मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां
प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः ।
यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां
परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥
மனீஷாம்ʼ மாஹேந்த்³ரீம்ʼ ககுப⁴மிவ தே காமபி த³ஶாம்ʼ
ப்ரத⁴த்தே காமாக்ஷ்யாஶ்சரணதருணாதி³த்யகிரண𑌃 ।
யதீ³யே ஸம்பர்கே த்⁴ருʼதரஸமரந்தா³ கவயதாம்ʼ
பரீபாகம்ʼ த⁴த்தே பரிமலவதீ ஸூக்திநலினீ ॥
நேத்திக்கு ஜனவரி 28ஆம் தேதி, 2025 கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனையை பழூர்ல விமர்சையா கொண்டாடினோம். அதைப் பற்றி உங்களுடைய அனுபவங்களை பற்றி சொல்லுங்கோன்னு கேட்டிருந்தா. நான் முந்தின நாளே போய்ட்டேன். ஸ்வாமிகள் இருக்கும் போது, அவர் எப்படி என்கிட்ட ரொம்ப அன்கண்டிஷனல் லவ் (unconditional love) அப்படிங்கற மாதிரி, காரணமில்லாமல் அன்பாக இருந்தாரோ அது மாதிரி, இப்போ என்கிட்ட மூகபஞ்சசதி கத்துண்ட என் ஸ்டூடென்ட்ஸ் எல்லாம் என்கிட்ட ரொம்ப அன்பா இருக்கா… ஸ்டேஷனுக்கு வந்து என்னை கூட்டிடண்டு போனா… சாயங்காலம் அவாளோட சேர்ந்து முத்தரசநல்லூரில் புதுசா ஒரு குருவாயூரப்பன் கோவில் கட்டி இருக்கா.. நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை.. அதனால அங்க போனோம்.. ரொம்ப நன்னா இருந்தது… மஹாபெரியவா ஒருத்தர் கனவில் வந்து, அங்க இருக்கிற ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கார். “எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு.. இங்க எனக்கு வலது பக்கத்துல குருவாயூரப்பனுக்கு ஒரு கோவில் கட்டு!” அப்படின்னு சொல்லி இருக்கார்.. அப்புறம் எல்லாம் தானாவே நடந்திருக்கு.. கோயில் ரொம்ப அழகா இருக்கு குருவாயூரப்பனும் ரொம்ப அழகு. நாங்க சாயங்காலம் போயிருந்தோம். ஸ்ன்னதி வாசல்ல விளக்கெல்லாம் ஏத்தினோம். ஸ்வாமிக்கு தீபாராதனை.. அப்புறம் ஐயப்பன் சந்நிதியில் தீபாராதனை எல்லாம் நடந்து பிரசாதம் கொடுத்தா.. ஒருத்தர் உட்கார்ந்து நாராயணீயம் படிச்சுண்டு இருந்தார்..
அங்க ம்யூரல் பெயிண்ட்டிங்ஸ்ல பாகவத காட்சிகள் எல்லாம் போட்டு இருக்கா.. ரொம்ப அழகா, சூப்பர்பா இருக்கு.. அதை எல்லாரும் பார்க்கணும்.. அங்கிருந்து பழூருக்கு வந்தோம் .. பழூர்ல நாலு வைஷ்ணவ பசங்கள் உக்காந்துண்டு ஸ்ரீ ருத்ரம் ஜடா பாராயணம் பண்ணிண்டு இருந்தா.. அதுல ஒருத்தர் ஸ்வாமிகளுடைய ஆசீர்வாதத்தில கத்துண்டு, அவர் மத்தவாளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்திண்டிருக்கார்… அதனால பசங்கள் என்று சொன்னேன்.. அவாள் எல்லாம் 20- 25 வயசுல இருப்பா.. ரொம்ப ஆனந்தமா இருந்தது… அங்க கொஞ்ச நேரம் கேட்டுண்டு இருந்து ஸ்வமிகளுக்கு ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணிட்டு, அப்புறம் அகிலாண்டேஸ்வரி – ஜம்புகேஸ்வரர் தர்சனம்.. அன்னிக்கு பிரதோஷம்.. தரிசனம் பண்ணி, சாப்பிட்டு தூங்கினோம்..
அடுத்த நாள் கார்த்தால எழுந்து பழூருக்கு போனோம்.. போன வருஷம் எதேச்சையா 5-6 பேர் மூகபஞ்சசதி தெரிஞ்சவா இருந்தோம்.. நடு நடுவுல gap கிடைக்கும்போது மூகபஞ்சசதி 350 ஸ்லோகங்கள் படிச்சோம்… அதனால இந்த வாட்டி 500 படிச்சிடுவோம் அப்படின்னு, டிபன் சாப்பிட்டுட்டு அங்க ராமர் பஜனை மடத்துல, 6-7 பேர் உட்கார்ந்து மூகபஞ்சசதி 500 ஸ்லோகங்களும் படிச்சு முடிச்சோம்… ரொம்ப ஆனந்தமா இருந்தது… தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை பகுள பஞ்சமியின் போது பஞ்சரத்ன கீர்த்தனை மாதிரி, ஸ்வாமிகளுக்கு பிடிச்சது மூகபஞ்சசதி, நாராயணீயம்.. அதை ஆராதனை போது அவரவர்கள் அங்கங்க பாராயணம் பண்ணலாம்… இங்க சேர்ந்து இருந்தவா இங்க பண்ணலாம்னு தோணித்து.
எப்பவும் போல ஸ்வாமிகள் மஹாபெரியவாளோடு இருக்கிற சித்திரத்தையும், ஸ்வாமிகளுடைய விக்ரகத்தையும் அலங்காரம் பண்ணி இருந்தா… அலங்காரம் ரொம்ப ரொம்ப அழகா இருந்தது… மேளதாளத்தோட ஊருக்குள்ள புறப்பாடு.. ஒவ்வொரு ஆத்து வாசல்லயும் ஆரத்தி எடுத்தா… நாதஸ்வரம் ரொம்ப நல்லா வாசிச்சா.. எல்லாரும் நமஸ்காரம் பண்ணிணா, பெருமாள் கோயிலுக்கு போவா… பெருமாள் கோயில்ல ஸ்வாமிகளுக்கு மரியாதை பண்ணுவா… அங்கிருந்து திரும்ப அதிஷ்டானத்துக்கு வந்த போது, அதிஷ்டான வாசல்ல நின்னுண்டு, தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்காரம் பண்ணுவோம்… சில பேர் அங்க பிரதக்ஷிணம் பண்ணினா… எல்லோருக்கும் அவருக்கு எதாவது பண்ணனும்… எப்படியாவது நன்றியை தெரிவிக்கணும் என்று தோணறது..
அதை பார்க்கும் போது, நான் குழந்தையிலிருந்து பழகியதால எனக்கு நெகிழ்வாக இருந்து. எனக்கு அவர்கிட்ட ஒரு ஹீரோ வர்ஷிப் இருந்தது.. இவரை எப்படி எல்லாம் கொண்டாடணும்! இவரோட பெருமை எல்லாருக்கும் தெரியலையே அப்படின்னு நினைச்சுப்பேன்… அவர் பெருமை வேணாம்னு வெச்சதனால வெளியில தெரியல… ஆனா இப்போ அவரை அப்படி கொண்டாடுறா… அதுக்கு என்ன காரணம் னு யோசிச்சு பார்த்தேன்… அவர் என்ன பண்ணினார் எல்லோருக்கும்? How is he still an inspiration? What did he do to others? அவர் எல்லாருக்கும் என்ன கொடுத்தார் என்று யோசித்துப் பார்த்தபோது, சுந்தரகாண்டத்தில் ஒரு ஸ்லோகம்.. 26 ஆவது சர்கத்துல,
சீதாதேவி ரொம்ப நம்பிக்கை இழந்து, தன்னுடைய உயிரையே விடணும் என்று நினைக்கும் பொழுது ஒரு ஸ்லோகம் சொல்றா…
प्रियान्न संभवेद्दुःखम् अप्रियादधिकं भयम् ।
ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम् ॥
ப்ரியான்ன ஸம்ப⁴வேத்³து³:க²ம் அப்ரியாத³தி⁴கம்ʼ ப⁴யம் ।
தாப்⁴யாம்ʼ ஹி யே வியுஜ்யந்தே நமஸ்தேஷாம்ʼ மஹாத்மனாம் ॥
“ப்ரியமான வஸ்து கிடைக்கலை என்றால் துக்கம்.. அப்ரியமான ஒன்று வந்துடுமோ என்று பயம். இதிலிருந்து விடுபட்ட மஹான்கள் யாரோ அவாளுக்கு நமஸ்காரம்..” னூ சொல்றா இதிலிருந்து எப்படி விடுபட முடியும்? பற்றுகள் குறைந்தால் தான் விடுபட முடியும். குழந்தைக்கு உடம்புக்கு வந்துடுத்துன்னா ரொம்ப வருத்தமா இருக்கு.. அது சரியான அப்புறம் கூட, திரும்ப வந்துடுமோன்னு பயமா இருக்கு.. இதே மாதிரி எல்லாத்துலயும் இதே apply பண்ணிக்கலாம்… பரீட்சைனா ஒருவாட்டி ஃபெயில் ஆயிட்டா துக்கம்… அடுத்த attempt எழுதி pass பண்ணுவோமான்னு பயம். ஒரு வஸ்து வேணும்னா, அதுல இருந்து நமக்கு பயம், துக்கம் எல்லாம் வந்துடுறது.. எதெல்லாம் possess பண்றோமோ, எதோடு எல்லாம் attach ஆகுறோமோ, சுகம் னு நெனச்சு போறோம்… ஆனா அதோடு கூடவே துக்கம், பயம் எல்லாம் வந்துடறது.. அதுவே மஹான்கள் எப்படி இருக்கான்னா, பற்று வைக்காமல் இருக்கா… சிவன் சார், மஹா பெரியவா எல்லோரும் ஞானிகள்… ஸன்னியாசியாவே இருந்துட்டா.. ஸ்வாமிகள் நம்பளை மாதிரியே, குடும்பத்தோட இருந்துண்டு, எல்லா கஷ்டமும் படுற மாதிரி சூழ்நிலையில இருந்துண்டு, அதே சமயம் நம்ம அளவுக்கு துக்கப்படாமல், நம்ம அளவுக்கு பயப்படாம இருந்தார்.. அது எப்படி அப்படின்னா, அவருக்கு பற்று கம்மியா இருந்தது … குழந்தை விஷயத்திலேயே, குழந்தைன்னு இருந்தாலே உடம்புக்கு வந்துண்டு போயிண்டு தான் இருக்கும்.. நாம நம்மளோட கடமையை பண்ணணும்.. அதுக்கு டிவியை போட்டு பார்க்க வச்சிட்டு, நாம ஃபோன பார்த்துண்டு உட்காரக் கூடாது… ‘குமாரேஷ ஸூனோ’ மாதிரியான ஸ்லோகங்களை சொல்லி விபூதியை இட்டுட்டு, ஸ்வாமி கதை எல்லாம் சொல்லி, உடம்பு சரி ஆவதற்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணணும்… அப்புறம் உடம்பு வராமல் இருப்பதற்கு என்ன பண்ணணுமோ அதை பார்த்துக்கணும்.. அதையும் மீறி வந்ததுன்னா, சரியாகிவிடும் என்ற திடத்தோடு இருக்கணும்… இந்த ‘குமாரேஷ ஸூனோ’ சொல்லி விபூதி இடுவதற்கு ஸ்வாமிகள் சொல்லிக் கொடுத்தார்… அவர் தெய்வ பக்தியினால் ‘தாபத்ரயோன்மூலனம்’ அப்படின்னு எல்லா தாபங்களையும் போக்கிண்டார்.. நீயும் இதை ட்ரை பண்ணலாம் என்று அவரவர்களுக்கு ஏற்ற சுலபமான உபாயங்களை சொல்லி, அவாளுடைய துக்கத்தையும் பயத்தையும் குறைப்பதற்கு வழி சொல்லிக் கொடுத்தார்…
“स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महतो भयात्”
ஸ்வல்பமபி அஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் (கீதை 2.40) அப்படின்னு பெரிய பயத்துல இருந்து அது காப்பாத்திற்று.. அதனாலதான் இன்னைக்கும் அவரை கொண்டாடுகிறோம்…
How to really crystallize this? இந்த மாதிரி தான் எனக்கு பிடிச்சிருக்கு.. இந்த மாதிரி I want to be detached and be happier.. இவ்வளவு பயம் துக்கம் இல்லாமல் எனக்கு இருக்கணும் அப்படின்னு கேட்டா, ” நீ நிறைய பாராயணம் பண்ணு. பக்தி த்ரு’டப்படும்.. அது மூலமா ஞானம், வைராக்கியம் வரும். “ஞானம் பிறக்கும். உண்மை விளங்கும். மூகபஞ்சசதி ஸ்தோத்திரத்தை ஐந்து முறை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இரு!” அப்படின்னு என் புஸ்தகத்தில் எழுதிக் கொடுத்து இருக்கிறார்.. இதே மாதிரி விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாராயணீயம் எல்லாம் ஒரு நூறு பேருக்கு, அவாளுடைய extended familiesக்கு, எல்லாருக்கும் இதை சொல்லிக் கொடுத்து, எல்லாரும் இதை பாராயணம் பண்ணிக்கொண்டு, அதன் மூலமா துக்கத்தை கடக்கிறதுக்கும் அடுத்த பயத்துக்கு முன்னாடி இருக்கிற பீரியட்ல ரொம்ப வருத்தப்பட்டால், over worrying will lead to a vicious circle and spiral into depression etc.,. அப்படி இல்லாம ஒவ்வொரு வாட்டியும் மீண்டு வந்து, Then at some point you feel this is very beneficial. இதை எனக்கு காமிச்சு கொடுத்த என்னுடைய குருநாதர் பெரிய மஹான்.. அவரை கொண்டாட வேண்டும்-னு தோணரது.
ஸ்வாமிகள் லைஃப்ல ஒவ்வொரு நாளும் அங்கு வருகிறவர்களுக்கும் they will realise this truth.. அவர் பக்தியினால் கவலைகள் எல்லாம் தாண்டினவர்.. எப்பவும் பேரானந்தத்தில் திளைத்திருப்பார்.. பகவானை பற்றியும், மஹாபெரியவாளை பற்றியும் பேசும்போது we can easily see that..
“अनित्यम् असुखं लोकम् इमं प्राप्य भजस्व माम्”
“அநித்யம் அஸுக²ம்ʼ லோகம் இமம்ʼ ப்ராப்ய ப⁴ஜஸ்வ மாம்” (கீதை 9.33) என்பது பகவானுடைய உபதேசம்… அதை வாழ்ந்து காண்பிச்ச ஒரு மஹான் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.. துக்கத்தை எல்லாம் தாண்டி, ஞான வைராக்கியத்தோடு விளங்கி, மத்தவாளையும் “நீங்க இதற்கு முயற்சி பண்ணுங்கோ!” Meanwhile, உங்களுக்கு வருகிற ஆபத்துகளையும் பயங்களையும் நான் போக்குவேன் என்ற promiseஐயும் அவர் வழங்கியதால் தான், அவரை நாம இப்படி கொண்டாடுகிறோம்..
இப்படி
प्रियान्न संभवेद्दुःखमप्रियादधिकं भयम्।।
ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम् ||
என்று ஒருத்தர் இருந்தார் என்று ஸ்வாமிகளை நினைத்து நாம் நமஸ்காரம் பண்ணினா எப்படி ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஸீதாதேவிக்கு ஆறுதல் சொல்லி பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்தினாரோ அது மாதிரி நம்ம life ல வர கஷ்ட நஷ்டங்களில் இருந்து நம்மளை ஸ்வாமி காப்பாத்துவார்.
அப்புறம் அங்க அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை பண்ணி இருக்கிற மஹாலிங்க ஸ்வாமிகளுக்கு விசேஷமான அபிஷேகம் எல்லாம் நடந்தது… எப்பவும் ஆராதனை போது ஜ்வலிப்பார்.. அந்த ஸ்வாமியை பார்க்கிறது தனி ஆனந்தம்… அதை போட்டோ எடுக்க வேண்டாம் என்று சொல்வதால் எடுப்பதில்லை… அங்க நிக்கும்போதே ரொம்ப ஆனந்தமாக இருக்கும்… அதுக்கப்புறம் அந்த 16 பிராமணர்களை வரிச்சு, அவர்களுக்கு வஸ்திரமெல்லாம் கொடுத்து, சாப்பாடு எல்லாம் போட்டு, அவர்களை மேளதாளத்துடன் இங்கே அழைத்துக் கொண்டு வந்து, அவர்களுடைய பாத தீர்த்தத்தை வச்சுண்டு, அதுக்கு புருஷ ஸூக்தம் சொல்லி ஷோடஷோபசார பூஜை பண்ணி, ” இந்த 16 பிராமணர்கள் ரூபத்தில் என்னுடைய குரு இங்க வந்திருக்கார்.இந்த பாக்யம் கிடைத்ததே! ” . அந்தப் பாத தீர்த்தத்தை எடுத்து மூன்று ப்ரதக்ஷிணம் பண்ணினா.. அந்தப் பாத தீர்த்தம் கிடைத்தது என நர்த்தனம் ஆடணும் , குதிக்கணும் , அது மேல எல்லாம் சிந்தணும்.. நு சொல்லுவா. மஹாபெரியவா ஒவ்வொரு வாட்டியும் அதை பண்ணுவாராம்… பெரியவா 16 அல்லது 32 பிராமணர்களை வச்சிண்டு தன்னுடைய குரு, பரமகுரு, பரமேஷ்டி குரு, பராபர குரு எல்லாருக்கும் ஆராதனை பண்ணுவார்… அதைத் தவிர அந்த பரம்பரையில் “வடவாம்பலத்தில் மஹான் இருக்கார்.. நம்முடைய பீடாதிபதியாக இருந்திருக்கார்.. அவருக்கு நீ போய் ஆராதனை பண்ணு” அப்படின்னு சொல்லுவார். அதை பண்ணி அந்த குடும்பம் நன்னா வந்துடும்… நூறு வருஷத்துல சன்னியாசிகளை போற்றுவது என்பது பெரியவா நிறைய சொல்லிக் கொடுத்து, நன்னா நடக்கிறது .. அப்புறம் பெரியவா கிட்ட கைங்கரியம் பண்ணினவா எவ்வளவோ பேர் ஸந்நியாசி ஆகி, அவாளை ஆச்ரயிச்சு நிறைய குடும்பங்கள் முன்னுக்கு வந்திருக்கு…
வேதத்திலேயே இருக்கு.. உபநிஷத்தில், आत्मज्ञं ह्यर्चयेत् भूतिकामः “நல்ல வாழ்க்கையை விரும்புபவன் ஒரு ஞானி ஆச்ரயிக்கணும்” என்று.. “இந்த உலகத்துலயே நல்ல வாழ்க்கை கிடைக்கும் ” அப்படின்னு சொல்லி இருக்கு.. ஏன்னா ஞானிகளுடைய புண்யம், பாபம் அவாளை ஒட்டாது.. நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு அந்த புண்யம் கிடைக்கும்.. இந்த ஆராதனையில் கலந்து கொள்வது ஒரு பெரிய புண்யம்.. அப்படி இந்த ஆராதனை நாள் ஒரு ஸுதினமாக இருந்தது.. அவா கையில இருந்து அக்ஷதை வாங்கிண்டு, சாப்பிட்டுட்டு, ஆத்துக்கு வந்து சேர்ந்தாச்சு..
ஜானகி ஜீவன ஸ்மரணம்.. ஜய ஜய ராம ராம..
Yesterday, on January 28th 2025, we celebrated Govinda Damodara Swamigal’s Aradhana grandly in Pazhoor. Some people asked me to share my experience of attending it. I reached there a day earlier. Just like Swamigal showed unconditional love towards me when I was with him, now my students who learnt Mookapanchashati from me, are very affectionate towards me. Some of them came to the station to receive me. That evening, I went with them to a newly built Guruvayurappan temple in Mutharasanallur, since I hadn’t seen it before.
It was a very nice temple. Mahaperiyava appeared in the dream of a devotee, sitting under a tree there and said “I like this place very much. Build a temple for Guruvayurappan to my right side.” The rest happened naturally. The temple is very beautiful and so is Guruvayurappan. We went in the evening and lit lamps in the shrines. The evening Deeparadhana happened at Guruvayurappan and Ayyapan shrines. They gave us Prasadam. Someone was reading Narayaneeyam there. There are murals depicting scenes from the Bhagavatam there. They are Superb. Everyone should see them. We then came to Pazhoor. There, four Srivaishnava youths were chanting Sri Rudram Jataparayanam. One of them had learnt it with Swamigal’s blessings and was teaching the others, hence I said boys. They must be 20-25 years old. It was blissful. After hearing that for a while, and performing Pradakshinam Namaskaram to Swamigal, we went to have a Darshan of Jambukeshvara and Akhilandeshvari, and it happened to be Pradosham day. We then had dinner and went to sleep.
Early next morning we went to Pazhoor. Last year, by chance there were 5-6 of us who knew Mookapanchashati. We chanted it in the intervals available and read 350 verses. So we decided we must read all 500 this time, and after breakfast about 6-7 of us sat down at the Ramar Bhajanai Matham, read it fully and felt very happy. I feel that just like people sing the Pancharatna Keertanas on Bahula Panchami i.e. Tyagaraja Aradhana, people can chant works dear to him, Mookapanchashati and Narayaneeyam everywhere. Those who come here can do it together here.
As usual, the picture of Swamigal with Periyava, and the Vigraha of Swamigal, both were decorated. The decoration was exquisite and divine. They were taken in a procession around the village, with Nadasvaram and Thavil. Arathi was performed at every door, and the musicians played very well. Everyone did Namaskarams. They reach the Perumal koil where honours are done to Swamigal. When they return to the Adhishtanam from there, we do Namaskaram chanting Totakashtakam at the entrance. Some people did Angapradakshinam. Everyone wants to do something to somehow express their gratitude to him.
Seeing all this, and having known him from my childhood, I was moved to tears. I hero-worshipped him. I used to feel that people should celebrate him so much more, they don’t know his greatness etc. Since he did not want fame, people did not know then. But now they worship him like this and it makes me happy. I was thinking about the reason for this. How is he still an inspiration? What did he do to others? Pondering about what he bestowed to everyone, I recalled a verse from Sundarakandam (26th Chapter) प्रियान्न संभवेद्दुःखम् अप्रियादधिकं भयम् । ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम् ॥
“There is sadness when we don’t get something dear to us, and fear that something we don’t want may come to us. Great souls are freed from these two”. How can one be free from these? Only if attachments decrease one can be freed. We feel very sad if our child is unwell. If it recovers, there is a fear that the illness may recur. One can apply this everywhere. If we fail an exam, there is sorrow and then fear about not succeeding in the next attempt. If we want something , immediately unhappiness and fear arise from it. Whatever we possess, whatever we get attached to, we do that thinking of the happiness, but sorrow and fear come along.
If we look at great souls, they remain detached. Sivan Sar, Mahaperiyava – they are Jnanis, and remained Sanyasis. (But) Swamigal was a householder like us, amidst all the problems people face, yet not affected by sorrow and fear as much as we are. That was because his attachment was less. For instance, children anywhere will suffer from some illnesses. We have to do our duty. We cannot be engaged with our phones, letting the child watch TV. We must chant verses like “Kumaaresha suno”, apply Vibhuti to the child, tell it divine stories and do what is required to make help the child recover and also to not fall ill again. Despite that, if illnesses recur, we must be strong in our faith that God will make things alright. Swamigal taught us to apply Vibhuti chanting “Kumaaresha suno”.
With his devotion to god, which is “taapa traya unmoolanam” (exterminating the three kinds of suffering), he was rid of all suffering. He taught people ways to reduce their sorrow and fear, by teaching them simple methods like this, suiting each person..
“स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महतो भयात्”
“Even a little bit of this Dharma protects from great fear” (Gita 2.40), and that’s why we celebrate him today.
Through the menthods he taught we get some relief. How to really crystallize this? If we asked him “This is what I want. I want to be detached and be happier, without so much sorrow and fear”, he would say “ Do a lot of Parayanam. Your Bhakthi will become stronger and through that, Jnanam and Vairagyam will be obtained”. He has written in my book “You will attain Jnanam and realize the truth. Keep chanting Mookapanchashati five times repeatedly”. Similarly he has taught and encouraged around a hundred people and their extended families, to chant Vishnu Sahasranama, Narayaneeyam etc. and thus overcome sorrow. If we worry too much in the interval between problems in life, over worrying will lead to a vicious circle and spiral into depression etc. Swamigal’s devotees were able to feel secure. Then at some point they feel “This is very beneficial, and my Guru who showed me this path is indeed a great Mahatma and I must exalt him.”
All those who used to come everyday to Swamigal, would realise this truth.Thst He surmounted all worries with his Bhakti. He was always steeped in bliss. We could easily see that when he spoke about God, about Mahaperiyava…
अनित्यम् असुखं लोकम् इमं प्राप्य भजस्व माम्”
“Having attained this transitory, sorrow-filled world, worship me” (Gita 9.33) is Bhagavan’s teaching. Govinda Damodara Swamigal is a great soul who practiced this in an exemplary manner. He overcame sufferings, shone with Jnanam and Vairagyam and also encouraged others “Try walking this path. I will remove whatever perils and fears come to you in the meantime.” Because he gave us this promise, we honour him so much.
प्रियान्न संभवेद्दुःखमप्रियादधिकं भयम्।। ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम् ||
If we salute Swamigal thinking that such a person, exemplifying this verse, lived amidst us, the Lord will save us from dangers and difficulties, just like Anjaneya Swamy came and gave solace to Seetha Devi and saved her from trouble.
Later, there were special Abhishekams and aradhana done to Sri Mahalingaswamy who is enshrined in the Adhishtanam. He is always resplendent during the Aradhanas, seeing him is great joy. Since we are told to desist from photography, I did not take photos. Just being there is blissful. Then, the 16 chosen Vaidikas were given gifts of garments and food and brought here with the music of Nadaswaram and Thavil. Their Pada-teertha is worshipped with sixteen Upacharas along with the chanting of Purusha Suktam. Then they carry the Pada-teertha and perform three Pradakshinams, “Today my Guru has come here in the form of these sixteen Vaidikas. I am blessed to have this Pada-teertham” – one must dance with such reverence and delight during pradakshinam, such that the Pada-teertham splashes on one’s person, it is said
Mahaperiyava used to perform the Aradhanas of his Guru, Paramaguru, Parameshtiguru and Paraaparaguru with 16 or 32 Vaidikas. Moreover he would guide devotees to honour other Gurus of the lineage, “There is a great Mahatma in Vadavambalam. He was a Peethadhipati in our Math. You go and perform his Aradhana” . That family would prosper following this. In the last hundred years, Periyava has taught us how to exalt Sanyasis and it’s happening commendably, everywhere. Moreover, many of those who served Periyava as attendants, became Sanyasis and many families have prospered by serving and worshipping them.
It is said in the Vedas and Upanishads that one who wants a good life must take refuge in a Jnani. आत्मज्ञं ह्यर्चयेत् भूतिकामः It assures even worldly happiness since the Paapa-punyas of a Jnani do not affect him. The Punyas accrue to those who do Namaskaram to them. Therefore participating in this Aradhana is a great Punyam. Thus it was a blessed day, receiving Akshata from him and eating (his Prasadam) and getting back home.
Janaki jeevana smaranam. Jaya Jaya Rama Rama.