Categories
Stothra Parayanam Audio

மணி மந்திர ஔஷதம் எனப்படும் அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு பாடல்கள் + ஒலிப்பதிவு


அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு  தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது இதுவே என்று எனக்கு தோன்றுகிறது. அருள் நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகமும் சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது.

Categories
Bala Kandam

ஸகர புத்ரர்கள்


23. சகர மன்னருக்கு ப்ருகு முனிவர் பிள்ளை வரம் அளிக்கிறார். சகர மன்னர் செய்த அஸ்வமேத யாகத்தில் யாகக் குதிரையை இந்திரன் திருடிச் சென்று பாதாளத்தில் கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டி விட, சகர புத்ரர்கள் அந்த குதிரையை தேடிச் செல்லும் போது கபில முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாம்பலாகி விடுகிறார்கள். அம்சுமான் அக்குதிரையை மீட்டு வந்த பின் சகர மன்னர் யாகத்தை பூர்த்தி செய்கிறார். [சகர புத்ரர்கள்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/23%20sagara%20puthrargal.mp3]

Categories
Bala Kandam

திருமுருகாற்றுப்படை


22. முருகப் பெருமானின் பெருமையை தமிழ்ப் புலவர்களும் பக்தியோடு பாடியுள்ளார்கள். அவற்றுள் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை மிகத் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்கள் முருகனின் மார்பில் தவழும் மதாணியின் நவரத்தினங்கள் . [திருமுருகாற்றுப்படை]

Categories
Bala Kandam

குமார சம்பவம்

21. சிவபெருமானின் தேஜஸை, அக்னி பகவான் கங்கையிடம் அளிக்கிறார். கங்கை அதை சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கு முருகப் பெருமான் ஆறு குழந்தைகளாய் அவதரிக்கின்றார். பார்வதி தேவி அள்ளி எடுத்தவுடன் ஆறுமுகராக ஆகிறார். பின் தேவர்களுக்கு சேனாதிபதி ஆகி சூரபத்மனை சம்ஹாரம் செய்கிறார். [குமார சம்பவம்]