Categories
mooka pancha shathi one slokam

காரணபரசித்ரூபா


1. ஆர்யா சதகம் முதல் ஸ்லோகம் – காரணபரசித்ரூபா – அறிமுகம்

2. காரணபரசித்ரூபா – மஹா பெரியவா விளக்கம் – தொகுத்து வழங்குபவர் சௌம்யா ஸுப்ரமண்யன் (Explanation to the 1st slokam of Mooka pancha shathi from Deivathin kural presented by Sowmya Subramanian)

ஆர்யாஶதகம்

காரணபரசித்³ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீட²க³தா .
காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தப³ககோமலாங்க³லதா .. 1
இது மூக பஞ்ச ஶதி என்ற ஸ்தோத்ரத்தினுடைய முதல் ஸ்லோகம், ஆர்யா ஶதகத்தினுடைய முதல் ஸ்லோகம் ..இதுல, ‘காரணபரசித்³ரூபா’ அப்படிங்கறதுக்கு என்ன அர்த்தம் அப்படினு புஸ்தகங்கள் எல்லாம் பார்த்தா, எனக்கு அது புரியலை ..அப்ப நான், sage of kanchi blog ல சங்கரர் சரித்திரத்துக்கு சித்திரங்கள் போடறா சௌம்யா னு, அவா என்கிட்ட இந்த மூக பஞ்ச ஶதி கத்துண்டா. அவாகிட்ட தெய்வத்தின் குரல் ல என்ன சொல்லி இருக்கா பெரியவா அப்படினு கேட்டேன். அவா தெய்வத்தின் குரல் வாரம் வாரம் Satsangam வச்சு படிக்கிறா ..அந்த சௌம்யா எனக்கு ஒரு 10 நிமிடத்தில் அதை explain பண்ணிட்டு, அந்த 10நிமிடம் பெரியவா சொன்னதையெல்லாம், தெய்வத்தின் குரல் அந்தஅந்தபகுதிகள் இருந்து எடுத்து, கோர்வையா ஒரு 10 நிமிடம் பேசி, record பண்ணி அனுப்பிச்சு இருக்கா..பெரியவா சொல்றா மாதிரி இன்னொருத்தர் சொல்ல முடியாது.. அதனால நான் அப்படியே share பண்றேன், ஒரு வார்த்தை கூட மாத்த முடியாது, அவ்ளோ அழகா இருக்கு. சௌம்யா நன்னா அதை present பண்ணியிருக்கா ..அந்த recording கேட்டுட்டு, நீங்க நான் சொல்றது continue பண்ணி கேளுங்கோ. எனக்கு புரிஞ்சது, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எனக்கு மூக பஞ்ச ஶதியை, திரும்ப திரும்ப படிச்சு, எனக்கு உரு ஏத்தினார்.. ஆவர்த்தி பண்ணிண்டே இரு, ஞானம் பிறக்கும், உண்மை விளங்கும். மூக பஞ்ச ஶதி ஸ்தோத்ரத்தை ஐந்து தடவை திருப்பி திருப்பி வாசித்து கொண்டே இரு..அப்படினு என்னோட புஸ்தகத்தில் எழுதி கொடுத்தார்..திருப்பி திருப்பி படிச்சுண்டு இருக்கேன், முக்கியமா ஒன்று சொன்னார்..பெரியவா தான் காமாக்ஷி..பெரியவாளை தரிசனம் பண்ணு, மூக பஞ்ச ஶதி
படிச்சா பெரியவா அனுக்கிரஹம் பண்ணுவார், அப்படினு சொன்னார்.. அதனால நான் ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும், இது மஹா பெரியவாளுக்கு எப்படி பொருந்தும்? அப்படினு ரசிச்சுண்டு இருப்பேன்.. அந்த மாதிரி எனக்கு புரிஞ்சது இந்த ஸ்லோகத்துக்கு சொல்றேன்..
‘காஞ்சீபுரஸீம்னி’ – காஞ்சி தேசத்தில்
‘காமபீட²க³தா’ – ‘காமபீடம் ங்கிறது காமாக்ஷி உட்கார்ந்து இருக்குற இடம்..’காமகோடி பீடம்’ நம்மளுடைய மஹாபெரியவா உட்கார்ந்து இருக்கற இடம்..அலங்கரித்த அந்த பீடத்தில்..
‘காசன’ – இந்த காசனங்கிற வார்த்தை, நிறைய இந்த கவி உபயோக படுத்துவார்..அதாவது வர்ணனையில் அடங்காத, இப்படி என்று சொல்லிவிட முடியாது.. ‘வாசித்துக் காணொணாதது பூசித்துக் கூடொணாதது’ அப்படினு அருணகிரிநாதர் பாடுவார்.. அந்த மாதிரி ஒரு வஸ்து அது…’நேசர்க்குப் பேரொணாதது’ அந்த வஸ்து கிட்ட நேசத்தை வச்சுட்டோம் னா, அப்புறம் அந்த நேசத்தில் இருந்து விடுபடவே முடியாது ..
‘மாசர்க்குத் தோணொணாதது’ மனசுல மாசு இருந்தா, புரிஞ்சுக்கவே முடியாது..ஆனால், நேசம் வச்சா, நம்மளை கைவிடாது ஒரு கருணை தெய்வம் அப்படினு சொல்றார்..அந்த மாதிரி, காசன’அப்படிங்கறதுக்கு அந்த அர்த்தம்..
‘விஹரதி கருணா’ – காமாக்ஷி தேவி கருணை வடிவம் அப்படிங்கறது நமக்கு எல்லாம் எப்படி தெரிஞ்சது? ஒரு பாப காலத்தில், மஹாபெரியவாளா அந்த காமாக்ஷி அவதாரம் பண்ணி, ஜனங்களுக்கு எல்லாம் நல்ல புத்தியை கொடுத்து, இன்னிக்கு ஓரளவு நம்மளுடைய வேத மதத்தை, திரும்பவும் வாழ வச்சு, இன்னிக்கும் கொஞ்சம் மழை பெய்யயறது, இன்னிக்கும் கொஞ்சம் சாப்பிட தானியங்கள் கிடைக்கறது, இன்னிக்கும் நம்மளும் ஒரு சந்தோஷமா இருக்கோம், அப்படிங்கறது மஹாபெரியவா அவதாரம் பண்ணதுநாலா தான் ..ஒவ்வொருத்தருடைய அனுபவத்தை கேட்கும் போதும் அது தெரியறது. பாடசாலை வெங்கட்ராம ஐயர் ஒருத்தர் பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணி இருக்கார்..காசி வரைக்கும் அவர் கூடவே நடந்து போயிருக்கார்.. கடைசி காலத்தில் sugar நால உடம்பு வந்துடுறது.. ..படுத்த படுக்கையா இருக்கார்..அவருடைய காலை எடுக்கணும், அப்படினு சொல்றா..அவருடைய கடைசி பொண்ணு, லலிதா நரசிம்ஹன்னு..அவா அந்த அனுபவத்தை பகிர்ந்துடு இருக்கா..பெரியவா முன்னாடி போய் நின்னுண்டு, மனசுல நினைச்சுக்கிறா..அந்த காமாக்ஷி கல்லாயிருக்கா ..பெரியவாளே ! நீங்க கல்லு கிடையாதே.. உங்களுக்கு மனசு இருக்கே, கருணை பண்ண கூடாதா, அப்படினு சொல்லி, கண் ஜலம் விட்டு அழறாளாம் ..பெரியவா கையை தூக்கி,பயப்படாத! அப்படிங்கிறா மாதிரி அபய ஹஸ்தத்தை காமிச்சுயிருக்கா ..அப்புறம் அடுத்த நாள் கால் எடுக்க போறானு நினைச்சுண்டு, hospitalku வந்துயிருக்கா..அந்த doctor ரெண்டு மாசமா அதையே பேசிண்டு இருந்தவர், இல்லை மா உங்க அம்மா காலில் pulse ஓடறது, அதனால கால் எடுக்க வேண்டாம்…அப்படினு சொல்லிடறார்…கடைசி வரைக்கும் காலோட இருக்கார்..காசி வரைக்கும் உங்களோடு நடந்த கால் எடுக்கலாமா?பெரியவா..அப்படினு அந்த வேண்டிண்டு அதுக்கு ..அப்படி பெரியவா அனுக்கிரஹம் பண்றார்..அடுத்த வாரம், இந்த லலிதா மாமி பெரியவா முன்னாடி நின்ன போது, மனசுல தான் வேண்டிண்டுயிருக்கா ..பெரியவா வாய் விட்டு கேட்கறாளாம் ..
கல்லானு கேட்டியே? கல்லாதான் இருந்தேன்..நீ அழுதையோல்யோ! கறைஞ்சுட்டேன்..அப்படினாலாம்…அப்படினு கருணை பொழிந்த ஒரு தெய்வம்..
’காசன விஹரதி கருணா’ – காமாட்சி அப்படிங்கறது பேறு .. ஆனா, அதோட குணம் என்னென்னா? கருணை…
‘காஶ்மீரஸ்தப³ககோமலாங்க³லதா’ – குங்கும பூவின் கொத்து போல..’கோமலம்’ னா ம்ருது..ம்ருதுவான ஒரு கொடி போன்ற சரீரம்..இதுவும் பெரியவாளுக்கு பொருந்தும்..பெரியவாளை அசப்புல பார்த்தா, அந்த நடக்கறதை எல்லாம் பார்த்தா ..அவ்வளவு மெல்லிசான தேகம்..செக்கச்செவேல்னு இருப்பா..நடக்கும் போது ஒரு கொடி அசைஞ்சுண்டு இருக்கிறா மாதிரி இருக்கும்..’கொடி ‘ங்கிறது மரத்தில் படரும்..அந்த மாதிரி பெரியவா, சந்திரமௌலீஸ்வரையும், ஆதி ஆச்சார்யாளையும் பிடிச்சுண்டு, எனக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி, ‘காரணபரசித்³ரூபா’ அவர் தான்..ஜகத்துக்கே காரணம், ஆனா ஞானத்தின் வடிவம்.. ஆனா அவர் வந்து, நீங்கெல்லாம் என்கிட்ட பிரியமாயிருக்கேள், நான் தான் உங்களுக்கு எல்லாம் பொறுப்பு.. அதனால, நான் தூய்மை ஆயிட்டேனா..நீங்களெல்லாம் தூய்மை ஆயிடுவேள், இப்படி எல்லாம் நமக்கு ஒரு ‘hope’ கொடுத்து, நமக்கு ஒரு சரணாகதி கொடுத்து, இன்னிக்கும் காஞ்சியில் நித்ய வாசம் பண்ணின்டு, இனிக்கும் ‘விஹரதி’ லீலைகள் பண்ணிண்டு இருக்கா..மூக பஞ்சஶதி ஸ்தோத்ரத்தை படிச்சு, மஹாபெரியவாளுடைய அனுகிரஹத்துக்கு நம்ம பாத்திரம் ஆவோம்..உங்களுக்கு தெரிஞ்ச திருப்புகழ்லாம் பாடுங்கோளேனு கேட்டா..ஒரு 10,20 தெரியும்..இன்னிக்கு இந்த ’வாசித்துக் காணொணாதது’ அப்படிங்கிற திருச்சிராப்பள்ளி திருப்புகழ்..ஸ்வாமிகள் திருச்சிராப்பள்ளி தான ..அந்த பாட்டு எனக்கு பிடிக்கும்..இதை ஒண்ணு பாடறேன்..

வாசித்துக் காணொணாதது பூசித்துக் கூடொணாதது
வாய்விட்டுப் பேசொணாதது நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொணாதது
மாயைக்குச் சூழொணாதது விந்துநாத
நாத ஓசைக்குத் தூரமானது மாகத்துக் கீறதானது
லோகத்துக் காதியானது கண்டுநாயேன்
யோகத்தைச் சேருமாறுமெய்ஞ் ஞானத்தைப் போதியாய்
இனி யூனத்தைப் போடிடாது மயங்கலாமோ
ஆசைப்பட்டேனல் காவல்செய் வேடிச்சிக் காகமாமயல்
ஆகிப்பொற் பாதமேபணி கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வயல் ஊரத்திற் காளமோடட
ஆரத்தைப் பூண்மயூர துரங்கவீரா
நாசிக்குட் பிராண வாயுவை ரேசித்தெட்டாத யோகிகள்
நாடிற்றுக் காணொணாதென நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் தம்பிரானே…………..
யோகத்தைச் சேருமாறுமெய்ஞ் ஞானத்தைப் போதியாய்
இனி யூனத்தைப் போடிடாது மயங்கலாமோ…சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் தம்பிரானே

காரணபரசித்³ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீட²க³தா .
காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தப³ககோமலாங்க³லதா

நம :பார்வதி பதயே ..ஹர ஹர மஹாதேவா..

English translation of the above speech by Sridhar Seshagiri

कारणपरचिद्रूपा काञ्चीपुरसीम्नि कामपीठगता ।
काचन विहरति करुणा काश्मीरस्तबककोमलाङ्गलता ॥

This is the first shlokam of the AryAshatakam, the first shatakam (set of 100 verses) of the mUka-pa~nchashatI.

I was unable to understand the true import of the phrase कारणपरचिद्रूपा from what was provided in the translations. Then, when I was looking at the Sage of Kanchi blog, I happened to ask Smt. Sowmya Subramaniam, who was then doing illustrations for the Shankara Charitram series, what Periyava has said for this in the Deivathin Kural. She participates in regular ‘Deivathin Kural’ satsangam, and in 10 minutes, she told me Periyava’s explanation, culled from the Deivathin Kural. I have posted that as an audio (link at the end of this translation), and request that interested people listen to that first before listening to this audio, since there can be no way one can better what Periyava has said, and I believe Sowmya has captured that very beautifully in her explanation.

My own guru, Shri Govinda Damodara Swamigal, read the Muka Panchashati to me innumerable times, and instructed me to keep reciting it repeatedly, vouchsafing that it will lead to jnanam, and that the ultimate truth will be revealed. He wrote in my book ‘Keep reciting the Muka Panchashati 5 times continually’, and imparted one important piece of advice “Periyava is Kamakshi, if you recite this, you will be the recipient Periyava’s/Kamakshi’s blessing”.

Therefore, I always try to understand how each Muka Panchashati shlokam “applies” to Periyava. In that vein, let us look at this (first) shlokam.

kA~nchIpura-sImni (काञ्चीपुरसीम्नि) – residing in Kanchi (our Periyava is in Kanchi)

kAmapIThagatA (कामपीठगता) – who adorns the kAmapITha (our Periyava adorns the kAmakOTipITha)

kAchana ( काचन) – mUkakavi uses this a lot, it denotes that which cannot be described adequately by words. Arunagirinathar describes this as

வாசித்துக் காணொணாதது [It cannot be perceived through literary studies]
பூசித்துக் கூடொணாதது [It cannot be attained through through worship]
வாய்விட்டுப் பேசொணாதது [It cannot be described in words].

Translator’s note: I have copied the meaning from http://thiruppugazh-nectar.blogspot.com/2015/11/176.vasiththu.html

Arunagirinathar says நேசர்க்குப் பேரொணாதது, once you develop affection for it, there is no release from it, it ensnares you forever [It cannot be uprooted from His devotees’ hearts], It will never let us down, such is It’s compassion.

viharati karuNA – विहरति करुणा – epitome of compassion.. How do we know this.. in times where adharmam was starting to rear it’s head, the ever-gracious Kamakshi incarnated as Periyava to re-establish the Vaidika matam, and influence scores of people to tread on the path of dharma, protecting them in ever so many ways.

This is evident from the numerous experiences (anubhavams) of his devotees. There was a person by the name of Patashala Venkatarama Iyer who did kainkaryam (service) to Periyava, walking with him on the Kasi Yatra. In his old age, due to high blood-sugar, he became bedridden, and the doctors decided that his leg had to be amputated. Standing before Periyava, his youngest daughter Smt. Lalita Narasimhan, thought in anguish “O Periyava, that Kamakshi in the sanctum seems to be made of stone, but you are not, can you at least not show compassion?”, with tears streaming down her face. She did not vocally express her thought though. Periyava lifted his two hands in blessing, as if saying “Don’t worry”. The next day, when Smt.Lalita met the doctor, he suddenly said “It appears that the amputation will not be necessary”, and her father lived to the end of his life with his legs just fine. It was as if Periyava had wrought this miracle to answer her question “Can you allow the legs that followed you to Kashi to be removed ?” . Later, when she went to meet the Paramacharya, he told her “Did you not ask if [I was] made of stone ? yes, but the “stone” melted when you cried”.. that is why He is “kAchana viharati karUNA”..

kAshmIra-stabaka-kOmalAN^ga-latA – काश्मीरस्तबककोमलाङ्गलता – having a body like a gentle creeper of kashmIra (saffron) -this applies to Periyava also, with his frail/gentle body or reddish hue.. another thing is that a creeper grows clinging to a tree.. likewise, Periyava “held on” to chandramaulIshvara and Adi-AchAryAl, as if he was clinging to them like a creeper holds on to the tree

And finally to the opening phrase

kAraNaparachidrUpA – कारणपरचिद्रूपा – this applies to Periyava as well, the root cause of everything, and embodiment of j~nAna, while out of compassion offering refuge to all who surrender at His feet.

He is still doing vihaaram in kA~nchI. Let us pray to him and become worthy of His anugraham

namaH parvatIpatayE ! hara hara mahAdEvA !

कारणपरचिद्रूपा काञ्चीपुरसीम्नि कामपीठगता ।
काचन विहरति करुणा काश्मीरस्तबककोमलाङ्गलता ॥

14 replies on “காரணபரசித்ரூபா”

I always enjoy Sowmya’s comments to your speech, as much as I enjoy your speech. Thanks for giving an opportunity to listen to her voice also. God bless you both.

எல்லா ஸ்லோகத்துக்கும் சொல்லுங்கோ..ரொம்பவே நன்றாக இருக்கு. பக்கத்துல ஒக்காந்து நண்பர்கள் மூலம் கத்துக்கற மாதிரி இருக்கு… நமஸ்கார்ங்கள்..

முதல் ஸ்லோகத்தின் அர்த்தம் கேட்கும்பொழுது – அற்புதமான,வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு அனுபவம் கிடைத்தது.நன்றி.

சௌம்யா வின் விரிவாக்கம் அருமை !!
நித்ய வாழ்வில் சிவனே என்று கிடக்கும் ஈஸ்வரனை ஆட்டிப்படைக்கும் உருவாக வெளிக் கொண்டு வருகிறாள் அம்பாள் !
Potential energy ஆன சிவனின் சக்தியை Kinetic energy ஆக வெளிக் கொணர்வது அம்பாளல்லவா?
அர்த்த நாரீஸ்வரன் ! எல்லா காரியங்களுக்கும் மூல சக்தியான தேவி கார்ய காரண நிர் முக்தாவாகவும் ஆகிறாள் !

மூக பஞ்ச சதி ஆரம்ப ஸ்தோத்ரம் தோரண வாயில் மட்டுமன்றி
Essence of 500 ஸ்லோகம் என்று தோன்றும் படி அமைந்துள்ளது மூகருக்கு அம்பாள் செய்த அனுகிரகம் முழுதும் வெளிப்படும் அற்புதம்!!

இந்த ஸ்தோத்திர வகுப்பு பற்றி கணபதி தெரிவித்த எல்லா விஷயங்களும் வரவேற்கததக்கது!
அதற்கு நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள உபயோகமாக உள்ள விஷயங்கள் !!
எல்லாரும் கற்றுப் பயனடைவோமாக!

Such a beautiful explanation by Smt Soumyaji. Humble pranamams to Shri Periya Swamigal and Shri Govinda Damodara Swamigal. Thank you Anna for sharing this beautiful explanation 🙏

ஜனனி ஜகம் நீ என்று தொடங்கும் பாடலுக்கு ஏற்ற ஸ்லோகம் இது! உலகமும் அவளே உலகத்தைத் தோற்றுவிக்கும் சக்தியும் அவளே !!
ஜய ஜய ஜகதம்ப சிவே….

காரண பர சித் ௹பாவான தேவி கார்ய காரண நிர்முக்தாவாகவும் ஆகிறாள். அதாவது,எல்லா உயிரிலும் ஒன்றியும், அதே சமயத்தில் விடுபட்டும் , மேலான, அதீதான பரப்ஹ்மமாகவும் விளங்குகிறாள். பூமி தே வியின் நாபி ஸ்தானமான காஞ்சி எனும் நகரில், காம பீடத்தில் குங்குமப்பூங்கொத்துப் போல் கருணையை வாரி வழங்கிக் கொண்டு அநேக திருவிளையாடல்களைப் புரிந்துகொண்டு விளங்குகிறாள், குவித்துை வைத்த_ குங்குமமோ கொட்டி வைத்த குங்குமப்பூவோ என்பதாக நம் கற்பனை விரியும்படி அம்பாளைக் கண்முன் கொண்டு நிறுத்தும் தோரண வாயில்! இதனைத் தொடர்ந்து சென்றால் காஞ்சியின் மாளிகையில் உள் நுழையலாம்!
தோன்றும் தோரண வாயில் இந்த முதல் ஸ்லோகம்!
ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.