Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 55)

சிவானந்தலஹரில அடுத்த ஸ்லோகம் 55வது ஸ்லோகம்.

ஆச்சார்யாள் பரமேஸ்வரனோட தாண்டவத்தை எல்லாத்துலயும், மயிலையும் மேகத்திலும் பாத்துண்டே வந்தவர், நேராக அந்த தாண்டவத்தை ஏதோ ஒரு ரூபத்தில், ஒரு  cosmicஆ தர்சனம் பண்ணி, அந்த ஒரு பேரானந்தத்தில், அந்த ஶம்புனுடைய  ஒரு தாண்டவம்ங்கறது,  ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரஹம் எல்லாத்தையும் பண்றது அப்படிங்கறதை ஒரு ஸ்லோகத்தில் சொல்றார்.

आद्याय, अमिततेजसे, श्रुतिपदैर्वेद्याय, साध्याय ते,

विद्यानन्दमयात्मने, त्रिजगतः संरक्षणोद्योगिने ।

ध्येयायाखिलयोगिभिः, सुरगणैर्गेयाय, मायाविने,

सम्यक्ताण्डवसम्भ्रमाय, जटिने, सेयं नतिः शम्भवे ॥

ஆத்³யாயாமிததேஜஸே ஶ்ருதிபதை³ர்வேத்³யாய ஸாத்⁴யாய தே
வித்³யானந்த³மயாத்மனே த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³னே |
த்⁴யேயாயாகி²லயோகி³பி⁴꞉ ஸுரக³ணைர்கே³யாய மாயாவினே
ஸம்யக்தாண்ட³வஸம்ப்⁴ரமாய ஜடினே ஸேயம்ʼ நதி꞉ ஶம்ப⁴வே ||

ஶம்புனு கூப்படறார்.

ஶம்புங்கறது ஆனந்தத்தினுடைய மூலம். அந்த ‘ஶம்பு’.,

‘ஸம்யக்தாண்ட³வஸம்ப்⁴ரமாய’ – ரொம்ப அழகான ஒரு உற்சாகமான ஒரு தாண்டவம் ஆடறார். அந்த தாண்டவத்தை பார்த்து உமக்கு நமஸ்காரம் அப்படினு சொல்றார்.

‘ஆத்³யாய’ – உலக தோற்றத்துக்கெல்லாம் முன்னாடி, ஆதியான வஸ்து எல்லாத்துக்கும் ஆதியானவர். அதனால், உலகத்தையே ஸ்ருஷ்டி பண்ணவரே அவர் தான்.

‘அமிததேஜஸே’ அவருடைய அளவு கடந்த அந்த தேஜஸ் தான், அம்பாளோட சேர்ந்து இந்த உலகமாக வெளிப்படறது.

‘ஶ்ருதிபதை³: வேத்³யாய’ – வேத வாக்கியங்களால் அறியப்படுபவர்.

‘ஸாத்⁴யாய’ – அந்த வேத வாக்கியங்கள் மூலம் அடையப்படுபவர். வேதத்து மூலமாக தான் ஒரு ரூபமாகவோ, ஒரு லிங்கத்திலயோ, அந்த சக்தியை ரிஷிகள் கொண்டு  வந்து அது மூலமாக நாமெல்லாம்  கூட தர்சனம்  பண்ண முடிகிறது.

‘வித்³யானந்த³மயாத்மனே’ – எல்லா அறிவும் ஆனந்தமும் ஒரே வடிவமாக அமைந்து இருப்பவர்.

सान्द्रानन्दावबोधात्मकं, अनुपमितं, कालदेशावधिभ्यां,

निर्मुक्तं नित्यमुक्तं, निगमशतसहस्रेण, निर्भास्यमानम् ।

अस्पष्टं, दृष्टमात्रे पुन:, उरुपुरुषार्थात्मकं, ब्रह्म तत्वं,

तत्तावत्, भाति साक्षात्, गुरुपवनपुरे, हन्त, भाग्यं जनानाम् ॥

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ, காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ, நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,  த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,
தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு. நான் அதை சொல்றேன் அப்புறம்.

‘த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³னே’ – மூவுலகங்களையும் ரக்ஷணம் பண்ணுவதில் ஊக்கம் கொண்டவர். முதலில் தன்னுடைய அமிததேஜஸினால் ஸ்ருஷ்டி பண்ணிணார். அடுத்தது, ஸம்ரக்ஷணம் பண்றார்.

‘அகி²லயோகி³பி⁴꞉த்⁴யேயாயா’ – எல்லா யோகிகளாலும் த்யானம் பண்ணப்படுபவர்.

‘ஸுரக³ணை:கே³யாய’ – தேவர்களால் போற்றப்படுபவர்.

‘மாயாவினே’ – மாயையை தன் வசத்தில் கொண்டவர்.

யோகிகள் எதற்காக ஸ்வாமி த்யானம் பண்றா?

லயம் அடைவதற்காக. அப்படி ஒவ்வொரு ஜீவனும், பரப்ரஹ்மத்தில் லயம் அடைவதும் ஒரு விதமான ஸம்ஹாரம்.

அந்த ஸம்ஹாரம் அவர் மாயையை தன் வசம்படுத்தி, அனுக்கிரஹம் பண்றதுனால, நமக்கு அந்த அனுக்கிரஹம் கிடைக்கிறது.

‘ஸம்யக்தாண்ட³வஸம்ப்⁴ரமாய’ அப்படி உற்சாகமான தாண்டவம் ஆடும்

‘ஜடினே’ – ஜடை. அவருடைய ஜடை அந்த  பறக்கிறது தான் அந்த  நடராஜாவில்  ஒரு தனி அழகு

‘ஶம்ப⁴வே தே  ஸா  இயம்  நதி꞉’ மங்கள ஸ்வரூபியான ஹே பரமேஸ்வரா ! உமக்கு இந்த நமஸ்காரம். அப்படினு சொல்றார்.

மூக கவி கூட நிறைய  இந்த மாதிரி ஸ்துதி பண்ணின்டே வரும் பொழுது, அவாளுக்கு ஒரு க்ஷணத்தில், இது என்ன சொல்லி  முடியும்! எல்லாமே இந்த அம்பாள் தானே! அப்படினு மூக கவிக்கு தோன்றது.அந்த மாதிரி எல்லாமே ஸ்வாமி தானே! அந்த மாதிரி இந்த ஒரு ஸ்லோகம். மூக கவி எப்படி சொல்லுவார்னா.

चराचरजगन्मयीं, सकलहृन्मयीं चिन्मयीं,
गुणत्रयमयीं जगत्त्रयमयीं, त्रिधामामयीम् ।
परापरमयीं, सदा, दशदिशां, निशाहर्मयीं,
परां सततसन्मयीं, मनसि चिन्मयीं शीलये ॥

சராசரஜக³ன்மயீம்ʼ ஸகலஹ்ருʼன்மயீம்ʼ சின்மயீம்ʼ

கு³ணத்ரயமயீம்ʼ ஜக³த்த்ரயமயீம்ʼ த்ரிதா⁴மாமயீம் .

பராபரமயீம்ʼ ஸதா³ த³ஶதி³ஶாம்ʼ நிஶாஹர்மயீம்ʼ

பராம்ʼ ஸததஸன்மயீம்ʼ மனஸி சின்மயீம்ʼ ஶீலயே

அப்படினு எல்லாமே நீ தான், அம்மா அப்படினு சொல்றார்.

அதே மாதிரி, முதல் ஸ்லோகத்தில் நாராயணீயத்தில், நாராயண பட்டத்ரி,

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ

அப்படினு ஆரம்பிக்கிறார்.

இங்க ‘வித்³யானந்த³மயாத்மனே’ அப்படினு ஆச்சார்யாள் சொல்றா மாதிரி,

‘ஆனந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ

ஆனந்தமும் போதமும் சேர்ந்து ஒரு பரிபூர்ணமா ஒண்ணுக்கு மேல ஒண்ணு, அந்த ஆனந்தமும் அந்த  ஞானமும் சேர்ந்து ஒரு உருவம் எடுத்ததுனா எப்படி இருக்கும்? அந்த

‘ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ

‘ அனுபமிதம்’ இதுக்கு ஒரு உபமானமே சொல்ல முடியாது.

‘காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,நிர்முக்தம்’ –  எல்லாம் காலம் தேசம் என்கிற பந்தங்களில் இருந்து விடுபட்டதும்,

‘ நித்யமுக்தம்’ – எப்போதுமே பந்தமே இல்லாமல் இருப்பதும்

‘நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம்’ –  எத்தனையோ ரிஷிகள் எத்தனையோ நிகமங்கள்

‘ஶதஸஹஸ்ரேண’ அப்படினு சொல்றார். அப்படினு ஒரு count, அதாவது countless scriptures எல்லாம் சேர்ந்து பேசினா கூட

‘நிர்பா⁴ஸ்யமானம்’ –  இப்படி என்று விளக்க முடியாத அந்த பரப்ரஹ்மம்

‘அஸ்பஷ்டம்ʼ, த்³ருʼஷ்டமாத்ரே புன:’ அது ‘அஸ்பஷ்டம்’ விளக்க முடியாதது, ப்ரஹ்ம தத்வம் அது.

‘உருபுருஷார்தா²த்மகம்’

புருஷார்த்தம் நான்கு. அதில் மேலான புருஷார்த்தம் மோக்ஷம். அந்த மோக்ஷம் அடைந்தவர்களால் உணர மட்டும் படுவது. அதால பேசி ‘கண்டவர் விண்டிலர்’ அந்த மாதிரி பேசி புரிய வைக்க முடியாத அந்த பரப்ரஹ்ம தத்துவம்,

‘தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ‘ –  தர்சனம் பண்ண மாத்திரத்தில், அந்த பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தை அளிக்ககூடிய அந்த பரம் பொருள், குருவாயூரில் நேரில் பார்க்கும் படியாக, எல்லா ஜனங்களுக்கும் கண்ணுக்கு தெரியும் படியாக, எல்லாருடைய பாக்கியமாக, ஒரு அழகான குழந்தை வடிவம் எடுத்து பிரகாசிக்கிறதே!

‘ஹந்த, பா⁴க்³யம் ஜனானாம்’ – அஹோ பாக்கியம்

எல்லாருக்கும் எவ்ளோ பெரிய பாக்கியம், என்ன ஆஸ்ச்சர்யம்.

‘ஹந்த’ னா ஆஸ்ச்சர்யத்தை குறிக்கறது, வியக்கறார் பட்டத்ரி.

இந்த ஆச்சார்யாள் 55வது ஸ்லோகத்தில், சகல ஜகத்  ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் பண்ணின்டு, யோகிகளுக்கு  அனுகிரஹமும் பண்ணின்டு, மத்தவாளுக்கு எல்லாம் தேவாதி கடைசி ஜந்து வரைக்கும், எல்லாரையும்  யான் எனது என்று கூத்தாட வைக்கிற ஒரு மாயையும் பண்ணின்டு இதை எல்லாத்தையும் பண்ற, அந்த பரமேஸ்வரன், ஆனந்த தாண்டவம் ஆடுகிற ஆனந்த தாண்டவத்தில் இதை எல்லாத்தையும் அவர் பார்க்கிறார். எப்படி காமாட்சிங்கிற வடிவத்தில் மூக கவி பார்க்கிறாரோ, எப்படி குருவாயூரப்பன் அப்படிங்கிற குழந்தை கிட்ட பட்டத்ரி பார்க்கிறாரோ, அந்த மாதிரி ஆச்சார்யாள் அந்த சிவனுடைய தாண்டவத்தில், அந்த ஒரு தரிசனம் கிடைக்கறது அவருக்கு. அதை  ரொம்ப வியந்து சொல்றார். அந்த ஒரு சந்தோஷம் வெளிப்படறது. இதுக்கு நான் என்ன பண்ண முடியும்? உனக்கு ஒரு நமஸ்காரம் தான் பண்ண முடியும் பரமேஸ்வரா, அப்படினு சொல்றார். எப்படி அந்த தர்சனம் மாத்திரத்தில் ஞானம்  ஏற்படும்ங்கிறது, அதை நமக்கு   வார்த்தையினால் விளக்க முடியாது. அதனால் தான் ‘தர்ஷனாத் ..’

அப்படினு சிதம்பரம் போய் அந்த நடராஜாவை தர்சனம் பண்ண மாத்திரத்தில் முக்தி அப்படினு சொல்லியிருக்கா. காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாச்சலத்தை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தில் அந்த நடராஜாவை தர்சனம் பண்ணா முக்தி, அப்படினு அவ்ளோ பெருமை கொடுத்து சொல்லியிருக்கா. அதனால் தான் ஒவ்வொரு க்ஷேத்ரத்தலையும், நம்ப மயிலாபுரிலயும், திருவொற்றியூரிலயும் , திருவான்மியூரிலயும் எல்லா சிவன் கோவிலையும், அந்த நடராஜாவை ரொம்ப முக்கியமா எல்லாரும் தர்சனம் பண்ணனும், அப்படினு  அந்த நடராஜ மூர்த்தியை, எல்லா கோவில்களையும் பண்ணி வச்சியிருக்கா. நம்ம தேசத்தில் கூட, நம்ப தேசத்துடைய  பண்பாடு, கலை அதுக்கு ஒரு ஞாபகார்த்தம், யாருக்கு   உலகத்திலிருந்து  வந்த யாருக்கு ஒரு பரிசா கொடுக்கறதுனாலும் அந்த நடராஜாவைத்தான் கொடுக்கறா. தத்துவத்தை பத்தி நிறைய புஸ்தகம் படிக்கலாம். ஆனால்,அதை பார்த்து நாமளும், இந்த  ஆச்சார்யாள் என்ன தர்சனம் பண்ணாரோ, நம்மளும் அந்த தர்சனத்தை ஒரு நாள் பண்ணனும், குஞ்சித பாதத்து கிட்ட பிரார்த்தனை பண்ணி நமஸ்காரம் பண்ணுவோம்.

ஆத்³யாயாமிததேஜஸே ஶ்ருதிபதை³ர்வேத்³யாய ஸாத்⁴யாய தே

வித்³யானந்த³மயாத்மனே த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³னே .

த்⁴யேயாயாகி²லயோகி³பி⁴꞉ ஸுரக³ணை:கே³யாய மாயாவினே

ஸம்யக்தாண்ட³வஸம்ப்⁴ரமாய ஜடினே ஸேயம்ʼ நதி꞉ ஶம்ப⁴வே

நம: பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ!

Series Navigation<< சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 56வது ஸ்லோகம் பொருளுரை >>

4 replies on “சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை”

போன ஸ்லோகத்தில் ஆசார்யாள் பரமேஸ்வரன் மயிலாக ஆடும் உஜ்ஜ்வல தாண்டவத்தை நம் கண் முன்னே கொண்டு வந்தார். இந்த ஸ்லோகத்திலும் சிவபெருமான் ஜடாமுடியுடன் தாண்டவம் ஆடுவதை வர்ணிக்கிறார். கூடவே அவருடைய தன்மையையும் ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்றும் அழகாக விவரிக்கிறார்.

அற்புதமான விளக்கம். இந்த ஸ்தோத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கும் நாராயணீய ஸ்லோக மேற்கொள் அதி அற்புதம். மூக பஞ்ச சதி மேற்கோளும் மிக அருமை 👌🙏🌸

தாயுமானவ ஸ்வாமிகளும்,
“அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி

அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந்

தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில்

தட்டாமல் நின்றதெது” என்கிறார்.

மஹா பெரியவா தாண்டவத்தை பற்றி விளக்கும் போது, “மகான்கள் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் முழுவதையும் பரமேசுவரனின் நாட்டியமாகவே பார்க்கிறார்கள். அதுதான் நடராஜனின் நடனம். ஆடிக்கொண்டிருக்கிற நடராஜனிடமிருந்துதான் சகல சப்தங்களும் பிறக்கின்றன. நடராஜா வெகு வேகமாக நர்த்தம் பண்ணுகிறார். ஆடி நிறுத்துகிற சமயத்துக்கு முந்தி ஜடை விழுதுகள் பாக்கவாட்டில் இருபுறமும் நீட்டி நிற்கின்றன. சலனத்தில் உள்ள வஸ்துவை இந்தக் காலத்தில் ‘ஸ்நாப் ஷாட்’ என்று போட்டோ பிடிக்கிறார்கள் அல்லவா? அதுபோல் இந்த ஜடை இருபுறமும் நீட்டிக்கொண்டிருக்கும் அவசரத்தைத் தெய்வச் சிற்பி அப்படியே நடராஜ விக்கிரகமாகப் பண்ணி விட்டார். இது நம் கண்ணுக்குத் தெரிகிற நடராஜ மூர்த்தியின் ஸ்வரூபம்.”🙏🌺

Only if a person is lucky, because of Poorva Punyam, that person will get opportunity to witness Nataraja Abhishekam done 6 times a year, perhaps corresponding to the Six Rthus. Vasantha, Greeshma, Varsha,Sarath, Hemantha and Sisira. They are observed in this order. Chirai-Thiruvonam, Ani- Uhram,Avani_Sukal Chathurdasi, Purattasi-Sukla Chathurdasi, Margazhu- Arudra(Thiruvadhirai) and Masi-Sukla Chathurdasi. Abhishekam based on Nakshatram is done in the mornings and that of Thithi in the evenings. Deivathin Kural says ” only 2 Nakshatrams have suffix Thiru in Tamil viz; Thiruvadhirai for Sivan and Thiruvonam for Vishnu. And the Presiding Deity is Nataraja and Rangaraja respectively. Both Rajas. Just felt like sharing thoughts.

I was blessed to be in Chidambaram for more than 15 yrs. Every year I used to have darshan of Shri Nataraja during Thiruvadhirai Abhishekam in the early mor. Hundreds of குடம் abishekam would be performed !!
கண்கொள்ளாக் காட்சி!
We will be in front row from 1 am till 5am. Once done we will be back home Todo Thiruvadhirai nonbu!
Unforgettable days!
ஸ்வாமி ரத்ன சபைக்கு நடனமாடி வருவது இன்னும் மனதில் நிற்கிறது!!
சிவானந்த லஹரி என்பது பக்தியின் சிகரம் ! ஆசார்யாள் பல விதமாக ஈசனைத் துதி செய்கிறார்!
இந்த ஸ்தோத்திரமானது
அழகான நடனம் எப்படி விசேஷமாக சிவனால்செய்யப்படுகிறது என்பதை விளக்குகிறது!
ஸ்ருஷ்டி க்கும் முன்பே இருக்கிறவரும், அழிவற்ற தேஜாஸ் ரூபமானவரும், வேதங்களால் அறியப் பெற்றவரும் ,பலவிதமாகப் பக்தர்களால் போற்றத்தகுந்தவரும், மூன்று உலகங்களையும் ரக்ஷிப்பவரும், சித் ஆனந்த ஸ்வரூபியும், தேவர்களால் துதிக்கப் பெற்றவரும் ஆன நர்த்தன மூர்த்தியும் ஆன பரமேஸ்வரனுக்கு என் வந்தனங்கள் சேர்வதாக ! என மெய்.புலகாங்கதம் அடைந்து வர்ணிக்கிறார் ஆசார்யாள்!
நாராயணீயம் முதல் ஸ்லோகத்தை எடுத்துக்காட்டாக இங்கு கூறியது என்ன பொருத்தம்!!
மூகரும் பலவிடங்களில் இதே கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !
தெய்வ உரு மாறினாலும், எல்லா தேவங்களும் ஒரே சக்தியை.கொண்டவைதான் என்பது இதனால் வலியுறுத்த படுகிறது!!
கணபதி இதனை விளக்கும்போது குரலில் நெகிழ்ச்சி தெரிகிறது! ஆழ்ந்த பக்தி வெளிப்பாடு இது !!
ஜய ஜய சங்கரா…
ஜெய ஜெய ஜெதம்ப சிவே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.