Categories
Ayodhya Kandam

ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார்


77. ராமர் நள்ளிரவில் எழுந்து ‘நம்மால் இந்த ஜனங்களுக்கு கஷ்டம் வரக்கூடாது. இப்போதே கிளம்பி போய் விடுவோம்’ என்று சொல்லி தேரில் ஏறி தமஸா நதியைக் கடந்து போய் விடுகிறார்கள். ஜனங்கள் எழுந்து, ராமர் இல்லாததைக் கண்டு மிக வருந்தி உயிரை விடவும் துணிகிறார்கள். ராமருடைய தேர் தடத்தை தொடர்ந்து அயோத்தி வந்து சேர்கிறார்கள். அங்கு பெண்கள் அவர்களிடம் ‘ராமரை விட்டு ஏன் வந்தீர்கள்? ராமன் எங்கு உள்ளானோ அங்கு பயமோ அவமனமோ கிடையாது. அவனிடமே போய் விடுவோம்’ என்று சொல்கிறார்கள்.
[ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார்]

Categories
Ayodhya Kandam

ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை


76. அயோத்தி மக்கள் ராமருடைய தேரின் பின்னே செல்கிறார்கள். வயதான பிராம்மணர்கள் ‘ராமா, நாங்களும் உன்னோடு வருகிறோம். எங்கள் ஹ்ருதயத்தில் உள்ள வேதம் எங்களைக் காப்பாற்றும். எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்ட உன்னிடம் பறவைகள் கூட வேண்டுகின்றன. எங்களை விட்டுப் போகாதே’ என்று கெஞ்சுகிறார்கள். தமஸா நதிக்கரை வந்தவுடன் ராமர் அன்றிரவு அங்கே தங்க முடிவு செய்கிறார். ஜனங்களும் அவரோடு தூங்குகிறார்கள்.
[ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை]

Categories
Ayodhya Kandam

சுமித்ரை சமாதானம் செய்தல்

75. பிள்ளையை பிரிந்து வருந்தும் கௌசல்யா தேவியை சுமித்ரா தேவி ‘சத்தியத்தையும் தர்மத்தையும் விரதமாகவும் செல்வமாகவும் கொண்ட ராமன் எதை இழந்தான்? லக்ஷ்மி தேவியே ஆன சீதையும் லக்ஷ்மணனும் அவனோடு போகும் போது அவனுக்கு என்ன குறை? அவன் தெய்வங்களுக்கு மேலான தெய்வம்’ என்று கூறி சமாதானம் செய்கிறாள்.
[சுமித்ரை சமாதானம் செய்தல்]

Categories
Ayodhya Kandam

தசரதர் சோகம்

74. ராமர் கண்களிலிருந்து மறைந்த பின் தசரதர் கிழே விழுந்து விடுகிறார். தூக்க வந்த கைகேயியை விலக்கி கௌசல்யை அரண்மனைக்கு வந்து படுக்கையில் விழுந்து விடுகிறார். கௌசல்யை ‘இப்படி ஒரு பிள்ளையை பெற்று அவனை இழக்க என்ன பாபம் செய்தேனோ?’ என்று புலம்புகிறாள்.
[தசரதர் சோகம்]

Categories
Ayodhya Kandam

ராமர் வனவாசம் கிளம்பினார்

73. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் தேரில் ஏறி அமர சுமந்திரர் தேரை ஓட்டுகிறார். அயோத்தி ஜனங்களும் தசரதரும் கௌசல்யா தேவியும் அழுது கொண்டே பின் தொடர்கிறார்கள். விரைவில் திரும்பி வர விரும்பும் உறவினரை வெகு தூரம் வழி அனுப்பக் கூடாது என்று பெரியோர்கள் சொன்னதும் தசரதர் நின்று விடுகிறார். ராமர் பிரிவினால் பெண்கள் குழந்தைகள்  முதல் யானைகள் பசுக்கள் வரை அயோத்தி நகரமே துக்கத்தில் மூழ்கிவிடுகிறது.
[ராமர் வனவாசம் கிளம்பினார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/73%20ramar%20vanavasam%20kilambinar.mp3]