Tag: ராமாயணம் கதை

அராஜகத்தால் வரும் ஆபத்துக்கள்

dasharatha_death_bed
89. தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.
[அரசனில்லாத நாடு]

Share

கௌசல்யா தேவி சோகம்

86. கௌசல்யா தேவி சோக மிகுதியினால் தசரதரிடம் ‘எனக்கு நீங்களும் இல்லை. என் மகனையும் காட்டிற்கு அனுப்பி விட்டீர்கள். எல்லோரையும் நிர்கதி ஆக்கி விட்டீர்கள்’ என்று சொல்கிறாள். தசரதர் ‘எதிரியிடமும் கருணை செய்யும் இயல்பு கொண்ட நீ மிகவும் துக்கத்தில் இருக்கும் உன் கணவனான என்னிடம் கருணை செய்.’ என்று கைகூப்பி வேண்டுகிறார். கௌசல்யை தரையில் விழுந்து வணங்கி ‘கணவனை கெஞ்ச விடும் பெண் நரகத்தை அடைவாள். சோகத்தால் ஏதோ பேசிவிட்டேன். நீங்கள் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவே இதைச் செய்தீர்கள் என்று அறிவேன். என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று சமாதானம் செய்கிறாள்.
[கௌசல்யா தேவி சோகம்]

Share

சுமித்ராதேவி லக்ஷ்மணனுக்கு செய்த உபதேசம்

72. தன்னை வணங்கிய லக்ஷ்மணனை சுமித்ராதேவி ‘ராமனோடு வனம் செல்லவே நான் உன்னை பெற்றெடுத்தேன். அவனோடு சென்று வேண்டிய உதவிகளைச் செய். அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காதே. ராமனை தசரதர் என்று நினைத்துக் கொள். சீதாதேவியை அம்மாவாக நினைத்துக் கொள். காட்டை அயோத்தி என்று நினைத்துக் கொள். உன் விருப்பப்படி போய் வா.’ என்று ஆசீர்வதித்தாள்.
[சுமித்ராதேவி லக்ஷ்மணனுக்கு செய்த உபதேசம்]

Share

சீதை கௌசல்யா தேவியிடம் விடைபெறுதல்

71. தசரதர் தபஸ்வி வேஷத்தில் நிற்கும் ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து ‘என்ன பாபம் செய்தேனோ. கன்றுகளை பசுக்களிடம் இருந்து பிரித்தேனோ’ என்று வருந்துகிறார். சீதை, கௌசல்யா தேவியை வணங்கிய போது கௌசல்யை ‘என் மகன் ராஜ்ய செல்வத்தை இழந்து விட்டதால் அவனை குறைவாக எண்ண வேண்டாம்’ என்ற போது சீதை ‘உங்கள் வார்த்தைப் படி நடப்பேன். அளவற்ற சந்தோஷத்தை தரும் கணவனை நான் தெய்வமாக மதிப்பேன்.’ என்று பதில் அளிக்கிறாள்.
[சீதை கௌசல்யா தேவியிடம் விடைபெறுதல்]

Share

சீதை ஆட்சி செய்யட்டும்

70. கைகேயி, ராம லக்ஷ்மணருக்கும் சீதைக்கும், மரவுரி கொண்டு வந்து தருகிறாள். ராம லக்ஷ்மணர் அதை அணிந்து கொள்கிறார்கள். ராமர் சீதைக்கு அவளுடைய பட்டுப் புடவையின் மேல் அதை அணிவிக்கிறார். இந்த காட்சியை கண்டு பெண்கள் கண் கலங்கி ‘சீதையை காட்டிற்கு அழைத்து செல்லாதே’ என்று ராமனிடம் வேண்டுகிறார்கள். வசிஷ்டர் ‘கைகேயி, அத்துமீறி நடக்கிறாய். சீதை ராமருடைய மறு உருவம். ராமன் காட்டிற்கு சென்றால் சீதை ஆட்சி செய்யட்டும். ராமன் சீதையோடு காட்டிற்கு போனால் நாங்களும் அவனோடு போய்விடுவோம். பரதனுடைய ராம பக்தியை அறியாமல் அவனுக்கு அப்ரியமான கார்யத்தை செய்கிறாய்.’ என்று கண்டிக்கிறார்.
[சீதை ஆட்சி செய்யட்டும்]

Share

ராமனுடைய வைராக்கியம்

69. தசரதர் தன்னுடைய சொந்த செல்வத்தை, வனம் செல்லும் ராமனுக்கு அளிக்க விரும்புகிறார். அனால் கைகேயி அதைத் தடுக்கிறாள். ராமன் ‘யானையைக் கொடுத்த பின் அதைக் கட்டும் சங்கிலிக்கு ஆசைப் படுவரோ? ராஜ்யத்தைக் கொடுத்த பின் எனக்கு செல்வம் எதற்கு?’ என்று சொல்லி விடுகிறான். ராமனிடத்தில் என்ன குற்றம் கண்டாய் என்று கேட்கும் மந்திரிக்கு கைகேயி ஏதும் பதில் சொல்லவில்லை.
[ராமனுடைய வைராக்கியம்]

Share

சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்

68. ‘தசரதரிடம் எந்த தவறுமில்லை. கைகேயி பிடிவாதத்தால் ராமர் வனவாசம் போகிறார்’ என்று புரிந்து கொண்ட சுமந்த்ரர் கைகேயியை கடிந்து பேசுகிறார் ‘இந்திரனைப் போன்ற பெருமை படைத்த தசரதரை உன் பிடிவாதத்தால் கலங்கச் செய்கிறாய். அது பெரும் தவறு. உன் அம்மாவுடைய பிடிவாத குணம் உனக்கு அமைந்துள்ளது. அதனால் உனக்கு கடுமையான கெட்ட பெயர் தான் ஏற்படும். இப்படி செய்யாதே. தசரதர் வாக்கு மாற மாட்டார். நீயே மனதை மாற்றிக் கொண்டு ராமனுக்கு பட்டம் சூட்டு.’ என்று கூறுகிறார். கைகேயி அதற்கு செவி சாய்க்கவில்லை.
[சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்]

Share

ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்


67. மயக்கம் தெளிந்து தசரதர் ராமனிடம் ‘ராமா, நான் கைகேயினால் வஞ்சிக்கப் பட்டேன்.என்னை சிறையில் அடைத்து விட்டு நீ அரசனாகி விடு’ என்கிறார். ராமர் ‘தந்தையே, உங்கள் சத்தியத்திற்காக நான் எதையும் கைவிடத் தயாராக உள்ளேன். ராஜ்யத்தை பரதனுக்கு அளியுங்கள். நான் வனவாசத்தை முடித்துவிட்டு விரைவில் திரும்ப வந்து உங்கள் பாதங்களைப் பற்றுவேன்’ என்று கூறுகிறார்.
[ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்]

Share

அயோத்யா ஜனங்களின் புலம்பல்

66. ராமர் வனவாசம் போவதை அறிந்த அயோத்யா நகர ஜனங்கள் ராமருடைய குணங்களை புகழ்ந்து ‘நாம் ராமரோடு காட்டிற்கு சென்று விடலாம். இந்த அயோத்தி பாழடைந்து காடாகட்டும். ராமர் இருக்குமிடமே அயோத்தி ஆகிவிடும்’ என்கிறார்கள். ராமர், சுமந்திரர் மூலம் தன் வருகையை தெரிவித்து தசரதரை தரிசிக்கிறார். தசரதர் மயங்கி விழ ராமரும் லக்ஷ்மணரும் அவரை தூக்கி படுக்கையில் கிடத்துகிறார்கள்.
[அயோத்யா ஜனங்களின் புலம்பல்]

Share

ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்

65. ராமர் தன் செல்வத்தை பிரம்மணர்களுக்கும் ஏழைகளுக்கும் யாத்ரா தானமாக அளிக்கிறார். தன் சொந்த பலத்தை நம்பாமல் தெய்வத்தையே நம்பி இருக்கும் த்ரிஜடர் என்ற ப்ராம்மணரின் தேஜஸை உலகிற்கு வெளிப்படுத்தி, அவருக்கு கணக்கற்ற பசுக்களை தானம் அளிக்கிறார். பிறகு தந்தையிடம் விடைபெற சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் தசரதர் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்]

Share