ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி


ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி(25 min audio in tamizh on hanumat prabhavam)

Series Navigation<< ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதிஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி >>
Share

Comments (1)

 • Sowmya Subramanian

  மிக அருமையான விளக்கம். அற்புதமான மேற்கோள்கள் மற்றும் ஒப்புமைகள்.👌🙏🌸

  ஸுக்ரீவனுக்கு ஹனுமார் ராம காரியத்தை நினைவூட்டும் போது, அதற்கு ஸ்வாமிகள் சொன்ன விளக்கமும் திருக்குறள் மேற்கோளும் அருமை.🙏🌸

  ஒரு குருவானவர் ஜீவனை பகவானுடன் சேர்த்து வைக்க பகவானின் ஒப்புதல் வேண்டும் என்பதை ராமர் ஹனுமாருக்கு மோதிரத்தை கொடுத்ததின் மூலம் ஒப்புமையாக சொன்னது மற்றும் ஹனுமார் ‘ராமர் கையில் தான் ஒரு பாணம் மாதிரிதான்’ என்பதற்கு பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ‘நீ என் கையில் ஒரு கருவிதான்’ என்ற ஒப்புமையும் அற்புதம்.🙏🌸

  மஹாபெரியவா, “ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு வந்த விக்னம் மாதிரி எங்கேயும் பார்க்க முடியாது! அத்தனை விக்னத்தையும் தவிடு பொடியாக்கியவர்! மைநாகமலை கொஞ்சம் தங்கி ரெஸ்ட் எடுத்துக் கொண்டுவிட்டு போக சொன்ன போது, ‘முதலில் ராம கார்யம் முடியட்டும்.’ என்று மேலே போய்விட்டார்– ராமஸரம் மாதிரியே வைத்த குறி தப்பாமல்!” என்கிறார். “ஸுரஸை இவரை முழுங்கப் பெரிசாக வாயைத் திறந்தால், இவர் கொசு மாத்ரமாகி வாய்க்குள் புகுந்து காதால் வெளியே வந்துவிடுகிறார்! அவளை அவர் சண்டை போட்டு வதைக்கமுடியும். ‘ஆனாலும் அத்தனை நாழி ஸ்வாமி கார்யம் ‘டிலே’ ஆகலாமா?’ என்று கார்யத்தில் அத்தனை கண்” என்று ஸ்லாகிக்கிறார்.🙏🌸

  ‘மநோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்’ என்பதற்கேற்ப மனோ வேகம் வாயு வேகமாக, விக்னங்களை எல்லாம் தகர்த்து இலங்கையை அடைந்த ராமதூதனான ஹனுமாரை வணங்குகிறேன். ‘ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி’.🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.