Categories
Sri Shankara Charitham Shankara Stothrani Meaning

தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil

தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் புத்தக வடிவில் (Sri Shankara Charitham as a PDF book)


கடந்த பதினாறு நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ஸ்ரீ சங்கர சரிதம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ஸ்ரீ சங்கர சரிதம்

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம்

நேற்று வரையில் பதினைந்து நாட்களில் ஆதி சங்கரருடைய சரித்ரத்தை ஸ்மரித்தோம். இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்ய காலம். ஆதி சங்கரருடைய மகிமையைப் பற்றியும் இந்த சங்கர ஜயந்தி எப்படி சர்வோத்க்ருஷ்டமான புண்ய காலம் என்பதைப் பற்றியும், மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லி இருப்பதை இப்போது வாசிக்கிறேன்.

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினைந்தாம் பகுதி – காஞ்சியில் சங்கரர் விதேஹ முக்தி


நேற்றைய கதையில் ஆதி சங்கரர் தன்னோட ஆறாயிரம் சிஷ்யர்களோட பாரத தேசம் முழுக்க மூணு முறை பாத யாத்திரையாக திக்விஜயம் பண்ணினதை ஸ்தோத்திரங்கள் மூலமா சொல்லிண்டு இருந்தேன். மஹா பெரியவா சொல்றா “ஆச்சார்யாள் பண்ணின இந்த திக்விஜயம் national integration-ஆ  முடிஞ்சுடுத்து. எல்லாரையும் ஒரே வேத மதத்துக்கு கீழ கொண்டு வந்து, நாம எல்லாரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அப்படிங்கற உணர்ச்சியை ஏற்படுத்தினார். பக்தியினால தான் எல்லாருக்குள்ள ஒருமைப்பாடு ஏற்படும். அப்படி  national integration பண்ணினா” ன்னு சொல்றா. எனக்கு தோணித்து, நம்ம மஹா பெரியவளோட திக் விஜயத்துனால international-integration-னே  ஆயிடுத்து. “மைத்ரீம் பஜத அகில ஹ்ருத ஜேத்ரீம்” அப்படீன்னு united nations-ல பாட வைச்சாரே! “ஸ்ரேயோ பூயாத் சகல ஜனானாம்” “எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்” அப்படீங்கிற அதே thoughtல எப்பவும் இருந்தா. உலகத்துல எந்த ஒரு ஜீவன் கிட்டயும் எந்த ஒரு த்வேஷத்தையும் காண்பிக்காம வாழ முடியும் அப்படீன்னு நூறு வருஷம் இருந்து காண்பிச்சா பெரியவா.

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினான்காம் பகுதி – ஸ்தோத்ரங்கள் மூலமாக சங்கர திக்விஜயம்

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு


நேற்றைய கதையில் பத்மபாதாச்சார்யாள் ஆதி சங்கரருக்கு காசியிலே முதல் சிஷ்யராக வந்து சேர்ந்தது, அவர் குரு பக்தியினால் தாமரை தாங்கிய தாளராக, பத்மபாதராக ஆனது, காபாலிகன் கிட்டேயிருந்து  நரசிம்ம மூர்த்தியோட அனுக்ரஹத்துனால ஆச்சார்யாளை காப்பாத்தினது, அவர் எழுதிய பஞ்சபாதிகா இதெல்லாம் பார்த்தோம். இன்னிக்கு இன்னும் இரண்டு உத்தம சிஷ்யர்களைப் பத்தி பார்ப்போம். ஆச்சார்யாள் அப்படின்னாலே எல்லா படத்துலயும் நாலு சிஷ்யர்களோட இருப்பார். அந்த பாக்கி ரெண்டு பேர் ஹஸ்தாமலகர், தோடகாச்சார்யாள் ன்னு ரெண்டு பேர்.

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பன்னிரண்டாம் பகுதி – பத்மபாதர் கதை

நேற்றைய கதையில், ஆதி சங்கரர் மண்டனமிஸ்ரரை வாதத்துல ஜெயிச்சு, அப்பறம் மண்டனமிஸ்ரர் ஸுரேஸ்வராச்சார்யாள் அப்படீங்கற பேர்ல ஸன்யாசம் எடுத்துண்டு ஆதி சங்கரரோடு கிளம்பினதும், மண்டனமிஸ்ரருடைய பூர்வாஸ்ரம மனைவி ஸரஸவாணி, ஆச்சார்யாள் வேண்டுதல்படி ச்ருங்கேரில சாரதாம்பாளாக குடி கொண்டு உலகத்துக்கு அருள் பண்ணிண்டு இருக்கற விவரமெல்லாம் சொன்னேன்.

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினொன்றாம் பகுதி – மண்டனமிஸ்ரரை சங்கரர் வாதத்தில் வென்றது

நேற்றைய கதையில், சுப்ரமண்ய ஸ்வாமியோட அவதாரமாகவே பூமியில வந்து, கர்ம மீமாம்சையை, வேதத்தை, வேதத்துல சொல்லி இருக்கிற கர்மாக்களை, எல்லாரும் புஷ்களமாக பண்ணும் படியாக அனுக்கிரஹம் பண்ணின குமாரில பட்டருடைய கதையைப் பார்த்தோம். அவர் அக்னி ஸ்வரூபமா இருக்கிறதுனால கடைசியில அக்னியிலேயே மறைஞ்சுட்டார். குமாரிலபட்டர் சங்கரர் கிட்ட “நீங்க மாஹிஷ்மதியில இருக்கக் கூடிய மண்டனமிஸ்ரரை போய் பார்க்கணும்” அப்படின்னு வேண்டிக்கறார். அப்போ ஆதி சங்கரர் சரின்னு அங்கே இருந்து மாஹிஷ்மதி வர்றார்.

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதை

நேற்றைய கதையில், ஆதி சங்கரர் கீதா பாஷ்யத்தில் கூட, பக்தி மார்கத்தை பத்தி விஷேஸமாக சொல்லிருக்கார், அப்படிங்கறதை பார்த்தோம். இன்னிக்கு ஆதி சங்கரர், குமாரிலபட்டர் அப்படிங்கறவரை, பிரயாகைல போய் பார்க்கிறார்.

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – ஒன்பதாம் பகுதி – சங்கர பாஷ்யத்தில் பக்தியின் ஏற்றம்

நேற்றைய கதையில் ஆசார்யாள் சொன்ன வழியில், பஜ கோவிந்தத்தில் இருக்கிற மாதிரி, உலக விஷயங்கள்ல பற்று வைக்காமல், உலக சுகங்களை துச்சமா நினைச்சு, அவற்றை துறந்து, பகவானுடைய பக்தி பண்ணி, வழிபாடு பண்ணி, பஜ கோவிந்தம் அப்படீன்னு சொன்னார். மகாபெரியவா அதையே வாழ்ந்து காண்பிச்சு, அதையே உலகத்துக்கு உபதேசமாவும் சொல்லிண்டு இருந்தா, தன்னோட வாழ்நாள் முழுக்க அதை பண்ணிண்டு இருந்தா, அப்படீன்னும் சொன்னேன்.