Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாராயணீயம் Govinda Damodara Swamigal Narayaneeyam


கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாராயணீய பாராயணத்தின் தனிப் பெருமை என்ன? Uniqueness of Govinda Damodara Swamigal Narayaneeyam parayanam

இன்னிக்கு மாசி மாசம் பூரட்டாதி நக்ஷத்திரம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளோட வார்ஷிகா ஜென்ம நக்ஷத்திரம் ஜெயந்தி. ஸ்வாமிகள்ல தர்ஸனம் பண்ணவா எல்லார்க்கும் இந்த ஒரு காட்சி ஞாபகம் இருக்கும். அவர் வந்தவுடனே நமஸ்காரம் பண்ண உடனே, எவ்ளோ நேரம் இருக்கலாம் ??… அப்படினு கேட்பார். அவா வந்தவா 5 நிமிஷம், 10 நிமிஷம்னு சொல்றத பொறுத்து, ஸ்ரீமன் நாராயணீயத்திலிருந்து ஒரு தசகமோ, ரெண்டு தசகமோ படிச்சுட்டு, அவர் அன்னிக்கு காத்தால ராமாயணமோ, பாகவதமோ,  சுந்தர காண்டமோ பாராயணம் பண்ணிருப்பார். பாராயணம் பண்ணி, குருவாயூரப்பனுக்கு பூஜை பண்ணி, கற்கண்டும், அவலும் நெய்வேத்யம் பண்ணிருப்பார். அந்த கற்கண்டை,  தானே தன் கையால  பொதிஞ்சு வந்தவாளுக்கு கொடுப்பார். அப்படி, ஆங்கரை பெரியவா, திருவல்லிக்கேணி பெரியவா, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் சொன்னாலே, “நாராயணீயம்” தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். அப்படி அவர் நாராயணீயமே  தன்னுடைய உயிர் மூச்சா இருந்தார், அவருடைய நாடி, நரம்புகளெல்லம் நாராயணீயம் இருந்தது. இப்போ அந்த நாராயணீம்  internet ல போட்ருக்கா. ஆங்கரை பெரியவா நாராணீயம்னு  (Search for ‘Angarai Periyava Narayaneeyam in youtude) பார்த்தா கிடைக்கும். ஸ்வாமிகளோட நாராயணீயம் கொஞ்சம் வித்யாசமா இருக்கும், ரொம்ப uniqueஆ  இருக்கும். அதோட விசேஷங்கள் என்னங்கிறது நான் சொல்றேன்.

முதல்ல ஸ்வாமிகள் நாராயணீயம் ரொம்ப நிதானமா படிச்சுருப்பார். மூகபஞ்சஶதீல பாதாரவிந்தம் ஷதகத்தில்  ஒரு ஸ்லோகம் இருக்கு.

नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं
कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम् ।
उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो
मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥

நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்ʼ

க்ருʼதஸ்னானம்ʼ ஜ்ஞானாம்ருʼதம்அமலம்ஆஸ்வாத்³ய நியதம்.

உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மன:

மனோஜ்ஞே காமாக்ஷ்யாஶ்சரணமணிஹர்ம்யே விஹரதாம்.

அப்படினு  காமாக்ஷினுடைய  சரணம் எனும் ரத்னமாளிகையில், என் மனம் வசிக்கட்டும், அந்த மாளிகை எங்க இருக்குன்னா?. . நகத்துலஇருந்து பெருகும் வெண்மையான கங்கா  நதியோட கரைல இருக்கு. அதனால, அந்த கங்கைல குளிச்சுண்டு, “ஜ்ஞானாம்ருʼதம் “- அம்பாளுடைய  சரணத்துல ஞானம் பெருகறது, அந்த அமிர்தத்த சாப்பிட்டுண்டு, அம்பாளுடைய கால்ல சலங்கைல, சிவப்பா மணிகள் இருக்கு, இந்த தீபத்து ஒளி வரிசையா தீபம் ஏத்திவச்சுருக்கு, இந்த பாதங்கிற ரத்ன மாளிகைல  என் மனசு எப்பவும் வசிக்கட்டும்” அப்படினு பிரார்த்தனை பண்ணறார். அப்படி ஸ்வாமிகள் இந்த நாராயணீயம், மூகபஞ்சஶதீலாம் படிக்கும் போது, “ஜ்ஞானாம்ருʼதம்

அமலம் ஆஸ்வாத்³ய நியதம்”…அப்படினு இந்த புஸ்தகங்கள்ளாம் ஞான வடிவமா நினைச்சு, ரொம்ப ரசிச்சு நிதானமா படிப்பார். ஒரு அம்மா தன்னுடைய குழந்தைய கொஞ்சும் போது  நேரம் பார்ப்பாளா ?அந்த மாதிரி அவர் பகவான ரொம்ப அனுபவிச்சார். அத அனுபவிக்கறது இந்த அவர் நாராயணீயம் படிக்கறத கேட்டாலே தெரியும், ரொம்ப நிதானமா படிப்பார், இன்னும் ஒண்ணு,ரொம்ப அக்ஷர ஷுத்தமாவும் படிப்பார், क ख ग घ லாம் அவர் படிக்கறத கேட்டு எழுதிடலாம் அந்த ஸ்லோகங்களையே, அந்த அளவுக்கு நிதானமாவும், அக்ஷர ஷுத்தமாவும் படிப்பார்.

“அழித்து பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் எழுத்து பிழை அற கற்கின்றிலீர்”அப்படினு அருணகிரிநாதர் சொல்றார். எழுத்து பிழை இல்லாம கற்கணும், ஸ்வாமிகள் அப்படி தானும் படிச்சு, சொல்லி தந்தாலும், ரொம்ப அக்ஷர பிழை இல்லாம படிக்கணும்னு சொல்லி தருவார். அவருடைய  அந்த முடியாத வயசுல கூட ரொம்ப சிரமப்பட்டு क ख ग घ  சொல்றத கேட்டு பாருங்கோ… ரொம்ப அவருடைய  அந்த dedication தெரியும். அந்த அக்ஷர சுத்தமா படிக்கறதுல அதுலயே ஒரு power வந்துவிடுகிறது. ஸ்வாமிகள் யாராவது ருத்ரத்த cassetteல கேட்டு தப்பு தப்பா சொன்னா, அப்படி படிக்காதீங்கோ! அதை விட சிவ அஷ்டோத்தரத 3 வாட்டி படிச்சா,..”ஸ்ரீருத்ரம்”  சொன்ன புண்யம்ன்னு இருக்கு. சிவ அஷ்டோத்ரம் சொல்லுங்கோ, அப்படினு சொல்லுவார்.அந்த மாதிரி, எல்லா மந்த்ரமா நினைச்சார். அடுத்தது, “அர்தானுசந்தானம்”னு நினைச்சார், ஒரு ஸ்லோகத்தை படிக்கும்போது, அதையோட அர்த்தத்தை புரிஞ்சுண்டு, அங்கங்க நிறுத்தி படிக்கறது,அப்படினு ஒரு ஸ்டைல், ஒரு ஷைலி ஒரு உதாரணம் சொல்றேன்,

புரா மாராராதி꞉ புரமஜயத³ம்ப³ ஸ்தவஶதை꞉

ப்ரஸன்னாயாம்ʼ ஸத்யாம்ʼ த்வயி துஹினஶைலேந்த்³ரதனயே.

அதஸ்தே காமாக்ஷி ஸ்பு²ரது தரஸா காலஸமயே

ஸமாயாதே மாதர்மம மனஸி பாதா³ப்³ஜயுக³லம்

இது மூகபஞ்ஷதி பாதாரவிந்தம் 101வது ஸ்லோகம்.

புரா மாராராதி꞉ புரம் அஜயத் அம்ப³”- முன்னொரு  காலத்தில்,முப்புரங்களை பரமேஸ்வரன் எரித்தார். எப்போனா ??…உன்ன 100 ஸ்லோகம் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி நீ திருப்தியான அந்த வேளையில,  அவர் போய்  புரங்களை எரித்தார். அதனால,   நான் இப்ப உன்ன 100 ஸ்லோகம் சொல்லி பிரார்த்தனை பண்ணிருக்கேன், என்னுடைய கடைசி காலத்துல,என் முன்னாடி வந்து உன் பாதங்கள் அபயம் தரணும், அப்படினு வேண்டிக்கறார்.இதுல, அந்த சந்தஸ் meterயையும் விடாம, meaningku ஏத்தா மாதிரி, அங்க அங்க நிறுத்தி படிக்கறது, அப்படிங்கற ஒரு ஷைலி, ஸ்வாமிகள் இந்த நாராயணீயத்துல,1000 ஸ்லோகங்களுக்கு, தப்பிலாம உபயோகப்படுத்திருக்கார். ஏன்னா, அவருக்கு அவளோ நன்னா நாராயணீயத்துல ஒவ்வொரு பதத்திற்கும் அர்த்தம் தெரியும்.  அந்த பதங்களுடைய அர்த்தம் தெரியறது மட்டும் இல்லை. நல்ல சமஸ்க்ரிதம் தெரியும், அதனால எங்க எங்க பிரிக்கணும்ங்கறதும்,  எப்படி பிரிக்கணும்ங்கறதும் தெரியும். எங்க சேர்க்கணுங்கறதும் தெரியும். அபாரமான வியாகரண ஞானம் இருந்தாலொழிய அத பண்ண முடியாது. அது ஒரு uniqueness.

இன்னு ஒன்ணு, இந்த நாரயணீயம்ங்கறது ஸ்ரீமத் பாகவதத்தோட சாரம், ஸ்ரீமத் பாகவதங்கறது 18000 ரொம்ப கஷ்டமான சமஸ்க்ரிதத்தில எழுதின  ஸ்லோகங்களால அமைந்தது, இந்த நாராணீயம்ங்கறது 1000 ஸ்லோகங்கள். இத ஸ்ரீமத் பாகவதத்தோட சுருக்கம் அப்படினு கூட ஸ்வாமிகள் சொல்ல மாட்டார். இத ஸ்ரீமத் பகவாதத்தோட சாரமா இருக்கு, பாகவதம் படிச்சா என்ன தெரிஞ்சுக்குறோமோ,அத நாராயணீயம் படிச்சு தெரிஞ்சுக்கலாம்.அப்படி அவர்,ஸ்ரீமத்பாகவதத்த  உபாசனை பண்ணி, நூத்துக்கணக்கான தடவை படிச்சு, அத மஹாபெரியவா முன்னாடியும் படிச்சு, மஹாபெரியவா கிட்ட சாயங்காலம் பிரவசனங்கள்  பண்ணி,அப்படி அந்த பாகவத சாரத்தை கிரஹிச்சுண்டு, தானும் ஞானம், வைராக்கியத்தோட, உத்தம பக்தியோட வாழ்ந்ததுனால, இந்த நாராயணீயத்தை படிக்கும் போது, எவ்ளோ தூரம் அந்த நாராயண பட்டத்ரி அந்த பாகவதத்தை கொண்டு வந்துருக்கார் நாராயணீயத்துல, அப்படிங்கிறத enjoy பண்ணி, அதை தான் மட்டும் அனுபவிக்கறதில்லாம,அந்த படிக்கற விதத்துலயே, அத புரியரா மாதிரி படிப்பார்.

ஒரு 50 ஸ்லோகங்கள் பகவாதத்துல சொன்ன விஷயத்தை, அதோட சாரமான கருத்தை நாராணீயத்துல சொல்லியிருந்தானா,  ஸ்வாமிகள் அங்க ஸ்ட்ரெஸ் பண்ணி, இல்ல ஒரு சிரிச்சு, ஒரு குதூஹலிச்சு, அந்த சாரத்தை கொண்டு வந்துருக்கார் பாரு !!!.. அப்படினு புரியறா மாதிரி படிப்பார்.

இன்னுமொன்னு, ஸ்ரீமன் நாராயணீயங்கிறது, almost எல்லா தசகங்கள்ல என்னோட வியாதி போணும்னு வேண்டிண்டு இருக்கார், அப்படிங்கறது இருந்தாலும், இந்த நாராயணீயத்தோட முக்கிய கருத்து, பாகவதத்துல சொன்னா போலயே,பக்தி மூலமா ஞானம், வைராக்கியம் அப்படிங்கறத ஸ்வாமிகள் எடுத்து சொல்வார். ஸ்ரீமத் பாகவதத்தை, மஹாபெரியவா, அவ்ளோ உத்தம சந்யாசி, உட்கார்ந்து ஸ்வாமிகள்ட்ட கேட்டு இருக்கார், அதுக்கு முன்னாடி மாயவரம் பெரியவா கிட்ட கேட்ருக்கான, அந்த பாகவதம், வேதாந்திகளும் விரும்பக்கூடிய ஒரு மஹாபுராணமா இருக்கு. ஏன்னா, ஸ்வாமிகள் சொல்லுவார், இந்த புஸ்தகம் அட்டைல இருந்து அட்டை, அதாவது beginning to end, கிருஷ்ண பக்தியாம், அதே நேரத்துல materialistய ஒதுக்கி தள்ளி பேசற ஒரு புஸ்தகம், அது புரிஞ்சுக்கலைனா பாகவதம்  படிச்சு பிரயோஜனம் இல்லைனு சொல்லுவார். …..

அந்த பக்தி, ,ஞானத்தை,பட்டத்ரி அவருடைய 1000 ஸ்லோகங்கள்ள கொண்டு வந்துஇருக்கார். அத ஸ்வாமிகள் ரொம்ப உணர்ந்து, வாழ்ந்ததுனால,அவர் படிக்கும் போது, தனியான ஒரு பக்தி ரசத்தோட அவருடைய  நாராயணீயம் பாராயணம் இருக்கும்.இதுக்கெல்லாம் மேல,அவருக்கு ஒரு தனியான ஒரு melody இருந்தது, இந்த ராமாயணம்,பாகவதம் என்ற தேன்… அவருக்குள்ள நிரம்பி இருந்தது !அதுக்கெல்லாம் மேல அவர் ரகசியமா, அம்பாளுடைய உபாசனை வாழ்க்கை முழுக்க பண்ணிருக்கார். மூகபஞ்சஶதீய 10 வயசுல இருந்து, கடைசி நாள் வரைக்கும் படிச்சுருக்கார், அந்த மூகபஞ்சஶதீல 500 ஸ்லோகத்துல ஒரு 200 ஸ்லோகத்துலயாவது, தேன் போல வாக்கு வரும்னு இருக்கு. காமாக்ஷினுடைய அனுகிரஹத்துனால, தனி தேன் போல வாக்கும் இருக்கறதுனால, அவர் நாராயணீயம் படிச்சு, கேட்கறது நம்ப பாக்கியம். நாராயணீயம் வேற எப்படியாவது படிச்சு தெரிஞ்சுண்டு இருந்தா கூட, ஸ்வாமிகளோட இந்த casetteஅ வச்சுண்டு, அவருடைய அந்த பக்தி பாவத்தையும்,அக்ஷர ஷுத்ததையும்,அர்தானுஸந்தானத்தையும், எல்லாம் நம்ம தெரிஞ்சுண்டு, இந்த நாராயணீயத்தை நம்ம படிச்சோம்னா,நமக்கு பெரிய லாபமா இருக்கும்……

“பரமானந்த³ஸந்தோ³ஹலக்ஷ்மீம் ”

அப்படினு மோக்ஷத்தையும் கொடுக்கும், ஆயுள் ஆரோக்ய சௌகயத்தையும் கொடுக்கும். அது அப்புறம், கை மேல கண்ட பலன், இந்த மாதிரி அநுபவிச்சு படிச்சா, ரொம்ப ஆத்ம திருப்தியும் கொடுக்கும். அதுக்காக, ஸ்வாமிகளுடைய நாராணீயத்தை கேட்போம், படிச்சுப்போம்…நாமளும்  பாராயணம் பண்ணுவோம்.

योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो
हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम्

“யோகீ³ந்த்³ராணாம்ʼ த்வத³ங்கே³ஷு அதி⁴கஸுமது⁴ரம்ʼ முக்திபா⁴ஜாம்ʼ நிவாஸ:

ப⁴க்தானாம்ʼ காமவர்ஷத்³யுதருகிஸலயம்ʼ நாத² தே பாத³மூலம்.

நித்யம்ʼ சித்தஸ்தி²தம்ʼ மே பவனபுரபதே க்ருʼஷணா காருண்யஸிந்தோ⁴!”க்ருʼஷண காருண்யஸிந்தோ⁴!”

“பவனபுரபதே க்ருʼஷணா காருண்யஸிந்தோ⁴!”

ஹ்ருʼத்வா நி꞉ஶேஷதாபான்ப்ரதி³ஶது பரமானந்த³ஸந்தோ³ஹலக்ஷ்மீம் ”

கோபிகா ஜீவன ஸ்மரணம். ..கோவிந்த! கோவிந்த !

13 replies on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாராயணீயம் Govinda Damodara Swamigal Narayaneeyam”

Anna, had always wanted to learn narayaneeyam.. I know it is elaborate.. And today being a guru varam, this post is a coincidence blessing my thoughts of learning narayaneeyam 🙏

Namaskaram. Many thanks for giving information about Sri Swamigal’s Narayaneeyam recitation.

நன்றி. கேற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் Introவே இவ்வளவு நன்றாக இருந்தால், தங்கள் குருநாதருடைய சொற்பொழிவை கேட்கவேண்டுமா?

I enjoy all your posts. Thank you so much for taking the effort in providing the meanings for Mooka Pancha Shathi, Narayaneeyam and other slokas.

🙏 Namaskarams. This is a treasure.
Sri Swamigal’s pronunciation, vividly clear.
As you mentioned one can take down the lyrics with correct spelling.
Sri Swamigal has blessed through these youtube tapes. Will listen to all the Dashakams. Thank you for sharing this precious treasure 🙏

Both Swamigal’s divine voice (the YouTube links and mediafire posts; if one listens to them it is pure bliss), your observations (in this page), and your own audio recordings (+ book) the way Swamigal did parayanam, are a treasure for all . Everyone must read this page, thank you for directing me to it today 🙏🙏🙏

Always look forward to your explanation of mooka pancha sathi and other slokams.Now adays I make it a point to concentrate on the akshara suddhi. After understanding the meaning you enjoy chanting.Athma santhosham agaradhu .Namadkaram.

>> ஒரு அம்மா தன்னுடைய குழந்தைய கொஞ்சும் போது நேரம் பார்ப்பாளா ? << What a beautiful sentiment 🙏🙏🙏

Adiyen excellent. No words to express his Bhakti. So blessed to hear this bold voice. Radhe Krishna

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.