Archives:

ஸ்ரீ சங்கர சரிதம் – முதல் பகுதி – ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்?


ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்? (16 min audio in tamil. same as the script above)

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये  ||

ஶூக்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்பு4ஜம்|

ப்ரஸன்ன வத3நம் த்4யாயேத் ஸர்வ விக்4நோப  சாந்தயே|| 1

वागीशाद्या सुमनसः सर्वार्थानामुपक्रमे |

यं नत्वा कृतकृत्यास्यु: तं नमामि गजाननम् ||

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – இரண்டாம் பகுதி – சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து

சம்பு சங்கரராக அவதாரம் (14 min audio in tamil. same as the script above)

நேத்திக்கு சங்கர சரித்திரத்தை நாம் ஏன் கேட்க வேண்டும் அப்படின்னு சொல்லிண்டு இருந்தேன். இன்னிக்கு தேவர்கள் தக்ஷிணாமூர்த்தி கிட்ட பிரார்த்தனை பண்ணி, பகவான் பூமியில ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினார் அப்படிங்கற விஷயம்.

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – மூன்றாம் பகுதி – ஸ்ரீசங்கர ஜனனம்; மகாபெரியவா ஜனனம்


ஸ்ரீ சங்கர அவதாரம் (20 min audio in tamil. same as the script above)

நேற்றைக்கு, தேவர்கள் தக்ஷிணாமூர்த்தி கிட்ட “பூமியில் கலியினுடைய ஆட்டோபம் ஜாஸ்தி ஆகிவிட்டது. 72 துர்மதங்கள் வந்துடுத்து. நீங்கள் அவதாரம் பண்ணி, ஜனகளுக்கு நல்ல புத்தி குடுக்கணும்” அப்படின்னு பிரார்த்தனை பண்ணிண்டா. அதே நேரத்தில் இங்கே காலடி என்கிற க்ஷேத்ரத்தில் சிவகுரு ஆர்யாம்பா என்ற தம்பதி குழந்தை வரம் வேண்டி திருச்சூர் வடக்குன்நாத க்ஷேத்ரத்துல பஜனம் பண்ணிண்டு இருந்தா. பகவான் அவாளுக்கு கனவுல வந்து அனுக்ரகம் பண்ணினார், என்கிறதெல்லாம் சொல்லிண்டு இருந்தேன்.

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – நான்காம் பகுதி – சங்கரர் சன்யாசம்; மகாபெரியவா சன்யாசம்

நேற்றைய தினம், ஆதி சங்கர பகவத் பாதாள் பூமியில பிறந்தது, காலடியில சிவகுரு, ஆர்யாம்பாங்கிற தம்பதிக்கு, குழந்தையாக தக்ஷிணாமூர்த்தியே பூமியில அவதாரம் பண்ணியிருந்தார், ரொம்ப மேதாவியா இருந்ததுனால அவருக்கு, அஞ்சு வயசுலயே பூணல் போட்டுட்டா, அப்படீன்னு சொன்னேன். இந்த வசந்த ருதுல பகவத் பாதாளோட அவதாரம். விவேக சூடாமணியில ஒரு ஸ்லோகம் இருக்கு.

शान्ता महान्तो निवसन्ति सन्तो वसन्तवल् लोकहितं चरन्तः |

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர்

நேற்றைய தினம், சங்கரர் தன் அம்மா கிட்ட உத்தரவு வாங்கிண்டு, முறைப்படி ஸன்யாசம் எடுத்துக்கணும் அப்படின்னு ஒரு குருவைத் தேடி கிளம்பறார், அப்படீன்னு சொல்லிண்டு இருந்தேன்.

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரை

 

நேற்றைய கதையில், ஆதி சங்கர பகவத் பாதாள் தன்னுடைய குரு கோவிந்த பகவத் பாதாள் கிட்ட ஸந்யாஸ தீக்ஷை வாங்கிண்டு, அவர் உத்தரவு படி காசியிலே போயி, அத்வைத தத்துவத்தை ஜனங்களுக்கு பாஷ்யங்கள் மூலமாகவும், தன்னுடைய ப்ரவசனங்கள் மூலமாகவும், 56 தேசத்திலேருந்து வந்த பண்டிதர்களெல்லாம் சொல்லி, அதன் மூலமா வேத மதத்துக்கே ஒரு புத்துயிர் கொடுத்தார், அப்படீங்கிறதை சொல்லிண்டு இருந்தேன்.

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – ஏழாம் பகுதி – பக்தியின் மூலமே ஞானம் அடையலாம்

நேற்றைய கதையில் ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு முன்னாடி அந்த அத்வைத பரம்பரையில் மஹாவிஷ்ணு, ப்ரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வ்யாஸர், சுகர், கௌட பாதர், கோவிந்த பகவத் பாதர், அவரோட சிஷ்யரா சங்கர பகவத் பாதாள் இந்த பரம்பரை, அதுல இருந்த மஹான்களுடைய பெருமையெல்லாம் பார்த்தோம். இந்த கோவிந்த நாமத்துல ஆதி சங்கரருக்கு இருக்கக் கூடிய ப்ரியத்துனால பஜகோவிந்தம், பஜகோவிந்தம் னு பாடினார், அப்படீன்னு சொன்னேன்.

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா

 

நேற்றைய கதையில் ஆதி சங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணினது, காலபைரவாஷ்டகம் பண்ணினது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – ஒன்பதாம் பகுதி – சங்கர பாஷ்யத்தில் பக்தியின் ஏற்றம்

நேற்றைய கதையில் ஆசார்யாள் சொன்ன வழியில், பஜ கோவிந்தத்தில் இருக்கிற மாதிரி, உலக விஷயங்கள்ல பற்று வைக்காமல், உலக சுகங்களை துச்சமா நினைச்சு, அவற்றை துறந்து, பகவானுடைய பக்தி பண்ணி, வழிபாடு பண்ணி, பஜ கோவிந்தம் அப்படீன்னு சொன்னார். மகாபெரியவா அதையே வாழ்ந்து காண்பிச்சு, அதையே உலகத்துக்கு உபதேசமாவும் சொல்லிண்டு இருந்தா, தன்னோட வாழ்நாள் முழுக்க அதை பண்ணிண்டு இருந்தா, அப்படீன்னும் சொன்னேன்.

Share

ஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதை

நேற்றைய கதையில், ஆதி சங்கரர் கீதா பாஷ்யத்தில் கூட, பக்தி மார்கத்தை பத்தி விஷேஸமாக சொல்லிருக்கார், அப்படிங்கறதை பார்த்தோம். இன்னிக்கு ஆதி சங்கரர், குமாரிலபட்டர் அப்படிங்கறவரை, பிரயாகைல போய் பார்க்கிறார்.

Share