ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி


ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி(20 min audio in tamizh on hanumat prabhavam)

Series Navigation<< ஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதிஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி >>
Share

Comments (1)

 • Sowmya Subramanian

  ஹனுமார் சீதையைப் பார்த்தல், சீதாதேவி ஹனுமாருடைய ஸம்பாஷனை – இவை இரண்டும் எப்போது நடக்கும் என்று எல்லாருமே எதிர்பார்க்கும் ஒரு கட்டம். நடுநடுவே ஸ்வாமிகள் சொன்ன விளக்கங்களோடு கூடிய ஹனுமார் சீதாதேவியின் சந்திப்பு வர்ணனை மிக அற்புதம்.👌🙏🌸

  குருவானவர் பண்ணும் முக்கியமான காரியத்தை ‘ஒரு பறவையானது திரும்பத் திரும்ப உத்தமமான வாக்கியங்களை சொல்லிற்று’ என்ற சூசனை அருமை.

  ஸ்வாமிகளின் ஒப்புமைகள் “நாம பெரியவா பக்தர்கள். 24 carat gold இருக்கும்போது என்ன கவலை” , “எங்கே மனம் சாந்தி அடைகிறதோ அது ஸத்சங்கம்” மற்றும் “துக்கத்தின் எல்லையில் இருக்கும் போதும் ஸுகத்தின் எல்லையில் இருக்கும் போதும் ‘கோவிந்த தாமோதர மாதவேதி’” – அதி அற்புதம் 🙏🙏🙏🙏

  ராமர் ஹனுமாருக்கு ‘சொல்லின் செல்வன்’ என்ற பட்டம் கொடுத்ததற்கு ஏற்ப சீதையிடம் எப்படி பேசலாம் என்று ஆலோசித்து பேசுவதிலும் அவருடைய சொல்லாற்றலும் புத்திக்கூர்மையம் மிக அழகாக வெளிப்படுகிறது.🙏🌸

  மஹாபெரியவாளும், ‘ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்’ என்பதற்கு அர்த்தம் சொல்லும் போது, “மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர். அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகியிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்சநேய ஸ்வாமி ‘புத்திமதாம் வரிஷ்ட’ராயிருக்கிறார்.

  ‘வரிஷ்ட’ – சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக ‘கம்பேர்’ பண்ணக்கூட இன்னொன்று இல்லை. ‘புத்திமாதம் வரிஷ்ட’ – இவர்தான் புத்திக்கு ‘ஸூபர்லேடிவ்’, புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத் தான் வைக்கணும்.” என்கிறார். 🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.