இன்று எங்களுக்கு நங்கநல்லூரில் உள்ள ஶ்ரீ சிவன் சார் யோக சபையில், ஶ்ரீ சிவன் சாரை தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது. விஜியும் நானும் அம்மாவுடன் சென்று, சார் பக்தர்கள் இயற்றிய, விரிவான, ஆத்மார்த்தமான பூஜையைக் கண்டு மகிழ்ந்தோம். அபிஷேகத்திற்குப் பிறகு தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அஷ்டோத்திர அர்ச்சனையும், அதைத் தொடர்ந்து தூப, தீப, நைவேத்தியம், சத்ர சாமரம், மந்த்ர புஷ்பம் போன்ற உபசாரங்களும் நடைபெற்றன. பூஜையின் போது நாம் நன்றாக அறிந்த குரு ஸ்லோகங்களும், திருவாசகம் மற்றும் திருமந்திரப் பாடல்களும் எல்லோராலும் பாடப்பட்டன.
கல் மண்டபத்தில் வீற்றிருக்கும் பாண லிங்கக் கல்லால் செதுக்கப்பட்ட, மிகவும் தத்ரூபமான சிவன் சார் தான் இங்குள்ள முதன்மை மூர்த்தி. அங்குள்ள தங்க முலாம் பூசிய திருவாச்சி, திருவண்ணாமலை பின்னணி, சாரின் பூஜைக்குரிய பெற்றோர்களின் உருவம் முதலிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்கள், ஆகியவை இந்த தெய்வீகச் சூழலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
சாரின் இன்னொரு பெரிய பஞ்சலோக விக்கிரகம் அருகில் உள்ளது, அதுவும் மிகவும் அழகாக இருக்கிறது. இரண்டு மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. பூஜை முடிவில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவராமன் அண்ணா எங்களைக் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் எங்களுக்கு கோயிலைச் சுற்றிக் காண்பித்து, சார் எழுதிய 20 டைரிகள், சார் பயன்படுத்திய பொருட்கள், மஹாபெரியவா பயன்படுத்திய மரவுரி மற்றும் மான்தோல் ஆகியவற்றை காண்பித்தார். நாங்கள் மஹாபெரியவா, சார் மற்றும் ஸ்வாமிகளைப் பற்றி ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
நான் எழுதிய புத்தகத்தை சாரிடம் சமர்ப்பித்தேன். மஹாபெரியவா அதிஷ்டானத்தில் செய்வது போல, அந்தப் புத்தகம் சாருக்குக் காண்பிக்கப்பட்டு, அதன் விவரங்கள் சாரின் காதில் சொல்லப்பட்டன. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் அளித்தது. நாங்கள் புறப்படும் போது சிவராமன் எங்களுக்குப் பிரசாதமும் புத்தகங்களும் வழங்கி வழியனுப்பினார். சாருடன் செலவிட்ட அந்த இனிய தருணங்களின் நினைவுகளோடு விடைபெற்றேன்.
யோக சபையிலும், அவர் எழுதிய “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” என்ற புத்தகத்தின் மூலமாகவும் சிவன் சார் தனது சாந்நித்தியத்தை நமக்கு அருளி வருகிறார். தி.நகரில் உள்ள நர்மதா பதிப்பகத்தில் கிடைக்கக்கூடிய, சிவ சாகரம் டிரஸ்ட் வெளியிட்ட அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தையும் தவறாமல் வாங்கிப் படியுங்கள். அது முதல் பாகத்தை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.
Today we had the good fortune of Shri Shivan Sar darshanam at Shri Shivan Sar Yoga Sabhai in Nanganallur. Viji and I went with Amma and were blessed to witness the elaborate and soulful puja performed by devotees. It included ashtotharam archanai in tamizh and samskritam after abhishekam, followed by doopa deepa neivedyam, chatra chamaram, manthra pushpam etc accompanied by chanting of familiar guru slokams and songs from Thiruvasagam and Thirumanthiram.
The main deity is the stunningly realistic Shivan Sar sculpted from a bana stone seated in a stone mantapam. The gold plated thiruvachi, the Thiruvannamalai backdrop, pillars with nice sculptures that include Sar’s pujya parents, etc. add to the divine setting.
There is another larger pancha loka vigraham of Sar that’s equally beautiful. Pujai is performed to both deities simultaneously. All present were given tasty prasadam at the end of pujai.
Shri Shivaraman was very happy to see us. He gave us a tour of the temple, showed us the 20 diaries written by Sar, the things Sar used, the maravuri (bark garment) and maan thol (deer skin) used by Mahaperiyava. We spent nearly an hour talking about Mahaperiyava, Sar and Swamigal. I submitted my book and like in Mahaperiyava adhishtanam, the book was shown to Sar and the details were submitted in His ear. I was delighted. As we took leave, Shivaraman gave us prasadam and books. Left with memories of the sweet times spent with Sar.
Shivan Sar is blessing us with his palpable presence in Yoga Sabhai and His book ENippadigalil Maandargal. Don’t miss to get the part 2 of the book published by Shiva Sagaram Trust and available from Narmada pathippagam, T.Nagar. It will help you understand part 1 much better.