Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 78வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 78வது ஸ்லோகம் பொருளுரை(11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 78)

Series Navigation<< சிவானந்தலஹரி 77வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 79வது 80வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 78வது ஸ்லோகம் பொருளுரை”

ரொம்ப அழகாந அர்த்தமுள்ள ஸ்லோகம் !

உலகில் ஒருவன் புதிதாக மணந்து கொள்ளும் பெண்ணுக்கு எப்படி
பல நல்ல உபதேசங்களையும் போக்கி, தன்னை நேசிக்கும்படி
தன்னிடம் ரொம்ப ப்ரியமா ஒட்டுதலாக இருக்கும்படி செய்வானோ
,அதே போல் ஏ பரமேஸ்வரா, என்மதில் உள்ள எல்லா
சந்தேகங்களையும் போக்கி, தங்களிடமே நிலைத்திருக்கும்படி
பண்ணவேண்டும் என்ற ஓர் ப்ரார்த்தனை இந்த ஸ்லோகம்.
அழகான ப்ரார்த்தனை!

கீதையில் சொன்ன ஸ்லோகம் ரொம்ப பொருத்தமாஅமைந்துள்ளது
இந்த இடத்தில்!

வினயம், ,ஸுஹ்ருதம் இத்துடன்கூடிய நல்ல பண்புகள் அழகா
விரிவா சொல்லப்பட்டிருக்கிரது !

கணவன் புதிய மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்பதெல்லாம் அழகா மனசுலே பதியும்படி இந்தக்கால
இளைக்னர்களுக்கு ஒரு அறிவுரை போல ரொம்ப நன்றாகச்
சொல்லப்பட்டிருக்கிறது!

௳ன்மதன் எப்படி ரூபமில்லாமல், அம்பாளின் கருணாகடாக்ஷம்
ஒன்றாலேயே உலகையே ஜயிக்கிறான்?
ஈஸ்வரம் மனசு மீன், தேவியின் கடைக்கண் பார்வை மீன் பிடிக்கும்
வலை, மன்மதன் செம்படவன் எத்தனை அழகான கற்பனை!

மேலே சொல்லப்பட்ட எல்லா ஸ்லோகங்களும், வியாக்யானமும் அருமை!

எம் போன்ற வயதானவர்களுக்க் செவிக்கு விருந்து!
ஸெவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற
பா ஞாபகம் வரது!!

ஜய ஜய சங்கரா…

ஜய ஜய ஜகதம்ப சிவே….

சிவானந்தஹரியின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் மிக அழகாக செதுக்கியிருக்கிறார் ஆசார்யாள். படிக்க படிக்க ஆனந்தம். உங்களுடைய விளக்கமும் மேற்கோள்களும் மிக அருமை.🙏

ஆசார்யாள் தன்னுடைய புத்தியை மணப்பெண்ணிற்கு ஒப்பிடுகிறார். அந்த கன்யா பெண்ணின் குணங்களை கூறி, தாங்கள் அந்த பெண்ணை மணந்து உத்தாரம் பண்ண வேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டிக் கொள்கிறார்.

மஹாபெரியவா, உத்தரணம் பற்றி சொல்லும் போது, மேலாக தூக்கி விடுவது மட்டும் அல்ல, “பிடுங்கி இழுத்து வெளியில் கொண்டு வருவதே உத்தரணம்” என்று சொல்வார். மேலும், “க்ருஷ்ணர் கோவர்த்தனோத்தரணம் பண்ணினார் என்கிறோம். பூமிக்குக் கீழேயும் ஆழமாகக் கையைவிட்டு மலையை ஆட்டிப் பிடுங்கி வெளியே தூக்கி ‘உத்தரண’ மாகச்  செய்திருக்கிறார். அத்புதமாக அனாயாசமாக செய்திருக்கிறார். அதர்மச் சேற்றில் அழுந்திப் போயிருக்கும் ஜகத்தை அவர்கள் அடியில் கை கொடுத்துப் பிடுங்கி வெளியே இழுத்துக்கொண்டு வருவதால்தான் ‘ஜகதோத்தாரணா!’ என்று தாஸர் பாடுகிறார்.

வெளியே இழுத்ததை எறியத்தான் வேண்டுமென்றில்லை. அதை நல்லபடியும் பண்ணலாம். அப்படித்தான் அவதாரப் புருஷர்கள் உலகத்தை அதர்மத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்த பின் அதற்கு நல்லது பண்ணுவது. அதர்மத்திலிருந்து விடுபடுத்துவதே நல்லதுதான்! கோவர்த்தனகிரியை இழுத்தெடுத்த பின் பகவான் எறிந்துவிடாமல் குடையாக அல்லவா உபயோகப்படுத்தினார்? அதற்குத்தானே அதைப் பிடுங்கியதே?” என்கிறார்.

“இந்த புத்தியானது என்னிடமே இருந்தால், எப்போது வேண்டுமானாலும் கெட்டுப் போகவும் பாபக் காரியங்களில் பிரவேசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் என்னுடைய இந்த புத்தியை உத்தரணம் பண்ணி தாங்கள் மணந்துகொண்டால், எப்பொழுதும் மங்களமான தங்களின் சிந்தனையிலேயே இருக்கும். கெட்டதுகளில் பிரவேசிக்கவே முடியாது!” என்று ஆசார்யாள் இப்படி வேண்டுகிறார் போலும்.🙏🌸

ஸீதா கல்யாணத்தின் போது, ஜனகர், சீதையின் கைகளை எடுத்து, ராமரின் கைகளில் வைத்து,

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீ தவ |
ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருண்ஹீஷ்வ பாணிநா ||
பதிவ்ரதா மஹாபாகா சாயேவானு கதா ஸதா|

“இந்த சீதை, என் மகள், பதிவ்ரதை, இவள் நிழல் போல உன்னை எங்கும் பின் தொடர்வாள், இவள் ரொம்ப பாக்யவதி, இவளை ஏற்றுக் கொள்” என்று சொல்வது நினைவு வருகிறது.

🙏🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.