Categories
Upanysams

மூன்று திருப்புகழ் பாடல்கள் பொருள்

மூன்று திருப்புகழ் பாடல்கள் பொருள் 20 min

மநீஷாம் மாஹேந்த்ரீம் ககுபமிவதே காமபி தஷாம் ப்ரதத்தே காமாக்ஷ்யா: சரண தருணாதித்ய கிரண: | யதீயே ஸம்பர்கே த்ருதரஸ மரந்தா கவயதாம் பரிபாகம் தத்தே பரிமளவதீ ஸூக்தி நளினி ||
இன்னைக்கு மஹா ஸ்கந்த சஷ்டி. முருகப் பெருமானை வழிபட உகந்த நாள். முருகப் பெருமானை வழிபட உகந்த நூல் திருப்புகழ். அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ். அந்த திருப்புகழ்ல இருந்து ஒன்று, இரண்டு பாட்டுகளுக்கு அர்த்தம் சொல்லலாம் அப்படின்னு ஆசைப்படுறேன்.
முதல் பாடல்: பழனி திருப்புகழ்
> திமிர உததி அனைய நரக ஜனனம் அதனில் விடுவாயேல்
> செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே
> அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின்
> அருளதருளி எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்
> சமர முகவெல் அசுரர் தமது தலைகள் உருள மிகவே நீள்
> சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே
> வெமர வணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே
> மிடறு கரியர் குமர பழநி விரவும் அமரர் பெருமாளே.
>
இது ஒரு பழனிப் பாடல். இதுல “திமிர உததி அனைய” – இருண்ட கடல் போன்ற “நரக ஜனனம் அதனில்” – இந்த பவ சாகரம் அப்படிலாம் சொல்லுவோம் இல்லையா? நரகத்துக்கு ஒப்பானதான இந்தப் பிறப்பு, இதில் “விடுவாயேல்” – நீ என்னை விழும்படிச் செய்தால். அதாவது பவ சாகரத்துல நான் என்னுடைய கர்மாவால விழுறேன். அப்படி நான் விழுந்தா… இப்போ எங்கயும் பார்க்கிறோமே, உலகத்துல “லோகம் சோக ஹதம் ச ஸமஸ்தம்” அப்படின்னு எல்லாருக்கும் பலவிதமான கஷ்டங்கள். அதனால இது இருண்ட கடல் போன்றது, நரகத்துக்கு ஒப்பானது. ஆனால் நான் இதுல வந்து பிறக்க வேண்டியிருந்தால், எனக்கு நீ இந்த அனுக்கிரஹம் பண்ணனும். என்ன?
“செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே” – செவிடு, குருடு, உடம்புல ஒரு அங்கஹீனம், வறுமை இதெல்லாம் எதுவும் என் பக்கத்துலயே வரக்கூடாது. “அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே” – அமரர் போன்ற தேவர்கள் போன்ற அழகும், அதிக குலமும் – உயர்குடி பிறப்பும், அறிவும், “வித்யா விநய ஸம்பன்ன:” அப்படின்னு வித்தையினால வரக்கூடிய அந்த ஒழுக்கம், அந்த மாதிரி நல்ல குணங்களும் அந்த நிறைவு… இதெல்லாம் எனக்கு வருமாறு “நின் அருளதருளி” – உன்னுடைய அருள் இருந்தாதான் இதெல்லாம் கிடைக்கும். இதெல்லாம் நீ எனக்குக் கொடு.
“எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்” – இதெல்லாம் கூடப் போதாது, என்னை நீ மனம் வெச்சு உனக்கு அடிமையாக ஆக்கிக்கிறதுக்கு “அடிமை கொளவும் வரவேணும்”. உன்னை அடிமையாக ஆட்கொள்ள நீ வரவேணும். எப்படி வருவார்? குருவா வருவார். குருவா வந்து நமக்கு பக்தியைச் சொல்லிக் கொடுத்தாதான், நாம பகவானோட அடிமையா ஆக முடியும், அவருடைய காரியத்தைப் பண்ண முடியும்.
இதுல எல்லாப் பிரார்த்தனையும் இருக்கு. அதோட என்னை ஏற்றுக்க வேண்டும் அப்படிங்கிற பிரார்த்தனையும் இருக்கு. எனக்கு ரொம்ப குளோஸ் பிரண்ட்ஸ், ஃபேமிலி பிரண்ட்ஸ் ஒரு நாராயண ஐயர்னு, அவா பெரியவா தரிசனத்துக்குப் போயிருக்கா. பெரியவா உள்ள இருக்கா, ஒரு அரை மணி முக்கால் மணி இப்படிக் காத்துண்டு இருக்கா அவா குடும்பத்தோட போயிருக்கா, சின்னக் குழந்தைகளா இருக்கும் போது. அப்போ “திருப்புகழ் பாடுங்கோ அப்படின்னு உங்களுக்குத் தெரியுமே” அப்படின்னு அங்க இருக்கிறவா சொல்லிருக்கா. இந்தப் பாட்டைப் பாடுன போது, “நின்னருள தருளி எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்” அப்படின்னு பாடுன உடனே பெரியவா கதவைத் திறந்துண்டு சிரிச்சுண்டே வந்தாளாம். அந்த மாதிரி பெரியவாளையும் இழுக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தத் திருப்புகழ்.
இந்தத் திருப்புகழ் முருகன் திருவருள் சங்கம்னு எங்க அப்பா காலத்துல ஆரம்பிச்சது, இப்போ இன்னைக்கு 70-வது வருஷம் சஷ்டி கொண்டாடுறா. அது 25-வது வருஷம் வெள்ளி விழா அப்போ பெரியவாட்டப் போய் ஒரு மூணு மணி நேரம் பாடி இருக்கார். பெரியவா ஆசீர்வாதம் பண்ணிருக்கா, பொன் விழா வைர விழா எல்லாம் பார்ப்பேள் அப்படின்னு. அந்த மாதிரி இன்னைக்கும் அந்த சங்கம் நடந்துண்டு இருக்கு. ஜாம் ஜாம்னு திருப்புகழ் அருணகிரிநாதர் விழா அப்படின்னு நிறைய ஒரு நாள் முழுக்க திருப்புகழ் பாடுறா. மஹாருத்ரம் பண்றா. இன்னைக்கு விசேஷமா சஷ்டி, மஹா ஸ்கந்த சஷ்டி பூஜை, நாளைக்கு வள்ளிக் கல்யாணம் எல்லாம் இங்கே திருவல்லிக்கேணில பண்றா.
இந்த செகண்ட் ஹாஃப் ஆஃப் த பாட்டு: “சமர முகவெல் அசுரர் தமது தலைகள் உருள” – போர்க்களத்தில் வெல்லப்பட்ட அசுரர்களின் தலைகள் உருளும் படியாகவும், “மிகவே நீள் சலதி அலற” – ஒரு கடலா வர்றான், கடல் மேலே வேலை விடுறார், அலறுறது. “நெடிய பதலை தகர” – நீண்ட கிரௌஞ்ச கிரியா வர்றான், அது மேலயும் வேலைப் பாய்ச்சுன உடனே பொடிப் பொடி ஆயிடுறது. நெடிய பதலை தகர, நீண்ட உயர்ந்த கிரௌஞ்ச மலை பொடியாக “அயிலை விடுவோனே” – வேலை விடுத்தவனே. “வெமர வணைய இனிது துயிலும்” – பாம்புப் படுக்கையில் இனிமையாகத் துயில் கொள்ளும், யோகநித்ரை இல்லையா? பெருமாள்.
“விழிகள் நளினன்” – எவ்வளவு அழகா சொல்றார். புண்டரீகாக்ஷன், கமலக் கண்ணன் அப்படிங்கிறதை “விழிகள் நளினன் மருகோனே” – அந்த நளின விழி அப்படிங்கிறதைச் சொல்றார். அந்தப் பெருமாளுடைய மருகோனே. “மிடறு கரியர் குமர” – மிடறுன்னா கழுத்து. மிடறு கரியர், கண்டம் கறுத்த – நீலகண்டனான பரமேஸ்வரனின் குமரனே, குழந்தையே. “பழநி விரவும் அமரர் பெருமாளே” – பழனியில் வந்து தொழும் தேவர்களின் பெருமாளே அப்படின்னு இந்த ஒரு அழகான பாட்டு.
இரண்டாவது பாடல்: கதிர்காமம் திருப்புகழ்
அடுத்த பாட்டு கதிர்காமம் அப்படின்னு இலங்கையில ஒரு க்ஷேத்திரம் இருக்கு. அருணகிரியார் அங்க போய்ப் பாடி இருக்கார். அந்தப் பாட்டு என்னன்னா:
> உடுக்கத் துகில் வேணும் நீள்பசி அவிக்கக் கனபானம் வேணும்
> நல் ஒளிக்குப் புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை
> ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்ளிருக்கச் சிறுநாரி வேணும்
> ஓர்படுக்கத் தனிவீடு வேணும் இவ்வகையாவும்
> கிடைத்துப் க்ருஹவாசி ஆகிய மயக்கக் கடலாடி நீடிய
> கிளைக்குப் பரிபாலனாய் உயிரவமே போம்
> க்ருபைச் சித்தமும் ஞான போதமும் அழைத்துத் தரவேணும்
> ஊழ் பவகிரிக்குள் சுழல்வேனை ஆளுவதொரு நாளே
> குடக்குச் சில தூதர்தேடுக வடக்குச் சில தூதர் நாடுக
> குணக்குச் சில தூதர் தேடுக எனமேவி
> குறிப்பிற்குறி காணும் மாருதி இனித் தெற்கொரு தூதுபோவது
> குறிப்பில் குறிபோன போதிலும் வரலாமோ
> அடிக்குத் திரகாரர் ஆகிய அரக்கர் கிளையாத தீரனும்
> அலைக்கப் புறமேவி மாதொரு வனமே சென்று
> அருட்பொன் திருவாழி மோதிரம் அளித்துற்றவர்மேல் மனோகரம்
> அளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே.
>
இந்தப் பாட்டு சுவாமிகளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா இதுல முதல் பார்ட்ல பாகவதத்துடைய தாத்பர்யம் இருக்கு. அடுத்த செகண்ட் ஹாஃப்ல சுந்தரகாண்டம் இருக்கு. இது ரெண்டும்தான் சுவாமிகளோட லைஃபே. அதனால இந்தப் பாட்டை அனந்தகிருஷ்ணன்னு ஒருத்தர் சின்ன வயசுல இருந்தே சுவாமிகள்ட்ட வந்து திருப்புகழ் பாடுவார். அவர்கிட்ட “உங்களுக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் பாடுங்கோ, எனக்காக இந்த ஒரு பாட்டை கடைசிலப் பாடுங்கோ” அப்படின்னு சொல்லுவார். இந்தப் பாட்டை அவர் ஒவ்வொரு வாட்டி சுவாமிகள்ட்ட பாடி, அந்த அனந்தகிருஷ்ணனை வந்து ஒருத்தர் கதிர்காமத்துக்கு இங்கிருந்து விசா, பிளைட் எல்லாம் அவரே செலவு பண்ணி “நீங்க வந்தா போதும், எனக்கு அங்க வந்து பாடணும், கூட வந்து பாடணும்” அப்படின்னு கூட்டிட்டுப் போய்க் கதிர்காம தரிசனம் பண்ணி வெச்சார். அந்த மாதிரி சுவாமிகளோட அனுக்கிரஹம்.
இந்தப் பாட்டோட அர்த்தம் என்னன்னா: “உடுக்கத் துகில் வேணும்” – நான் உடுத்திக்கிறதுக்கு நல்ல டிரஸ் வேணும். “நீள்பசி அவிக்கக் கனபானம் வேணும்” – பெரும் பசியைப் போக்கிக்கொள்வதற்கு கனபானம், நல்ல கஞ்சி மாதிரி புளூயிடா நல்ல சாப்பாடு வேணும். அந்தக்காலத்துல ஜாஸ்தியா புளூயிடா சாப்பிட்டுருக்கான்னு தெரிஞ்சிருக்கு, நல்ல டேஸ்டியாவும் இருக்கணும். “நல் ஒளிக்குப் புனல் ஆடை வேணும்” – உடம்பு ஒளி வீசும்படியாக நல்ல பட்டாடை, அந்த மாதிரி புனல் குடிக்கிறதுக்கு நல்ல சக்தியைத் தரக்கூடிய பானங்கள் அதெல்லாம் வேணும். “மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்” – இப்படி உலக விஷயங்கள் எல்லாம் அனுப்பிச்சுண்டே இருந்தா, அனுபவிச்சுண்டே இருந்தா பின்னாடியே வியாதியும் வந்துடறது, அதைப் போக்கிக்கிறதுக்கு மருந்துகள் வேணும். “உள்ளிருக்கச் சிறுநாரி வேணும்” – வீட்டுக்குள்ள இருக்கிறதுக்கு ஒரு சின்னப் பொண்ணு வேணும். அந்தக்காலத்துல சின்னப் பொண்ணு சின்ன வயசுலயே பெண்கள் கல்யாணம் பண்ணிருக்காங்கன்னு தெரியறது. எந்த வயசுல இருந்தாலும் பொண்டாட்டி சின்னப் பொண்ணா யங்கா இருக்கணும் அப்படின்னு தானே? அந்த மாதிரி ஒரு மனைவி வீட்ல இருக்கணும். “படுக்க ஓர் தனி வீடு வேணும்” – படுத்துக்கிறதுக்கு ஒரு தனி வீடு வேணும்.
இவ்வகையாவும் கிடைத்து இப்படி ஒவ்வொன்னா வேணும் வேணும்னு உலகத்துல தேடி, இதுக்காக “நோ பெயின் நோ கெயின்” அப்படின்னு எதுவுமே ஃப்ரியா கிடைக்கிறது இல்லையே, யூ ஹேவ் டு பே ஏ ப்ரைஸ். பாடா பாடுபட்டு இதெல்லாம் கிடைச்சு இதெல்லாம் அனுபவிச்சு, “இவ்வகையாவும் கிடைத்து க்ருஹவாசி” பெரிய ஒரு க்ருஹவாசியாக, குடும்பஸ்தன் ஆகி “அம்மயக்கக் கடலாடி” இந்த மயக்கக் கடல்ல மூழ்கி, “நீடிய கிளைக்குப் பரிபாலனாய்” நிறைய இன்னும் சுற்றத்தார் எல்லாரையும் சேர்த்துண்டு, இப்படி எல்லாரும் அவர்ட்டப் போனா ஏதா ஹெல்ப் பண்ணுவார் அப்படிக் கேட்டு அப்படி ஒரு பேர் வாங்கிண்டு இப்படிப் பெரிய ஒரு குடும்பம், பிரண்ட் இப்படி இதுலேயே “உயிர் அவமே போம்”. இப்படி இது நல்ல வாழ்க்கை தான் ஆனா இது வந்து தர்ம அர்த்த காமம் தான் வருது, மோக்ஷத்துக்கு நீ ஒண்ணுமே பண்ணலையே அதனால உயிர் போயிடுறது. திரும்பவும் முதல்ல இருந்து ஒவ்வொரு ஜென்மாவா புல் பூண்டா, மிருகங்களா பிறந்து திரும்பவும் மனுஷ ஜென்மா வரும்.
அதனால மனுஷ ஜென்மால என்ன பண்ணனும்னா: “கிருபைச் சித்தமும் ஞான போதமும் அழைத்துத் தரவேணும்”. உன்னோட ஞான போதம், உன்னைப் பத்தின ஞானம், சிவஞான போதம் ஏற்படுறதுக்கு என் மனசு உருகணும். கிருபைச் சித்தமும் அதுதான் எனக்கு வரமாட்டேங்குறது, நீ கூப்பிட்டு வெச்சு எனக்குக் கொடுக்கணும் இத அப்படின்னு சொல்வார். “ஊழ் பவகிரிக்குள் சுழல்வேனை” – ஊழ்வினையால் வரும் இங்கே பவக் கடல் நாம சொல்லுவோம், இங்கே பவகிரி அப்படிங்கிறர். சம்சாரம் என்ற மலை, விந்திய மலை மாதிரி ஏதாவது மலையில போனா வெளியே வர முடியாது சுத்திண்டே இருக்கணும். அது மாதிரி இந்த வாழ்க்கையில இந்த ஜென்மா ஆஃப்டர் ஜென்மா சுத்திச் சுத்தி வந்துண்டு இருக்கோம். “என்னை ஆளுவதொரு நாளே” – என்னை ஆட்கொள்ற அந்த நாள்தான் ஒரு பொன்னாள், அது இன்னைக்கே கிடைக்காதா அப்படின்னு வேண்டுறார்.
இந்த செகண்ட் ஹாஃப் சுந்தரகாண்டம்: “குடக்குச் சில தூதர்தேடுக” – மேற்கு திசையில போய் சுக்ரீவன் நாலாதிக்கும் வானரங்களை அனுப்புறான் அதைச் சொல்றார். மேற்குல போய் சிலபேரைத் தேடுங்கோ. “வடக்குச் சில தூதர் நாடுக” – வடக்குல போய் சிலபேரைத் தேடுங்கோ. “குணக்குச் சில தூதர் தேடுக” – கிழக்குல போய் சிலபேரைத் தேடுங்கோ அப்படின்னு அனுப்பிச்சு, “குறிப்பிற்குறி காணும் மாருதி” – குறிப்பினால உணர்ந்து, இடம் பொருள் ஏவல் எல்லாம் தெரிஞ்சவன், அதனால “ஹே ஹனுமான் த்வயேவ ஹனுமன்னஸ்தி பலம் புத்தி: பராக்ரம:” நீதான் இதைப் பண்ணப் போற எனக்கு அப்படின்னு சுக்ரீவன் சொல்றான். அதனால உன்ன தான் நம்பி இருக்கேன் அப்படின்னு சொன்னவுடனே ராமர் பார்க்கிறார், ஆஹா அப்ப இவன்கிட்ட நாம மோதிரத்தைக் கொடுப்போம்னு அடையாள மோதிரத்தைக் கொடுத்து அனுப்புறார்.
“இனித் தெற்கொரு தூது போவது” – இவன் தெற்கு திசையில போய் தேடுவான் அப்படின்னு அவனோடயே எல்லாரையும் , அங்கதன் இன்னும் நிறைய வானராளெல்லாம் அனுப்புறான். “குறிப்பில் குறிபோன போதிலும் வரலாமோ” – அப்படித் தேடிப் போனபோது சீதை கிடைக்கல, அவா ரொம்ப டிலே ஆயிடுறது வருத்தத்துல உட்கார்ந்து இருக்கா. ஆனா சம்பாதி ஒரு குறிப்பு கொடுத்த உடனே- இலங்கையில இருக்கார் அப்படின்னு சொன்னவுடனே, அவா உயிரே விடணும் அப்படிலாம் நினைக்கும் போது, சம்பாதி நூறு யோஜனை தாண்டி கடல்ல ஒரு தீவு இருக்கு இலங்கையில அதுல சீதை இருக்கா அப்படின்னு சொன்னவுடனே, “குறிப்பில் குறிபோன போதிலும் வரலாமோ” – நம்ம சீதையைப் பார்க்காம திரும்பிப் போகலாமா? கூடாது, சுக்ரீவன் ஆணை அப்படின்னு, கடல் தாண்டிப் போய் “அடிக்குத் திரகாரராகிய” – ரொம்ப வஞ்சகர்களாகிய “அரக்கர்க்கு இளையாத தீரனும்” – ராவணக் கோட்டை அங்க போனா என்ன ஆகுமோ அப்படின்னு கொஞ்சம் கூடப் பயப்படாம “அலைக்கு அப்புறமேவி” – கடலைத் தாண்டி, அங்க இருக்கிற இலங்கைக்குப் போய் “மாதொரு வனமே சென்று” – சீதா பிராட்டி இருக்கும் அசோக வனத்தை அடைந்து “அருட்பொன் திருவாழி மோதிரம் அளித்து” – ராமருடைய அழகான மோதிரத்தை சீதாதேவியினுடைய கையில கொடுத்து, உயிரையே காப்பாத்துறார். “விக்ராந்தஸ்த்வம் சமர்த்தஸ்த்வம் ப்ராக்ஞஸ்த்வம் வானரோத்தம ஏநேதம் ராக்ஷஸபதம் த்வயைக்கேந ப்ரதர்ஷிதம்” – இப்பேர்ப்பட்ட ராவணனுடைய கட்டுக்காவலை மீறி இந்த இலங்கைக்கு வந்து என்னைப் பார்த்து ராமருடைய மோதிரத்தைக் கொடுத்து உயிரைக் காப்பாத்தினியே. விக்ராந்தஸ்த்வம் – உன்கிட்டதான் உடல் பலம், சமர்த்தஸ்த்வம் – மனோ பலம், ப்ராக்ஞஸ்த்வம் – புத்தி பலம் எல்லாம் உன்கிட்டதான் பா இருக்கு அப்படின்னு வாயார வாழ்த்துறா. இந்த “விக்ராந்தஸ்த்வம் சமர்த்தஸ்த்வம் ப்ராக்ஞஸ்த்வம் வானரோத்தம” அப்படிங்கிற வரியே ஒரு மந்திரம். ஏதாவது ஒரு காரியத்துல இறங்கும் போது இதைச் சொல்லிண்டு போனா வெற்றி கிடைக்கும்னு சொல்வார் சுவாமிகள், ஒரு இன்டர்வியூ அந்த மாதிரி எல்லாம்.
“உற்றவர்மேல் மனோகரம் அளித்து” – திரும்ப வந்து சீதாதேவி கொடுத்த சூடாமணியை ராமர்கிட்ட கொடுத்து “கதிர்காம மேவிய பெருமாளே”. இந்த ஹனுமாருக்கு கதிர்காமத்துல இருக்கிற முருகர் அனுக்கிரஹம் பண்ணார் அப்படின்னு ஒரு புராணத்துல இருக்கு. அதாவது இலங்கையை நெருப்பு வெச்சப் பின்ன சீதையைப் போய்ப் பார்த்து உத்தரவு வாங்கிண்டு கிளம்பும்போது, மாணிக்க கங்கையில மூழ்கி ஹனுமார் கதிர்காம முருகனை வழிபட்டு அனுக்கிரஹம் பெற்றார் அப்படிங்கிற குறிப்பை இங்கே கொடுக்கிறார். இப்பேர்ப்பட்ட இந்த அழகான ஸ்லோகம். இதுல குருவா வந்து சுவாமிதான் நமக்கு கருணை சித்தமும், க்ருபா சித்தமும், ஞான போதமும் கொடுத்து தன் கிட்ட இந்த ஜென்மத்துலயாவது திரும்பத் திரும்ப இந்த பவகிரியில சுழலாம மீட்கணும் அப்படின்னு ஒரு அழகான பாட்டு.
அதுக்கு நாம என்ன பண்ண முடியும் அப்படின்னா “ஆடும் பரிவேல் அணிசேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்” அப்படின்னு வேண்டிக்கிறார். அதுவும் “அவனருளாலே அவன் தாள் வணங்கி” அப்படின்னு பகவானுடைய அருள் இருந்தாதான் அவரைப் பாட முடியும். அந்தப் பாடும் பணியே – டிஸ்ட்ராக்ட் ஆகாம உன்னையே பாடிண்டு இருக்கணும் அப்படின்னு வேண்டிக்கிறார்.
மூன்றாவது பாடல்: திருச்செங்கோடு திருப்புகழ்
> பக்தர் கணப்பிரிய நிர்த்த நடித்திடு பக்ஷி நடத்திய குக
> பூர்வ பச்சிம தக்ஷிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் எனவோதும்
> சித்ரகவித்துவ சத்தமிகுத்த திருப்புகழைச் சிறிதடியேனும்
> செப்பன வைத்துலகில் பரவ தரிசித்த அநுக்கிரகம் மறவேனே
> கத்திய தத்தை கலைத்துவிழத் திரி கற்கவணிட்டெறி தினைகாவல்
> கற்ற குறத்தி நிறத்த கழுத்தடி கட்டியணைத்த பன்னிருதோளா
> சக்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பனு மெச்சிட மறைநூலின்
> தத்துவத் தற்பரம் முற்றுமுணர்த்திய சர்ப்ப கிரீசுரர் பெருமாளே.
>
“சித்ரகவித்துவ சத்தமிகுத்த திருப்புகழைச் சிறிதடியேனும் செப்பன வைத்துலகில் பரவ தரிசித்த அநுக்கிரகம் மறவேனே… சர்ப்ப கிரீசுரர் பெருமாளே”
இதோட அர்த்தம் என்னன்னா “பக்தர் கணப்பிரிய” – அடியார் திருக்கூட்டத்தின் மீது அளவுகடந்த அன்புகொண்டவனே அப்படின்னு அர்த்தம். “நிர்த்த நடித்திடு பக்ஷி ” – நன்னா ஆடக்கூடிய பக்ஷி- அது என்ன மயில், மயிலை “நடத்திய குகா” – வாகனமாக கொண்டு உலவும் குகமூர்த்தியே. “பூர்வ பச்சிம தக்ஷிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் எனவோதும்” – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு இப்படி எல்லா திசைகளிலும் உள்ள பக்தர்கள் ஆஹா இந்த திருப்புகழ் அற்புதமா இருக்கு அப்படின்னு கொண்டாடும்படியாக, இன்னைக்கும் அவர் பாடுன போது சுத்தி இருக்கிற நாலு தேசங்களும் நினைச்சுப்பார். இன்னைக்கு உலகம் முழுக்க அன்பர்கள் திருப்புகழ் பாடுறா. கனடால ஒரு சபை இருக்கு சிங்கப்பூர்ல சபை இருக்கு. இப்படி எங்க பார்த்தாலும் திருப்புகழ் பாடுறா. உலகம் முழுக்க லிட்ரலா இவர் எல்லா திக்குலயும் கேட்டதுக்கு எல்லா திக்குலயும் அந்தத் திருப்புகழ் வந்து வியந்து கொண்டாடி எல்லாரும் அனுபவிக்கிறா, முருகனோட அருளைப் பெற்றுக் கொண்டு இருக்கார்.
“சித்ரகவித்துவ சத்தமிகுத்த” – இங்கே சத்தம்ங்கிறது சந்தம்னு அர்த்தம், சத்தமா பாடணும்னு அர்த்தம் இல்ல. அழகிய கவிபாடும், சந்தம் மிகுத்த “திருப்புகழை” – உன்னுடைய திருப்புகழ் அளவற்றது அதுல கொஞ்சத்தை “அழகிய திருப்புகழைச் சிறிது அடியேனும்” கொஞ்சம் நானும் பாடும்படியாக “செப்பன வைத்து” – நீ பாடு “முத்தைத்தரு”னு எடுத்துக் கொடுத்துட்டார் பகவான். அந்த வார்த்தை எடுத்துதல இருந்து அழகான சந்தக் கவிகள் பாடி இன்னைக்கும் அதெல்லாம் உலகமே வியந்துண்டு இருக்கு. “உலகிற் பரவ” – அது உலகம் முழுக்க எங்கும் பரவும்படியாக நீ பண்ண அனுக்கிரகத்தை “தரிசித்த அநுக்கிரகம் மறவேனே” – திருப்புகழ் மூலமாகவே உன்னை தரிசித்தேன், திருப்புகழ் மூலமாகவே உன்னையும் தரிசனம் பண்ணேன். இந்த அனுக்கிரகத்தை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன் அப்படின்னு.
“கத்திய தத்தை களைத்து விழத் திரி கற்கவணிட்டெறி தினைக்காவல் கற்ற குறத்தி” – கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படியாக, கவணில் கல்லை வைத்து எரிகின்ற தினைப்புனத்தை காவல் செய்யும் குறத்தியான வள்ளியம்மை. இந்த வள்ளிங்கிறது ஜீவாத்மா, வள்ளி சன்மார்க்கம் அப்படின்னே திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் சொல்வார். அவர் தன்னை வள்ளி பாத ஹ்ருதயன் அப்படின்னு குறிப்பிட்டுண்டார். வள்ளியம்மை மேல ரொம்ப அவருக்கு அனுக்கிரகம், வள்ளியம்மை பொங்கினு வந்து அவருக்கு தனியா அவருக்குக் காட்சி கொடுத்து அனுக்கிரகம் பண்ணிருக்கா. தனியா அவருடைய அர்த்தம் புரிஞ்சுக்கிறது பாடுறது எல்லாமே அவருக்கு வள்ளியோட அனுக்கிரகம் தான். எப்படி காமாட்சி மேல பக்தர்கள் ஊமையா இருக்கறவர் கூடப் பாடுன மாதிரி, அவருக்கு எழுத்துக் கூடத் தெரியாது. அர்த்தநாரின்னு
சமையல்காரரா இருந்தவர் உலகம் முழுக்க இன்னைக்குத் திருப்புகழ் பாடுறதுக்கு அவர்தான் காரணம், திருப்புகழ் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அப்படின்னு. இங்கே வள்ளி ஞாபகம் வந்தவுடனே அவர் ஞாபகம் வந்துடுது.
“பன்னிருதோளா” – அந்த பன்னிருதோளால் அந்த வள்ளியம்மையின் “நிறத்த கழுத்தடி கட்டியணைத்த பன்னிருதோளா” – அழகிய நிறம் கொண்ட கழுத்தை வள்ளியம்மையின் கழுத்தைக் கட்டியணைத்த பன்னிரு தோள்கள் கொண்ட முருகா. “சக்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பனும் மெச்சிட” – பராசக்தியைத் தன்னுடைய இடது பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற தகப்பனாகிய சிவபெருமான் மெச்சறார், எப்போ எனக்குப் பிரணவப் பொருள் தெரியல எனக்குச் சொல்லுன்னு கேட்கிறார். “மறைநூலின் தத்துவத் தற்பரம் முற்றுமுணர்த்திய” – வேத நூலின் மெய்ப்பொருள் என்ன? ஓங்காரத்தின் அர்த்தம் என்ன? அப்படிக் கேட்ட போது தகப்பனுக்கும் உபதேசம் பண்ணி மெய்ப்பொருளை உபதேசம் பண்ணி ‘ஆஹா’ அப்படின்னு அவர் மெச்சும்படியான “சர்ப்ப கிரீசுரர் பெருமாளே” – நாககிரியில் வாழும் தேவர்கள் போற்றும் பெருமாளே. திருச்செங்கோடு அப்படிங்கிற க்ஷேத்திரத்தினுடைய பாட்டு இது.
இப்படித் திருப்புகழ் பாடறதுக்கு அவருக்கு அனுக்கிரகம் பண்ண மாதிரி நமக்கும் முருகப் பெருமான் அனுக்கிரகம் பண்ணி, நாமளும் இதைப் பாடி, இந்த உலகத்துல வேண்டியதையும், ஆனா மறக்காம குரு அருள் மூலமாக திருவருளையும் முருகனுடைய காட்சியையும் பார்க்கணும்னு ஒவ்வொரு நாளும் வேண்டிப்போம்.
வள்ளி தேவசேனா காந்த ஸ்மரணம் ஜெய் ஜெய் சுப்ரமண்யோம்.

manIshAM mAhendrIṃ kakubhamivate kAmapi dashAm
pradatte kAmAkShyA: charaNa taruNAditya kiraNa: |
yadIye samparke dhRutarasa marandA kavayatAm
paribhAkaM datte parimaLavatI sUkti naLini ||
Today is Maha Skanda Sashti. It is a most auspicious day to worship Muruga perumaan. The most suitable text to worship Muruga perumaan is the Thiruppugazh, graced upon us by Arunagirinathar. I desire to explain the meaning of one or two songs from Thiruppugazh.
First Song: Palani Thiruppugazh
> thimira udhadhi anaiya naraga jananam adhanil viduvAyEl
> sevidu kurudu vadivu kuraivu siridhu midhiyum aNugAdhE
> amarar vadivum adhiga kulamum arivu niraiyum varavE nin
> aruLadharuLi enaiyum manadhodu adimai koLavum varavENum
> samara mugavel asurar thamadhu thalaigaL uruLa migavE neel
> saladhi alaRa nediya padhalai thagara ayilai viduvOnE
> vemara vaNaiyil inidhu thuyilum vizhigaL naLinan marugOnE
> midaRu kariyari kumara pazhani viravum amarar perumALE.
>
This is a song on Palani Murugan. In this, “thimira udhadhi anaiya”—like a dark ocean; “naraga jananam adhanil”—this birth which is equivalent to hell, what we often call Bhava Sagara (the ocean of worldly existence), right? In this, “viduvAyEl”—if You make me fall into it. That is, I fall into this Bhava Sagara due to my Karma. If I am to be born in this… as we see everywhere in the world, “lokam shoka hatam cha samastam”—everyone faces various hardships. Therefore, this is like a dark ocean, equivalent to hell. But if I must be born in this, You must grant me these blessings. What are they?
“sevidu kurudu vadivu kuraivu siridhu midhiyum aNugAdhE”—Deafness, blindness, physical disabilities, and poverty—none of these should even come near me. “amarar vadivum adhiga kulamum arivu niraiyum varavE”—Beauty like that of the Amarars (Devas), birth in a noble lineage, and the fullness of knowledge—the character and discipline that comes from education as described in “vidyA vinaya sampanna:”—all these should come to me. “nin aruLadharuLi”—these can only be attained through Your grace. Please grant these to me.
“enaiyum manadhodu adimai koLavum varavENum”—Even all of that is not enough; You must come to accept me as Your servant with all Your heart, “adimai koLavum varavENum”. You must come to take me as Your slave. How will He come? He will come as a Guru. Only when He comes as a Guru and teaches us devotion can we become the servants of the Lord and perform His service.
This contains every prayer. Along with that, there is the prayer to “accept me.” Very close friends of mine, Narayana Iyer family, once went for Maha Periyava’s darshan. Periyava was inside, and they were waiting with their family for about forty-five minutes when the children were small. Someone there said, “You know Thiruppugazh, why don’t you sing?” When they sang this song, specifically the line “nin aruLadharuLi enaiyum manadhodu adimai koLavum varavENum”, Periyava immediately opened the door and came out with a smile. Such is the power of Thiruppugazh to draw even Periyava.
One Murugan Thiruvarul Sangam was started during my father’s time; today is its 70th year celebrating Sashti. During its 25th Silver Jubilee, they went to Periyava and sang for three hours. Periyava blessed them saying, “You will see the Golden Jubilee and Diamond Jubilee.” Even today, that Sangam continues its service. The Arunagirinathar festival is celebrated grandly with a full day of Thiruppugazh singing and Maharudram. Today is the special Sashti puja, and tomorrow Valli Kalyanam will be performed here in Triplicane.
The second half of the song: “samara mugavel asurar thamadhu thalaigaL uruLa”—making the heads of the defeated asuras roll on the battlefield; “migavE neel saladhi alaRa”—an asura comes as a sea, and the Lord hurls His Vel (spear) upon the sea, making it roar. “nediya padhalai thagara”—another comes as the tall Krauncha mountain, and as soon as the Vel is thrown, the hill is powdered. You who threw the Vel (ayilai viduvOnE) so the tall Krauncha mountain broke into pieces. “vemara vaNai inidhu thuyilum”—He who sleeps sweetly on the serpent bed in Yoga Nidra, Lord Vishnu.
“vizhigaL naLinan”—How beautifully he says it. He refers to Pundarikakshan (the lotus-eyed one) as “vizhigaL naLinan marugOnE”—the nephew of the one with lotus eyes. “midaRu kariyari kumara”—MidaRu means neck. The son of the one with a black neck, the blue-throated Parameswara. “pazhani viravum amarar perumALE”—The Lord of the Devas who come to worship at Palani. This is such a beautiful song.
Second Song: Kathirgama Thiruppugazh
The next song is about Kathirgamam, a sacred site in Sri Lanka. Arunagirinathar went there and sang. That song is:
> udukka thugil vENum neelpasi avikka kanapAnam vENum
> nal oLikku punal Adai vENum meyyuRu nOyai
> ozhikka parigAram vENum uLLirukka sirunAri vENum
> Or padukka thani veedu vENum ivvagaiyAvum
> kidaithu gruhavAsi Agiya mayakka kadalAdi neediya
> kiLaikku paripAlanAy uyir avamE pOm
> krubai chithamum gnAna bOdhamum azhaithu tharavENum
> oozh bhavagirikkul suzhalvEnai ALuvadhoru nALE
> kudakku sila thoodhar thEduga vadakku sila thoodhar nAduga
> guNakku sila thoodhar thEduga enamEvi
> kurippir kuri kANum mArudhi inith theRkoru thoodhu pOvadhu
> kurippil kuri pOna pOdhilum varalAmO
> adikkuth thiragArar Agiya arakkar kiLaiyAdha dheeranum
> alaikkup puRamEvi mAdhoru vanamE chendru
> aruTpon thiruvaazhi mOdhiram aLithuTTravermEl manOharam
> aLithu kathirgama mEviya perumALE.
>
Swamigal loves this song very much because the first part contains the essence of the Bhagavatam, and the second half contains the Sundara Kandam. These two were Swamigal’s lifeline. A friend named Ananthakrishnan used to come and sing Thiruppugazh for Swamigal from a young age. Swamigal would tell him, “Sing all the songs you like, but sing this one song for me at the end.” Because he sang this song for Swamigal every time, someone sponsored Ananthakrishnan’s visa, flight, and everything to Kathirgamam, saying, “You just come, I want you to sing there with me,” and took him for a darshan of Kathirgamam. Such is the grace of Swamigal.
The meaning of this song is: “udukka thugil vENum”—I need good clothes to wear. “neelpasi avikka kanapAnam vENum”—I need kanapAnam (wholesome liquid food/porridge) to quench great hunger. In those days, they seems to have consumed more liquid foods, and it must be tasty too. “nal oLikku punal Adai vENum”—I need fine silk clothes so the body shines, and strengthening drinks. “meyyuRu nOyai ozhikka parigAram vENum”—If one keeps seeking and enjoying worldly things, disease follows; I need medicines to remove that. “uLLirukka sirunAri vENum”—I need a young woman to be in the house. It seems girls were married young in those days. Regardless of age, one wants a wife who is young, right? Such a wife should be at home. “padukka Or thani veedu vENum”—I need a separate house to sleep in.
“ivvagaiyAvum kidaithu”—Seeking all these things one by one in the world, and since “no pain, no gain”—nothing is free, you have to pay a price. After struggling to get and enjoy all this, “gruhavAsi”—becoming a big householder, “ammayakka kadalAdi”—drowning in this ocean of delusion, “neediya kiLaikku paripAlanAy”—protecting a large circle of relatives, gaining a name that “he will help if approached”—in such a big family and friend circle, “uyir avamE pOm”. This is a good life, but it only covers Dharma, Artha, and Kama; you haven’t done anything for Moksha, and thus life ends. Again, from the beginning, one is born as grass, plants, animals, and eventually human again.
Therefore, in a human birth, one must ask: “krubai chithamum gnAna bOdhamum azhaithu tharavENum”. My heart must melt to receive Your Gnana Bodham—the knowledge of You, Siva Gnana Bodham. I am unable to get that compassionate mind (krubai chitham) on my own; You must call me and grant it to me. “oozh bhavagirikkul suzhalvEnai”—I who am rotating due to past Karma in this mountain of worldly existence. We say Bhava Sagara (ocean), but here he says Bhavagiri (mountain). If you enter a mountain like the Vindhyas, you can’t come out; you just keep circling. Similarly, in this life, we circle birth after birth. “enai ALuvadhoru nALE”—The day You take me over is the golden day; won’t I get it today?
The second half is Sundara Kandam: “kudakku sila thoodhar thEduga”—Sugriva sends vanaras in all four directions; he says go and search in the West. “vadakku sila thoodhar nAduga”—Search in the North. “guNakku sila thoodhar thEduga”—Search in the East. “kurippir kuri kANum mArudhi”—Hanuman, who understands through hints and knows time, place, and context. Sugriva says, “he hanuman tvayeva hanumannasti balam buddhi: parAkrama:” (O Hanuman, in you alone resides strength, wisdom, and valor), “I am depending on you to do this for me.” Seeing this, Rama thinks, “Aha, let me give the ring to him,” and sends the signet ring.
“inith theRkoru thoodhu pOvadhu”—He goes to the South to search. When they searched and couldn’t find Sita, and the time limit was exceeding, they sat in sorrow. But once Sampati gave a hint—saying She is in Lanka—even when they thought of giving up their lives, Sampati said Sita is in an island across the hundred-league ocean. “kurippil kuri pOna pOdhilum varalAmO”—Can we return without seeing Sita? No, it is Sugriva’s order. So, crossing the sea, “adikkuth thiragArar Agiya arakkar”—the very deceitful asuras, “kiLaiyAdha dheeranum”—without fearing what might happen in Ravana’s fortress, “alaikkup puRamEvi”—crossing the waves to Lanka, “mAdhoru vanamE chendru”—reaching the Ashoka Vananam where Sita Devi was, “aruTpon thiruvaazhi mOdhiram aLithu”—giving Rama’s beautiful ring into Sita’s hand, he saves Her life. “vikrAntastvaṃ samarthastvaṃ prAgnyastvaṃ vAnarottama enedaṃ rAkShasapadaṃ tvayaikkena pradarshitam”—”You have crossed Ravana’s strict security, come to Lanka, seen me, and saved my life by giving Rama’s ring. VikrAntastvaṃ—physical strength is in you, Samarthastvaṃ—mental strength is in you, PrAgnyastvaṃ—wisdom is in you.” She blesses him wholeheartedly. Swamigal used to say that this line itself is a mantra; saying it before starting a task like an interview will bring success.
“uTTravermEl manOharam aLithu”—Returning and giving the Chudamani given by Sita Devi to Rama. There is a Puranic reference that the Murugan of Kathirgamam blessed Hanuman. After setting fire to Lanka, when he took leave of Sita and went to bathe in the Manik Ganga, he worshipped Kathirgama Murugan and received His grace. What a beautiful verse. Here, he prays that the Lord should come as a Guru and grant us Karunai Chitham, Krupa Chitham, and Gnana Bodham to rescue us from this cycle of Bhavagiri at least in this birth.
What can we do for that? He prays: “Adum parivEl aNisEvelenap pAdum paNiyE paNiyAy aruLvAy”—grant me the service of always singing about Your dancing peacock, Your spear, and Your rooster banner. As the saying goes, “avanaruLAlE avan thAL vaNangi”—only by His grace can we worship His feet and sing of Him. He prays that without distraction, he should always be engaged in the service of singing His praises.
Third Song: Thiruchengodu Thiruppugazh
> bhakthar gaNappiriya nirththa nadiththidu pakshi nadaththiya guha
> pUrva pachchima dhakshiNa uththara thikkuLa bhakthar adhurdham enavOdhum
> chithrakaviththuva saththamiguththa thiruppugazhaich chiridhadhiyEnum
> seppana vaiththulagil parava tharisiththa anukkiragam maravEnE
> kaththiya thaththai kaLaiththuvizhath thiri karkavaNitteri dhinaikAval
> katTra kuRaththi niraththa kazhuththadi kattiyaNaiththa pannirudhOLA
> sakthiyai okka idaththinil vaiththa thagappanum mechchida marainoolin
> thaththuvath tharparam muTTrumuNarththiya sarppa gireesurar perumALE.
>
“chithrakaviththuva saththamiguththa thiruppugazhaich chiridhadhiyEnum seppana vaiththulagil parava tharisiththa anukkiragam maravEnE… sarppa gireesurar perumALE”
The meaning is: “bhakthar gaNappiriya”—O You who have boundless love for the gathering of devotees. “nirththa nadiththidu pakshi”—the bird that dances well—the peacock, “nadaththiya guhA”—O Guha who travels with the peacock as Your vehicle. “pUrva pachchima dhakshiNa uththara thikkuLa bhakthar adhurdham enavOdhum”—So that devotees in the East, West, South, and North all celebrate saying, “Aha, this Thiruppugazh is wonderful!” Even when he sang it, he might have thought of the surrounding four regions. Today, devotees all over the world sing Thiruppugazh. There are societies in Canada and Singapore. Everywhere you look, people are singing Thiruppugazh and receiving Murugan’s grace.
“chithrakaviththuva saththamiguththa”—Here Satham means Chandam (rhythm), not that one should sing loudly. The beautiful poetry with rich rhythms, “thiruppugazhai”—Your Thiruppugazh is infinite, but “chiridhadhiyEnum”—so that I, a humble one, may sing a little of it, “seppana vaiththu”—the Lord Himself gave the first word “Muthaitharu”. From that starting word, beautiful rhythmic verses were sung that the world wonders at even today. “ulagiR parava”—the grace You showed to make it spread across the world, “tharisiththa anukkiragam maravEnE”—I saw You through Thiruppugazh itself. I will never forget this grace.
“kaththiya thaththai kaLaiththuvizhath thiri karkavaNitteri dhinaikAval katTra kuRaththi”—The huntress Valli, who guarded the millet fields and threw stones with a sling so that the screeching parrots fell exhausted. Thiruppugazh Satchidananda Swamigal says this Valli represents the Jivatma and calls it Valli Sanmargam. He referred to himself as Valli Pada Hridayan. He had great grace from Valli; she appeared to him and blessed him. His understanding of the meanings and his singing were all due to Valli’s grace. Just as even a mute person sang due to devotion to Kamakshi, he didn’t even know letters. He was a cook named Arthanaari, and the reason Thiruppugazh is sung worldwide today is Valli Malai Satchidananda Swamigal. Mentioning Valli brings his memory to mind.
“pannirudhOLA”—With those twelve shoulders, “niraththa kazhuththadi kattiyaNaiththa pannirudhOLA”—O Muruga with twelve shoulders who embraced the beautiful neck of Valli. “sakthiyai okka idaththinil vaiththa thagappanum mechchida”—Your father Lord Shiva, who keeps Parasakti on His left side, praised You. When? When He asked, “I don’t know the meaning of Pranava, tell me.” “marainoolin thaththuvath tharparam muTTrumuNarththiya”—”What is the true essence of the Vedas? What is the meaning of Omkara?” When asked, You taught Your father and he praised You. “sarppa gireesurar perumALE”—The Lord worshipped by Devas living in Nagagiri (Thiruchengode). This is a song of the Thiruchengode shrine.
Just as He graced Arunagirinathar to sing Thiruppugazh, may Muruga perumaangrace us as well so that we may sing this and attain what is needed in this world, but without forgetting, through the Guru’s grace, we must see the divine vision of Murugan. Let us pray for this every day.
Valli Devasena Kantha Smaranam, Jai Jai Subrahmanyam!

One reply on “மூன்று திருப்புகழ் பாடல்கள் பொருள்”

Ram Ram Anna ,
திருப்புகழ் பாடல்களின் மகத்துவம் அருமையாக இருக்கு.ரொம்ப,தெளிவான, எளிதில் புரியும் படியான,அந்த விரிவுரை கேட்க கேட்க முருகன் மேலே மேலும் பக்தி செலுத்த ஆசையா இருக்கு. சுவாமிகளின் இராமாயண, சுந்தர காண்ட மீதான அளவு கடந்த நாட்டம், வள்ளிமலை சுவாமிகள் மூலம் திருப்புகழ் பிரபல்யம் அடைந்தது, நம் அனைவருக்கும் முருகனின் மணி,மந்திர, ஔஷதம் கிடைக்க செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.