Tag: ராமாயணம்

விராத வதம்

viradha vadham

118. தண்டக வனத்தில் திடீர் என்று விராதன் என்ற ஒரு கோரமான அரக்கன் வந்து சீதையை கவர்ந்து செல்கிறான். ராமரும் லக்ஷ்மணரும் அவனுடன் யுத்தம் செய்து அவனை கீழே வீழ்த்துகிறார்கள். விராதன் ராமரை யார் என்று அறிந்து ‘ராம! நான் ஒரு கந்தர்வனாக இருந்தேன். குபேரனின் சாபத்தால் அரக்கன் ஆகிவிட்டேன். உன் தயவால் நான் இன்று சாப விமோசனம் அடைந்தேன். என்னை எந்த ஒரு ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என் உடலை ஒரு குழி வெட்டி புதைத்து விடுங்கள். அதன் மூலம் எனக்கு நல்ல கதி ஏற்படும். அருகில் சரபங்கர் என்று ஒரு முனிவர் உள்ளார். அவரைச் சென்று தர்சனம் செய்யுங்கள்” என்று கூறி உயிரை விடுகிறான்.
[விராத வதம்]

Share

ராமர் தண்டக வனம் புகுந்தார்

rishis
117. ராமரும் லக்ஷ்மணரும் சீதாதேவியும் தண்டக வனத்தில் மேலும் உள்ளே சென்று ரம்யமான முனிவர்களின் ஆஸ்ரமங்களை கண்டார்கள். முனிவர்கள் ஞான த்ருஷ்டியால் விஷ்ணு பகவானும் லக்ஷ்மி தேவியுமே இந்த உருவில் வந்திருப்பதை அறிந்து, அவர்களை அன்புடன் வரவேற்று பூஜை செய்தார்கள்.
[ராமர் தண்டகவனம் புகுந்தார்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

சீதா தேவியும் அனசூயா தேவியும்

Sita-Devi-and-Sati-Anusuya
116. சீதை அனசூயா தேவியை வணங்கி அவர் அளித்த தெய்வீகமான அலங்கார பொருட்களை அன்புப் பரிசாக பெற்றுக் கொள்கிறாள். பிறகு அனசூயா தேவி கேட்டவுடன் தன் சுயம்வரம் மூலம் ராமரை அடைந்த விவரங்களை இனிமையாக சொல்கிறாள். மறுநாள் அவர்கள் ரிஷிகளை வணங்கிவிட்டு மேலும் காட்டிற்குள் செல்கிறார்கள்.
[சீதா தேவியும் அனசூயா தேவியும்]

Share

பாதுகா பட்டாபிஷேகம்

bharata114. பரதன் ராமருடைய பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு ரதத்தில் ஏறி, வழியில் பரத்வாஜ முனிவரை வணங்கி விவரங்களை சொல்லிவிட்டு, அயோத்தி திரும்புகிறான். ராமர் இல்லாத அயோத்தியில் இருக்க விரும்பாமல் அருகில் நந்திக்ராமம் என்ற இடத்திற்கு வந்து, ராமருடைய பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பட்டாபிஷேகம் செய்கிறான். ராமரே தன் அருகில் இருப்பதாக நினைத்து அந்த பாதுகைகளின் துணையோடு ஆட்சி செய்கிறான். ஆனால் எந்த ராஜ போகத்தையும் ஏற்காமல் காட்டில் ராமர் இருப்பது போல தானும் மரவுரி, ஜடை அணிந்து தபஸ்வியாக வாழ்கிறான்.
[பாதுகா பட்டாபிஷேகம்]

Share

பரதன் சரணாகதி

sandal2113. பரதனும் ராமரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மகரிஷிகள் அங்கு தோன்றி பரதனிடம், ராமருடைய பேச்சைக் ஏற்கும்படி கூறுகிறார்கள். பரதன் ராமரிடம் சரணாகதி செய்கிறான். ராமர் அதை ஏற்றுக்கொண்டு, வசிஷ்டர் சொன்னபடி தன் பாதுகைகளை பரதனுக்கு அளிக்கிறார். பரதன் அவற்றை தலையில் ஏற்கிறான். ‘பதினைந்தாவது வருடம் முதல் நாள் நீங்கள் அயோத்தி திரும்பாவிட்டால் நான் நெருப்பில் விழுந்து விடுவேன்’ என்று கூறுகிறான். ராமர் ‘நான் அப்படியே வந்துவிடுகிறேன். நீ கைகேயி அம்மாவை கடிந்து ஏதும் பேசக் கூடாது. இது என் மேலும் சீதை மேலும் ஆணை’ என்று கூறுகிறார்.
[பரதன் ராம பாதுகைகளைப் பெற்றான்]

Share

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

Vasistha1112.வசிஷ்டர் ராமரிடம் ‘இக்ஷ்வாகு குலத்தில் மூத்த பிள்ளைக்கு தான் பட்டம் சூட்டுவது வழக்கம். நான் உனக்கும் உன் தந்தைக்குமே குரு. என் பேச்சை கேட்டு நீ அரசை ஏற்பதால் தவறில்லை’ என்கிறார். ராமர் ‘என் தந்தையின் வார்த்தையை மீறி உங்கள் வார்த்தையை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்று கூறி விடுகிறார். பரதன் ‘உன் இடத்தில்  நான் வனவாசத்தை மேற்கொள்கிறேன்’ என்று கூறும் போது ராமர்  ‘நம் தந்தையார் உயிரோடு இருக்கும் போது எப்படி முடிவு செய்தாரோ அப்படியே தான் நாம் கேட்க வேண்டும். அதை மாற்ற நமக்கு உரிமை கிடையாது’ என்று கூறுகிறார்.  [தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]

Share

ராமர் நாஸ்திகத்தை கண்டித்தார்

ram_japali111. ராமர் பரதனிடம் மேலும் ‘நான் காட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருப்பேன். நீ வருந்தாதே. அயோத்திக்கு திரும்பிச் செல்.’ என்று கூறுகிறார். ஜாபாலி என்ற முனிவர் ‘ராம! கையில் கிடைத்ததை அனுபவி. அப்பா அம்மா சத்யம், சாஸ்திரம் என்று மற்றதை நினைத்து ஏன் கவலைப் படுகிறாய்?’ என்று நாஸ்திகமாக பேசியதும் ராமர் ‘சத்தியமே எல்லாவற்றிலும் மேலானது. அதுவே பதவிக்கும், பணத்துக்கும், பக்திக்கும், முக்திக்கும் மூலம். சத்யத்தை கைவிட மாட்டேன். நாஸ்திகம் பேசும் உங்களை என் தந்தை அருகில் வைத்திருந்ததே தவறு என்று நினைக்கிறேன்.’ என்று கடிந்து கூறியதும், ஜாபாலி ‘உன்னை திரும்ப அழைத்து போகும் எண்ணத்தில் சிலது பேசி விட்டேன். இனி நாஸ்திகம் பேச மாட்டேன்’ என்று மன்னிப்பு கேட்கிறார்.

[ஜாபாலி மத நிரஸனம்]

Share

சத்யமே நித்யம்

Ram meet bharat 2110. ராமர் பரதனிடம் மேலும் ‘நான், நீ, உறவு, பிரிவு, ராஜ்யம், வனவாசம் எல்லாம் அநித்தியம். சத்யமே நித்யம். சத்யத்தை காப்பாற்றியதால் நம் தந்தையார் சுவர்க்கம் அடைந்துள்ளார். அவரைப் பற்றி வருந்த வேண்டாம். அவர் வார்த்தைப்படி நாம் நடக்க வேண்டும்’ என்கிறார். பரதன் ‘இப்படி ஒரு ஞானவானகிய நீ எங்களை நல்வழிப்படுத்த வேண்டாமா? இங்கு காட்டில் கஷ்டப் படுவதை விட ராஜ்யத்தை வகித்து அந்த கஷ்டப்படலாமே? உன்னை தலை வணங்கி கேட்கிறேன். பரமேஸ்வரன் உயிர்களிடத்தில் கருணை செய்வது போல, என்னிடத்திலும் உன் பந்துக்களிடதிலும் கருணை செய்யவேண்டும்’ என்று வேண்டுகிறான்.

[தர்மத்தை காக்க வேண்டும்]

Share

ராம கீதை

rama-bharatha109. ராமர் பரதனுக்கு ஞானோபதேசம் செய்கிறார். ‘உலக வாழ்க்கை நிலையற்றது. வயது ஏற ஏற மரணம் நெருங்கி வருகிறது. செல்வம், மனைவி மக்கள், உறவெல்லாம் சில காலமே. நாம் மற்றவர்கள் திருப்திக்காக காரியங்களை செய்ய முடியாது. பகவானுடைய அனாதியான கட்டளையான தர்மத்தை தான் அனுஷ்டிக்க வேண்டும். சத்தியத்தை கடை பிடிக்க வேண்டும். நம் ஆத்மாவுக்கு க்ஷேமத்தை தரும் கார்யங்களையே செய்யவேண்டும்’ என்று உபதேசிக்கிறார்.

[ராமர் செய்த ஞானோபதேசம்]

Share

பரதனின் பிரார்த்தனை

rama and bharatha108. எல்லோரும் ராமருடைய பர்ணசாலையை அடைகிறார்கள். கௌசல்யா தேவி சீதையிடம் தன் சொந்தப் பெண்ணைப் போல் அன்பு பாராட்டுகிறாள். பரதன் ராமரிடம் ‘நம் தந்தை தவறான இந்த ஏற்பாட்டை செய்து விட்டு காலமாகி விட்டார். நாங்கள் அனைவரும் உங்களை அயோத்திக்கு மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம். உன் தம்பியும், சிஷ்யனும், அடிமையுமான என் வேண்டுதலை ஏற்று நீ அயோத்திக்கு திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்க வேண்டும். எனக்கு அரசனாகும் தகுதி கிடையாது. உனக்கு தான் அந்த தகுதி உண்டு’ என்கிறான். ராமர் ‘தாய் தந்தையர்களை அறியாமையினால் குறைவாக பேசாதே. பிள்ளைகளை எந்த விதத்திலும் ஆணையிட அப்பாவிற்கு உரிமை உண்டு. அவர் உனக்கு ராஜ்யத்தையும் எனக்கு வனவாசத்தையும் தந்திருக்கிறார். அதை நாம் அப்படியே ஏற்க வேண்டும். மாற்றக் கூடாது’ என்று கூறுகிறார்.

[பரதனின் பிரார்த்தனை]

Share