Tag: ராமாயண கதை

பரதனை அழைத்து வாருங்கள்

bharathan
90. வசிஷ்டர் முக்கிய மந்த்ரிகளை கேகேய தேசத்திற்கு அனுப்பி, தசரதர் காலமானதையோ ராமன் காட்டிற்கு போனதையோ சொல்லாமல் பரதனை அழைத்து வரும்படி உத்தரவு செய்கிறார். பரதன் அன்றிரவு கெட்ட கனவுகள் கண்டு வருத்தத்தில் இருக்கிறான். மந்த்ரிகள் அவசரப் படுத்தி அழைத்தவுடன் தாத்தா அஸ்வபதி மஹாராஜாவிடமும் மாமா யுதாஜித் இடமும் உத்தரவு பெற்று, சத்ருக்னனோடு அயோத்தி கிளம்புகிறான்.
[பரதனை அழைத்து வாருங்கள்]

Share

அராஜகத்தால் வரும் ஆபத்துக்கள்

dasharatha_death_bed
89. தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.
[அரசனில்லாத நாடு]

Share

முனி குமாரன் வதம்

shravankumar
87. தசரதர் கௌசல்யா தேவியிடம் தான் இளமையில் அறியாமல் செய்த ஒரு தவற்றைப் பற்றி கூறுகிறார். காட்டில் வேட்டையாட சென்றபோது ‘யானை நீர் அருந்துகிறது’ என்றெண்ணி தசரதர் ஒரு முனிகுமாரனின் மீது அம்பு எய்து விடுகிறார். அந்த முனி குமாரன் ‘ஒரு அம்பினால் என்னையும் என் கண்ணில்லாத பெற்றோரையும் கொன்று விட்டீர். என் தந்தை உங்களை சபிக்காமல்  என்று கூறி உயிர் விடுகிறான். தசரதர் நடந்த விஷயத்தை அவன் பெற்றோரிடம் சென்று தெரிவிக்கிறார்.
[முனி குமாரன் வதம்]

Share

கௌசல்யா தேவி சோகம்

86. கௌசல்யா தேவி சோக மிகுதியினால் தசரதரிடம் ‘எனக்கு நீங்களும் இல்லை. என் மகனையும் காட்டிற்கு அனுப்பி விட்டீர்கள். எல்லோரையும் நிர்கதி ஆக்கி விட்டீர்கள்’ என்று சொல்கிறாள். தசரதர் ‘எதிரியிடமும் கருணை செய்யும் இயல்பு கொண்ட நீ மிகவும் துக்கத்தில் இருக்கும் உன் கணவனான என்னிடம் கருணை செய்.’ என்று கைகூப்பி வேண்டுகிறார். கௌசல்யை தரையில் விழுந்து வணங்கி ‘கணவனை கெஞ்ச விடும் பெண் நரகத்தை அடைவாள். சோகத்தால் ஏதோ பேசிவிட்டேன். நீங்கள் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவே இதைச் செய்தீர்கள் என்று அறிவேன். என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று சமாதானம் செய்கிறாள்.
[கௌசல்யா தேவி சோகம்]

Share

சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்


84. சுமந்திரர் குஹனுக்கு விடை கொடுத்து அயோத்தி திரும்புகிறார். ராமர் இல்லாத தேரைக் கண்டு ஜனங்கள் வருந்துகிறார்கள். சுமந்திரர் தசரதரைப் பார்த்து ராமரை கங்கைக் கரையில் விட்டு வந்ததை சொன்னவுடன், தசரதர் ‘ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு தூங்கினான்? என்ன சொன்னான்? எல்லாவற்றையும் சொல். அது தான் எனக்கு மருந்து’ என்று கேட்கிறார். ராமர் கௌசல்யா தேவிக்கும் பரதனுக்கும் சொன்ன செய்திகளையும் லக்ஷ்மணர் சொன்ன விஷயங்களையும் சுமந்திரர்  எடுத்துச் சொல்கிறார்.
[ராமர் பரதனுக்கு சொன்ன செய்தி]

Share

சீதாதேவி கங்கா நதியிடம் பிரார்த்தனை


81. கங்கையை கடக்கும் போது சீதை ‘கங்கா மாதா! நாங்கள் நல்ல படியாக வனவாசத்தை கழித்து திரும்பி வந்தால், உன் கரையில் உள்ள கோயிலில் தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் செய்கிறோம். உன் கரையில் வசிப்பவர்களுக்கு அன்னதானம் செய்கிறோம்’ என்று வேண்டிக் கொள்கிறாள். ராமர் அன்றிரவு தன் அம்மாவைப் பற்றி கவலைப்பட்டு லக்ஷ்மணரை அயோத்திக்கு திரும்ப போகச் சொல்கிறார். லக்ஷ்மணர் ‘ராமா! நானோ சீதையோ உன்னைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட உயிர் வாழ மாட்டோம். பரதன் அவர்களைப் பார்த்துக்கொள்வான். கவலைப் படாதே’ என்று சொல்லி சமாதானம் செய்கிறார்.
[சீதாதேவி கங்கை நதியிடம் பிரார்த்தனை]

Share

ராமர் கங்கைக் கரையை அடைந்தார்


78. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் பல நதிகளையும் கிராமங்களையும் கடந்து புனித கங்கைக் கரையை அடைந்தார்கள். அங்கு படகோட்டிகளின் ராஜாவும் ராமரின் உயிர் தோழனுமான குகன் வந்து ராமரை சந்திக்கிறான். குகன் அளித்த உணவை மறுத்து, ராமர் அன்றும்  நீரையே உணவாகப் பருகி, சீதையோடு புல் தரையில் படுத்து உறங்குகிறார்.
[ராமர் குஹனை சந்தித்தார்]

Share

ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார்


77. ராமர் நள்ளிரவில் எழுந்து ‘நம்மால் இந்த ஜனங்களுக்கு கஷ்டம் வரக்கூடாது. இப்போதே கிளம்பி போய் விடுவோம்’ என்று சொல்லி தேரில் ஏறி தமஸா நதியைக் கடந்து போய் விடுகிறார்கள். ஜனங்கள் எழுந்து, ராமர் இல்லாததைக் கண்டு மிக வருந்தி உயிரை விடவும் துணிகிறார்கள். ராமருடைய தேர் தடத்தை தொடர்ந்து அயோத்தி வந்து சேர்கிறார்கள். அங்கு பெண்கள் அவர்களிடம் ‘ராமரை விட்டு ஏன் வந்தீர்கள்? ராமன் எங்கு உள்ளானோ அங்கு பயமோ அவமனமோ கிடையாது. அவனிடமே போய் விடுவோம்’ என்று சொல்கிறார்கள்.
[ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார்]

Share

ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை


76. அயோத்தி மக்கள் ராமருடைய தேரின் பின்னே செல்கிறார்கள். வயதான பிராம்மணர்கள் ‘ராமா, நாங்களும் உன்னோடு வருகிறோம். எங்கள் ஹ்ருதயத்தில் உள்ள வேதம் எங்களைக் காப்பாற்றும். எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்ட உன்னிடம் பறவைகள் கூட வேண்டுகின்றன. எங்களை விட்டுப் போகாதே’ என்று கெஞ்சுகிறார்கள். தமஸா நதிக்கரை வந்தவுடன் ராமர் அன்றிரவு அங்கே தங்க முடிவு செய்கிறார். ஜனங்களும் அவரோடு தூங்குகிறார்கள்.
[ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை]

Share

சுமித்ரை சமாதானம் செய்தல்

75. பிள்ளையை பிரிந்து வருந்தும் கௌசல்யா தேவியை சுமித்ரா தேவி ‘சத்தியத்தையும் தர்மத்தையும் விரதமாகவும் செல்வமாகவும் கொண்ட ராமன் எதை இழந்தான்? லக்ஷ்மி தேவியே ஆன சீதையும் லக்ஷ்மணனும் அவனோடு போகும் போது அவனுக்கு என்ன குறை? அவன் தெய்வங்களுக்கு மேலான தெய்வம்’ என்று கூறி சமாதானம் செய்கிறாள்.
[சுமித்ரை சமாதானம் செய்தல்]

Share