Categories
Ayodhya Kandam

லக்ஷ்மணரும் அனுமதி பெற்றார்

64.சீதையோடு ராமர் வனம் போக முடிவு செய்துவிட்டதைப் பார்த்து லக்ஷ்மணர் தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுகிறார். ராமர் அவரிடம் ‘நீ இங்கிருந்து என் அம்மாவையும் உன் அம்மாவையும் பார்த்துக் கொள்’ என்று சொல்கிறார். லக்ஷ்மணர்’பரதன் அவர்களைப் பார்த்துக் கொள்வான். நான் வனவாசத்தில் இரவும் பகலும் உங்களுக்கு உதவி செய்வேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறார். அந்த வார்த்தைகளைக் கேட்டு ராமர் மகிழ்ந்து லக்ஷ்மணர் தன்னுடன் வர அனுமதி அளிக்கிறார். பிறகுலக்ஷ்மணர், ராமர் உத்தரவின்படி ஆச்சார்யரின் வீட்டிலிருந்து ஆயுதங்களை எடுத்து வருகிறார். 
[லக்ஷ்மணரும் அனுமதி பெற்றார்]

Categories
Ayodhya Kandam

அம்மா அப்பா குரு மகிமை

63.ராமர் அனுமதி தரத் தயங்கவே, சீதை ‘உங்களோடு இருப்பதே எனக்கு சொர்க்கம். நீங்கள் இல்லாத இடம் எனக்கு நரகம். நீங்கள் என்னை இங்கே விட்டுச் சென்றால் நான் உயிரை விட்டு விடுவேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘அம்மா அப்பா குரு மூவரும் கண்கண்ட தெய்வம். அப்பா குடுத்த வாக்கை காப்பற்ற நான் வனம் செல்கிறேன். அந்த தர்மத்தில் துணையாக நீயும் என்னோடு வா’ என்று அனுமதி அளிக்கிறார்.
[அம்மா அப்பா குரு மகிமை]

Categories
Ayodhya Kandam

சீதாதேவியின் வேண்டுகோள்

62.சீதை ராமரிடம் ‘உங்களை காட்டிற்கு போகச் சொன்னால் அது என்னையும் சொன்னது போல தான். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டு. என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘வனம் என்பது ஆபத்தான இடம். வனவாசம் மிகவும் கஷ்டமானது’ என்று கூறும் போது சீதை, ‘உங்களோடு இருந்தால் எனக்கு எதுவும் கஷ்டமில்லை. எனக்கு உங்கள் அன்பு ஒன்றே போதும்’ என்று கூறுகிறாள்.
[சீதாதேவியின் வேண்டுகோள்]

Categories
Ayodhya Kandam

ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை

61. ராமர் சீதையின் பிரிவுத் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் வரும்போது சீதை, ‘ஏன் உங்கள் முகத்தில் என்றும் இல்லாத வாட்டம்?’ என்று கேட்கிறாள். ராமர் ‘மதிப்பிற்குரிய தந்தையார் என்னை வனவாசம் போகும்படி ஆணை இட்டுள்ளார். நீ என் பெற்றோரை தினமும் வணங்கி, அவர்களுக்கு பணிவிடை செய்து, பரத சத்ருகனர்களிடம் அன்பு பாராட்டி, விரதங்களை கடைபிடித்து எளிமையாக வாழ்ந்து வா’ என்று அறிவுரை கூறுகிறார்.
[ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை]

Categories
Bala Kandam

ஸீதா கல்யாண வைபோகமே


36. முனிவர்கள் குறித்த மங்கள நன்னாளில், ஜனகர் தன் நான்கு பெண்களை அலங்கரித்து அழைத்து வர, தசரதரும் தன் நான்கு புதல்வர்களையும் அழைத்து வருகிறார். ஸீதா தேவியின் கரங்களை ஜனகர் ஸ்ரீ ராமரின் கரங்களில் கொடுத்து ‘இந்த என் பெண் சீதையை உன் மனைவியாக ஏற்றுக் கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவள் கைகளைப் பற்றிக்கொள். இவள் கணவனையே தெய்வமாக கொண்டு உனக்கு தர்மங்களை பின்பற்றுவதில் துணை நிற்பாள். உன்னை எங்கும் நிழலெனப் பின்தொடர்வாள்.’ என்று கூறி மந்திரங்களால் தூய்மை செய்யப்பட்ட ஜலத்தை கைகளில் விட்டு கன்யகாகாதானம் செய்து கொடுக்கிறார். அவ்வாறே மற்ற மூன்று பெண்களான ஊர்மிளை மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்தியை முறையே லக்ஷ்மண பரத சத்ருக்னருக்கு கன்யகாகாதானம் செய்து தருகிறார்.
[ஸீதா கல்யாணம்]

Categories
Bala Kandam

வசிஷ்டர் சீதையை ராமருக்கு பெண் கேட்கிறார்


35. ஜனகர் சபையில் வசிஷ்ட பகவான், தசரதரின் பூர்வ வம்சத்தைக் கூறி ராமனுக்கு சீதையை பெண் கேட்கிறார். ஜனகர் தன் பூர்வ வம்சத்தைகச் சொல்லி ராமருக்கு சீதையையும் லக்ஷ்மணனுக்கு ஊர்மிளையையும் மணம் செய்து தர சம்மதிக்கிறார். விஸ்வாமித்ரர், பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் ஜனகரின் தம்பியின் பெண்களான மாண்டவியையும் சுருதகீர்த்தியையையும் மணமுடிக்கலாம் என்று கூற, ஜனகர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார்.[வசிஷ்டர் சீதையை ராமருக்கு பெண் கேட்கிறார்]

Categories
Bala Kandam

தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்


34. ஜனகர், விஸ்வாமித்ரர் அனுமதி பெற்று, தசரதரை அழைத்து வர தூதர்களை அனுப்புகிறார். தசரதர் கல்யாண சேதி கேட்டு சந்தோஷத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். ஜனகர் அவர்களை வரவேற்று உபசரித்து கல்யாணத்திற்கு நாள் குறிக்கிறார்.[தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்]

Categories
Bala Kandam

சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்


33. விஸ்வாமித்ரரின் உத்தரவின் பேரில் ஜனக மஹாராஜா தன்னிடமிருந்த சிவ தனுசை ராம லக்ஷ்மணர்களுக்கு காண்பிக்கிறார். இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால் என் மகள் ஸீதையை அவனுக்கு மணமுடித்து தருவேன் என்று கூறுகிறார். ராமர், முனிவரிடம் உத்தரவு பெற்று அந்த வில்லை எடுத்து நாண் பூட்டும் போது அந்த வில் அவருடைய அபார பலத்தினால் இரண்டாக முறிந்து விழுகிறது. ஜனக மஹாராஜா தன் மகளுக்கேற்ற மணாளன் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். [சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்]