Categories
Ayodhya Kandam

ராமனுடைய வைராக்கியம்

69. தசரதர் தன்னுடைய சொந்த செல்வத்தை, வனம் செல்லும் ராமனுக்கு அளிக்க விரும்புகிறார். அனால் கைகேயி அதைத் தடுக்கிறாள். ராமன் ‘யானையைக் கொடுத்த பின் அதைக் கட்டும் சங்கிலிக்கு ஆசைப் படுவரோ? ராஜ்யத்தைக் கொடுத்த பின் எனக்கு செல்வம் எதற்கு?’ என்று சொல்லி விடுகிறான். ராமனிடத்தில் என்ன குற்றம் கண்டாய் என்று கேட்கும் மந்திரிக்கு கைகேயி ஏதும் பதில் சொல்லவில்லை.
[ராமனுடைய வைராக்கியம்]

Categories
Ayodhya Kandam

சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்

68. ‘தசரதரிடம் எந்த தவறுமில்லை. கைகேயி பிடிவாதத்தால் ராமர் வனவாசம் போகிறார்’ என்று புரிந்து கொண்ட சுமந்த்ரர் கைகேயியை கடிந்து பேசுகிறார் ‘இந்திரனைப் போன்ற பெருமை படைத்த தசரதரை உன் பிடிவாதத்தால் கலங்கச் செய்கிறாய். அது பெரும் தவறு. உன் அம்மாவுடைய பிடிவாத குணம் உனக்கு அமைந்துள்ளது. அதனால் உனக்கு கடுமையான கெட்ட பெயர் தான் ஏற்படும். இப்படி செய்யாதே. தசரதர் வாக்கு மாற மாட்டார். நீயே மனதை மாற்றிக் கொண்டு ராமனுக்கு பட்டம் சூட்டு.’ என்று கூறுகிறார். கைகேயி அதற்கு செவி சாய்க்கவில்லை.
[சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்]

Categories
Ayodhya Kandam

ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்


67. மயக்கம் தெளிந்து தசரதர் ராமனிடம் ‘ராமா, நான் கைகேயினால் வஞ்சிக்கப் பட்டேன்.என்னை சிறையில் அடைத்து விட்டு நீ அரசனாகி விடு’ என்கிறார். ராமர் ‘தந்தையே, உங்கள் சத்தியத்திற்காக நான் எதையும் கைவிடத் தயாராக உள்ளேன். ராஜ்யத்தை பரதனுக்கு அளியுங்கள். நான் வனவாசத்தை முடித்துவிட்டு விரைவில் திரும்ப வந்து உங்கள் பாதங்களைப் பற்றுவேன்’ என்று கூறுகிறார்.
[ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்]

Categories
Ayodhya Kandam

அயோத்யா ஜனங்களின் புலம்பல்

66. ராமர் வனவாசம் போவதை அறிந்த அயோத்யா நகர ஜனங்கள் ராமருடைய குணங்களை புகழ்ந்து ‘நாம் ராமரோடு காட்டிற்கு சென்று விடலாம். இந்த அயோத்தி பாழடைந்து காடாகட்டும். ராமர் இருக்குமிடமே அயோத்தி ஆகிவிடும்’ என்கிறார்கள். ராமர், சுமந்திரர் மூலம் தன் வருகையை தெரிவித்து தசரதரை தரிசிக்கிறார். தசரதர் மயங்கி விழ ராமரும் லக்ஷ்மணரும் அவரை தூக்கி படுக்கையில் கிடத்துகிறார்கள்.
[அயோத்யா ஜனங்களின் புலம்பல்]

Categories
Ayodhya Kandam

ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்

65. ராமர் தன் செல்வத்தை பிரம்மணர்களுக்கும் ஏழைகளுக்கும் யாத்ரா தானமாக அளிக்கிறார். தன் சொந்த பலத்தை நம்பாமல் தெய்வத்தையே நம்பி இருக்கும் த்ரிஜடர் என்ற ப்ராம்மணரின் தேஜஸை உலகிற்கு வெளிப்படுத்தி, அவருக்கு கணக்கற்ற பசுக்களை தானம் அளிக்கிறார். பிறகு தந்தையிடம் விடைபெற சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் தசரதர் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்]

Categories
Ayodhya Kandam

ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்

55. ராமர் கைகேயி சொன்ன வரங்களைக் கேட்டு ‘அவ்வாறே செய்கிறேன். என் தந்தையும், வயதில் மூத்தவரும், ராஜாவுமான தசரதர் குடுத்த வரத்திற்காக நான் ஜடை பூண்டு மரவுரி உடுத்தி காடு செல்கிறேன்’ என்று வாக்களிக்கிறார். ‘இன்றே நீ கிளம்பு’ என்று கைகேயி அவசரப்படுத்த ‘நான் ரிஷிகளைப் போல தர்மத்தில் உறுதி கொண்டவன். பணத்தில் பேராசை கொண்டவன் அல்ல’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்]

Categories
Ayodhya Kandam

ராமரின் பித்ரு பக்தி

54. ராமரைக் கண்டவுடன் தசரதர் பேசவும் முடியாமல் அழுது பரிதவிக்கிறார். ராமர் பயந்து கைகேயியிடம் அப்பாவின் கலக்கத்திற்கு காரணம் கேட்கிறார். கைகேயி ‘தசரதர் எனக்கு குடுத்த சத்தியத்தை காப்பாற்ற, நீ அவர் சொல்வது எதுவானாலும் செய்வாயா?’ என்று கேட்கிறாள். ராமர் ‘அப்பா சொன்னால் நான் நெருப்பில் வேண்டுமானாலும் விழுவேன். அப்பா வார்த்தை எதுவானாலும் கேட்பேன். இது சத்தியம். ராமன் வார்த்தை மாறமாட்டான்.’ என்று சொன்னவுடன் கைகேயி தான் கேட்ட இரண்டு வரங்களை சொல்கிறாள். ராமர் வருத்தம் அடையவில்லை. அவர் முகம் இரவில் நிலவு போல் ஒளியுடனே விளங்கியது.
[ராமரின் பித்ரு பக்தி]

Categories
Ayodhya Kandam

ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்

53. ராமர் லக்ஷ்மணனோடு தேரில் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார். வழியில் பெண்களும் பெரியவர்களும் அவரை வாழ்த்துகிறார்கள். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபின் ராமசந்திரனின் வருகையை எதிர்பார்த்து ஜனக்கடல் காத்துக் கொண்டிருக்கிறது.
[ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் ராமரை அழைக்கிறார்

52. சுமந்திரர், ராமரை அழைத்து வர அவருடைய அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போல, தங்கக் கட்டிலில் சர்வாலங்கார பூஷிதராக சீதா தேவியோடு அமர்ந்திருக்கும் ராமரைக் கண்டு வணங்குகிறார். தசரதர் அழைப்பதாக சொன்னவுடன், ராமர் சீதையிடம் விடைப் பெற்று கைகேயி அரண்மனைக்கு புறப்படுகிறார். சீதை ஆரத்தி எடுத்து வழியனுப்புகிறாள்.
[சுமந்திரர் ராமரை அழைக்கிறார்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் தசரதரை எழுப்புகிறார்