய்வமா நெனைச்சு ஏக பக்தி பண்ணக்கூடாதா?” அப்டின்னு கேட்டா, பண்ணலாம். அவசியம் பண்ணனும் . குருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி அப்படின்னு சொல்லி காமாக்ஷி கோவிலுக்கு போனாலும் காமாக்ஷி தேவியை பெரியவாளா நெனைச்சு நமஸ்காரம் பண்ணணும். எந்த கோவிலுக்கு போனாலும் சரி.. ஸ்வாமிகள் சொல்வார், “பார்த்தசாரதி கோவிலுக்கு போய் நமஸ்காரம் பண்ணினியா.. ‘க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’னு சொல்லி நமஸ்காரம் பண்ணு. எங்கும் பெரியவா தான் இருக்கா அப்டின்னு நெனைச்சுக்கோ!”அப்டின்னு சொல்லுவார்.
ரொம்ப slight difference in the attitude தான். நான் பெரியவா பக்தன் அந்த க்ருஷ்ண பக்தனை காட்டிலும் நான் மேல அப்டின்னு Holier than thou attitude வந்தா நம்முடைய பெரியவா பக்தி தப்பு. அதே நேரத்துல எல்லா தெய்வங்களிடத்திலும், எல்லா மஹான்களிடத்திலும் நம்முடைய குருநாதரை பார்த்து நமஸ்காரம் பண்ண முடிஞ்சா, அப்பொ பெரியவாளோட அநுக்ரஹம் கிடைச்சுடும்.

பெரியவாளே பகவன் நாமத்தை பத்தி சொல்லும் போது, “அவாள்ளாம் குடுத்துவச்சவா. மஹான்கள்! யோகம், யாகம் எல்லாம் பண்றா. நான் எதோ என்னால இதான் முடியும் அப்டின்னு humble ஆ இந்த நாமத்தையே கெட்டியா புடிச்சுண்டிருக்கேன் அப்டின்னு இருந்துக்கோ .. அப்படி இருந்தா அதுலேர்ந்து எல்லாம் என்ன அநுக்ரஹம் கிடைக்குமோ அது உனக்கு கிடைச்சுடும்!” அப்டின்னு சொல்லுவா.

அதுமாதிரி “எனக்கு ஒண்ணும் தெரியல.. நான் எதுக்கும் லாயக்கில்லாம இருக்கேன்.. பெரியவா தான் என்னை காப்பாத்தணும்” அப்டின்னு பெரியவா பக்தி பண்ணணும். ஏன்னா பெரியவாளே அந்த வேதத்தையும், தர்ம சாஸ்த்திரங்களையும், அந்த புராணங்களையும், கோவில்கள்ல ஸ்வாமிக்குமே சாந்நித்யத்தை கொடுத்தா பெரியவா! கும்பாபிஷேகங்கள் பண்ணி, இருந்த இடத்துல ப்ரார்த்தனை பண்ணினாலே, அந்த தெய்வம்.. கோபமா இருந்த தெய்வம், அநுக்ரஹ தெய்வமா மாறிடும். அப்படி பெரியவாளோட வைபவம். அதனால பெரியவா கிட்ட ஏகபக்தி பண்றது ரொம்ப விசேஷம் தான். ஆனா ரொம்ப humble ஆ இருந்துண்டு பண்ணனும். பெரியவா பக்தன் அப்டின்னு ஆன பின்ன, நாம இன்னும் ரொம்ப ரொம்ப carefulஆ .. ஏன்னா எந்த புத்துல எந்த பாம்போ! யாரையாவது நான் affect பண்ணிட்டேன்னா, பெரியவாளுக்கு என் மேல கோபம் வந்துடுமோ அப்டின்னு ஜாக்ரதையா இருக்கணும்!

துருவன் 6 மாசம் தபஸ் பண்ணி, ஸ்வாமி தர்சனம் பண்ணும் போது ஸ்வாமி, “நீ திரும்ப போ. உனக்கு ராஜா பட்டாபிஷேகம் பண்ணி வைப்பார். நீ முப்பதாயிரம் வருஷம் ஆட்சி பண்ணிட்டு அதோட முடிவுல நீ முக்தி அடைவாய்!” அப்டின்னு சொல்லிருக்கார். “ஒரு துருவ நக்ஷத்ரமாய் விளங்குவாய்! முக்தி அடைவாய்!” அப்டின்னு பகவானே சொல்லியிருக்கார். அப்படி ஆட்சி பண்ணும் போது குபேரன் மேல படையெடுக்கறார் துருவன். யக்ஷர்களோட கடுமையா யுத்தத்துல வதம் பண்ணின போது, வைவஸ்வத மநு துருவன் கிட்ட சொல்றார். “மஹாவிஷ்ணுவுடைய இன்னொரு பக்தனான குபேரனுடைய ஆட்களை நீ இந்த மாதிரி ரொம்ப ஹிம்சை பண்ணினா, நீ பகவானுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால பண்ணாதே!” அப்டின்னு சொல்றார் னு ஒரு கதை வரும்.
அதுனால பெரியவா நமக்கு முக்தினு guarantee எல்லாம் ஒண்ணும் குடுக்கலை அதனால நம்ப மத்த பெரியவா பக்தர்கள் கிட்ட எதுவும் அபசார படக்கூடாது. அவாளுடைய நம்பிக்கைக்கு நாம எதுவும் ஊறு விளைவிக்க கூடாது அப்டிங்கறதாலயே எங்க கூப்பிட்டாலும் போகலாம். அங்க போய் அவா எந்த ஸ்வாமியை சொல்றாளோ .. எந்த மஹானை சொல்றாளோ அவாளை நமஸ்காரம் பண்ணலாம். Especially ஸ்வாமிகள் பெரியவா பக்தியா இருக்கற குடும்பத்துலேர்ந்து, பெண்குழந்தைகள் வேற இடத்துல கல்யாணம் ஆகி போகும் போது, “நீங்க அங்க போய் எதுவும் சண்டை எதுவும் வரவேண்டாம் இதை பத்தி. அவா எந்த மஹானை நமஸ்காரம் பண்ண சொல்றாளோ அங்க போய் நீங்க ‘கு3ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ அப்டின்னு சொல்லி பெரியவாளை நெனைச்சு நமஸ்காரம் பண்ணுங்கோ!” அப்டின்னு சொல்வார்.

இப்படி பெரியவா கிட்ட ஏகபக்தி பண்ணலாம். அப்படி பண்ணிண்டே வந்தால், நம்பளை எல்லாரும் புரிஞ்சுக்கவும் புரிஞ்சுப்பா. நமக்கு அனுக்ரஹமும் சீக்கிரம் கிடைக்கும்.
நம்மளோட பெரியவா பக்தி வெளில ஆச்சார அனுஷ்டானங்களில சில மாற்றங்கள் கொண்டு வர்றது சுலபம் தான். உள்ளுக்குள்ள சத்யம், கருணை, அம்மா அப்பா கிட்ட பக்தி, பேராசை எல்லாம் குறையறது, இது மாதிரி சார்(SAR) புக்ல சொல்லியிருக்கற விவேக குணங்களெல்லாம் நமக்கு வரணும்னு ப்ரார்த்தனை பண்ணிண்டு, அது மூலமா ஜனங்களுக்கு தானா இவன் பெரியவா பக்தன். இந்த மாதிரி நம்பளும் பெரியவா கிட்ட பக்தி பண்ணினா நமக்கும் நல்ல குணங்கள் வரும்! நமக்கும் சந்தோஷங்கள், நிம்மதி ஜாஸ்தியாகும் அப்டின்னு தோணும்படியாக நம்ப நடந்துக்கணும் அப்படின்னு ஸ்வாமிகள் எல்லாருக்கும் சொல்லி குடுக்கறதை பாத்துண்டு எனக்கு புரிஞ்சுண்டிருக்கேன்.
குண்ட³லி குமாரி குடிலே சண்டி³ சராசரஸவித்ரி சாமுண்டே³ ।
கு³ணினி கு³ஹாரிணி கு³ஹ்யே கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி ||
கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி
கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி
கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி
நம: பார்வதி பதயே… ஹர ஹர மஹாதேவா…

8 replies on “குண்டலி குமாரி குடிலே”

மூகபஞ்சசதியில் முதல் முதல்ல மனசுக்கு ரொம்பவும் பிடித்தமான நெருங்கின ஸ்தோத்திரமா அமைந்தது இந்த ஸ்லோகம் தான். அதுவும் ஸ்வாமிகள் ‘“மஹாபெரியவா தான் காமாக்ஷி” என்று நாலுதரம் நமஸ்காரம் பண்ண சொல்வார்’ என்று அடிக்கடி நீங்கள் சொல்லி கேட்டதால், இது மிகவும் இன்றியமையாத ஸ்லோகமாக ஆகிவிட்டது. 🙏🙏🙏🙏

அற்புதமான விளக்கம். 👌🙏🌸 மஹாபெரியவா, “குரு, ஈசுவரன் என்ற இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல் ஈசுவரனே குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டு விட்டோமானால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்ற இரண்டு தனித்தனியாகப் பண்ணவேண்டாம். குருவே ஈசுவரன் என்று கருதி அந்த குருவான ஈசுவரன் ஒருத்தனிடத்திலேயே பூர்ண சரணாகதி பண்ணிவிடலாம்.” என்று சொல்வது நினைவுக்கு வருகிறது.🙏🌸

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் “தக்ஷிணாமூர்த்தி ரூபிணி” என்று வருகிறது. காளிதாஸரும், “தேசிக ரூபணே தர்சிதாப்யுதயாம்” – ஆசார்ய வடிவில் தன் மகிமையைக் காட்டுகிறவள் என்று அம்பாளை ஸ்துதிக்கிறார்.🙏🌸

‘குரு’ என்ற வார்த்தையின் definitionஇல் ‘கு’ என்றால் இருட்டு; ‘ரு’ என்பது அழிப்பதைக் குறிப்பது. இருட்டை அழிப்பவர் ‘குரு’. இங்கே மூககவியும் ‘குஹாரிணி’ – ‘அந்தகாரத்தை போக்குபவள்’ என்று அழைத்து அப்படிப்பட்ட குருமூர்த்திக்கு நமஸ்காரம் என்கிறார்.

மூககவி அம்பாளை ‘ஸவித்ரி’ என்று அழைத்து, ‘குஹாரிணி’, ‘குஹ்யே’, ‘குருமூர்த்தே’ என்கிறார். அதேமாதிரி, ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர், ‘ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே’ என்ற பாடலில், “குருகுஹாய அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே” என்று பாடுகிறார். மஹாபெரியவா இதற்கு அர்த்தம் சொல்லும்போது, “மலைக் குஹைகளில் வஸிப்பதால் குஹன். தத்வார்த்தமாகச் சொன்னால் ஹ்ருதய குஹையிலிருக்கும் ஆத்ம ஸ்வரூபம். அதுவே குருவாக வந்து உபதேசிக்கிறபோது குருகுஹன். ‘த்வாந்தம்’ இருட்டு. ஸவித்ரு, ஸவிதா என்றால் ஸுர்யன். இருட்டை இருந்த இடம் தெரியாமல் ஸுர்யன் விரட்டி அழித்து விடுகிற மாதிரி அஜ்ஞான இருட்டை த்வம்ஸம் பண்ணும் ஞான ஸுர்யன்.” என்கிறார். 🙏🌸

சண்டிகையாகிக் கெட்டதை, அஞ்ஞானத்தை சிக்ஷித்து, குருமூர்த்தியாக நல்லதை உபதேசித்து ரக்ஷிக்கும் காமாக்ஷிக்கு நமஸ்காரம். குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

If your commentary is available for MookaPanchashathi could you share?? I find it easy to follow

ஒரு இருபது வருஷமாகவே கோவிலுக்கு போனால் …என்னையறியாமல் …மஹாபெரியவா என சத்தமாகவே சொல்வேன்..சிவன் கோவிலில் பிரச்சனையை இல்லை..பெருமாள் கோவிலில் இதுபோல் சொன்னால் அந்த பட்டர் என்னை ஒரு வினோத பிராணியை பார்ப்பதுபோல் பார்த்தார்..”ஒய் ..உள்ளே இருப்பது பெருமாள்”என்றார்..நான் “தாழ் சடையும் நீள் முடியும் என்ற பாசுரத்தை சொல்லி..அப்படிப்பாட …”கண்ணனை குழந்தையை பாவித்து..”மாணிக்குறளனே தாலேலோ..வையம் அளந்தானே தாலேலோ என்படுவதற்கு எனக்கு தகுதி இல்லை…ஆனால் இவரை …இவரைவிட வயசு குறைவான பாட்டிகூட…”வெய்யில்ல நிக்கறேண்டா சங்கரா..என கூவியபோது..”பெரிய சதஸில் இருந்த பெரியவா எழுந்து வந்து…அவரும் வெய்யுளுள் நின்றுகொண்டு ….தரிசனம் போதுமா என கேட்டு அவரை வண்டியில் ஏற்றி வீட்டில் விட சொன்னார்…இன்று கூட அதிஷ்டானத்தில் …இப்படி வேண்டுகிறேன் உன்காதில் விழலையா என கேட்பார் உள்ளனர்..எங்களை பொறுத்தவரை….மஹாபெரியவாதான் எல்லாத்தெய்வமும் என சொல்ல மாட்டோம்….எல்லா தெய்வங்களிலும் மஹாபெரியவா இருக்கார் “என்றுதான் சொல்வோம்..என்றேன்….அதுதானே உண்மை…

அருமையான விளக்க உரை! எங்கும் எதிலும் பெரியவா என்றே தோன்றுகிறது நமக்கு! ஆனால் பெரியவா சொன்னது நம் மன குகையிலேயே ஸதா வாசம் செய்யும் ஆத்மாதான் தெய்வம் ,வெளியில் தேட வேண்டாம் என்று சொல்வார். அத்தகைய நிலை என் போன்ற சாதா மனுஷ்ய ஜன்மத்துக்கு வருமா …தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும்.நிச்சயம் எங்கும் நிறை நாத பிரம்மம் நம் உள் உரைவதால்தான் நமக்கு பெரியவா, காமாக்ஷி நினைவு, பக்தி தோன்றுகிறது! இது மிகையில்லை ! பெரியவா பாதத்தை மனதில் இருத்தினாலே எல்லா தெய்வங்களும் அங்கு ஓடோடி வந்துவிடுவார்கள்! அதைத்தான் மூக கவி குரு மூர்த்தயே த்வாம்.நமாமி காமாக்ஷி என்று எளிய முறையில் சொல்லி புரிய வைத்தார் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு.முறை கபாலி சந்நிதியில் அணுஷத்தன்று பெரியவா தர்சனம் செய்த பின் நின்ற போது லிங்கத்தில் பெரியவா தோன்றியது போல் இருந்தது ! பிரமையாக இருக்கலாம்.தெரியாது. எல்லாவற்றிலும் குரு ரூபத்தை தியானம் செய்தால் அதன் சிறப்பே தனி! குரு மூர்த்தியே த்வாம் நமாமி காமாக்ஷி என்பதன் விளக்கம் அருமை! எல்லா அணுவுள்ளும் தெய்வம்தான் உறைந்துள்ளனர் ! நரத்வம் தேவத்வம் நக வன மருகத்வம் மசகதா என்ற சிவானந்தலஹரி லே பகவத் பாதால் சொல்றார்” எந்த ஜென்மம் எடுத்தாலும் உன் பக்தி நினைவு மட்டும் கொடுண்ணு. இதிலேர்ந்து எல்லாமே ஈஸ்வர ஸ்வடூபம்ன்னு தொணரது இல்லையா?
கணபதி சொல்றா மாதிரி எனக்கு விளக்கம் சொல்லத் தெரியாது. என் சிற்றிவுக்கு தோணினா மாதிரி சொன்னேன்.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர , குரு சாக்ஷாத் பரபிரும்மா தஸ்மை ஶ்ரீ குரவே நமஹ.இந்த ஸலோகம் குருவே கடவுள் பரபிரும்மா என்று அடித்து கூறுகிறது.இது போதாதா.கவிஞர் கண்ணதாசன் கூட இந்த தத்துவத்தை” மனிதன் எந்பவன் தெய்வமாகலாம் என்ற பாட்டின் மூலம் மிக எளிமையாக கூறிவிட்டார்.எதுவுமே பிரம்மை இல்லை நம்பினால் கெடுவதில்லை நான்கு முறை தீர்ப்பு,பசிக்கு விருந்தாவான்,நோய்க்கு மருந்தாவான்….ஶ்ரீ.யத்பாவம் தத் பவதி கீதாசாரீயாரிற் வாக்கு.நீங்கள் காண்பது நிஜம்தான் ஜீ.சம்ஷயம் வேண்டாம்.கீதாசாரியனே கூறுகிறார்”சம்ஷயாத்மா வினிஷ்யதே”

Amazing explanation. I am really blessed because IAM going to start the new year with this Aarya sathakam 46 th slokam. Thank you ji.

குரு என்பதன் விளக்கம் இருளைப் போக்குபவர் என்பதாகும். அம்பாளும் , குருவும் அஞ்ஞானம் என்ற இருள் அதாவது தமோ குணத்தை அகற்றுபவர்கள் !
அதனால்தான் குருவை காமாக்ஷி ஸ்தா நத்தில் வழிபடுகிறோம்!
ஶ்ரீ வித்யா உபாசகர்கள் விததையைக் கற் கும்போது முதலில் குரு பாதுகா மந்திரம் கற்று அதன் முததிரையோடுதான்
ஆரம்பம் செய்வார்கள் !

தேவியை அடைய வழி காண்பித்தது குருவல்லவா?
தேவியை அடைந்த பாக்யசாலிகள் ஸவிகல்பம், நிர்விகள்பம் என்ற படிக்கட்டுகள் வாயிலாகவே, முக்தி என்ற மோக்ஷத்தை எய்துகிறார்கள்
அதனால்தான் குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி என்று மூலர் சொல்கிறார்!
சனகாதி சமாராத்யா, தக்ஷிணாமூர்த்தி ரூபிணி, சிவஞான பிரதாயினி என்று
சஹஸ்ரநாமத்தில் அவளை அழைக்கிறோம் !
ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற என்று பட்டரும் சொல்கிறார்.

குழந்தை பாலாவாக வட்டமிட்டு மூலாதாரத்தில் சக்திதான் குண்டலினி சக்தி!
அவள் எதற்கும் அடங்காதவள்!

இவளை எழுப்பி மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரத்தில் சிவனுடன் சேர்ப்பதுதான் ஜீவ லட்சியம் !
சிவம் கோவில்களில் நாகாபரணம் சாத்துவதும், சித்தர்கள் ஆடுபாம்பே என்று பாடுவதும் இந்த தத்வந்தான்!
ஶ்ரீ வித்யா உபதேசம் இதனை அடி ஒட்டியே போதிக்கப் படுகிறது!
இந்த எழுச்சியை ஒட்டியே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி எல்லால் பாடப்படுகிறது! ஜீவாத்மா பரமாத்மா தத்வம் இது !
மிக அழகான ஸ்லோகம் தக்க பொருள் பொதிந்ததும் கூட!

எல்லாவிதத்திலும் பெரியவாதான் காமாக்ஷி, காமாக்ஷிதான் பெரியவா என்று வலியுறத்துகிற ஸ்லோகம் !
மிக்க அழகான விளக்கம் !!
Blessed to be a part of his satsangam!!

Guru sharanam ..
அம்பாள் ஷரணம் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.