Categories
Upanysams

காமாக்ஷி அபிஷேகம்

காமாக்ஷி அபிஷேகம்

मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां

प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः ।

यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां

परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥

மனீஷாம்ʼ மாஹேந்த்³ரீம்ʼ ககுப⁴மிவ தே காமபி த³ஶாம்ʼ

ப்ரத⁴த்தே காமாக்ஷ்யாஶ்சரணதருணாதி³த்யகிரண: ।

யதீ³யே ஸம்பர்கே த்⁴ருʼதரஸமரந்தா³ கவயதாம்ʼ

பரீபாகம்ʼ த⁴த்தே பரிமலவதீ ஸூக்திநலினீ ॥

மஹாபெரியவா 1958 வாக்குல சென்னைக்கு வந்திருந்தா. அதிகமா சம்ஸ்க்ருத காலேஜ்ல தான் தங்கினா. அங்க இருந்ததுண்டு பல கோவில்களுக்கு போறது, அப்படியெல்லாம். சாயங்கால வேளைல உபன்யாசம் பண்ணுவா. அதை தமிழ் shorthandல எடுத்து கி. வ. ஜகந்நாதன், வாகீச கலாநிதினு பெரியவா டைட்டில் கொடுத்த பெரிய பண்டிதர், உ. வே. சாமிநாத ஐயரோட சிஷ்யர். அவர் எடிட் பண்ணி, கலைமகள்ல 4 பாகங்களா ஆசார்ய ஸ்வாமிகள் உபன்யாசங்கள்னு போட்டுருக்கா. எதுக்கு இதை சொல்றேன்னா, ரொம்ப authentic, very close to what periyava spoke. 

அதுல, முதல் பாகத்துலே 6வது chapter, ‘காமேஸ்வரி’ அப்படின்னு. அதுல, “அம்பாளுடைய ஸ்தோத்ரங்களில் மூகபஞ்சசதி என்பது மிகவும் உயர்ந்தது. அது உண்டானது காஞ்சிபுரத்தில். அதில் 500 ஸ்லோகங்கள் அடங்கியுள்ளன. அதில் ஒவ்வொன்றிலும் அநேகமாக காஞ்சி என்ற பதமோ, காமகோடி என்ற பதமோ, காமாக்ஷி என்ற பதமோ, ஏகாம்ர என்ற பதமோ, தொண்டை மண்டலத்தைக் குறிக்கும் துண்டீரம் என்ற பதமோ இல்லாமல் இராது. அதாவது 500லயும் இருக்கும், ஏதாவது ஒண்ணு. Mostly காமாக்ஷி இருக்கும், சிலதுல காஞ்சி, ஏகாம்ர – ஏதாவது ஒண்ணு வந்துடும். “அந்த 500 ஸ்லோகங்களும் சம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன. ஒன்றைக் காட்டிலும் ஒன்று அம்ருதக் கடலாக அமைந்திருக்கிறது. நன்றாக அதை படித்து ஆராய, பாக்யம் கிடைத்தவர்களுக்கு இது தெரியும். சில சமயம், நித்யம் ஒன்றை பார்த்தாலும், பார்க்க பார்க்க அலுப்பே தட்டாது. குழந்தைகளுக்கு யானை கிட்ட போக பயம், ஆனால் தூர நின்று காலையில் பார்க்கும், மத்தியானம் பார்க்கும், மாலையில் பார்க்கும். எத்தனை இதை பார்த்தாலும் சலிப்பில்லாமல், யானை எங்கே? யானை எங்கே? என்று குழந்தைகள் அதைத் தான் பார்க்கும். இதே போல சமுத்திரமும், இதே போல சந்திரனும்””, அப்படியெல்லாம் சொல்லிண்டே வரா. அதுக்கு அப்புறம், இப்படியே படிக்கப்படிக்க அலுப்புத் தட்டாத அம்ருத சமுத்திரமாக மூகபஞ்சசதி இருக்கிறது. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமான ஆனந்தம் உண்டாகிறது. அதன் ரசத்தை அனுபவிக்கக் கூடிய பாக்யம் உள்ளவர்களுக்கு இது தெரியும். அந்த ஸ்லோகங்கள் அம்பாளுடைய கடாக்ஷத்தினாலேயே வந்தமையால், இவ்வளவு ஆனந்தத்தை தருவனவாக இருக்கின்றன”. எவ்வளவு சந்தோஷம் பெரியவாளுக்கு மூகபஞ்சசதிய பத்தி பேசும் போது. அவ்வளவு அதை அனுபவிச்சிருக்கா. மூகபஞ்சசதி மடத்துல இருந்து publish பண்ண bookல, 5 பக்கத்துக்கு ஸ்ரீமுகம் கொடுத்து இருக்கா. 

 

இன்னொரு நாள் சௌந்தர்யலஹரிய பத்தி பேசும் போது, அம்பாளைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் ஆதி சங்கர பகவத்பாதர்கள் செய்த சௌந்தர்யலஹரியும், மூக கவி செய்த மூகபஞ்ச சதியும் ஈடு இணை இல்லாமல் நிற்கின்றன. தேர்ந்த சைத்ரிகன் ஒருவன் அம்பாளின் ஸ்வரூபத்தை எழுதிக் காட்டுகிற மாதிரி, இவை அம்பிகையின் திவ்ய வடிவத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடும். அவளுடைய மகிமையில், நம் மனசு மூழ்கிக் கிடக்கும்படி செய்யும். கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியை, கண்ணால் காணவும், மனசால் அனுபவிக்கவும் செய்கிற வாக் சக்தி, சௌந்தர்ய லஹரிக்கும், மூகபஞ்ச சதிக்கும் உள்ளது. கம்பீரம் அத்தனையும், சௌந்தர்யலஹரியில் அடங்கி இருக்குறது. ‘மார்தவம்’ – அதாவது ம்ருதுத் தன்மை முழுவதும் மூகபஞ்சசதியில் உள்ளது”, அப்படின்னு பெரியவாளுக்கு மூகபஞ்சசதி மேல எவ்ளோ ப்ரியம் அப்படிங்கறது தெரியறது. பல தடவை பேசி இருக்கா. எப்படி அது உண்டாச்சு, அதெல்லாம் பேசி இருக்கா. இந்த orderஅ பத்தி ரொம்ப stress பண்ணி பேசி இருக்கா. ஆர்யா, அப்பறம் பாதாரவிந்தம், அப்பறம் ஸ்துதி, அப்பறம் கடாக்ஷம், அப்பறம் மந்தஸ்மிதம் அப்டிங்கறத பத்தி. 

இந்த மூகபஞ்சசதி, ஸ்வாமிகள் அனுகிரஹத்தினால கிடைச்சு படிச்சுண்டு இருக்குற பாக்யமோ என்னமோ, நேத்தி திடீர்னு ஒருத்தர் கூப்பிட்டு, காஞ்சிபுரத்துல அம்பாளுக்கு அபிஷேகத்துக்கு கொடுத்து இருக்கேன், நீங்க கூட வரேளா அப்படின்னு கேட்டா, என்கிட்டே மூகபஞ்சசதி படிக்கிறவா. நான் சின்ன வயசுலேர்ந்து காமாக்ஷி கோவிலுக்கு போயிண்டு இருக்கேன். எங்க அம்மாவோட சித்தி சித்தப்பா, தங்கத் தேர் கட்டும்போது, மஹாபெரியவா சொல்லி பங்கு எடுத்துண்டு இருக்கா. அதனால வருஷா வருஷம் தை பௌர்ணமிக்கு, 40 வருஷத்தக்கு மேல அந்த சித்தப்பா தாத்தா, அதுக்கு அப்பறம் எங்க அப்பா, இப்போ நாங்கள்லாம் போய், அந்த தங்கத்  தேர், ஆகாசத்துல பௌர்ணமி நிலவு, தங்கத் தேர்ல காமாக்ஷி, மஹாபெரியவா அதை இழுக்குறதை பார்த்து இருக்கேன். அந்த மாதிரி, காமாக்ஷி தரிசனம் கிடைச்சிருக்கு. ஆனா,  காமாக்ஷியோட அபிஷேகம் பார்த்தது இல்ல. நேத்தி அவா கூப்பிட்ட உடனே சரின்னு கிளம்பினேன். அங்க போய் கொஞ்ச நேரம் காத்து இருந்தோம். அப்பறம் சங்கல்பம் பண்ணிட்டு அம்பாள் முன்னாடி உட்கார வெச்சா. முன்னெல்லாம் ரொம்ப பக்கத்துல அந்த ஸ்ரீசக்கரமே கண்ணுக்கு தெரியுற அளவுக்கு பக்கத்துல எல்லாம் விடுவா, இப்போ அதுக்கு அடுத்த கட்டுலதான் உட்கார வெக்குறா, உள்ள யாரும் விடுறது இல்லனு சொன்னா. முன்ன அம்பாளை தர்சனம் பண்ணி, குங்குமத்தை அரூப லக்ஷ்மிகிட்ட போட்டு, பெருமாளை தர்சனம் பண்ணிட்டு, இதெல்லாம் பண்ணிண்டு இருந்தோம், இப்போ என்னமோ விடுறது இல்ல. ஏதாவது வேலை ஏதாவது பண்றாளா இருக்கும். 

அலங்காரம் எல்லாம் இல்லாமல் அம்பாளை பார்க்கும் போது, ஒரு much younger அப்படிங்கற மாதிரி ஒரு feeling, அந்த ரூபமே கொஞ்சம் சின்னதா இருக்கு இல்லையா – அந்த ஆபரணங்கள், புடவையெல்லாம் இல்லாத போது, நன்னா தெரிஞ்சிது, அந்த பாதங்கள் especially ரொம்ப நன்னா தெரிஞ்சுது. நிறைய விஷயம் பண்ணா, அந்த பால் அபிஷேகம் பண்ணும் போது 

क्षीराब्धेरपि शैलराजतनये… [க்ஷீராப்³தே⁴ரபி ஶைலராஜதனயே…]

அப்படின்னு அந்த மூகபஞ்சசதில மந்தஸ்மிதம் தான் படிச்சிண்டு இருந்தேன். அது, அப்பறம், 

पुम्भिर्निर्मल मानसै: [பும்பி⁴ர்நிர்மல மானஸை:] அதெல்லாம் ஞாபகம் வந்தது. அப்பறம், சந்தன அபிஷேகம் பண்ணிட்டு, திரை போட்டு, அந்த கடாக்ஷத்தையும், மந்தஸ்மித்தையும் நன்னா தெரியும்படியா பண்ணி ஒரு ஹாரத்தி காமிச்சா – ஆஹா அப்படினு கண்கொள்ளா காக்ஷியா இருந்தது. அதுக்கு அப்பறம் தயிர் அபிஷேகம் பண்ணும் போது, அந்த ரூபம் நன்னா தெரிஞ்சுது. பாலாவது விட்ட உடனே ஓடி போய்டுறது, தயிர் அபிஷேகம் பண்ணும் போது நன்னா தெரிஞ்சுது, அப்பறம் இளநீர் அபிஷேகம், ஒவ்வொரு அபிஷேகமும் அம்பாளுக்கும் பண்ணி ஸ்ரீசக்கரத்துக்கும் பண்றா. ஒவ்வொரு அபிஷேகமும் முடிஞ்ச உடனே, கற்பூர ஹாரத்தி பண்ணி, அப்பறம் ஜலத்தை விட்டு அபிஷேகம் பண்ணி, திரும்பவும் அடுத்த அபிஷேகம். அப்படி, ஒரு 20 நிமிஷத்துக்கு மேல அபிஷேகம் பண்ணா. அம்பாள் முன்னாடி ஒரு தங்க வீணை வெச்சு இருந்தா. அதனால உட்கார்ந்து பாத்தா எனக்கு தெரியல, அதனால நின்னுண்டே பார்த்தேன் நான் – முழுக்க ஸ்வாமியை நன்னா பார்க்கணுமே அப்டிங்கறதுக்காக. அதுக்கு அப்பறம், ரொம்ப நேரம் அலங்காரம் பண்ணா – சந்தனக்காப்பு, அதனால நேரம் ஆச்சு போலருக்கு. அந்த புடவையெல்லாம் சார்த்தி, அந்த கிரீடமும், கரும்பு வில்லும், பஞ்ச புஷ்ப பாணமும், பாசாங்குசமும், அந்த கடாக்ஷமும், மந்தஸ்மிதமும் ரொம்ப கண்கொள்ளா காட்சியா இருந்தது – மனசுல நெரப்பிண்டு, ப்ரஸாதத்தை வாங்கிண்டு வந்தோம். 

நேத்திக்கு பௌமாஸ்வினி புண்ய காலம்னு அதுவும் சேர்ந்தது. யாரோ அம்பாளுக்கு தங்க வீணை சமர்பிச்சிருந்தா. அலங்காரம் முடிச்சிட்டு அந்த வீணையும் வெச்சிண்டு 

क्वणत्काञ्ची काञ्चीपुरमणिविपञ्चीलयझरी–
शिरःकम्पा कम्पावसतिरनुकम्पाजलनिधिः ।
घनश्यामा श्यामा कठिनकुचसीमा मनसि मे
मृगाक्षी कामाक्षी हरनटनसाक्षी विहरतात् ॥

க்வணத்காஞ்சீ காஞ்சீபுரமணிவிபஞ்சீலயஜ²ரீ– 

ஶிர:கம்பா கம்பாவஸதிரனுகம்பாஜலநிதி⁴: ।

க⁴னஶ்யாமா ஶ்யாமா கடி²னகுசஸீமா மனஸி மே

ம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ ஹரனடனஸாக்ஷீ விஹரதாத் ॥

அப்படிண்ணு அந்த ஸ்லோகம் – அதை சொல்லி ஸந்தோஷப் பட்டேன். கடாக்ஷத்தை பார்க்கும் போது, என்னோட friends circleல இப்ப நிறைய ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்ரமம் இருக்கு. 

बाणेन पुष्पधनुषः परिकल्प्यमान-

त्राणेन भक्तमनसां करुणाकरेण ।

कोणेन कोमलदृशस्तव कामकोटि

शोणेन शोषय शिवे मम शोकसिन्धुम् ॥

பா³ணேன புஷ்பத⁴னுஷ: பரிகல்ப்யமான-

த்ராணேன ப⁴க்தமனஸாம்ʼ கருணாகரேண ।

கோணேன கோமலத்³ருʼஶஸ்தவ காமகோடி

ஶோணேன ஶோஷய ஶிவே மம ஶோகஸிந்து⁴ம் ॥

 அப்படின்னு சோகக் கடலையே உன்னுடைய ராம பாணம் போன்ற இந்த கடாக்ஷம் வற்ற அடிக்கட்டும், அப்படின்னு வேண்டிண்டேன். ப்ரதக்ஷிணம் பண்ணி, அங்க அந்த காயத்ரி மண்டபம் இருக்குற இடத்துல ப்ரதக்ஷிணம் பண்ணி வரும்போது 500 ஸ்லோகமும் மூகபஞ்சசதி, அபிராமி அந்தாதி 100 ஸ்லோகமும், சௌந்தர்யலஹரி 100 ஸ்லோகம் எல்லாத்தையும் பெரியவா கல்வெட்டா போட்டு இருக்கா. அப்பறம், ஷ்யாமளா, ராஜ மாதங்கி, அன்னபூரணி, இந்தப் பக்கம் சாஸ்தா, அதுக்கு அப்பறம் ஆதி சங்கரர், நிறைய இடத்துல பிள்ளையார், முருகர் எல்லாம் தர்சனம் பண்ணிட்டு, கொடிமரத்துல நமஸ்காரம் பண்ணி 

कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।
गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥

குண்ட³லி குமாரி குடிலே சண்டி³ சராசரஸவித்ரி சாமுண்டே³ ।

கு³ணினி கு³ஹாரிணி கு³ஹ்யே கு³ருமூர்தே த்வாம்ʼ நமாமி காமாக்ஷி ॥

அப்படின்னு, அந்த கொடிமரத்துல நமஸ்காரம் பண்ணும் போது, 

श्रियं विद्यां दद्याज्जननि नमतां कीर्तिममितां

सुपुत्रान् प्रादत्ते तव झटिति कामाक्षि करुणा ।

त्रिलोक्यामाधिक्यं त्रिपुरपरिपन्थिप्रणयिनि

प्रणामस्त्वत्पादे शमितदुरिते किं न कुरुते ॥ 

ஶ்ரியம்ʼ வித்³யாம்ʼ த³த்³யாஜ்ஜனனி நமதாம்ʼ கீர்திமமிதாம்ʼ

ஸுபுத்ரான் ப்ராத³த்தே தவ ஜ²டிதி காமாக்ஷி கருணா ।

த்ரிலோக்யாமாதி⁴க்யம்ʼ த்ரிபுரபரிபந்தி²ப்ரணயினி

ப்ரணாமஸ்த்வத்பாதே³ ஶமிதது³ரிதே கிம்ʼ ந குருதே ॥

அம்மா, உன் பாதத்துல நமஸ்காரம் பண்ணா அது என்னதான் கொடுக்காது, அப்படின்னு ஒரு ஸ்லோகம். நல்ல குழந்தைகள், பெரிய பதவி, நிறைய செல்வம் எல்லாம் கொடுக்கும். அந்த மாதிரி எனக்கும், என்னோட friends, relatives எல்லாருக்கும் நிறைய health & happines குடும்மானு வேண்டிண்டேன். இந்த ஸ்லோகத்துல, அதெல்லாம் உன் நமஸ்காரம் கொடுக்கும், எனக்கு ‘ஶ்ரியம்ʼ வித்³யாம்ʼ த³த்³யாத்’ அப்படின்னு கேட்டு இருக்கார், அதுக்கு மஹாபெரியவா, எனக்கு அந்த போக போக்கியங்கள்லாம் வேண்டாம், வேதமாகிய செல்வமும், ஞானமாகிய ஆத்ம வித்தையையுமே வேண்டும் – அப்படின்னு கேக்கறார்னு ஒரு interpretation. நமக்கு மத்த விஷயங்கள் எல்லாம் கிடைச்சு, த்ருப்தி ஆகறது, அப்பறம் இன்னும் வேணும்னு இருக்கு, அப்படினு அந்த rutலயே இல்லாம, இந்த மூகபஞ்சசதி, நாராயணீயம் இதெல்லாம் நமக்கு வேதம். நமக்கு இதெல்லாம் படிச்சு, இதெல்லாம் அனுபவிக்கறதுக்கான அந்த செல்வத்தையும், அதுக்கு அப்பறம் உலக விஷயங்களை – எதையாவது ஜாஸ்தியா அனுபவிக்க try பண்ணா, உடம்பு படுத்துறது, பணம் இத்யாதி பற்றியெல்லாம் கவலை பட்டால் உடம்பு படுத்துறது, அந்த மாதிரி கொஞ்சமாவது, இந்த ஆத்ம வித்தை, விவேகம், வைராக்கியம், ஞானம் எல்லாம் கொடுங்கோனு அம்பாள் கிட்ட வேண்டிண்டு கிளம்பினோம். 

அங்க ப்ரஸாதம் கொடுத்தா – அதை சாப்டுட்டு – கடைசியில நமக்கு அதுதான், தயிர் சாதம் கொடுத்தா, அந்தப்பக்கம் மடப்பள்ளி பக்கம் போனா, புளியஞ்சாதம் கொடுத்தா, அதையெல்லாம் சாப்பிட்டுட்டு, மடத்துல போய், பெரியவாளுக்கு ப்ரதக்ஷிணம் பண்ணி, 4 நமஸ்காரம் பண்ணிட்டு வாசல்ல வந்தா, உலகளந்த பெருமாள் ஜாம் ஜாம்னு ஹனுமந்த வாஹனத்துல வந்ததுண்டு இருந்தார். அவரையும் தரிசனம் பண்ணிட்டு, ஆத்துக்கு வந்து சேர்ந்தோம்.

3 replies on “காமாக்ஷி அபிஷேகம்”

நமஸ்காரம் அண்ணா… உங்களுடைய அனுபவம் மிகவும் ரொம்ப அருமையாக இருந்தது… நீங்க அனுபவித்தது மட்டுமில்லாமல் எங்கள் கண் முன் அம்பாளை நிறுத்தி விட்டீர்கள்… அம்பாளை நினைக்கும் போதே அவளுடைய மந்தஸ்மிதமும், தயையோடு கூடிய கருணை முகமும் தான் ஞாபகம் வரும்.. அந்த ஆனந்த அமிர்த கடலில் எங்களையும் திரும்பத் திரும்ப மூழ்கும்படி பண்ணி விட்டீர்கள்🙏🏻

स्मयमानमुखं काञ्चीमयमानं कमपि देवताभेदम् ।
दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः ॥

“ஶ்ரியம் வித்யாம் தத்யாத்” என்கிற ஸ்லோகம் சொல்கிற போது, உன்னுடைய பாதத்தில் நமஸ்காரம் பண்ணினால் அது என்னதான் கொடுக்காது? எனக்கு செல்வமும் வித்யையும் கொடுக்கட்டும் னு வேண்டுறதை மஹாபெரியவா “வேதமாகிய செல்வமும் ஞானமாகிய ஆத்ம வித்யையுமே கொடு” என்று அர்த்தம் பண்ணியிருக்கிறார்…

இதைக் கேட்டபோது ஆசார்யாள் செய்த கனகதாரா ஸ்தோத்திரத்தில் ஸம்பத்கராணி ச்லோகம் ஞாபகம் வருகிறது… இந்த ச்லோகத்திலும், “அம்மா, மஹாலக்ஷ்மி! உன்னை நமஸ்காரம் பண்ணிவிட்டால் போதும்; அந்த நமஸ்காரங்கள் சம்பத்து, சகல இந்திரிய சந்தோஷங்கள், சாம்ராஜ்யம் எல்லாம் தந்து விடும். ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம். செல்வ தேவதையான நீ எனக்குத் தருகிற செல்வம் இந்த நமஸ்காரம்தான். என் பாபங்கள் எல்லாவற்றையும் கல்லி எறிவதற்கும் உன்னை நமஸ்கரிப்பதே சாதனமாகிறது. ” என்கிறார் …. அவளைப் பணத்தின் அதிதேவதையாக மட்டும் நினைக்காமல் மனமாசுகளையெல்லாம் நீக்குகிற ஞானாம்பிகையாக வைத்துப் பிரார்த்திக்கிறார்.

ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது? அதனால் இந்த நமஸ்காரமேதான் பெரிய செல்வம். அதனால் “எப்போது பார்த்தாலும் உன்னை வணங்கிக் கொண்டிருக்கும்படியான பெரிய செல்வத்தைத் தவிர வேறே எதுவும் வேண்டேன்!” என்று ச்லோகமாகப் பாடிவிட்டார்..

सम्पत्कराणि सकलेन्द्रियनन्दनानि
साम्राज्यदाननिरतानि सरोरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरितोद्धरणोद्यतानि
मामेव मातरनिशं कलयन्तु नान्ये ।।

மிகவும் அருமை.அம்பிகை பற்றிய
உங்கள் வர்ணனை தாயை கண்முன் நிறுத்துகிறது.
நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.