Categories
Ayodhya Kandam

சுமித்ராதேவி லக்ஷ்மணனுக்கு செய்த உபதேசம்

72. தன்னை வணங்கிய லக்ஷ்மணனை சுமித்ராதேவி ‘ராமனோடு வனம் செல்லவே நான் உன்னை பெற்றெடுத்தேன். அவனோடு சென்று வேண்டிய உதவிகளைச் செய். அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காதே. ராமனை தசரதர் என்று நினைத்துக் கொள். சீதாதேவியை அம்மாவாக நினைத்துக் கொள். காட்டை அயோத்தி என்று நினைத்துக் கொள். உன் விருப்பப்படி போய் வா.’ என்று ஆசீர்வதித்தாள்.
[சுமித்ராதேவி லக்ஷ்மணனுக்கு செய்த உபதேசம்]

Categories
Ayodhya Kandam

சீதை கௌசல்யா தேவியிடம் விடைபெறுதல்

71. தசரதர் தபஸ்வி வேஷத்தில் நிற்கும் ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து ‘என்ன பாபம் செய்தேனோ. கன்றுகளை பசுக்களிடம் இருந்து பிரித்தேனோ’ என்று வருந்துகிறார். சீதை, கௌசல்யா தேவியை வணங்கிய போது கௌசல்யை ‘என் மகன் ராஜ்ய செல்வத்தை இழந்து விட்டதால் அவனை குறைவாக எண்ண வேண்டாம்’ என்ற போது சீதை ‘உங்கள் வார்த்தைப் படி நடப்பேன். அளவற்ற சந்தோஷத்தை தரும் கணவனை நான் தெய்வமாக மதிப்பேன்.’ என்று பதில் அளிக்கிறாள்.
[சீதை கௌசல்யா தேவியிடம் விடைபெறுதல்]

Categories
Ayodhya Kandam

சீதை ஆட்சி செய்யட்டும்

70. கைகேயி, ராம லக்ஷ்மணருக்கும் சீதைக்கும், மரவுரி கொண்டு வந்து தருகிறாள். ராம லக்ஷ்மணர் அதை அணிந்து கொள்கிறார்கள். ராமர் சீதைக்கு அவளுடைய பட்டுப் புடவையின் மேல் அதை அணிவிக்கிறார். இந்த காட்சியை கண்டு பெண்கள் கண் கலங்கி ‘சீதையை காட்டிற்கு அழைத்து செல்லாதே’ என்று ராமனிடம் வேண்டுகிறார்கள். வசிஷ்டர் ‘கைகேயி, அத்துமீறி நடக்கிறாய். சீதை ராமருடைய மறு உருவம். ராமன் காட்டிற்கு சென்றால் சீதை ஆட்சி செய்யட்டும். ராமன் சீதையோடு காட்டிற்கு போனால் நாங்களும் அவனோடு போய்விடுவோம். பரதனுடைய ராம பக்தியை அறியாமல் அவனுக்கு அப்ரியமான கார்யத்தை செய்கிறாய்.’ என்று கண்டிக்கிறார்.
[சீதை ஆட்சி செய்யட்டும்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/70%20seethai%20aatchi%20seyyattum.mp3]