Categories
mooka pancha shathi one slokam

மனமே எங்கனே முக்தி காண்பதுவே


கடாக்ஷ சதகம் 100வது ஸ்லோகம் பொருளுரை – மனமே எங்கனே முக்தி காண்பதுவே

One reply on “மனமே எங்கனே முக்தி காண்பதுவே”

ரொம்ப அழகான ஸ்லோகம். அருமையான விளக்கம். 👌🙏🌸

இதுவரை ஸ்தோத்திரித்த ஸ்லோகங்களிலிருந்து சற்றே வித்தியாசமான ஸ்லோகமும் கூட! அம்பாளுடைய கடாக்ஷத்தை இத்தனை ஸ்லோகங்களில் விவரித்துவிட்டு, சில விஷயங்களை மேற்கோள் காட்டி அம்பாளின் திருஷ்டி இதையெல்லாம் விரும்பவில்லை என்கிறார் மூககவி. ஏன் அப்படி சொல்கிறார்?

மஹாபெரியவா ஸௌந்தர்யலஹரி முதல் ஸ்லோகத்தின் தாத்பர்யத்தை விளக்கும் போது, “‘உன்னுடன் சேர்ந்தில்லாவிட்டால் சிவன் அசையக் கூட முடியுமா?’ என்று ஆசார்யாள் கேட்கிறதற்கு உள்ளர்த்தமாக, நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உபதேசம், பாடம்  என்னவென்றால், ‘உன்னுடைய க்ருபை இல்லாவிட்டால் நாங்கள் அந்த அசையாத நிலையை அடையமுடியுமா?’ என்று நம் சார்பில் அவர் கேட்பதாகத்தான் தோன்றுகிறது. அசையாததை அசைத்த மஹாசக்தி அவள் – பரப்ரஹ்மத்துக்குத் தான் இருப்பதாகத் தெரிந்த உணர்ச்சியான அசைவிலிருந்து அவள் லீலை ஆரம்பித்தது!

சிவனின் இவல்யூஷனுக்கு(பிரம்ம தத்வம் மேலே மேலே வெளிமுகமாகி அதிலிருந்து மற்ற தத்வங்கள் ‘evolve’ ஆவதால் இதை ‘evolution’ என்பது) அம்பாள்தான் காரணம் என்று ஆசார்யாள் ஆரம்பித்திருப்பதின் மறு பக்கமாக –  ஜீவன் சிவனாக இன்வல்யூஷன்( விரிந்து உண்டான ஜீவன் உள்முகப்பட்டுப் பட்டுக் குவிந்து பிரம்மமாக அடங்க வேண்டும். அது ‘இன்வல்யூஷன்’) பெறவும் அவள்தான் காரணம்; அதற்காக அவள் கிருபையையே நாம் வேண்டி வேண்டிப் பெற வேண்டும் என்று நம் எல்லோருக்கும் அவர் உபதேசிப்பதாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்கிறார்.🙏🌸

மூககவியும் ஆதி ஆசார்யாளை ஒட்டியே நாம் இந்த ஸ்தோத்திரங்களை அணுகும் முறையை சுட்டிக் காட்டுவது போல் இருக்கிறது. பக்தியோடு, விவேகத்தோடு, சாஸ்திர அறிவோடு, கர்வமே இல்லாமல், சத்தியத்தோடு உபாசனை பண்ணினால், அம்பாளின் திருஷ்டி நம்மேல் விழுந்து முக்தி கொடுத்து விடுவாள். இன்னொரு விதமாக காமாக்ஷி கடாக்ஷம் இருந்தால்தான் இது எல்லாமும் சாத்தியம்🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.