Categories
Aranya Kandam

கரன் யுத்தத்திற்கு புறப்பட்டான்


129. சூர்பனகை கரனிடம் முறையிட அவன் பதினான்கு ராக்ஷசர்களை ராமரோடு யுத்தம் செய்ய அனுப்புகிறான். ராமர் ஒரு நிமிடத்தில் அவர்களை வதம் செய்து விடுகிறார்.

Categories
Aranya Kandam

சூர்பனகை வந்தாள்


128. ராமர் ரிஷிகளோடும் சீதாதேவியோடும் பேசிக் கொண்டு இனிமையாக பொழுதைக் கழிக்கிறார். ஒரு நாள் அங்கே சூர்பனகை என்ற ராக்ஷசி வருகிறாள். அவள் ராமரைக் கண்டவுடன் காமவசப்பட்டு அவரிடம் “என்னை மணந்து கொள்” என்று கேட்கிறாள். ராமர் விளையாட்டாக “என் அருகில் என் பிரியமான மனைவி சீதை இருக்கிறாள். நீ என் தம்பி லக்ஷ்மணனிடம் கேள்” என்கிறார்.

Categories
Aranya Kandam

ஜடாயு தர்சனம்; பஞ்சவடீ வாசம்

jatayu_with_ram_sita_at_panchevati
126. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் உத்தரவின்படி பஞ்சவடிக்கு வருகிறார். வழியில் ஜடாயு என்ற கழுகு அரசர் அவர்களை பார்த்து “நான் உன் தந்தை தசரதரின் நண்பன். இங்கு உங்களுக்கு அருகில் இருந்துகொண்டு முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சீதை தனியாக இருக்கும்போது அவளை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுகிறார்.

Categories
Aranya Kandam

அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார்

agasthya-rama-ramayan-desibantu125. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியரை தரிசிக்கிறார். அகஸ்தியர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு உணவு அளிக்கிறார். பின் அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு பகவானின் வில்லையும் அம்புறாதூணியையும் அளித்து “எப்படி இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டுள்ளானோ, அது போல ராமா, வெற்றியின் பொருட்டு நீ இந்த விஷ்ணு தனுசை ஏற்றுக்  கொள். ” என்று வாழ்த்துகிறார்.

Categories
Aranya Kandam

அகஸ்தியர் மஹிமை

1-ockzdeure51oa3b6odlbjw124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.

Categories
Bala Kandam

ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்?

Swamigal reading Srimad Valmiki Ramayana

2. வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.

Categories
Sundarakandam moolam Bala Kandam

வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்

1.வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்பாக சொல்லப்படும் த்யான ச்லோகங்கள். இதில் பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஹனுமார், ராமாயணம், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ச்லோகங்கள் உள்ளன. (த்யான ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யவும்).