On Vaikasi Anusham this year, I shared a few incidents from Mahaperiyava divya charitham that shows Periyava’s apaara karunaa.
மஹாபெரியவா மஹிமை உபன்யாசம் மூன்றாம் பகுதி 27 min
சுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேதுர்கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||
மனீஷாம் மாஹேந்த்ரீம் ககுபமிவ தே காமபி தஷாம் |
ப்ரதத்தே காமாக்ஷ்யா: சரணதருணாதித்ய கிரண: ||
யதீயே ஸம்பர்க்கே த்ருதரஸமரந்தா கவயதாம் |
பரீபாகம் தத்தே பரிமளவதீ ஸூக்திநளினீ ||
குண்டலி குமாரி குடிலே சண்டி சராசர சவித்ரி சாமுண்டே |
குணிநி குஹாரிணி குஹ்யே குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி ||
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி…
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி…
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி…
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் |
ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் ||
இன்னைக்கு பௌர்ணமி. ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’. ஹே காமாக்ஷி, என்னுடைய குருவின் வடிவில் நான் உன்னை நமஸ்கரிக்கிறேன் அப்படின்னு அர்த்தம், இந்த ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ங்கறது. பெரியவாதான் காமாக்ஷி. நீ மூகபஞ்சதி படிக்கிற, அவர அடிக்கடி போய் தரிசனம் பண்ணு, நாலு நமஸ்காரம் பண்ணு, சன்யாசிகளுக்கு நாலு நமஸ்காரம், நாலு வாட்டி இந்த ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ சொல்லி நமஸ்காரம் பண்ணு அப்படின்னு கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
இந்த பௌர்ணமி அன்னிக்கு, காமாக்ஷியா பெரியவாள தியானம் பண்ணி, அப்படி பண்ணும்போது, நமக்கெல்லாம் அம்மா. நம்மட்ட ரொம்ப கருணையா, அன்பா இருக்கா. காமாக்ஷி ஜகதம்பா. அந்த ஜகதம்பா உலகத்துல இருக்கிற எல்லாரும் அவளோட குழந்தைகள். அவாள்ட்ட எல்லாம் ரொம்ப கருணையா இருக்கா. அதே மாதிரி அந்த பெரியவாளுடைய கருணையை பத்தி பேசலாம். அவருடைய சரித்திரத்துல இருந்து சிலது தான் ஸ்மரித்து, எவ்வளவு கருணை பெரியவாளுக்கு அப்படிங்கறத பத்தி சொல்லணும்னு ஆசை.
இந்த புது பெரியவா பண்ணின ஸ்லோகத்துல கூட, முதல் வார்த்தை ‘அபார கருணா சிந்தும்’. எல்லையற்ற கருணைக்கடல் அப்படின்னு டெய்லி ஐம்பது வருஷம் பழகின ஒருத்தர் சொல்றார் அப்படின்னா, அதுக்கு மேலே என்ன சர்டிபிகேட் வேணும்? எல்லார்ட்டயும் கருணை.
பீடத்துக்கு வந்து ரெண்டு மூணு வருஷத்துல, ஒரு சிப்பந்தி ஒருத்தர், மடத்துல இருக்கிறவர் பெரியவா பூஜைல எல்லாம் வெள்ளி சாமான்கள்… வெள்ளி சாமான்களை அவர் திருடிண்டு போறார். திருடிண்டு போய் தன்னாத்துல வச்சுட்டு, இந்த புது சுவாமிகள் வந்திருக்கார், அவரோட உறவுக்காரா கூட கும்பகோணத்துல எல்லாம் இருக்கா, அவர்தான் திருடி தன்னுடைய உறவுக்காராள்ட்ட குடுத்துடுறார் அப்படின்னு அபாண்டமா ஒரு பழியை.கிளப்பி விடுறார்.
இதை ஒருத்தர் வாட்ச் பண்ணிண்டு இருக்கார், ஒரு வக்கீல். அந்த வக்கீலுக்கு தெரிஞ்சுடுத்து இது. அவர் என்ன பண்றார், ஒரு பூஜை சாமான், இந்த திருடன் ஆத்துல கொண்டு போய் மறைச்சு வைக்கச் சொல்லிட்டு, ஒரு நாளைக்கு பூஜைம்போது, எங்க அந்த வெள்ளிச் சொம்ப காணோம் அப்படின்னு பெருசா சத்தம் பண்ணி, டிரமாட்டிக்கா பண்றார். “நீ எடுத்தியா? நீ எடுத்தியா?”ன்னு இந்த திருடனைப் பார்த்து, “நீ எடுத்தியா?” அப்படின்னவுடனே, “நான் ஏன் எடுக்கப் போறேன் எனக்கு தெரியாது” அப்படின்னவுடனே, “எனக்கு உன் மேல தான் சந்தேகம். உங்க ஆத்துல போய் பாக்கலாம் வா” அப்படின்னபோது, அவருக்கு நான் இந்தப் பொருளை எடுக்கலேன்னு எண்ணம். “பாருங்களேன் வாங்களேன்” அப்படின்ன போது, எல்லாரையும் கூட்டிண்டு போய் அந்த வக்கீல் என்ன பண்றார், தான் ஒளிச்சு வெச்சதோட எல்லா சாமான்களையும் ரெக்கவர் பண்ணிண்டு வந்துடுறார். பெரியவாள்ட்ட சொல்றார், “அந்த மாதிரி அனாவசியமா அபவாதம் கிளப்பினான். நாங்க அவனைப் பிடிச்சுட்டோம். எல்லா சாமானும் திருப்பிக் கிடைச்சுடுத்து”ன்னு.
அந்த சின்ன வயசுல, அந்த பைஞ்சு வயசுல பெரியவா சொல்றா, “நீங்க அவன வேணா வேலையில இருந்து எடுத்துடுங்கோ. ஆனா போலீஸ்ல கொடுக்காதீங்கோ. ஒரு பிராமணன். அப்புறம் இந்த ஊர்ல தலை காட்ட முடியாது” அப்படிங்கறா. அந்த வயசுல இருந்து எதிரிட்டயும் கருணை. அதுதான் பெரியவா. அது அவருடைய இயல்பா இருந்தது. ஏன்னா காமாக்ஷினுடைய அவதாரம். தவிக்கிற ஜனங்களுக்கு இந்த கலியில தாப சாந்தி கொடுக்கணுங்கறதுக்காகவே அவதாரம் பண்ணின ஒரு பரமாத்மா.
பெரியவாளுக்கு எறும்பு புத்துல அரிசி போடுங்கோ, பசு மாட்டுக்கு அகத்திக்கீரை குடுங்கோ, பிடி அரிசி தினம் எடுத்து வச்சு அதை மாசா மாசம் ஊர்ல எல்லாரும் கலெக்ட் பண்ணி கோவில்ல நெய்வேத்தியம் பண்ணி ஏழைகளுக்கு குடுங்கோ அப்படின்னு, எறும்புல இருந்து பிரம்மா வரைக்கும் எல்லார்ட்டயும் கருணை. தெய்வத்து கிட்டயே கருணை அப்படிங்கறதுக்கு சந்திரமௌளீஸ்வர பூஜை மூனு வேளை பண்ணும். இதுக்காக தான் ஆதிசங்கரர் இந்த மடத்தையே ஸ்தாபிச்சார். பக்திக்கு மூனு வேளை சந்திரமௌளீஸ்வர பூஜை, அனுக்கிரஹ பாஷணம். கர்மாக்கு நெறைய சாஸ்திர பிரச்சாரம், நெறைய காரியங்கள், பரோபகாரம். ஞானத்துக்கு சங்கர பாஷ்யத்த சன்யாசிகளை வச்சுண்டு தினம் படிக்கணும். இதெல்லாம் பெரியவா பண்ணிண்டு இருந்தா. தினம் எவ்ளோ லேட்டானாலும் பூஜை முடிஞ்ச பின்ன, ஒரு வேதாந்த பாடம் சன்யாசிகளை வச்சு படிச்சு முடிச்ச பின்ன தான் பிட்சை. அப்படி வச்சிருந்தா.
அந்த மாதிரி அந்த சந்திரமௌளீஸ்வர பூஜை அவ்வளவு ஆசையா பண்ணுவா. பிரதோஷம் வந்தா சாயங்காலம் பிரதோஷம் பூஜை, பௌர்ணமி பூஜை எல்லாம் ரொம்ப உடம்பு சிரமத்த பாக்காம பூஜை பண்ணுவா. சிவராத்திரி, பிரதோஷம் அடுத்த அடுத்தது அப்படி வரும். அதெல்லாம் கொஞ்சம் கூட அசராம அவ்வளவு ஆசையா ‘சந்திரமௌளீஸ்வர பூஜா துரந்தராய நமஹ’ன்னு ஒரு நாமாவளி அவருக்கு. அந்த பூஜை பண்ணும்போது சாப்பாடு வந்து சூடா இருக்கணும். ஆனா ரொம்ப கொதிக்க கொதிக்க இருக்க கூடாது. அப்படி இருந்ததுன்னா விசிறூவர் ஆறணும்னு. அதே விறை விறையா காஞ்சு போனா வேறை பண்ணிடுவா என்பார். அந்த அளவுக்கு அந்த ஸ்வாமிகிட்ட கருணை.
இதே மாதிரி காமாக்ஷிக்கு ஒருவாட்டி ஸஹஸ்ரநாம மாலை பண்ணனும்னு ஆசைப்பட்டா. பெரியவா சங்கல்பம் பண்ணா போதும், அது நடந்துடும். எல்லாரும், அன்னைக்கு அரியக்குடி வந்திருந்தார், பெரியவா கனகதாரா ஸ்தோத்திரம் பாடேன் ன்னார். அவர் பாடினார். வந்தவா எல்லாம் தங்கள் கிட்ட இருந்த வளையலையும் சங்கிலியையும் குடுத்தா. இது மாதிரி பெரியவா ஆசைப்படுறான்ன உடனே வந்து சேர்ந்துடுத்து. ஒரு தட்டான் வந்து அழகா ஸஹஸ்ரநாம மாலை பண்ணிக் குடுத்துட்டான். இது அம்பாளுக்கு சாத்த போறோம் அப்படின்னு நாள் பார்த்து பெரியவாட்ட சொன்னபோது, பெரியவா சொல்றா, “எப்படி சாத்தப் போறேள்?’ ‘கழுத்துல தானே போடணும்’ சொல்றா பெரியவான்னு கேட்டபோது, ‘இவ்ளோ வெயிட்டா இருக்கே இது. இது அம்பாள் கழுத்துல போட்டா அம்பாளுக்கு வலிக்காதா? பின்னாடி ஒரு தண்டு கட்டி அதுல மாலைய தொங்க விடுங்கோ. நமக்கு பாக்குறதுக்கு அழகா இருக்கணும், அம்பாளுக்கு கழுத்து வலிக்க கூடாது” அப்படிங்கறா. அந்த மாதிரி தெய்வத்து கிட்டயே கருணை பண்றவர் அவர். அப்படி ஒரு கருணாமூர்த்தி.
சங்கல்ப மாத்திரத்துல காரியங்கள் நடக்குங்கறதுக்கு, பெரியவா எண்பது வயசுலேயே கிளம்பி இங்கேருந்து சதாராக்கு போனா, நடந்து நடந்து. அதெல்லாம் தாண்டி போனா. அந்த சதாரால இருக்கும்போது, சாமண்ணா அப்படின்னு ஒரு ஹோட்டல் வெச்சிருக்கிறவர். அவர் வந்து சொல்றார், “எனக்கு கேன்சர் வந்துடுத்து. கொஞ்சம் பணம் இருக்கு. ஒரு அஞ்சு லட்சம் பணம் தர்றேன். ஒரு நிலம் இருக்கு. மடத்துக்கு எடுத்துக்கணும். ஏதாவது நல்ல காரியங்கள் பண்ணுங்கோ” அப்படின்னு சொல்றார். அப்ப கூட தன் பிள்ளையை கூட்டிண்டு வந்திருக்கார். பெரியவா சொல்றா, “அது இருக்கட்டும். நீயும் உன் பிள்ளையுமா தமிழ் தேசத்துல சிதம்பரம்னு ஒரு கோயில் இருக்கு. அந்த கோயிலை பாத்துட்டு வா” அப்படிங்கறா. “சரி பெரியவா சொல்றாளே”ன்னு அவர் போய் பாத்துட்டு வறார். பெரியவா சொல்றா, “அந்த மாதிரி ஒரு கோயில் இங்க சதாரால நீ கட்டு” அப்படிங்கறார். இவருக்கு இன்னும் ஒரு மாசமா ரெண்டு மாசமான்னு நெனச்சுண்டு இருக்கிறவர்ட்ட நீ கோயில் கட்டு அப்படிங்கறார். “என்ன பெரியவா சொல்றேள்?”.. “பண்ணு உன்னால முடியும் பண்ணு” அப்படின்னு சொல்லிட்டு, அதுக்கப்புறம் அவர் அஞ்சு வருஷம் இருக்கார். பெரியவா சங்கல்பம் பண்ணியாச்சு. ஆந்திரா, தமிழ்நாடு இங்கேருந்து எம்.ஜி.ஆர் பணம் கொடுத்தார். ஆந்திரால என்.டி.ராமராவ், கர்நாடகா, மகாராஷ்டிரா. நாலு ஊர்லேந்தும் ஒவ்வொரு கதவுக்கான செலவு எடுத்துண்டா. இப்ப கூட அங்க வந்து போர்டு இருக்கு, இந்த ஸ்டேட்ல இருந்து குடுத்தது அப்படின்னு. இந்த கூரைக்கு வேண்டிய தேக்கு மரம் முழுக்க இங்க சிதம்பரத்துல கூரை தேக்குனால வேய்ந்திருப்பா. அதே மாதிரி அங்க தேக்கு மரம் முழுக்க கேரளால இருந்து குடுத்துட்டா. அப்படி மூனு வருஷத்துல, 81 டு 84, பெரியவா அங்க ரொம்ப அழகா ஒரு சிதம்பரம் கோயில் கட்டிட்டு வந்தா. அது மாதிரி நினைச்சா நடக்கும் பெரியவாளுக்கு.
சுப்ரமணியம் ஸ்வாமி ஒருதடவை பெரியவாளை பாக்கறதுக்கு வறார். அவர் வந்து நிக்கறார். பெரியவா அவரை பாத்துட்டு உள்ள போயிடுறா. அப்ப இவர், சரி அவருக்கு என்ன பாக்க பிடிக்கல போல இருக்குன்னு வாசல்ல வறார். அப்ப யாரோ ஓடி வந்து கூப்பிடுறா. இவர் பெரியவாட்ட போனபோது, “என்ன நீ பாட்டுக்கு போயிட்ட?” அப்படின்னவுடனே, “நீங்க போயிட்டேள். நான் போயிட்டேன்”ங்கறார். நியூஸ் பேப்பர் பெரியவா உள்ள இருந்து கொண்டு வந்திருக்கா. அதுல அவரோட போட்டோ காமிச்சு, “இந்த சுப்ரமணியம் ஸ்வாமி தான நீ?” அப்படின்னு கேக்குறார். “ஆமாம் பெரியவா” அப்படின்னவுடனே, “இனிமே இங்க வந்தா, நான் பெர்மிஷன் குடுத்த பின்ன தான் நீ கிளம்பலாம்” அப்படிங்கறா. “சரி பெரியவா”. உக்காந்து அன்னைக்கு ஒரு மணி நேரம் பேசுறா, பெரியவா பாலிடிக்ஸ் பத்தி. “நீ பதவிக்கு ஆசைப்படாத. பாலிடிக்ஸ்ல இருந்துண்டு எவ்வளோ நல்ல காரியங்கள் பண்ணலாம்” அப்படின்னு உலக பாலிடிக்ஸ் முழுக்க பேசி, நாம இஸ்ரேலோட ஃப்ரெண்டா இருக்கணும்… இப்படி எல்லாம். அப்பல்லாம் அது அவுட் ஆஃப் கொஸ்டினா இருந்தது. பெரியவா அந்த மாதிரி ஃபோர்சைட்டோட ரொம்ப அழகான விஷயங்கள் எல்லாம் சொல்லித் தரா. சைனாவோட நம்ம ஒரு ரிலேஷன் மெயின்டைன் பண்ணனும் அப்படிங்கறா. அப்ப சைனா எனிமி. பெரியவா சொல்றா, ஒரு மஹாபாரதத்துலருந்து ஒரு கதை சொல்லி, நம்ம வந்து கொண்டாட வேண்டாம் உறவு, ஆனா we have to maintain a relationship. அவா ஒண்ணும் நமக்கு ஆபத்து கிடையாது, அப்படின்னு சொல்லி, நீ ஒரு சேனல் ஓபன் பண்ணி அவாளோட ஒரு ரிலேஷன் மெயின்டைன் பண்ணு அப்படின்னு சொல்லி, அந்த சுப்ரமணியம் ஸ்வாமி பண்றார் அது. அது பண்ணிட்டு கைலாஷ் யாத்ராக்கு அந்த சைனா காராள்ட்ட இருந்து உத்தரவு கேக்குறார். அப்ப அவா சொல்றா, “நீங்க வர்றதுன்னா பண்ணலாம்” அப்படின்னு. இவருக்கு உடம்பெல்லாம் ரொம்ப வீக். “நா எங்க அதெல்லாம் பண்ண முடியும்” அப்படின்னவுடனே, இந்திராகாந்தி “இல்ல இல்ல நீங்க போங்க. உங்களால முடியும். ஹெலிகாப்டர் தர்றேன், எல்லா சௌரியம் பண்ணி தர்றேன்” அப்படின்னு இவர் அந்த கைலாஷ் யாத்ரா பண்ணிட்டு வந்துடுறார். அதுக்கப்புறம் இன்னைக்கு எல்லாரும் போய் அந்த கைலாசத்தையே பிரதக்ஷிணம் பண்றது அப்படின்னு சொல்லி பரிக்ரமான்னு பண்றா. அங்க சூரியன் அந்த கைலாசத்து மேல படும்போது, அப்படியே தங்கமா ஜொலிக்குமாம் அந்த வெள்ளிமலை. அதுக்கு ‘பொன்னார் மேனியன்’ அப்படின்னு அதெல்லாம் தரிசனம் பண்றா. அது மாதிரி ஒரு பெரியவா, எங்க தொட்டா எங்க போய் முடியறது பாருங்கோ. அந்த மாதிரி ஆஸ்திகத்துக்காக பெரியவா அவ்வளவு பண்ணிருக்கா.
நடுவுல கோயிலுக்குள்ள போறதுக்கே சுவாமி தரிசனத்துக்கு டிக்கெட் அப்படின்னு கொண்டு வந்தபோது ஸ்ட்ராங்கா அப்ஜெக்ட் பண்ணி, “அதெல்லாம் இல்ல. ஏழை ஜனங்கள்லாம் தர்ம தரிசனம்னு ஒண்ணு இருக்கணும். நீ அதுக்கப்புறம் டிக்கெட் வச்சுக்கோ, தர்ம தரிசனம் இருக்கணும்” அப்படின்னு ஸ்ட்ராங்கா சொல்லி அதை வந்து வர வச்சுட்டா. ஆஸ்திகம் தழைக்கிறதுக்கு பெரியவா பண்ணது எவ்வளோ… திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள் நடத்தி, லட்சக்கணக்கான புஸ்தகங்கள் போட்டு, சின்ன குழந்தைகளுக்கு போட்டி வச்சு, அன்னைக்கு ஐம்பது அறுபது வருஷம் முன்னாடி திருப்பாவை படிக்க வச்சது, அவா படிச்சு அடுத்த ஜெனரேஷன் படிச்சு என் பேரன் வரைக்கும் எல்லாரும் திருப்பாவை திருவெம்பாவை படிச்சுண்டு இருக்கோம். அந்த சைவ வைணவ பேதத்தையும் போக்கி, ஒரு வைணவரை வந்து திருவெம்பாவை பத்தி லெக்சர் பண்ணச் சொல்வா. ஒரு சைவரை வந்து திருப்பாவை பத்தி லெக்சர் பண்ணச் சொல்வா, அந்த மாநாட்டுல. அப்படி ரொம்ப ஆச்சரியமா பெரியவா சமரசத்துக்கு கொண்டு வந்தா சண்மதங்களுக்குள்ள.
பெரிவாளுக்கு எல்லார்கிட்டயும் கருணை. கண்ணதாசன், தி க ல இருந்து அந்த மாதிரி நாஸ்திகம் பேசிண்டு இருந்த ஆளு, அவருக்கு கொஞ்சம் வெறுப்பு வர்றது அவாள்ட்ட. அப்புறம் நம்முடைய விஷயங்கள் எல்லாம் கத்துக்க ஆரம்பிச்சு, பெரியவாள தரிசனம் பண்றார். அவருக்கு ரொம்ப உடம்பு ரிப்பேர், ஏன்னா அவ்வளவு உடம்பைப் போட்டு அப்யூஸ் பண்ண ஆளு அவரு. ஆனா பெரியவா முன்னாடி மணிக்கணக்கா கூட நின்னுண்டுதான் பேசுவார், உக்கார மாட்டாராம். அவரோட ஒய்ப் எழுதி இருக்கா. நின்னுண்டுதான் பேசுவார். பெரியவா அவரோட ஆர்ந்தமா பேசி, “இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம்” அப்புறம்தான் அவர் 27 வால்யூம் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, உன்னுடைய அனுபவத்த நீ இந்த மதத்தோட விஷயங்களோட சேர்த்து சொன்னேன்னா, நீ சொல்றேன்னு கேப்பா ஜனங்கள்லாம். கசப்பு மருந்த தேன்ல கலந்து கொடுக்கற மாதிரி உன்னுடைய தமிழையும் உன்னுடைய அனுபவத்தையும் வச்சுண்டு, நம்முடைய மதத்தைப் பத்தி ஜனங்களுக்கு சொன்னா எல்லாரும் சந்தோஷமா கேப்பா அப்படின்னு சொல்லி, அவ்வளவு வால்யூம் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதி, அது ரொம்ப படிக்கிறதுக்கு ஆனந்தமா இருக்கும். ரொம்ப சுலபமான ஒரு பாஷைல எல்லாருக்கும் நம்முடைய மதத்தை ரீச் பண்ணார். அது பெரியவாளோட கருணை. பெரியவா ‘என்கிட்ட வர்றதுக்கு நீ கூச்சமே படாத, எப்ப வேணா வரலாம். பகவானை பதிதபாவனன்னு சொல்றா இல்லையா, அதனால நாங்கல்லாம் அதுக்கு தானே இருக்கோம். என்கிட்ட வரலாமான்னு நீ யோசிக்கவே கூடாது நீ, அப்படின்னு சொல்றா’. எவ்வளோ கருணை.
அதே மாதிரி இங்க கங்கைகொண்ட சோழபுரத்துல மேட்டூர் ஸ்வாமிகளை அன்னாபிஷேகம் பண்ண சொல்றார். அப்ப அந்த பக்கங்கள் எல்லாம் கொஞ்சம் மழை கம்மியா, அரிசி எல்லாம் விளையாம இருந்தது. பெரியவா… அவர் வந்து பெரியவா சொன்னாளேன்னு சொல்லி, ரொம்ப பாடுபட்டு அரிசி சேர்த்து வச்சா அத திருடிண்டு போயிடுவாளாம். இப்படியெல்லாம் சேலஞ்சஸ். அப்புறம் ஒரு வழியா அத வடிச்சு அந்த பெரிய லிங்கம், பெருவுடையார்னு பேரு தஞ்சாவூர்ல, அதே மாதிரி ஒரு பெரிய லிங்கம். அது மேல கொட்டினா அந்த ஸ்வாமிய மூடவே முடியாது. அவர் இன்ஜினியரா இருந்ததுனால ஒரு இரும்பு ஸ்ட்ரக்சர் பண்ணி, அதுக்குள்ள அரிசியைக் கொட்டி அந்த ஸ்வாமி முழுக்க நிரப்பி, அப்புறம் இன்னின்ன போர்ஷன்ல இருந்த அந்த அன்னத்த மேல இருக்கறத பக்தர்களுக்கு கொடுக்கணும், அப்புறம் ஆவுடையார்ல இருக்கறத மிருகங்களுக்கு நாய்களுக்கு அந்த மாதிரி கொடுக்கணும், அப்புறம் கீழ விழுந்ததெல்லாம் குளத்துல மீனுக்கு போடணும் அப்படின்னுலாம் பெரியவா சொல்லிக் குடுத்துருக்கா. அத அவா பண்றா. அதுக்கப்புறம் அங்க போய் பண்றது கஷ்டமா இருக்கு பெரியவா, இங்க ஏதாவது கபாலீஸ்வரர் கோவில்ல அப்படி பண்ணலாமான்னு கேட்டபோது, “இல்ல இல்ல நீ அங்க தான் பண்ணனும்” அப்படின்னு இன்சிஸ்ட் பண்ணி, அதுக்கப்புறம் அந்த நல்ல மழை, நல்ல விளைச்சல், அந்த ஊரே ரொம்ப செழிப்பாயிடுறது. அங்க இதுவே தானியத்துக்கு குறைவே இல்லாம ஆயிடுறது. எல்லாரும் ஆசையா பண்ணி இப்பவும் பண்ணிட்டு இருக்கா, அந்த மேட்டூர் சுவாமிகள் போட்ட எஃபர்ட்.
மேட்டூர் சுவாமிகள் எவ்வளவு பக்தி அப்படிங்கறதுக்கு, அவர் கங்கைல அதிக ஜனங்கள் எல்லாம் வராத இடத்துல ஆயிரம் குடம்… அதாவது இந்த கங்கைகொண்ட சோழபுரத்தோட சம்பந்தம் வந்த பின்ன பெரியவா சொல்றா, ராஜராஜ சோழனோட பிள்ளை ராஜேந்திர சோழன், அவன் கங்கைகொண்டான். கங்கை வரைக்கும் போய் எல்லா ராஜாக்களையும் ஜெயிச்சு, அவா தலையில கங்கை ஜலத்தை வச்சு கொண்டுவந்து இங்க ஸ்வாமிக்கு அபிஷேகம் பண்ணா, ஆயிரம் குடம் ஜலத்தை அபிஷேகம் பண்ணா அப்படின்னும்போது, அவருக்கு ஆசை வர்றது. அவர் ஆயிரம் குடம் அந்த மாதிரி கங்கை ஜலத்தை பிடிச்சு, சீல் பண்ணி, எப்படியோ ஒரு டேங்கர் வச்சு பெரியவாட்ட காஞ்சிபுரத்துக்கு கொண்டு வர்றார். பெரியவா பாத்துட்டு, இத அப்படியே கொண்டு போய் நீ கங்கைகொண்ட சோழபுரத்துல அபிஷேகம் பண்ணு அப்படின்னு சொல்றா. “நான் உங்களுக்காக கொண்டு வந்தேன்” அப்படின்னு… அதெல்லாம் பேசவே மாட்டார் அவர். பெரியவாட்ட ரொம்ப பக்தி. அவர் மேட்டூர் ராஜகோபாலா இருந்த காலத்துல இருந்தே பெரியவாட்ட ரொம்ப பக்தி. பெரியவாள்ட்ட உக்காந்து எல்லா பாடம் எல்லாம் கேப்பார். அவருக்கு சன்யாசம் வாங்கிக்கணும்னு ஆசை வந்தபோது, இன்னிக்கு மாதிரி ஒரு அனுஷம் நட்சத்திரம். பெரியவாளோட ஜெயந்தி அன்னிக்கு அவர்தான் ஏதாவது பிரார்த்தனை பண்ணா பெரியவா அனுக்கிரகம் பண்ணுவா அப்படின்னு, ராஜாக்களுக்கு அந்த மாதிரி போலருக்கு. அந்த மாதிரி ராஜா தானே, யதிந்திராள் தானே பெரியவா. அதனால அவர் காலம் காத்தால ஒரு சிட்ல, பெரியவா கிட்ட இத கொட்டையில இருந்து வந்த உடனே குடுங்கோன்னு சொல்லிட்டு குடுத்துட்டு போறார். எனக்கு சன்யாசம் தரணும் பெரியவா அப்படின்னு. பெரியவா அதை பாத்துடுறா. ஆனா இவர் எங்கையோ வேலை வேலைல இருக்கார். ராஜகோபால் எங்க, எங்கன்னு பெரியவா கேட்டுண்டே இருக்கா. அப்ப வந்த உடனே நீ சன்யாசம் வாங்கிக்கோ அப்படின்னு பெரியவா ஆசீர்வாதம் பண்றா. அவர் பெரியவா பாதுகைல இருந்து சன்யாசம் வாங்கிக்கிறார். ரொம்ப தீவிரமான துறவி. அப்படி காயக்லேஷம் பண்ணவர். அவருடைய அனுபவம் பேசியிருக்கார் அவர், ரொம்ப நன்னா இருக்கும். அவர் அதனால பெரியவா அங்க போய் அபிஷேகம் பண்ணுன்ன உடனே, இங்க வந்து ஆயிரம் குடத்தையும் அபிஷேகம் பண்ணி, அந்த ஜலத்தை பிடிச்சு ஒரு குடம் பெரியவாட்ட கொண்டு வந்த உடனே, பெரியவா உக்காந்துண்டு இதை எனக்கு அபிஷேகம் பண்ணு அப்படிங்கறா. அவருக்கு எவ்வளோ சந்தோஷமா இருந்திருக்கும். அந்த மாதிரி அந்த ஒவ்வொரு ஜீவனையும் எப்படி திருப்தி படுத்தணும் அப்படிங்கறது பெரியவாளுக்கு தெரியும். அவ்வளவு ஆனந்தமா ஒரு நாள் பழகினா கூட ஒரு லைஃப் டைம் நெனச்சுக்கிற மாதிரி பண்ணிடுவா.
நம்முடைய ஆஸ்திகத்துக்கும் சரி, ஜனங்களுக்கும் சரி, கோசம்ரக்ஷணம், ஹிந்து மிஷன் ஹாஸ்பிடல், விருத்தாஸ்ரமங்கள் இப்படி சமூகத்துக்கெல்லாம் பாத்து பாத்து பெரியவா பண்ணா. நம்முடைய வேத மதத்துக்காவும், வேதம், தர்ம சாஸ்திரம், புராணங்கள், நம்முடைய கலைகள் இதெல்லாம் காப்பாத்துறதுக்காக பெரியவா அவ்ளோ பண்ணிருக்கா. வேத சம்ரக்ஷண நிதி அப்படின்னு ஆரம்பிச்சு, வேலை பாக்குறவாளுக்கெல்லாம் பென்ஷன் தரான், வேதம் சொல்லிண்டு இருக்கிறவாளுக்கு கடைசி காலத்துல யாரும் என்ன தரா? அதனால அவாளுக்கு ஒரு தயிர் சாதமாவது சாப்றதுக்கு நாம பணம் கொடுக்கணும் அப்படின்னு சொல்லிட்டு, கொஞ்ச நாளைக்கு கழிச்சு யோசிச்சுட்டு, அந்த தயிர் சாதத்துக்கு தொட்டுக்க ஒரு ஊறுகாயாவது வேணுமா? இன்னொரு பத்து ரூபா போட்டு குடேன், அப்படி எல்லாம் ஒவ்வொன்னும் யோசிச்சு யோசிச்சு பெரியவா வந்து நான் சொல்லி குடும்பத்துல ஒரு பிள்ளையை குடுங்கோன்னு கொடுத்தா, அவருக்கு இப்ப அறுபது வயசு ஆயிடுத்து. அவர் சிரமப்படக்கூடாது அவாளுக்கு பாத்து பண்ணு அப்படின்னு, இன்னைக்கு அந்த வேத சம்ரக்ஷண நிதிலேருந்து எல்லாருக்கும் சஸ்டெனென்ஸ்க்கு வேணுங்கறத குடுக்குறா. அப்புறம் இப்ப பணத்துக்கு குறைவில்லை வேதத்தை காப்பாத்துறதுக்கு. படிக்க வரவா தான் கொஞ்சம் சிரமமா இருக்கு. அதுவும் பெரியவா அனுக்கிரகம் இருக்கு. அதே மாதிரி நன்னா சாஸ்திரங்கள், வேதாந்தம் படிச்சவாளை என்கரேஜ் பண்றதுக்கு குருவார ஸதஸ் அப்படின்னு ஒவ்வொரு குருவாரமும் பெரியவா இருக்கிற இடத்துல படிச்சவாலாம் வருவா. அப்ப யாராவது ஒருத்தரை பெரியவா சொல்லிர்ப்பா, இல்ல எப்படியோ வந்து சேர்ந்துடுவா கொஞ்சம் பணம் எடுத்துண்டு அன்னைக்கு அந்த சதஸ் நடக்கும். பெரியவாளே லீட் பண்ணுவா. அப்புறம் எல்லாருக்கும் நெறைய சம்பாவனை பண்ணுவா.
அனாத பிரேத சம்ஸ்காரம் அஸ்வமேதம் பண்றதுக்கு சமானம் அப்படின்னு சொல்லி, ஒரு பிரேதம் அனாதையா போனதுன்னு இருக்கக்கூடாது அப்படின்னு அதுக்கு சொல்லி சொல்லி நெறைய பேரை பண்ண வச்சார். இந்த காரியங்கள் எல்லாம் பெரியவா இச்சா சக்தி அப்படின்னா, புது பெரியவா கிரியா சக்தி. அவர் எக்ஸிகியூட் பண்ணிருக்கார். பெரியவா ஆசைப்பட்டதெல்லாம், அந்த ஒருத்தர் ரமேஷ்ன்னு ஒருத்தர் தன்னோட அனுபவத்தை சொல்றார், அந்த அனாத பிரேத சம்ஸ்காரத்துக்கு ஆரம்பிச்ச பின்ன அவருக்கு பணம் வேண்டியிருக்கு, வேன் வேண்டியிருக்கு, ரொம்ப சிரமங்கள் எல்லாம் படுறார். எல்லாத்துக்கும் புது பெரியவா கூட இருந்து சப்போர்ட் பண்ணி வேன் குடுத்து, மடத்ல இருந்து அப்படி. அதே மாதிரி எந்த காரியம் எடுத்தாலும், அந்த எக்ஸிகியூட் பண்றவாளுக்கு வந்து அது கொஞ்சம் தேங்க்லெஸ் ஜாப். அத வந்து புது பெரியவா கவலைப்படாம எல்லா ப்ராஜெக்ட்டையும் எக்ஸிகியூட் பண்ணி பெரியவாள திருப்தி படுத்திருக்கார். ‘குரு பக்தி புது பெரியவாட்ட இருந்து கத்துக்கணும்’னு பெரியவா நெறைய பேர் கிட்ட சொல்லிருக்கார். நெறைய நான் நேர்ல பாத்திருக்கேன், அந்த சாயங்காலம் ஆரத்தி புது பெரியவா தானே வந்து பெரியவா அதிஷ்டானத்துல பண்ணுவா. எத்தனையோ வாட்டி பாத்திருக்கேன். ஒரு நாள் கூடி மிஸ் பண்ண மாட்டார். காத்தால அஞ்சு மணி, சாயங்காலம் அஞ்சு மணி, அஞ்சரை மணிக்கு புது பெரியவாளே வந்து எவ்வளோ முடியலைன்னாலும் ஆரத்தி எடுப்பா பெரியவாளே. அப்படி ஒரு குருபக்தி அவருக்கு.
என்னோட ஒரு அனுபவத்த சொல்லி முடிக்கிறேன். நானு எனக்கு பெரியவா தரிசனம் வந்து, எங்க அம்மாவோட சித்தி சித்தப்பா பெரியவாள்ட்ட ரொம்ப பக்தி. நுங்கம்பாக்கத்துல சத்சங்கம்னு இருந்தது. அவா எல்லாரும் சேர்ந்து வருஷா வருஷம் பெரியவா எங்க இருந்தாலும் போய் ஒரு பிட்சாவந்தனம் பண்ணுவா. அந்த சித்தி சித்தப்பா ஆத்துக்கே நுங்கம்பாக்கத்துல பெரியவா வந்திருக்கா. ரொம்ப பெரியவாட்ட பக்தி. பெரியவாளுக்கும் அவாளுக்கு குழந்தைகள் இல்ல, அவாட்ட ரொம்ப கருணை. அவர் பேங்கரா இருந்தார். கொஞ்சம் வசதி இருந்தது. பெரியவாளுக்கு மடத்துக்குல்லாம் நன்னா பண்ணுவார். அவரோட அந்தாத்துக்கு மாயவரம் சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் போயிருக்கார். நம்ம ஸ்வாமிகள் போய் சப்தாகம் பண்ணிருக்கார். நல்ல காரியங்கள் நடந்துண்டே இருக்கும் அந்தாத்துல. சண்டி ஹோமம் நடக்கும். கோடிக்கணக்கா லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை பண்ணிண்டே இருப்பார். ரொம்ப புண்ணியாத்மா. அவா ரெண்டு பேரும் ரொம்ப நெறைய நல்ல காரியங்கள் பண்ணிருக்கா. நான் கடைசில நம்ம ஆத்துல தான் இருந்தா அவா. ஒரு பாக்கியம் எங்களுக்கு கிடைச்சது. அந்த வெங்கடாசல ஐயர், அந்த மாமி வந்து எனக்கு சின்ன வயசுல அஞ்சாறு வயசு வரைக்கும் நடக்கவே முடியல போலியோனால. இந்த குழந்தை நடந்தான்னா குருவாயூர் கூட்டிண்டு வந்து அங்க பிரதக்ஷிணம் பண்ண வெக்கறேன் அப்படின்னு வேண்டிண்டு இருக்கா. சரின்னு சொல்லிட்டு எட்டு வயசுக்குள்ள கொஞ்சம் எல்லாம் நடக்க முடிஞ்சது. அப்ப அந்த குருவாயூர்ல பெரியவா இருக்கா. அப்ப பெரியவாகிட்ட பிட்சாவந்தனமும் பண்ணிட்டு, என்ன கூட்டிண்டு போய் அங்க பிரதக்ஷிணமும் பண்ணலாம் அப்படின்னு என்ன அப்பா அம்மாட்ட கேட்டு என்னை கூட்டிண்டு போறா. அவா நல்ல வயசானவா. ஐம்பது பேர் போறாளே குழந்தையை என்ன ஆயிடப்போறதுன்னு என்ன கூட்டிண்டு போனா. நான் காட்பாடின்னு ஒரு ஸ்டேஷன்ல ராத்திரி ஒன்பது மணிக்கு ஒரு வாட்டர் பாட்டில் எடுத்துண்டு தண்ணி பிடிக்கிறேன்னு இறங்கிட்டேன், வண்டி போயிடுத்து. அப்புறம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் பாத்தார், என்னடாங்கறார். வண்டி போயிடுத்தேன்னு… கவலைப்படாதேன்னு சொல்லிட்டு ஜோலார்பேட்ல அடுத்த ஸ்டேஷன்ல இன்னொருத்தர் இறங்கி, வந்து என்னை இங்க இருந்து கூட்டிண்டு போயிட்டார். அதுக்குள்ள அவா தவிச்சு போயிட்டா. குழந்தைய கூட்டிண்டு வந்து தொலைச்சுட்டோமேன்னு அவா அந்த சித்தி சித்தப்பா எல்லாம் ரொம்ப தவிச்சு போயிட்டா. பெரியவாட்ட போய் சொல்லிருக்கா. கவலைப்படாதேங்கோன்னு சொல்லிருக்கா பெரியவா. அப்புறம் இந்த குழந்தை தானே என்ன போய் நிறுத்தினா பெரியவா முன்னாடி. அன்னைல இருந்தே நான் பெரியவாள்ட்ட இருந்து எஸ்கேப் ஆக பாத்துண்டே இருக்கேன். ஆனா பெரியவா என்ன விடாம பிடிச்சுண்டு இருக்கா.
மஹா பெரியவா போய் தரிசனம் பண்ணுன்னு ஸ்வாமிகள் அனுப்புவார். நான் கொஞ்ச நாள் தரிசனம் பண்ணிட்டு இருந்தேன். ‘ராகா சந்த்ர சமான காந்தி வதனா’ன்னா அதுதான். அந்த பூர்ண சந்திரன் போன்ற அந்த முகம். அந்த ராகான்னு சொன்ன உடனே லலிதா ஸஹஸ்ரநாமத்த கிருதிகளா பண்ணி, அவர் பேர் ஞாபகம் இல்ல, (களக்காடு ராமநாராயண ஐயர்) அவரோட பொண்ணு (சீதாலக்ஷ்மி) அதை பத்தி எல்லாம் ரொம்ப அழகா பெரியவா அனுபவத்தை பகிர்ந்துண்டு இருக்கா. அந்த வித்வான் வந்து, இங்க மடத்துலயும் வித்வான், அந்த கலைகளை என்கரேஜ் பண்றதுக்கு நெறைய வித்வான்கள் மடத்துல ஆஸ்தான வித்வானா இருப்பா. அவர் சிருங்கேரிலயும் ஆஸ்தான வித்வானா இருந்தார். ஒரு நவராத்திரிம்போது அவா சிருங்கேரில கூப்டு அனுப்பிருக்கா. அங்க போய் இருந்து பாடிட்டு, நவராத்திரி முடிஞ்ச உடனே பெரியவாட்ட வறார். பெரியவாட்ட வந்து இங்க இருக்க முடியல இந்த வாட்டி என்னால அப்படின்னு சொல்றார். அதுனால என்ன ‘ப்ரதிபன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதா’ அப்படிங்கற அங்கிருந்து ஆரம்பிச்சு ஒரு கிருதி பண்ணிருக்கார். அதை நீ பாடு அப்படிங்கறார். அதை பாடி முடிச்ச உடனே பாத்தியா, பிரதிபத்னா பிரதமை, ராகானா பௌர்ணமி. இந்த பதினைஞ்சுமே சேர்ந்து அம்பாளுடைய வடிவம்னு இருக்கு. அதனால நவராத்திரி இன்னைக்கு வரைக்கும் இருக்கு. அதனால நீ நவராத்திரில என்கிட்ட வந்து பாடிட்டன்னு வச்சுக்கோ அப்படின்னு சொல்றார். அப்போ அந்த வித்வான் சொல்றார், பெரியவா கிட்ட பாடுனா எங்களுக்கு ஒவ்வொரு நாளுமே பௌர்ணமி தான் பெரியவா அப்படிங்கறார். அந்த மாதிரி அந்த தரிசனம் வந்து அந்த கதவ தொறந்த உடனே பெரியவா வந்த உடனே சூரிய தேஜஸா இருக்கும். அப்புறம் அப்படியே குளிர்ந்த நிலவு போல பாத்துண்டே இருக்கலாம் போல இருக்கும்.
பேசுறதெல்லாம் கிளி மாதிரி இருக்கும். சின்ன வயசுல பெரியவாளுக்கு கணத்துல ‘கிணி’ன்னா கிளின்னு அர்த்தமாம். அவரோட செல்லப் பேரே கிணின்னு வச்சிருக்கா. அப்படி ஒரு குரல். அப்படி பெரியவா தரிசனம் பண்ணுன்னு சொல்லி ஸ்வாமிகள் சொல்லி போயிண்டு இருப்பேன். பெரியவா அந்த கியூல எல்லாரும் தரிசனம் பண்ணும்போது இப்ப அபய ஹஸ்தத்தை காமிப்பா. அதுக்கப்புறம் எல்லாரும் மூவ் பண்ணுங்கோ அப்படிங்கறதுக்காக கைய இப்படி இப்படி மூவ் பண்றதுக்காக கைய அசைப்பா. அப்ப கொஞ்ச நாளுக்கு அப்புறம் எனக்கு தோணித்து, நீ அங்க சுவாமிட்டயே இரு அப்படின்னு பெரியவா சொல்ற மாதிரி தோணித்து. நான் வந்து சுவாமிகள் கிட்ட சொன்னேன், எனக்கு இங்கயே இருக்கேனே நானு, உங்கள் கிட்டயே நான் பெரியவாளை பாக்குறேன் அப்படின்ன உடனே, சரி உன்னால அப்படி இருக்க முடியும்னா சரி. எல்லாருக்கும் அந்த மடம், அந்த பாரஃபர்னேலியால ஒரு அட்ராக்ஷன். அதனால நான் அங்க எல்லாரும் அனுப்பிச்சு விடுறது அப்படின்னு சொன்னார். அதாவது இங்க அந்த சான்நித்யம் இருக்கு, உனக்கு தெரிஞ்சா சரி அப்படிங்கறத சொல்லாம சொன்னார். அதுக்கப்புறம் நான் அங்கேயே உக்காந்துட்டேன். ஆனா அவர்ட்ட பல வருஷங்கள் கத்துண்ட பின்ன, அவர்ட்ட இருந்து தப்பிச்சு அமெரிக்கா போக பாத்தேன். அதுவும் விடல, புடிச்சு இழுத்துண்டு வந்துட்டார். அந்த மாதிரி நான் இவாள்டேருந்து தப்பிச்சு காமினி காஞ்சனத்துல முழுகறதுக்கு இன்னைக்கும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஏதோ அவாளும் விடாம புடிச்சு வச்சுண்டு இருக்கா.
இந்த மந்தஸ்மித சதகத்துல 32 வது ஸ்லோகம்.
கர்மௌகாக்ய தம: கசகசிகரான் காமாக்ஷி ஸஞ்சிந்தயே
த்வன்மந்தஸ்மித ரோசிஷாம் த்ரிபுவன க்ஷேமங்கராணாம் குரோ
யே வக்த்ரம் ஷிசிரஷ்ரியோ விகஸிதம் சந்த்ராதபாம்போருஹ
த்வேஷோத்கோஷண சாதுரீமிவ திரஸ்கர்த்தும் பரீஷ்குர்வதே
என்னுடைய கர்மாவும் அம்பாளுடைய மந்தஸ்மிதமும் டக் ஆஃப் வார் பண்றது (Tug of war). அதுல அந்த அம்பாளுடைய மந்தஸ்மிதம் க்ஷேமமா இருக்கட்டும், அதாவது அதுவே ஜெயிக்கட்டும் அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம். அந்த பிரார்த்தனையோட முடிச்சுப்போம்.
இதை வீழிநாதன் மாமா ரொம்ப எக்சைட்டடா சொல்லுவார். பாலகிருஷ்ண ஜோஷி ஒரு தடவை பெரியவாளைப் பத்தி பேசும்போது, “It requires tremendous misfortune to escape the impartial grace of his holiness” அப்படின்னு சொன்னாராம். அரண்டு போயிட்டேன்பா நான் அப்படிம்பார். வீழிநாதன் மாமா, “Shakespeare, Wordsworth எல்லாம் படிச்சிருக்கேன், இந்த மாதிரி இங்கிலீஷ் கேட்டதில்லை” அப்படின்னு சொல்லுவார். அது மாதிரி பெரியவாளோட கருணையில இருந்து தப்பவே முடியாது. ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ன்னு அவரை ஒரு நமஸ்காரம் பண்ணா போதும். அவருடைய கருணை கடாக்ஷம்…
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி.
sumukhashcha ekadantashcha kapilo gajakarNakaH |
lambodarashcha vikaTo vighnarAjo vinAyakaH ||
dhUmraketurgaNAdhyakshaH bhAlachandro gajAnanaH |
vakratuNDaH shUrpakarNaH herambaH skandapUrvajaH ||
manIShAm mAhendrIm kakubhamiva te kAmapi dashaam |
pradatte kAmAkShyAH charaNataruNAditya kiraNaH ||
yadIye samparkke dhRutarasa-marandaa kavayatAm |
parIpAkam dhatte parimaLavatI sUktinaLinI ||
kuNDali kumAri kuTile chaNDi charAchara savitri chAmuNDe |
guNini guHhAriNi guhye gurumUrtthe tvAm namAmi kAmAkShi ||
gurumUrtthe tvAm namAmi kAmAkShi… (O Kamakshi, who is in the form of my Guru, I prostrate to Thee)
gurumUrtthe tvAm namAmi kAmAkShi…
gurumUrtthe tvAm namAmi kAmAkShi…
apAra karuNA sindhum j nAnadam shAnta rUpiNam |
shrI chandrashekhara gurum praNamAmi mudAnvaham ||
Today is Pournami (Full Moon). “Gurumurtte Tvam Namami Kamakshi”. It means, “O Kamakshi, I prostrate to you in the form of my Guru.” This is the meaning of Gurumurtte Tvam Namami Kamakshi. Periyava is indeed Kamakshi. Govinda Damodara Swamigal taught me: “You are reading Muka Panchashati; go and have His darshan frequently. Do four prostrations (namaskarams). For Sanyasis, it is four prostrations. Prostrate while saying this line Gurumurtte Tvam Namami Kamakshi four times.”
On this Pournami day, we should meditate on Periyava as Kamakshi. When we do so, He is like a mother to us all. Our Amma (biological mother) is filled with immense compassion and love for us. Kamakshi is Jagadamba (Mother of the Universe). All the people in this world are children of that Jagadamba. She is very compassionate toward them. In the same way, I wish to speak about Periyava’s compassion. I desire to share and reminisce about a few incidents from His life that illustrate how compassionate Periyava was.
The Infinite Ocean of Grace
In the shloka composed by the Pudu Periyava (Jayendra Saraswati Swamigal), the very first words are “Apara Karuna Sindhum” (An infinite ocean of compassion). When someone who moved closely with Him for fifty years says this, what more ‘certificate’ is needed? He showed compassion toward everyone.
Within two or three years of Him ascending the Peetham (the seat of the Acharya), a staff member at the Matham began stealing silver articles used in the puja. He would take them to his house. To cover his tracks, he spread a baseless rumor that the “New Swamigal” (the young Periyava) had relatives in Kumbakonam and was stealing the items to give to them.
A lawyer was watching all this. He figured out the truth. He managed to hide one puja item in the thief’s own house. One day, during the puja, the lawyer made a big scene, shouting, “Where is the silver pot?” He acted dramatically. He asked the thief, “Did you take it? Did you take it?” When the thief replied, “Why would I take it? I don’t know,” the lawyer said, “I suspect only you. Let’s go check your house.” The thief, confident he hadn’t taken that specific item (since the lawyer had planted it), said, “Fine, come and see.” The lawyer took everyone there and recovered all the previously stolen items. He then told Periyava, “He spread unnecessary rumors about You. We have caught him. All the items are recovered.”
At that young age, at fifteen, Periyava said: “You may remove him from the job if you wish. But do not hand him over to the police. He is a Brahmin. If you do, he won’t be able to show his face in this town again.” Even at that age, He showed compassion toward His enemy. That is Periyava. It was His very nature. Because He was the incarnation of Kamakshi. He was the Paramatman who took an avatar specifically to provide Thapa Shanti (relief from suffering) to the struggling people of this Kali Yuga.
Compassion for All Beings
Periyava would say: “Put rice flour for the ants in their holes, give Agathi leaves to the cows, take a handful of rice (Pidi Arisi) every day, collect it from everyone in the village once a month, offer it to the temple, and distribute it to the poor.” His compassion extended from the tiny ant to Lord Brahma.
Regarding His compassion toward the Divine itself—He performed the Chandramouleeswara Puja three times a day. Adi Shankara established this Matham for this very purpose. For Bhakti (Devotion), there is the thrice-daily Chandramouleeswara Puja and Anugraha Bhashanam (blessing through speech). For Karma (Action), there is extensive Shastra propagation and social service. For Jnana (Knowledge), the Shankara Bhashyam must be studied daily with other Sanyasis. Periyava followed all of this. No matter how late it got, He would take His Bhiksha (meal) only after completing the puja and the Vedanta lesson with the Sanyasis.
He performed the Chandramouleeswara Puja with such love. During Pradosham or Pournami, He would perform the puja without worrying about his physical exhaustion. Shivaratri and Pradosham would often come back-to-back. He would perform them with such relish without a trace of tiredness. He has a title: “Chandramouleeshwara Puja Dhurandharaya Namaha”. During the puja, He insisted the food offering must be warm, but not scalding hot. If it was too hot, He would wait for it to be fanned and cooled. If it was dry or hard, He would ask for it to be made again. That was the level of His compassion even toward the Lord.
Similarly, He once wished to make a Sahasranama Mala (a garland of 1000 names) for Goddess Kamakshi. If Periyava makes a Sankalpa (intent), it happens. Ariyakudi (the famous singer) came that day and offered to sing the Kanakadhara Stotram. He sang, and the devotees who came offered their bangles and chains. The moment people knew Periyava desired it, everything came together. A goldsmith crafted a beautiful Sahasranama Mala. When they picked an auspicious day and asked Periyava, “How should we adorn the Mother with this?” They thought it should be worn around the neck. Periyava said, “This is so heavy. If you put it on the Mother’s neck, won’t it hurt Her? Fix a support rod behind and hang the garland on it. It should look beautiful to our eyes, but the Mother’s neck should not ache.” He was one who showed compassion even toward the Deity. Such a Karuna Murti (Embodiment of Grace).
Power of Intent: The Satara Temple and Subramanian Swamy
To show how things happened by His mere intent—at the age of eighty, Periyava walked all the way from here to Satara (Maharashtra). While in Satara, a hotel owner named Samanna approached Him. He said, “I have cancer. I have some money, about five lakhs, and some land. Please take it for the Matham and do some good work.” He had even brought his son along. Periyava said, “Let that be. You and your son go to Tamil Nadu, there is a temple called Chidambaram. Visit it and come back.” Thinking “Periyava is saying it,” he went and saw it. Upon his return, Periyava said, “Build a temple like that here in Satara.” This man, who was wondering if he had one or two months left to live, was being told to build a temple! He asked, “What are you saying, Periyava?” Periyava replied, “Do it. You can do it.”
After that, the man lived for five more years. Periyava had made the Sankalpa. M.G.R. gave money from Tamil Nadu. N.T. Rama Rao from Andhra, then Karnataka and Maharashtra—four states took up the cost of the four main doors. Even now, there is a board there mentioning which state contributed what. The teak wood for the roof, just like the original Chidambaram roof, was donated entirely by Kerala. In three years, from 1981 to 1984, Periyava built a beautiful Chidambaram temple there. Such things happen if He intends them.
Once, Subramanian Swamy came to see Periyava. He was standing there. Periyava saw him and went inside. Swamy thought Periyava didn’t want to see him and started to leave. Then someone ran and called him back. When he went to Periyava, He asked, “Why did you just leave?” He replied, “You went inside, so I left.” Periyava had brought a newspaper from inside. Pointing to a photo, He asked, “Are you this Subramanian Swamy?” When he said yes, Periyava said, “From now on, when you come here, you can leave only after I give permission.” He then sat and spoke for an hour about politics. Periyava said, “Do not crave for positions. See how much good you can do through politics.” He discussed global politics, saying we should be friends with Israel. At that time, such a thing was out of the question. Periyava had such foresight. He said we must maintain a relationship with China. Back then, China was the enemy. Periyava told a story from the Mahabharata and said, “We don’t need to celebrate the relationship, but we have to maintain a relationship. They are not a threat to us. Open a channel and maintain a relationship.” Subramanian Swamy did exactly that. Because of that, he asked the Chinese for permission for the Kailash Yatra. They said, “If it’s you, you can come.” His health was weak then. He wondered how he would do it, but Indira Gandhi said, “No, you go. You can do it. I will give you a helicopter and all facilities.” He completed the Kailash Yatra. Today, so many people go and perform the Parikrama (circumambulation) of Kailash. He described how when the sun hits Kailash, the silver mountain glows like gold. He had darshan of the ‘Ponnar Meniyan’ (The one with the golden body). See how Periyava’s touch reaches so far. He did so much for Asthikam (Faith).
Social and Religious Reforms
When tickets were introduced for Swami darshan inside temples, He objected strongly. He said, “No, there must be a Dharma Darshan (free darshan) for the poor. You can have tickets later, but free darshan must exist.” He spoke firmly and ensured it was implemented. He did so much to make faith flourish. He organized Thiruppavai-Thiruvasagam conferences, printed lakhs of books, and held competitions for children. Because He made people study Thiruppavai fifty or sixty years ago, that generation taught the next, and today even my grandson studies it. He also removed the divide between Shaivism and Vaishnavism. At those conferences, He would ask a Vaishnavite to lecture on Thiruvempavai (a Shaivite text) and a Shaivite to lecture on Thiruppavai (a Vaishnavite text). He brought such amazing harmony between the Shanmatas (the six sects).
Periyava had compassion for everyone. Kannadasan, who used to speak atheistically as part of the DK, started feeling a sense of weariness with that path. He began learning about our traditions and had Periyava’s darshan. His health was failing because he had abused his body, but he would stand for hours before Periyava and never sit down. His wife has written about this. Periyava spoke to him deeply, saying, “You can do this and that.” Only then did he write the 27 volumes of Arthamulla Hindu Madam (Meaningful Hinduism). Periyava told him, “If you combine your life experiences with the tenets of this religion, people will listen to you. Like mixing bitter medicine with honey, use your Tamil and your experience to tell people about our religion; they will listen happily.” He reached the masses with our religion in a very simple language. That was Periyava’s grace. Periyava told him, “Don’t ever hesitate to come to me. You can come whenever you want. If God is called Patita Pavana (Purifier of the fallen), aren’t we here for that? You should never wonder if you are allowed to come to me.” What compassion!
The Annabhishekam at Gangaikonda Cholapuram
In Gangaikonda Cholapuram, He asked Mettur Swamigal to perform Annabhishekam (offering of cooked rice). At that time, the area had little rain and rice wasn’t growing well. Mettur Swamigal struggled to collect rice as Periyava had instructed, and sometimes it would even get stolen. There were many challenges. Finally, he cooked the rice to cover the giant Lingam. There is a huge Lingam there, just like the Peruvudaiyar in Tanjore. It’s so big you can’t easily cover it. Being an engineer, Mettur Swamigal built an iron structure to hold the rice and cover the Swami. Periyava instructed: “The rice from the top portion should be given to devotees, the rice from the middle (Avudaiyar) should be given to animals and dogs, and the rice that falls below should be put into the pond for the fish.” They followed this. Later, when they found it difficult and asked if they could do it at the Kapaleeswarar temple instead, Periyava insisted, “No, you must do it there.” Because of that, the area received good rain and harvests, and the town became prosperous. There was no shortage of grain. Even now, people do it with great love, thanks to the effort started by Mettur Swamigal.
To illustrate Mettur Swamigal’s devotion—he once brought a thousand pots of Ganga water from a remote part of the Ganges. After getting involved with Gangaikonda Cholapuram, Periyava told him how Rajendra Chola (son of Raja Raja Chola) was called Gangaikondan because he conquered kings up to the Ganges, brought the water on their heads, and performed abhishekam with a thousand pots. Hearing this, Mettur Swamigal wanted to do the same. He collected, sealed, and brought a thousand pots of Ganga water by tanker to Kanchipuram. Periyava told him, “Now take this and perform abhishekam at Gangaikonda Cholapuram.” Mettur Swamigal didn’t argue that he brought it for Periyava; his devotion was absolute. He had studied under Periyava for years. When he wished for Sanyasa, it was on an Anusham star day, Periyava’s Jayanthi. He left a note for Periyava asking for Sanyasa. Periyava saw it and kept asking, “Where is Rajagopal (his pre-Sanyasa name)?” When he arrived, Periyava blessed him to take Sanyasa. He was a very intense ascetic. After he performed the abhishekam with the thousand pots at Gangaikonda Cholapuram as instructed, he brought one pot of that water back to Periyava. Periyava then sat down and said, “Now, perform abhishekam to me with this.” How happy he must have been! Periyava knew exactly how to satisfy every soul. Even a day spent with Him felt like a lifetime’s memory.
Preserving the Vedas and Social Welfare
For our faith and the people, Periyava initiated Go-samrakshanam (cow protection), Hindu Mission Hospital, and old age homes. He carefully looked after society. To protect the Vedas, Dharma Shastras, Puranas, and our arts, He did so much. He started the Veda Samrakshana Nidhi (Vedic Preservation Fund). He thought, “People working in other jobs get pensions, but who gives anything to those who chant the Vedas in their old age? We must give them at least enough for curd rice.” Later He thought, “They need some pickle to go with that curd rice, don’t they? Add another ten rupees.” He thought of every detail. He would ask families to give one son to the Veda Pathashala. Today, those students are sixty years old, and the fund ensures they have sustenance. Now there is no lack of money for Veda preservation, though finding students is a challenge. He also encouraged scholars by conducting Guruvara Sadas (Thursday assemblies). He would lead the discussions and give generous rewards (Sambhavana) to all.
He said that performing the last rites for an orphan (Anatha Preta Samskaram) is equal to performing an Ashvamedha Yaga. He insisted that no body should go uncremated as an orphan. Periyava was the Iccha Shakti (the Will) and Pudu Periyava was the Kriya Shakti (the Action). Pudu Periyava executed everything Periyava desired. A man named Ramesh describes how he struggled for funds and a van for this service, and Pudu Periyava supported him completely from the Matham. Executing projects is often a thankless job, but Pudu Periyava did it all to please Periyava. Periyava Himself told many, “One must learn Guru Bhakti from Pudu Periyava.” I have seen it personally; Pudu Periyava would perform the evening Harati at Periyava’s Adhishtanam every single day without fail. Whether he was well or not, he would be there at 5:30 AM and 5:30 PM. Such was his devotion.
A Personal Experience
I will end with one of my own experiences. My mother’s Chithi and Chithappa were very devoted to Periyava. They were part of a group in Nungambakkam called Satsangam. Every year, wherever Periyava was, they would go and perform Bhikshavandanam. Periyava had even visited their house. They had no children, and Periyava was very compassionate toward them. That Chithappa was a banker and quite well-off; he did a lot for the Matham. Great scholars and our Swamigal would visit their house for Saptahams and Chandi Homams. They were truly meritorious souls (Punnyatmas).
When I was a child, I couldn’t walk until I was five or six due to polio. The aunt prayed, “If this child walks, I will bring him to Guruvayur and make him do Pradakshinam (circumambulation).” By age eight, I could walk a bit. Periyava was in Guruvayur then. They decided to do Bhikshavandanam and take me for the Pradakshinam. They were quite old. My parents let me go. At Katpadi station at 9 PM, I got down to fill a water bottle and the train left. A station master saw me and told me not to worry. Someone else at Jolarpet station got down and brought me back. Meanwhile, the old couple were so distraught, thinking they had lost the child. They went and told Periyava. He told them not to worry. Eventually, I was the one who stood before Periyava. Since that day, I have been trying to ‘escape’ from Periyava, but He refuses to let go.
Swamigal would often send me to have Mahaperiyava’s darshan. “Raakaa chandra samaana kaanti vadanaa”—that was Him. His face was like the full moon. Periyava once shared a beautiful experience about a Vidwan (scholar) who composed kritis on Lalitha Sahasranamam. That Vidwan was a court musician at both Kanchi and Sringeri. Once, during Navaratri, he was called to Sringeri. He went, sang there, and returned to Periyava afterward, feeling bad he couldn’t be in Kanchi. Periyava asked him to sing a kriti starting with “Pratipan-mukhya-rAkAnta-tithi-maNDala-pUjitA”. He explained: “Pratipat is the first day, Raaka is the full moon. All these fifteen days are the forms of the Mother. So, Navaratri is still here today. You have sung for me during Navaratri.” The Vidwan replied, “Periyava, every day we spend singing before You is a Pournami (full moon) for us.” His darshan was like that—when the doors opened, He was like the radiance of the Sun, and then He would look at you like the cool Moon.
His voice was like a parrot’s. In His childhood, His nickname was “Kini,” which means parrot. Swamigal would tell me to go have His darshan. In the queue, Periyava would show the Abhaya Hastham (hand of protection) and then wave His hand to tell people to move along. After a few days, I felt Periyava was telling me, “Stay there with your Swami.” I told my Swamigal, “I will stay here with you; I see Periyava in you.” He said, “If you can do that, fine. People are usually attracted to the Matham and its paraphernalia, so I send them there. If you feel the presence here, that’s fine.” But after learning from him for years, I tried to escape to America. Even then, He pulled me back. I am still trying to escape and drown in Kamini-Kanchana (lust and wealth), but they won’t let go of me.
In the Manda Smita Shatakam, the 32nd shloka says:
karmaughAkhya tamaH kashakashikarAn kAmAkShi sa nchintaye
tvanmandasmita rochiSHAm tribhuvana kShemankarANAm guro
ye vaktram shiShirashriyo vikasitam chandrAtapAmboruh
dveSHodghoShaNa chAturImiva tiraskartum parIShkurvate
It describes a ‘tug of war’ between my Karma and the Mother’s gentle smile (Mandasmita). May that smile be victorious and bring welfare. Let us end with that prayer.
Veedhinathan Mama used to tell this excitedly. Once, when Balakrishna Joshi spoke about Periyava, he said: “It requires tremendous misfortune to escape the impartial grace of His Holiness.” Veedhinathan Mama would say, “I was stunned. I have read Shakespeare and Wordsworth, but I have never heard English like this!” It is impossible to escape Periyava’s grace. It is enough to prostrate to Him once, saying “Gurumurtte Tvam Namami Kamakshi”. His compassionate glance will follow.
Gurumurtte Tvam Namami Kamakshi.