Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 59வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 59வது ஸ்லோகம் பொருளுரை(9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 59)

हंसः पद्मवनं समिच्छति यथा नीलाम्बुदं चातकः
कोकः कोकनदप्रियं प्रतिदिनं चन्द्रं चकोरस्तथा ।
चेतो वाञ्छति मामकं पशुपते चिन्मार्गमृग्यं विभो
गौरीनाथ भवत्पदाब्जयुगलं कैवल्यसौख्यप्रदम् ॥

சிவானந்த லஹரியில முந்தைய ஸ்லோகத்துல, ‘ஹே பரமேஸ்வரா! ஒரு சூரியனே  இருட்டெல்லாம்  பிளந்துண்டு கண் முன்னே வந்து காட்சி கொடுக்கறானே, நீ கோடி சூரிய பிரகாசம், எனக்கு ஏன் தரிசனம் தரமாட்டங்கறே? என்னுடைய அறியாமை அவ்வளவு அடர்ந்ததா இருக்கா?  பிரபோ,ஹே பசுபதே! என் கண் முன்னாடி நீங்கள் தோன்ற வேண்டும், அப்படின்னு ஒரு பிரார்த்தனை.

இந்த அறியாமையைப் போக்கிக்கறத்துக்கு, ஞானமார்கத்துல அஷ்டாங்க யோகம் பலவழிகள் இருக்கு. ஆச்சார்யாளே சந்நியாசிகளுக்கு அந்த மார்க்கங்கள் எல்லாம் சொல்லித்தறார். ஆனால் இங்க பக்தி மார்க்கத்துல, அதே கைவல்ய சௌக்யத்தை, மனசை பகவான்கிட்ட ஒப்படைச்சு, யாரா வேணா இருக்கலாம், எதுவா வேணா இருக்கலாம், ஆனா மனசை பகவான் கிட்ட  ஒப்படைச்சா பகவான் அறியாமையைப் போக்கி ஞான தீபத்தை ஏற்றி அந்தப் பேரானந்தத்தை கொடுப்பார், அப்படிங்கற கொள்கையை ஒட்டி அடுத்த மூணு ஸ்லோகங்களில் நிறைய உவமைகளை சொல்லி ,எப்படி மனசு ரொம்ப இயல்பா மனைவி, மக்கள், செல்வம், கிருஹம் இதுல எல்லாம் பின்னாடி போறதோ அந்த மாதிரி மனசு  பரமேஸ்வரனுடைய பாதாரவிந்தத்துல போய் லயிச்சா, அனன்ய பக்தி அப்படின்னு, இந்த உலக விஷயங்களிலிருந்து மனசை எடுத்து அந்த பகவானுடைய பாதத்திலே வைக்கிறது. வேற எதுவுமே எனக்கு வேண்டாம், ஹே பரமேஸ்வரா!  நீதான் வேணும், அப்படின்னு அந்த ஏக்கத்தை ஜாஸ்தி பண்ணிண்டு, உலக பாசத்தை தெய்வ பாசமா மாத்தினா பகவானுடைய அருள் கிடைக்கும். அத அழகழகான உவமைகளை சொல்லி, சொல்றார்.

ஆச்சார்யாள், ரொம்ப இயற்கையோட வனங்கள்லயும் மலைகள்லயும் வாழ்ந்து இருக்கார்னு தெரியறது.  தபஸ் பண்ணிண்டு இருந்திருக்கார்..  அதனால அந்த வாக்குல ரொம்ப அழகான உவமைகள். ரொம்ப crudeஆ காமினி காஞ்சனதத்திலேர்ந்து மனசை எடுக்கணும்,அப்படின்னு சொல்லாம, அதையே ரொம்ப அழகழகான உவமைகள் சொல்றார்.

இந்த 59 ஆவது ஸ்லோகத்துல
ஹம்ʼஸ꞉ பத்³மவனம்ʼ ஸமிச்ச²தி யதா² நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉
கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² |
சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ விபோ⁴
கௌ³ரீநாத² ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ கைவல்யஸௌக்²யப்ரத³ம் || 59 ||

ஒரு நாலு பறவைகளுடைய உதாரணத்தை சொல்றார்,

ஹம்ஸ: பத்மவனம் ஸ மிச்சதி – ஹம்சமானது தாமரை காட்டை மிகவும் விரும்புகிறது. எப்பவுமே ஹம்சங்கள் தாமரைத் தண்டை சாப்பிடும், தாமரைக்கு பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படும். தாமரை இருந்தா ஹம்சம் இருக்கும், ஹம்சம் இருந்தா தாமரை இருக்கும்.

நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉ –  சாதக பக்ஷின்னு ஒண்ணு இருக்கு, அதுக்கு கழுத்துல ஓட்டை இருக்கும், அதனால பூமியிலிருந்து ஜலத்தை குளத்திலிருந்தோ, பாத்திரத்திலிருந்தோ குடிக்க முடியாது, மழைநீர் மேகத்திலிருந்து கொட்டும்போதுதான் “ஆ“ன்னு வாய காமிச்சுண்டு குடிக்கும். அப்படி எப்படி ஒரு, “சாதக:  நீலாம்பு³த³ம் ஸமிச்சதி”, சாதக பக்ஷியானது கார்மேகத்தை எப்படி  வேண்டுகிறதோ

கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ – சக்கரவாகப் பக்ஷின்னு ஒண்ணு, அது தபஸ் பண்றவாள, இந்த சக்கரவாக பக்ஷிகள்  ஏதோ தபச கலச்சதாகவும், அதனால முனிவர்கள், சக்கரவாகப்பக்ஷி, அது காதலர்கள் மாதிரி, ஆனா அதுக்கு முனிவர்கள் சாபம். ராத்திரியெல்லாம் நீங்க பிரிஞ்சு இருப்பேள் சேர முடியாது. அதுனால எப்படா சூரியன் வரும்னு காத்துண்டே இருக்குமாம்,

கோகனத ப்ரிய: – அப்படின்னா தாமரைக்கு பிரியமான சூரியன், கோக: அப்படிங்கறது சக்கரவாக பக்ஷி, கோக்கனத பிரியம் ஸ மிச்சதி,அந்த சூரியனின் வரவை மிகவும் விரும்புகிறது. இந்த சக்கரவாகப் பக்ஷி தம்பதிகள்  பிரிந்திருந்து ராத்திரியில, அப்புறம் பகல் வந்த உடனே அந்த பக்ஷி தம்பதிகள்  சேர்வது அப்படிங்கறது ராமாயணத்திலேயே வரது.

ஹிமஹதநலினீவ நஷ்டஶோபா⁴

வ்யஸனபரம்பரயாநிபீட்³யமானா |
ஸஹசரரஹிதேவ சக்ரவாகீ

ஜனகஸுதா க்ருʼபணாம்ʼ த³ஶாம்ʼ ப்ரபன்னா ||5.16.30||

அப்படின்னு சொல்றார். பனியினால் வாடின தாமரையைப் போலவும், கணவனைப் பிரிந்த சக்ரவாக பக்ஷியை போலவும்,இந்த ஜனக சுதா, ராமரைப் பிரிந்து ரொம்ப வாடிய நிலைல இருக்காள், அப்படின்னு  ஹனுமார் 16வது சர்கத்தில சீதையை குறித்து  வருத்தப்பட்டு புலம்பும்போது சொல்ற ஒரு ஸ்லோகம்.

ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² –  `சகோர பக்ஷி’ அப்படின்னு ஒண்ணு இருக்கு. அது சந்திரன்லேந்து கொட்டுற நிலவத்தான் குடிக்கும், அது வேற எதுவுமே சாப்பிடாது. ‘அந்த மாதிரி அந்த சகோர பக்ஷி எப்படி சந்திரனை விரும்புகிறதோ அப்படி

“சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே” – ஹே பசுபதே, என்னுடைய சித்தமானது

“ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்”  –   உன்னுடைய இரு பாதத் தாமரைகளை “வாஞ்ச²தி” – விரும்புகிறது.

 

கௌரி நாதான்னு கூப்பிடறார் அம்பாளையும் சுவாமியையும் பிரிக்கவே முடியாது அம்பாள் அனுக்கிரகம் இருந்தால்தான் ஸ்வாமிய புரிஞ்சுக்க முடியும்   ஸ்வாமியோட அனுக்கிரகம் கிடைக்கும்
மூகபஞ்சசதீல கூட,

प्रत्यङ्मुख्या दृष्ट्या प्रसाददीपाङ्कुरेण कामाक्ष्याः ।
पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥

ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்ட்யா
ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: ।
பஶ்யாமி நிஸ்துலமஹோ
பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ॥ 77 ॥

அப்படின்னு சொல்றார்.
ப்ரத்ங்முக்யா த்³ருʼஷ்ட்யா – உள் திரும்பின பார்வையினால், உள்முகமாக பார்க்கும்போது

ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: – காமாக்ஷியினுடைய  பிரசாதம் என்ற தீபத்தைக் கொண்டு

பஶ்யாமி –  நான்  பார்க்கிறேன். எதை பார்க்கிறேன்?

பரஶிவோல்லாஸம் –  தன்னிகரற்ற சிவஞானம் என்ற ஒரு பேரானந்தத்தை அனுபவிக்கிறேன். அப்படின்னு சொல்கிறார்.

இந்தப் பறவைகளினுடைய உதாரணத்தில் இருந்து, அனன்ய பக்தி வேணும், வேற எதுவுமே வேண்டாம் உன்னுடைய பாதம் தான் வேணும் அந்தப் பறவைகள் எப்படி உன்னையே நம்பியிருக்கோ,அந்த மாதிரி நான் உன்னுடைய பாதங்களுடைய கருணையே நம்பி இருப்பேன்,

அவையே கைவல்யஸௌக்²யப்ரத³ம்  – எனக்கு எந்த நிர்குண பிரம்மத்தை உணர்ந்து ஞானிகள் அனுபவிக்கிறாளோ, அந்த கைவல்ய சௌக்யத்தை கொடுத்துவிடும்.

சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ – ஞான மார்க்கத்தால் தேடப்படும் அந்தப் பாதங்கள். மூக கவி கூட

जगन्नेदं नेदं परमिति परित्यज्य यतिभिः
कुशाग्रीयस्वान्तैः कुशलधिषणैः शास्त्रसरणौ ।
गवेष्यं कामाक्षि ध्रुवमकृतकानां गिरिसुते
गिरामैदम्पर्यं तव चरणपद्मं विजयते ॥

ஜக³ன்னேத³ம் நேத³ம் பரமிதி பரித்யஜ்ய யதிபி:⁴
குஶாக்³ரீயஸ்வாந்தை: குஶலதி⁴ஷணை: ஶாஸ்த்ரஸரணௌ ।
க³வேஷ்யம் காமாக்ஷி த்⁴ருவமக்ருʼதகாநாம் கி³ரிஸு தே
கி³ராமைத³ம்பர்யம் தவ சரணபத்³மம் விஜயதே ॥ 24 ॥

சன்னியாசிகள், ‘ஜக³ன்னேத³ம் நேத³ம் பரமிதி’ – உலகத்துல கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய் அப்படின்னு எல்லாத்தையும், “ந  இதம், ந  இதம் ”ன்னா –  இது உண்மை அல்ல என்று விலக்கி எதை  உணர்கிறார்கள்?  வேதத்தின் தாத்பரியம் ஆன உன்னுடைய  பாதத் தாமரையைதான் கடைசியில் உணர்கிறார்கள். அதை நான் இப்பவே தரிசனம் பண்ணிட்டேன், அதோட அருளுக்காக நான் காத்திருக்கிறேன், எனக்கு முதல்ல கிடைக்க போறது.

அதே மாதிரி இந்த ஸ்லோகத்தில், உன்னுடைய திருவடித் தாமரைகள் இரண்டையும் என்னுடைய சித்தம், பிரதி தினம் வாஞ்சித்- நாள்தோறும் விரும்புகிறது.’  ஒரு நாள் விடாம அந்த பாதத்தை பஜனம் பண்ணனும். ஸ்வாமிகள் அதான் சொல்வார், constancy வேணும். பஜனம் பண்ணும்போது விடாம பண்ணனும், ஒரு நாளைக்கு நாளெல்லாம் பாராயணம் பண்ணிட்டு அடுத்த நாளைக்கு புத்தகத்தை மூடி வைக்க கூடாது. தினம் விடாம பண்ணனும், அப்படின்னு சொல்லுவார்.

இந்த ஸ்லோகத்தில் இந்த பறவைகளோட உதாரணத்தை சொல்லி, அனன்ய பக்தி, வேற இடத்தில, மனசு வைக்காத , உன்னுடைய பாத்தித்லேயே என்னோட மனசு அசையாம நிக்கணும் அப்படின்னு பிரார்த்தனை.

அடுத்த ஸ்லோகத்தில் ஒரு 7, 8 உதாரணங்கள் சொல்லி எது பயத்தைப் போக்கும், எது சுகத்தை கொடுக்கும். அந்த மாதிரி exampleலாம் சொல்லி, அந்த மாதிரி உதாரணங்கள் சொல்லி, அப்படி உன்னுடைய பாதத் தாமரை என்னுடைய எல்லா பயத்தையும் போக்கி எனக்கு மேலான சுகத்தைக் கொடுக்கணும். அதனால என்னுடைய மனமானது உன்னுடைய பாதத்திலே நிலைச்சு இருக்கணும், அப்படின்னு ஒரு வேண்டுதல். அதற்கு அடுத்தது அங்கோலம் நிஜபீஜம் சந்ததிஹி அது மஹா பெரியவா, ரமணர் எல்லாம் ரொம்ப போற்றி, அந்த பக்திக்கு லட்சணமா, அந்த ஸ்லோகத்தை விஸ்தாரமா பேசி இருக்கா பெரியவா, அதெல்லாம் அடுத்து பார்ப்போம்.

ஹம்ʼஸ꞉ பத்³மவனம்ʼ ஸமிச்ச²தி யதா² நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉
கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² |
சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ விபோ⁴
கௌ³ரீநாத² ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ கைவல்யஸௌக்²யப்ரத³ம் || 59 ||

நம:  பார்வதி பதயே!!!  ஹர ! ஹர ! மஹாதேவா !!!

Series Navigation<< சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை >>

3 replies on “சிவானந்தலஹரி 59வது ஸ்லோகம் பொருளுரை”

உலக பசு பாச பந்தம் அதுவான, உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் மல சல சுவாச சஞ்சலமதாலென் மதி நிலை கெடாமல் உந்தன் அருள் தாராய் என்ற பழனித் திருப்புகழ் இந்த இடத்தில் நினைவு வருகிறது!
பரமேஸ்வரன் பாதத்தில் சரணடைந்த பின் ஏது உறவு!
ஆசார்யாள் பூர்ண சன்யாசி ஆனாலும் பலவி டங்களில் குடும்ப வாழ்க்கை பற்றி, அழகான விளக்கங்கள் அளித்துள்ளார்!
பெரியவா பல சமயங்களில் குடும்ப சண்டை சச்சரவுகள் உள்பட தீர்வு சொல்லியிருக்கிறார்!
அற்புதமான ஒலி ப் பதிவு ! Thanks to Ganapathy!

நம்முடைய மனது சுலபமாக இயற்கையிடம் லயிக்கிறது. ஆச்சாரியாள் இயற்கையில் நடப்பதைக் கொண்டே நமக்கு பக்தியை எளிதாக ஊட்டுகிறார் சிவானந்தலஹரியில். 

இந்த அழகான ஸ்லோகத்தில் பறவைகள் எதை நாடுகிறது என்று காட்டி நம் மனது எதை நாட வேண்டும் என்று அழகாக சொல்லித் தருகிறார் ஆச்சாரியாள்.

ஞானத்தினால் அடைவதான மோக்ஷத்தை ஈச்வர சரணாரவிந்தங்களை ஸதா த்யானிப்பதன் மூலமே சுலபமாக அடைந்துவிட முடியும் என்று பக்தி பரமாக ஸ்தோத்திரிக்கிறார்.

எல்லாமும் ஒரே பரமாத்மாவின் வேறு வேறு ரூபங்கள் தான்.  நம் சித்தத்தை ஈச்வர சரணாரவிந்தங்களில் வைத்துவிட்டால் ‘பரமாத்மா வேறு நாம் வேறு அல்ல’ என்ற அனன்ய பாவத்தோடு அபேதமாக ஆகி பரமானந்தத்தில் லயிக்க வழி போட்டு கொடுக்கிறார்.

உங்களுடைய விளக்கமும் மேற்கோள்களும் மிக அருமை. நன்றி.🙏

மறை போற்றரிய ஒளியைப் பரவு மலர்தாட் கமலம் அருள்வாயே என அருணகிரிநாதர் பாடுகிறார்.
சரண கமலாலயத்தை அறை நிமிட நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க அறியாத, சட கசட மூட மட்டி என வேறு ஒரு திருப்புகழில் சொல்கிறார் !
இதைப் போன்றே பல பக்திமான் கள் பாதகச் சிறப்பை வலியுறுத்திக் சொல்லியிருப்பது பகவானின் பாதத்தில் சரணடைந்தால் அவர் நம்மை சம்சார சாகரத்தில் தத்தளிக்காமல் ஞான மார்க்கத்தில் கை பிடித்து அழைத்துச் செல்வார் என்பது திண்ணம்!
ஆர்யா சதகம் ஸ்லோகத்தில் மேற்கோள் அற்புதம் !
சித்த என்னும் தேவியின் அருளால் ஸத் எனும் சிவபாவம் அடைந்து சச்சிதானந்த பெருவாழ்வை எய்தமுடியும் ! காமாக்ஷி கருணை எனும் தீபத்தால் சிவ வாழ்வு எய்த முடியும் !
அம்பாளின் கருணை எல்லையற்றது !அவள் பாதத்தை சிக்கெனப் பிடித்தால் இங்கே எழுந்தருள்வ தினியே?
அழகான விளக்கம் எளியவரும் புரிந்து கொள்ளும் படி
ஜய ஜய சங்கரா..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.