Categories
mooka pancha shathi one slokam

காமேஷ்வரர் மடியில் ஒளிவிடும் ரத்னம்

ஸ்துதி சதகம் 89வது ஸ்லோகம் பொருளுரை – காமேஷ்வரர் மடியில் ஒளிவிடும் ரத்னம்

अशोध्यमचलोद्भवं हृदयनन्दनं देहिनाम्
अनर्घमधिकाञ्चि तत्किमपि रत्नमुद्द्योतते ।
अनेन समलङ्कृता जयति शङ्कराङ्कस्थली
कदास्य मम मानसं व्रजति पेटिकाविभ्रमम् ॥

ஸ்யமந்தகமணி உபாக்யானம்

ஸ்யமந்தகமணி உபாக்யானம்

6 replies on “காமேஷ்வரர் மடியில் ஒளிவிடும் ரத்னம்”

ரொம்ப அழகான பொருள்பொதிந்த ஸ்லோகம் இது!

இந்த ஸ்லொகத்தின் சித்திரம் பார்க்கும்போது காமேஸ்வர காமேஸ்வரி
என்ற அம்பாள் சதாசிவன் மடியில் அமர்ந்திருக்கும் அம்பாள் ரூபம்
மனதில் தோன்றுகிறது!

அம்பாளின் காந்தியின் ப்ரதிபலனாக அவர் சிவப்பாகத் தோன்றுவதாக
ஓர் கற்பனை!!
ஸ்ரீ காமேஸ்வரரின் மடியில் வீற்றிருப்பவளும், மலர்ந்த கதம்ப புஷ்பத்தின்
காந்திபோன்ற திருமேனியுடையவளாகிய காமாக்ஷி நம் அன்னையாவாள்.

நம்மனங்களுக்குஆனந்தத்தை அளிப்பவளும், விலை மதிக்கமுடியாத
ரந்தனமாக காஞ்சியில் ஒளி வீசிக்கொண்டிருக்கிற காமாக்ஷியை என்
அகத் தாமரையில் வைத்துப் பாதுகாத்து பூஜிக்கும் பெட்டியாக என்
மனம் எப்படி மாறும்?
ரொம்ப அழகான ஸ்லோகம்!
நம் மனம் தூய்மையாக அவளது த்யானத்தைத் தவிர எந்த ஞாபகமும்
ஸ்மரணையும் அற்ற தூய மனதை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்!
எப்படி ?பெரியவா, ஸ்வாமிகள் மாதிரி சரணாகதத் தத்வம்! அதனால்தான்
நம் மனம் எனும் பெட்டி அவளை சதா மனதில் இருத்திக் கொள்ள முடியும்!
அது ஓர் தபஸ்!
ஞானம் தழைத்து உன்சொரூபத்தை அறிகின்ற நல்லோர் இட்த்தினிற்
போய் நடுவினிருந்து வந்தடிமையும் பூண்டவர் நவிற்றுமுபதேசம்
உட்கொண்டு ஈனந்தனைத் தள்ளி எனது நானெனும்மானம் இல்லாமலே
துரத்தி இந்த்ரிய வாயில்களை இறுகப் புதைத்து நெஞ்சம் இருளற
விளக்கேற்றியே ஆனந்தமான அன்னையே உன்னை என் அகத்தாமரையில்
வைத்து என்று பட்டர் பதிகத்தில் உருகுகிறார்!
ஆந்த நிலை வந்தால்காஞ்சி ரத்னம் நம் மனதில் உறைவாள் !!
ஸந்தேகமில்லை!!

தெளிவான விளக்கம் அழகான சொற் சுவையோடு!!
ஜய ஜய ஜகதம்ப சிவே…

அருமையான விளக்கம். சத்ராஜித்தின் தம்பி பிரசேனன் மாண்டான். சத்ராஜித் தன் பெண்டு சத்யபாமவை ஸ்ரீகிருஷ்ணா மணம் செய்து கொடுத்தான். ஜயமாதாதி

Yes .sayrajit is killed by shatadhanwa after his daughter got married to krishanaji. God bless you and your family for this good work. Jayamatadi

ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்
இன்று கிடைத்த அருள் ப்ரஸாதம் இந்த விளக்கம். மிக மிக அற்புதம். மனதில் நிறுத்தும் விஷயம், எங்கள் ஹ்ருதயத்தில் காமாக்ஷி என்னும்
பொக்கிஷமான ரத்தினத்தை கவனமாக வைத்து ஸ்மரிக்க வேண்டும். காமாக்ஷி என்று நினைக்கும் போது
மஹா பெரியவா தோற்றத்தில் காமாக்ஷியான காட்சி மனதில் உதிக்கிறது.
இன்று உள்ள ஓவியம் காமேஷ்வரன் மடியில் ரத்னம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒலி வடிவத்தில் உங்கள் விளக்கம் ஹிதம். 🌼🌼

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.