Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 62வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 62வது ஸ்லோகம் பொருளுரை(13 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 62)

Series Navigation<< சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 62வது ஸ்லோகம் பொருளுரை”

முந்தைய ஸ்தோத்திரத்தில் பக்தியினுடைய இலக்கணத்தை விரிவாகச் சொன்னார். இந்த ஸ்தோத்திரத்தில் பக்தியை தாயாக உருவகித்து, பக்தனை குழந்தையாக வர்ணிக்கிறார்.🙏🌸

ஒரு தாயானவள் தன் குழந்தைகளுக்கு பணிகளை செய்யும்போது பக்தி உணர்வை ஊட்டி ஊட்டி  வளர்க்க வேண்டும் என்பதை இந்த ஸ்தோத்திரத்தின் மூலம் மிக அழகாக வலியுறுத்துகிறார்.🙏🌸

மாத்ரு பக்தி பற்றிய விளக்கங்கள் மிக அருமை. ராமாயணத்தில் சகோதரர்கள் மாதா பிதாவிடம் காண்பித்த பக்தி, பகவத் பாதாள், பட்டினத்தார் போன்றவர்கள் காண்பித்த பக்தி,  மஹாபெரியவா சொன்ன இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி உதாரணம் அதிஅற்புதம்.👌🙏🌸

இது பக்தியின் சிறப்பை எடுத்துக் காட்டும் ஒர் சிறப்பான ஸ்லோகம்! பக்தியாகிற தாய் பக்தனாகிற குழந்தையை ரக்ஷிக்கிராள் எப்படி? ஈஸ்வரதியானமாகிற தொட்டிலில் பக்தனான குழந்தையைத் தூங்கப் பண்ணுகிறாள்.குழந்தையிடம் உள்ள அன்பால் ஆனந்தக் கண்ணீர் பெருகி அது குழந்தையின் உடம்பை நனைக்கும், அதனால் மயிர் கூச்சல் உண்டாகும் ! அது போல் பக்தனுக்கு மயிர்கூச்சல் உண்டாகி உடல் சிலிர்க்கும்! எண்ணங்களாகிற சுத்தமான வஸ்த்ரத்தால் பக்தன் உடலைப் போர்த்துகிராள்! அதனால் ஈ எறும்பு, குளிர் இவற்றின் உபாதியால் துன்பம் விளைவிக்கக் கூடிய துன்பம் விளைவிக்கும் எண்ணங்கள் பக்தனை அணுகாமல் காக்கிறது ! வேதம் எனப்படும் சங்கத்தில் உள்ள பரமேஸ்வர் சரித்ரமாகிய பாலை பக்தனுக்கு ஊட்டுகி ராள். ருத்ராக்ஷம், விபூதியால் ரக்ஷா பந்தன் செய்கிறாள் !
தாயின் மேன்மையையும் வெளிப்படுத்துகிறது ! தாயிற் சிறந்த ஒர் கோயில் இல்லை அல்லவா?
பெரியவா சன்யாசம வாங்கிக் கொண்ட பின் ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவின் போடோ பார்த்து, எப்படி குழந்தை போல் சிரிக்கிறாள் என்று சொன்னதாய்க் கேள்விப்பட்டிருக்கேன். ஈச்சங்குடிக்கு பாதுக கொடுத்த போது அம்மா ஞாபகம் வந்து “அம்மா பிறந்த இடம், ஸதா வேதம் முழங்கிய இடம் ” என்று தன் பாதுகையை அங்கு வைக்குமாறு சொன்னாராம் ! மனதில் அம்மா நினைவு பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது!!
அதுபோல் சிவன் சார் அம்மா சிராத்தம் செய்யும்போது பெரியவா சுவற்றில் உள்ள சிறு த்வாரம் வழியாக அங்கு இருந்ததை சாஸ்திரிகள் தர்சனம் செய்திருக்கிறார்கள் ! தாயின் சிறப்பு அது!
இந்த பிரவசனம் தாய் அன்பின் மேன்மை, ஈஸ்வர பக்தியின் சிறப்பு ஒருங்கே உணர்த்தும், இருக்க வைக்குமாறு சிறப்பாக உள்ளது!
Thanks Ganapathy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.