Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – முதல் பகுதி – ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்?


ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்? (16 min audio in tamil. same as the script above)

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये  ||

ஶூக்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்பு4ஜம்|

ப்ரஸன்ன வத3நம் த்4யாயேத் ஸர்வ விக்4நோப  சாந்தயே|| 1

वागीशाद्या सुमनसः सर्वार्थानामुपक्रमे |

यं नत्वा कृतकृत्यास्यु: तं नमामि गजाननम् ||

வாகீ3ஶாத்3யா: ஸுமநஸ: ஸர்வார்தா2நாமுபக்ரமே|

யம் நத்வா க்ருதக்ருத்யா: ஸ்யு: தம் நமாமி க3ஜாநநம்||

ராமாயண த்யான ஸ்லோகங்களோட ஆரம்ப ஸ்லோகங்கள்ல இது வரும். அதுல இந்த

வாகீ3ஶாத்3யா: ஸுமநஸ: ஸர்வார்தா2நாமுபக்ரமே|

யம் நத்வா க்ருதக்ருத்யா: ஸ்யு: தம் நமாமி க3ஜாநநம்||

அப்படிங்கிற இந்த ஸ்லோகத்தை இன்னைக்கு படிக்கும் போது, மஹா பெரியவா இந்த ஸ்லோகத்தை எடுத்துண்டு ரொம்ப அழகா வ்யாக்யானம் பண்ணி இருக்கா. அதுல ஆதி சங்கர பகவத் பாதாளையும் உள்ள கொண்டு வந்துடறா. அது ஞாபகம் வந்தது. சரி, இந்த ஏப்ரல் முப்பதாம் தேதி, சாந்திரமாண வைகாசி சுக்ல பஞ்சமி, சங்கர பகவத் பாதாளோட ஜயந்தி. பின்னாடியே வைகாசி அனுஷத்துல நம்ம மஹா பெரியவா ஜயந்தியும் வரும். அதனால இந்த ஒரு பதினஞ்சு நாள், சங்கர விஜயம் சொல்லலாம், சங்கர சரிதம்ன்னு சொல்லுவா, சங்கர திக்விஜயம் னு  சொல்லுவா. அந்த சங்கர விஜயத்தை சொல்லுவோமே அப்படின்னு ஒரு ஆசை.

இதுக்கு முழுக்க முழுக்க எனக்கு source மஹா பெரியவளோட தெய்வத்தின் குரல் தான். அதோட அஞ்சாவது பாகத்துல ஒரு eight hundred pagesக்கு (எண்ணூறு பக்கங்கள்) ஆதி சங்கர பகவத் பாதாளை பத்தி பெரியவா சொல்லி இருக்கா. அதை படிச்சு குழந்தைகளுக்கு சொல்லுவேன், அதையே உங்களோடேயும் பகிர்ந்துகிறேன்.

இந்த ‘வாகீசாத்யாஹா ஸுமனஸஹ’ அந்த ஸ்லோகத்தோட meaning சொல்றேன், வாக்குக்கு ஈசன் ஆனா, அதாவது வாக்னா சரஸ்வதி, சரஸ்வதியோட பதியான ப்ரம்மா, ‘ஆத்யா:’ னா முதலிய, ‘ஸுமனஸஹ’ன்னா’ தேவர்கள்’, ப்ரம்மாதி தேவர்கள், ‘சர்வார்த்தானாம்’ எல்லா கார்யத்தின் ‘உபக்ரமே’, ஆரம்பத்தில், ‘யம் நத்வா’ எவரை வணங்கி, ‘க்ருதக்ருத்யாஸ்யுஹு’ தங்களுடைய கார்யங்கள் நிர்விக்னமாக நிறைவேற பெறுகிறார்களோ, அந்த ‘கஜானனம்’ அந்த பிள்ளையாரை ‘தம் நமாமி’ நானும் வணங்குகிறேன், அப்படின்னு ஒரு ஸ்லோகம்.

இதுல வாக்குக்கு  அதிபதியான பிரம்மா, பிரம்மாதி தேவர்கள், அப்படின்னு சொன்னதுனால, வாக் சம்பந்தமான காரியங்களுக்கு ஆரம்பத்துல, முக்கியமா இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிக்கணும். இந்த ப்ரவசனம் மாதிரி பண்ணும் போது பிள்ளையாரை வேண்டிக்கணும் அப்படின்னு ஒரு குறிப்பு. ‘ஸுமனஸஹ’ அப்படின்ற வார்த்தைக்கு தேவர்கள்னு ஒரு அர்த்தம், ‘பூ’ன்னு ஒரு அர்த்தம். ‘நல்ல மனசு’ ன்னு ஒரு அர்த்தம். இந்த நல்ல மனசுங்கறதை வெச்சுண்டு, பெரியவா  ஆதி சங்கர பகவத் பாதாளோட connection கொண்டு வரா. எப்படின்னா,

ஆதி சங்கர பகவத் பாதாள், ஆசேது ஹிமாச்சலம் மூணு வாட்டி பாத யாத்திரையாக திக்விஜயம் செய்து, தன்னுடைய தர்சனத்துனால, ஜனங்களை எல்லாம் புனிதப்படுத்தி, தன்னுடைய வாக் அம்ருதத்துனால, அவாளுக்கு எல்லாம் தெளிவு ஏற்படும்படி பண்ணினார். அப்போ, திருவானைக்காவிற்கு வந்து இருந்தார், திருவானைக்காவில அகிலாண்டேஸ்வரி ன்னு அம்பாள். ‘ஆப்ரம்மகீட ஜனனீ’ அப்படின்னு எல்லாருக்கும், அம்பாள் தான் தாயார், இந்த விஸ்வத்துல இருக்கிற எல்லாருக்குமே அம்பாள் தான் தாயார், அதுனால கருணையே வடிவானவள் அம்பாள். அப்படி இருக்கக் கூடிய அம்பாள், இந்த கலியில ஜனங்கள் ரொம்ப பாபம் பண்றான்னு சொல்லி, கோபமா உக்கிர ரூபத்துல அங்க இருந்தா. அப்படி அகிலாண்டேஸ்வரி ரொம்ப கோபத்தோட இருந்தப்போ அந்த கோபத்தை சாந்தப் படுத்தி, ஜனங்களுக்கெல்லாம் அனுக்கிரஹம் கிடைக்க பண்ணனும், அப்படின்னு  சங்கரர் நினச்சார். அப்போ அவர் என்னடா பண்றது, எதிரிலேயே போக முடியலையேன்னு பார்த்து, “சரி, என்ன கோபமா இருந்தாலும் அம்மாக்கு தன்னுடைய பிள்ளையை பார்த்தா மனஸ்சாந்தி ஏற்படும்,சந்தோஷம் வந்துடும்” அப்படின்னு சொல்லி, ஒரு பிள்ளையாரை அம்பாளுக்கு முன்னாடி பிரதிஷ்டை பண்ணார்.

ஆதி சங்கரர் பிள்ளையாரை பிரதிஷ்டை பண்ணார் அப்படின்னு சொல்லும் போது, கணேச பஞ்சரத்னம் அப்படிங்கிற ஒரு ஸ்தோத்ரம் இருக்கு. அவ்வளோ அழகான ஒரு ஸ்லோகம், அதை ஒரு தடவை இப்போ நான் சொல்றேன்,


मुदा करात्त मोदकं सदा विमुक्ति साधकं

कलाधरावतंसकं विलासि लोक रक्षकम् |

अनायकैक नायकं विनाशितेभ दैत्यकं

नताशुभाशु नाशकं नमामि तं विनायकम् || १||

 नतेतराति भीकरं नवोदितार्क भास्वरं

नमत् सुरारि निर्जरं नताधिकापदुद्धरम् |

सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं

महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् || २||

 

समस्त लोक शंकरं निरास्त दैत्य कुन्जरं

दरेतरोदरं वरं वरेभवक्त्रं अक्षरम् |

कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं

मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् || ३||

 

अकिंचनार्ति मार्जनं चिरन्तनोक्ति भाजनं

पुरारिपूर्वनन्दनं सुरारि गर्व चर्वणम् |

प्रपञ्चनाश भीषणं धनंजयादि भूषणं

कपोलदानवारणं भजे पुराणवारणम् || ४||

 

नितान्त कान्त दन्तकान्तिमन्तकान्तकात्मजं

अचिन्त्यरूपमन्तहीनमन्तराय कृन्तनम् |

हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां

तमेकदन्तमेव तं चिन्तयामि सन्ततम् || ५||

 

महागणेश पञ्चरत्नं आदरेण योन्ऽवहं

प्रजल्पति प्रभातके हृदि स्मरन्ं गणेश्वरम् |

अरोगतां अदोषतां सुसाहितीं सुपुत्रतां

समाहितायुरष्ट भूतिमभ्युपैति सोऽचिरत् ||

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |

கலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |

அனாயகைக நாயகம் வினாஶிதேப தைத்யகம் |

நதாஶுபாஶு நாஶகம் னமாமி தம் வினாயகம் || 1 ||
நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |

நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்டரம் |

ஸுரேஶ்வரம் நிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம் |

மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் நிரன்தரம் || 2 ||

 

ஸமஸ்த லோக ஶங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |

தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம் |

மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||

 

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் |

புராரி பூர்வ நன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |

ப்ரபஞ்ச நாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |

கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

 

நிதான்த காந்த தந்த காந்திம் அந்தகாந்தகாத்மஜம் |

அசின்த்ய ரூபமம் அந்தஹீன மன்தராய க்ருந்தனம் |

ஹ்ருதன்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம் |

தமேகதந்தமேவ தம் விசின்தயாமி ஸந்ததம் || 5 ||

 

மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோ‌sன்வஹம் |

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேஶ்வரம் |

அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |

ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌உசிராத் ||

இந்த பதினைந்து நாளுமே, கூடக்கூட ஆதி சங்கர ஸ்தோத்திரங்கள் எல்லாம் நான்  பாராயணம் பண்றதுனு வெச்சுக்க போறேன். ஏன்னா ஆதி சங்கரருடைய புஸ்தகங்கள்ல , நான் இந்த ஸ்தோத்ரங்கள் தான் தெரிஞ்சிண்டு இருக்கேன். அவருடைய ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்கள் ரொம்ப intellectualஆ இருக்கும்னு சொல்லுவா. அப்பறம் ப்ரகரண க்ரந்தங்கள் அப்படின்னு விவேகசூடாமணி போன்ற புஸ்தகங்கள் இருக்கு. அது எல்லாத்தைக் காட்டிலும் இந்த ஸ்தோத்ரங்கள்லயே பக்தியோட கூட, ஞானமும் இருக்கு அப்படின்னு பெரியவா சொல்லி  இருக்கா. அதனால இந்த கணேச பஞ்சரத்னத்தை சொன்னா பிள்ளையார் அங்க வந்துடுவார்.

இந்த ஸ்லோகத்தோட மெட்டே ஒரு யானை காதை அசைச்சிண்டு வர மாதிரி ஒரு மெட்டுல அழகான வார்த்தைகள். அதுல ‘ஹ்ருதந்த்ரே நிரந்தரம் வஸந்தேமேவ யோகிநாம்’ யோகிகளுடைய ஹ்ருதயத்தில் நித்யம் வசிக்க கூடிய, இந்த யானை முகத்தோன் ஆனா கணபதியை, ‘தம் ஏகதந்தம் ஏவ விசிந்தயாமி ஸந்ததம்’ நான் எப்பவும் அந்த பிள்ளையாரை, ‘ஸந்ததம் விசிந்தயாமி’ அப்படின்னு சொல்றார். அப்படி ஆதி சங்கரர் தியானம் பண்ணினதுனால அங்க  பிள்ளையார் வந்துட்டார். பிள்ளையாரை அந்த அகிலாண்டேஸ்வரிக்கு எதிர்ல பிரதிஷ்டை பண்ணின உடனே, அம்பாள் குளுந்துடறா. திரும்பியும் அந்த உக்கிரமான கோபம் வந்துடக் கூடாது எங்கிறதுக்காக, உக்கிர கலையை, ரெண்டு தாடங்கமாக பண்ணி, ரெண்டு காதுலேயும் ஸ்ரீ சக்ரம், சிவ சக்ரம்ன்னு சொல்லுவா, அப்படி ரெண்டு தாடங்கங்கள் பண்ணி, அதை அம்பாளோட காதுலேயே போட்டு இருக்கார். அந்த அம்பாளோட தாடங்கத்தோட மஹிமை, தனியா, அம்பாளோட பாதிவ்ரத்யத்தை காண்பிக்கறது அப்படின்னு சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் இருக்கு. அப்படி அந்த அம்பாளை ஆதி சங்கரர் குளிர பண்ணினார்.

நம்ம தமிழ்நாட்டுக்கும் ஆதி சங்கரருக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அங்க திருச்செந்தூர்ல சுப்ரமண்ய புஜங்கம் பாடி இருக்கார். அப்பறம் திருவிடைமருதூர்ல பகவான் அவருக்கு ரெண்டு கைகளையும் தூக்கி அத்வைதமே சத்யம் அப்படின்னு பிரமாணம் பண்ணி இருக்கார். ஆதி சங்கரர் புத்தர்களோடு வாதாடும் போது. இங்க கேரளத்தில் காலடியில் தான் பிறந்தார். தமிழ்நாட்டுக்கு நிறைய வந்திருக்கார். ராமநாத ஸ்வாமியை தரிசனம் பண்ணி பாடி இருக்கார். திருப்பதியில் தனாகர்ஷண யந்த்ரம் பிரதிஷ்டை பண்ணினார். கடைசியில் காஞ்சீபுரத்துக்கு வந்து இருக்கார். இங்கே காஞ்சீபுரத்துலேயும் காமாக்ஷி தேவி உக்ரமாக இருந்த போது சாம்யம் பண்ணி ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை பண்ணி இருக்கார். இங்கே சர்வக்ஞ பீடம் எறி இருக்கார். சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் பாடி இருக்கார். அப்பறம் ஒரு மடம் ஸ்தாபனம் பண்ணிட்டு காமாக்ஷி அம்பாளோடு ஐக்கியம் அடைந்தார் னு சங்கர விஜயத்துல சொல்லி இருக்கு. அந்த சங்கர விஜயத்தை நாம் பார்ப்போம்.

இந்த சங்கர சரித்ரத்தை எதுக்காக படிக்கணும் அப்படின்னு மூலத்துலேர்ந்து பார்த்தோம்னா, இப்ப இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கறோம். சுகத்தை தேடறோம். அனுபவிக்கறோம். ஆனா அதெல்லாம் வந்து ரொம்ப அல்ப சுகமாக இருக்கு. சாப்பிட்டா திருப்தியாக இருக்கு. ஆனா சாப்பிட்டு முடிஞ்ச உடனே அந்த சுகம் போயிடறது. கொஞ்சம் ஜாஸ்தியாக சாப்பிட்டா அது உடம்பை கெடுத்துடறது. அப்படி இந்த உலகத்துல கிடைக்க கூடிய சுகங்கள் எல்லாம், புலன்கள் மூலமாக அனுபவிக்கறது  எல்லாம் வடிஞ்சு போயிடறது. அது சிற்றின்பமாக இருக்கு. இது நமக்கு நம்முடைய அனுபவத்துலேர்ந்து தெரிகிறது. இப்படி அல்லாமல், மாறாத அழியாத ஒரு சந்தோஷம் ஒண்ணு இருக்கு அப்படிங்கறது, மகான்களுடைய அனுபவம்.

அதை வேதத்துல பிரவ்ருத்தி மார்க்கம், நிவ்ருத்தி மார்க்கம் அப்படின்னு ரெண்டாக சொல்றா. பிரவ்ருத்தி மார்க்கம் னா உலகத்தில் பிரவ்ருத்திச்சு கார்யங்கள் பண்ணி அதை ஒழுங்கா orderly யாக பண்றது பிரவ்ருத்தி மார்க்கம். இந்த கார்யங்களை எல்லாம் விட்டு விட்டு ஞான விசாரம் பண்ணி பிரம்ம நிஷ்டைல இருக்கறது நிவ்ருத்தி மார்க்கம். இந்த ரெண்டு மார்க்கமும் மறையாம இருக்கணும், எல்லாருக்கும் தெரியணும். ஒவ்வொருத்தரும் பிரம்மச்சர்யம், க்ருஹச்தாஷ்ரமம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற வழியில் போய் வாழ்க்கையில் முடிந்த முடிவான ஜீவன் முக்தியை அடைய வேண்டும் அப்படிங்கறது தான் goal. “ஜீவஸ்ய தத்வ ஜிஞாஸா” வாழ்க்கையின் பயன் அது தான் அப்படிங்கறதை ஞாபகப் படுத்தறதுக்காக, மேலும், புன்யசாலிகளுக்கு அந்த வழியில் போக வழி காண்பிக்கறதுக்காக பகவான் தானே அவதாரம் பண்ணி, ஞானாச்சார்யனாக, ஆதி சங்கரராக வந்து வழி காட்டினார்.

இதை எப்படி புரிஞ்சுக்கலாம் னா கம்ப ராமாயணத்தோட சுந்தர காண்டத்தில் கடவுள் வாழ்த்து பாடல் ஒண்ணு இருக்கு

‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவுஎனப் பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப் பாட்டின் வேறு பாடுற்ற வீக்கம்

கலங்குவ தெவரைக் கண்டால் அவர் என்பர் கைவி லேந்தி

இலங்கையில் பொருதா ரன்றே மறைகளுக் கிறுதி யாவார்.’

அலங்கல் என்றால் மாலை, பூமாலை. ஒரு சாயங்கால வேளையில் ஒரு பூ மாலையை பார்த்து ஒருத்தன் அரவு, பாம்புன்னு நினைச்சு, பயந்து அடிச்சுண்டு அங்கேர்ந்து ஓடி வரான்  “ஐயோ ஐயோ பாம்பு பாம்பு” னு எதிரில் வர ஒருத்தன் “டேய், இங்கே எங்கேடா பாம்பு வரப் போறது. வா போய் பார்க்கலாம் ” அப்படின்னு சொல்லி அங்கே போய் பார்த்தால் “ஒ! மாலையா, நான் பாம்புன்னு நினைச்சு பயந்துட்டேன்” அப்படிம்பான்.

அப்படின்னா பாம்பு னு நினைச்ச போது பயம் இருந்தது. இப்போ மாலைங்கற தெளிவு வந்த போது அவனுக்கு பயம் போயிடுத்து. அப்போ அது மாலை தானே! அது பாம்பு கிடையாது. அப்படி பரம்பொருள் இந்த ஐந்து பூதங்களாகவும் இந்த உலகமாகவும் காட்சி அளிக்கிறது. இந்த உலகத்தை பரம்பொருளாக உணர்ந்தவனுக்கு இதிலிருந்து, இந்த உலகத்தில் அவனுக்கு காமமோ, கோபமோ, பயமோ, மத மோஹ மாத்சர்யங்களோ எதுவும் இல்லாமல் அவன் சாந்தமாக ஆனந்தமாக இருக்கான். இதில் ரொம்ப ஈடுபட்டு இதை ரொம்ப உண்மைன்னு நினைச்சுண்டு இருக்கறவாளுக்கு, இதிலேர்ந்து அவாளுக்கு பயங்கள் ஏற்படறது. ஆசை ஏற்படறது. இதையே வந்து திருமூலரும்

 

மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே

அதாவது ஒரு தச்சன் ஒரு யானை பண்ணி வெச்சுருக்கானாம், இன்னொரு தச்சன் அது எப்படி இருக்குன்னு பாக்கறதுக்காக வரான், அப்போ தன்னோடைய குழந்தைய கூட்டிண்டு போறான். அந்த ஐஞ்சு வயசு குழந்தைய கூட்டிண்டு வறான், அந்த யானையை பார்த்தே உடனே, கோவிலுக்காக பண்ண யானை ஓரளவு பெருசா இருக்கு, அத பார்த்தவுடனே இந்த குழந்தை வந்து, “ஐயோ யானைப்பா யானைப்பா”ன்னு பயப்படறது. அப்பா சொல்றார், “யானை இல்லைடா மரம் தான் இது”ன்னு அவருக்கு மரம்ங்கற அறிவு இருக்கறதால அவருக்கு அதுல யானை தெரியலை மரம் தான் தெரியறது, இந்த பையன் பார்த்த போது மரம் தெரியலை யானை தான் தெரியறது, அந்த மாதிரி பரம்பொருளே உலகமாக காட்சி அளிக்கிறது. எல்லாமே பகவான் தான் அப்படின்னு தெரிஞ்சவாளுக்கு, இந்த உலகம் அவா கண்ணனுக்கு தெரியல. இந்த உலகத்தை சத்தியமா நினைக்கறவாளுக்கு கடவுள் தெரியல. அப்படி இந்த உலகத்துல நாம அக்ஞானத்தோடு இருந்தாலும், அந்த உண்மைய மஹான்கள் சொல்றா.

மஹா பெரியவான்னு ஒருத்தர் இருந்ததுனாலே, இதை நாம explainஏ பண்ணவேண்டாம், இப்படி இரு நூறுவருஷம் இந்த உலகத்துல வாழ்ந்து, ஆனா கொஞ்சம் கூட இதுல பற்றில்லாம, ஒரு ப்ரம்மச்சர்யத்தோட, சன்யாஸ ஆஸ்ரமத்துல, ஒரு நூறு வருஷங்கள், ஒரு வாய் பொரியை சாப்பிட்டுண்டு, தினம் கிலோமீட்டர் கணக்கா தேசம் முழுக்க நடந்து, எல்லாருக்கும் ஞான உபதேசம் பண்ணி, இப்படி ஒருத்தர் இருக்க முடியுமா, அப்படின்னா, அவருக்கு என்ன source of energy ன்னா, அது தான் ஞானம். அத மாதிரி ஒண்ணு இருக்கு அப்படிங்கறது பெரியவாளை பார்த்ததுனால நமக்கு தெரியறது, இப்படி இரு நிலை இருக்கு அப்படின்னு, நம்முடைய நிலையை விட இது ரொம்ப உயர்ந்த நிலை அப்படிங்கறது, அப்பப்போ பளிச் பளிச்சுன்னு புரியறது.

ஒவ்வொருநாளும் எழுந்துக்கறோம் ,சாப்பிடறோம், என்னனமோ அலைஞ்சு திரிஞ்சு அவஸ்தை படறோம். ஆனா மஹா பெரியவாளை பார்த்தாலே, இது மாதிரி ஒரு சந்நிதியை நினச்சாலே, அந்த மாதிரி ஒரு சந்நிதில போய் நின்னாலே, நம்ம மனசு அடங்கி, எல்லா கவலைகளும் ஒழிஞ்சு பரம சாந்தமான ஒரு அனுபவம் ஏற்படறது. அதுனால அப்படியே உடம்பே recharge ஆன மாதிரி இருக்கு.

அந்த அனுபவத்துனால இது அடைய வேண்டிய நிலை “நராணாம் அயன: நாராயண: அப்படின்னு மனிதர்கள் அடைய வேண்டிய உத்தமமான நிலை “பகவான்”, அந்த “பகவானே” குரு ரூபமா வந்து அதோட taste ஐ காண்பிச்சுட்டார், இவ்வளவு இனிமையா ஒண்ணு இருக்குமா, இவ்வளவு பேரானந்தமா, சாந்தாம ஒரு நிலை இருக்குமான்னு பார்த்து, அப்படி அது தெரிஞ்சதுனால இந்த நிவ்ருத்தி மார்கத்தை பத்தி கேட்டு, அது என்ன அப்படின்னு பார்க்கறோம்.

நிவ்ருத்தி மார்கத்து மூலமா அத்வைத சித்தியை பேசறதுக்காகத் தான் ஆதி சங்கர பகவத் பாதாள் அவதாரம் பண்ணினார். இன்னிக்கு இந்த பீடிகை ரொம்ப philosophical ஆ போயிடுத்து. நாளைலேர்ந்து முழுக்க கதையா தான் இருக்கும், குழந்தைகளுக்கு சொல்ற மாதிரி, அந்த கேரள க்ஷேத்ரம், பரசுராம க்ஷேத்ரம் எப்படி உருவாச்சு, அதுல சிவகுரு ஆர்யாம்பாங்கற தம்பதி எப்படி பஜனம் பண்ணி, ஆதி சங்கரர் அவாளுக்கு குழந்தையாக  அவதாரம் பண்ணினது, கூடக்கூட நம்ம மஹா பெரியவா அவதாரம் பண்ணினது, இப்படி சேர்த்துண்டு சொல்லலாம்னு ஆசை படறேன்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Why should we listen to Shankara Charitham

shuklAmbaradharaM vishNuM shashivarNaM chaturbhujam |

prasannavadanaM dhyAyet sarvavighnopashAntaye || 1

vAgIshAdyA: sumanasa: sarvArthAnAmupakrame |

yaM natvA kRtakRtyA: syu: taM namAmi gajAnanam ||

These verses appear as the opening shlokas for the Ramayana Dhyana Shlokas. Today, while reading the second shloka, I remembered a very beautiful commentary by Maha Periyava on it. In that commentary, he brings in Adi Shankara Bhagavatpada as well. This April 30th (Chandramana Vaikasi Shukla Panchami) marks the Jayanthi of Shankara Bhagavatpada. Shortly after, on Vaikasi Anusham, our Maha Periyava’s Jayanthi also arrives. Therefore, I have a desire to share the Shankara Vijayam (also called Shankara Charitham or Shankara Digvijayam) during these fifteen days.

My source for this is entirely Maha Periyava’s “Deivathin Kural” (Voice of God). In its fifth volume, Periyava has spoken about Adi Shankara Bhagavatpada for about eight hundred pages. I usually read it and tell the stories to children; now, I am sharing it with you as well.

Let me explain the meaning of the shloka, “vAgIshAdyA: sumanasa:”

  • Vagisha: The Lord of Vak (Speech). Vak refers to Saraswati, and Her husband is Brahma.
  • Adyah: starting with.
  • Sumanasaha: Devas.  (All Devas starting with Brahma).
  • Sarvarthanam: Of all endeavors.
  • Upakrame: At the beginning
  • Yam Natva: Whom they worship.
  • Krutakrutyasyuhu: To ensure their tasks are completed without obstacles (Nirvighnam).
  • Tam Namami Gajanananam: I worship that elephant-faced Ganesha.

Since this shloka mentions Brahma, the Lord of Speech, and other Devas, it is a key note that one should pray to Ganesha particularly at the start of any work related to speech, such as a discourse (Pravachanam).

The word “Sumanasaha” has multiple meanings: ‘Devas’, ‘Flowers’, and ‘Good Mind’. Using the meaning ‘Good Mind’, Periyava connects this to Adi Shankara Bhagavatpada.

Adi Shankara Bhagavatpada traveled the length of India from Kanyakumari to the Himalayas (Asetu Himachalam) three times on foot, purifying people with his presence and bringing clarity through the nectar of his speech (Vak Amrutam). During his travels, he came to Thiruvanaikaval, where the Goddess is known as Akhilandeswari.

As revealed by the nAmA “Abrahmakeeta Janani” AkhilAndeshwarI is the mother of all; from the smallest insect to The Lord Brahma. Ambal is the very embodiment of compassion. However, in this Kali Yuga, seeing people commit so many sins, she was residing in Thiruvanaikkaval in Ugra Rupa (a fierce, angry form). Shankara wanted to pacify her anger so that people could receive her grace. Then he wondered, “What am I to do? I am unable even to go before her.” Thinking thus, he said, “However angry a mother may be, her mind becomes calm and she feels happy on seeing her child.”  Therefore, he consecrated an idol of Ganesha directly in front of Ambal. 

When speaking of Adi Shankara consecrating Ganesha, one must mention the Ganesha Pancharatnam stotram. It is such a beautiful hymn; I will recite it now:

mudA karAtta modakaM sadA vimukti sAdhakaM

kalAdharAvataMsakaM vilAsi loka rakshakam |

anAyakaika nAyakaM vinAshitebha daityakaM

natAshubhAshu nAshakaM namAmi taM vinAyakam || 1 ||

 

natetarAti bhIkaraM navoditArka bhAsvaraM

namat surAri nirjaraM natAdhikApaduddharam |

sureshwaraM nidhIshwaraM gajeshwaraM gaNeshwaraM

maheshwaraM tamAshraye parAtparaM nirantaram || 2 ||

 

samasta loka sha~NkaraM nirAsta daitya ku~njaraM

daretarodaraM varaM varebhavaktraM aksharam |

kRpAkaraM kshamAkaraM mudAkaraM yashaskaraM

manaskaraM namaskRtAM namaskaromi bhAsvaram || 3 ||

 

aki~nchanArti mArjanaM chirantanokti bhAjanaM

purAripUrvanandanaM surAri garva charvaNam |

prapanchanAsha bhIshaNaM dhana~njayAdi bhUshaNaM

kapoladAnavAraNaM bhaje purANavAraNam || 4 ||

 

nitAnta kAnta dantakAntimantakAntakAtmajaM

achintyarUpamantahInamantarAya kRntanam |

hRdantare nirantaraM vasantameva yoginAM

tamekadantameva taM chintayAmi santatam || 5 ||

 

mahAgaNesha pa~ncharatnamAdareNa yo’nvahaM

prajalpati prabhAtake hRdi smaran gaNeshwaram |

arogatAmadoshatAm susAhitIM suputratAM

samAhitAyurashTabhUti mabhyupaiti so’chirAt ||

I intend to recite Adi Shankara’s stotrams throughout these fifteen days. His bhāṣyas on the Prasthāna-traya are said to be deeply intellectual. There are also prakaraṇa-granthas, such as the Vivekachudamani. However, Periyava has observed that it is in the stotras, that Bhakti and jnana are beautifully interwoven together. That is why, if one recites the Ganesha Pancharatnam, Ganesha appears there.

The very rhythm of this śloka evokes the image of a majestic elephant advancing gently, its ears moving gracefully; the words too are of rare beauty. In this verse we find the words “hṛdantare nirantaram vasantam eva yoginām” — the One who abides forever in the hearts of yogis.   “tam ekadantam eva vicintayāmi santatam” — “I ceaselessly meditate upon that Ekadanta, that very Pillaiyar, at all times,” he declares.  It was through such meditation of Adi Shankaracharya that Ganesha manifested there.  The moment he consecrated Ganesha before Akilandeswari, the Divine Mother became pacified. In order that such intense anger might never arise again, he transformed Her ugra-kalā into two tāḍaṅgas (ear-ornaments). These two ear-ornaments are said to embody the Śrī-cakra and the Śiva-cakra; thus he fashioned them and adorned the ears of the Goddess with them.

The glory of these tāḍaṅgas of the Divine Mother is spoken of separately in the Soundarya Lahari, where they are described as revealing the supreme pativratya (sacred fidelity) of Ambal. In this manner, Adi Shankaracharya gently cooled and pacified the Divine Mother.

Adi Shankara has deep ties to Tamil Nadu:

  • In Tiruchendur, he composed the Subrahmanya Bhujangam.
  • In Thiruvidaimarudur, while he was debating with Buddhists, the Lord raised both hands and proclaimed, “ Advaitame Satyam ” (Advaita alone is the Truth).
  • Though born in Kalady, Kerala, he traveled extensively through Tamil Nadu.
  • He visited and sang in praise of Ramanathaswamy.
  • In Tirupati, he consecrated the Dhanakarshana Yantra.
  • Finally, he came to Kanchipuram. Here in Kanchipuram too, when Kamakshi was in her ‘ugra’ aspect, Adi Shankaracharya pacified Her by consecrating the Śrī-cakra. Here, He ascended the Sarvagnya Peetham (Seat of All-Knowledge) 
  • He also sang the Soundarya Lahari.
  • it is said that he established a maṭha here and ultimately attained union (aikya) with Kamakshi Ambal

All this is described in the Shankara Vijayam. Let us now look into that Shankara Vijayam.

Why should we read this Shankara Charitham? In this world, we earn money and seek pleasures. But these are very fleeting. Food gives satisfaction, but the feeling disappears as soon as the meal is over. Eating too much harms the body. Thus, all the pleasures available in this world, experienced through the senses, eventually fade away and come to an end. They are fleeting and are limited.  This is something we understand from our own experience.  However, apart from these, there exists a changeless and imperishable bliss — an eternal happiness that never diminishes. This is the experience of the great sages (mahāns).

The Vedas describe this as two paths:

  1. Pravrutti Marga: Engaging in the world and performing tasks in an orderly manner.
  2. Nivrutti Marga: Leaving worldly actions for self-inquiry (Jnana Vichara) and remaining established in the Absolute (Brahma Nishtha).

Both paths must be preserved and known. Every individual’s goal is to progress through the stages of life—Brahmacharya, Gruhastha, Vanaprastha, Sanyasa—to reach the ultimate goal that is Jivanmukti (liberation while living). To remind us that “ Jivasya Tattva Jignasa ” (The inquiry into the Truth of the soul) is the purpose of life, and to guide the meritorious, the Lord Himself incarnated as the Teacher of Wisdom, Adi Shankara.

This can be understood through a verse from the Sundara Kandam of Kamba Ramayanam:

ala~Nkalil thOnRum poymmai arau-enap pUtham ainthum

vila~Nkiya vikArap pAttin vERu pAtuRRa vIkkam

kala~Nguva dhevaraik kaNdAl avar enbar kai vi lEnthi

ila~Ngaiyil poruthA ranRE maraikaLuk kiRuthi yAvAr.

Alangal means a garland. In the twilight, a man sees a flower garland and thinks it is a snake (aravu). Terrified, he runs away shouting “Snake! Snake!”.   Another man comes and says, “There’s no snake here. Let’s go look.”  Upon looking closer, he realizes, “Oh! It’s just a garland! I was afraid for no reason.”

When he thought it was a snake, there was fear. When the clarity came that it was a garland, the fear vanished. It was always a garland; it was never a snake. Similarly, the Supreme Reality appears as this world and the five elements. For one who perceives the world as that Supreme Reality, there is no lust, anger, fear, pride, or jealousy; he remains peaceful and blissful. For those who are deeply involved and think this world (as separate from the Divine) is absolute truth, fear and desire arise.

Thirumoolar expressed this same idea:

marathai maraithathu mAmadha yAnai marathil marainthathu mAmadha yAnai

parathai maraithathu pArmudhal pUtham parathil marainthathu pArmudhal pUthamE

A carpenter has carved a wooden elephant. Another carpenter comes to see it with his five-year-old child. Seeing the large carving, the child is terrified and cries, “O father! An elephant! An elephant!” The father says, “It’s not an elephant, son; it’s just wood.” Since the father has the knowledge of the wood, he doesn’t see the “elephant”; only the wood. The boy sees the “elephant” and misses the wood. Similarly, the Supreme Reality itself appears as the world. To those who know that everything is God, this (separate) world does not appear. To those who think the world is the only reality, God is hidden. Even if we are in ignorance, Mahatmas tell us this truth.

Because such a Mahā Periyavā lived amongst us, there is hardly any need for us to even explain this. He lived for a hundred years in this world, yet was completely unattached. Living in Sanyasa Ashrama, observing perfect Brahmacharya, he sustained himself on a handful of puffed rice, walked thousands of miles across the country, and gave spiritual instructions to all. If one were to ask, what was the source of such extraordinary strength and energy, the answer can only be jnāna. From witnessing the life of such a great soul, we understand that such a higher state indeed exists. Compared to our ordinary condition, this is an exalted state; and from time to time, this truth flashes upon us with striking clarity.

Every day we wake up, eat, and wander about and struggle. But just being in the presence (Sannidhi) of Maha Periyava or even thinking about His presence causes the mind to settle, worries to vanish, and a supreme peace to be felt. It feels as if the entire body is recharged.

That experience shows us the state to be attained—“Naraanaam ayana: Narayana:”—the supreme state humans must reach is “Bhagavan.” That “Bhagavan” Himself came in the form of a Guru and showed us the “taste” of that state. Seeing that such a sweet, blissful, and peaceful state exists, we seek to learn about the Nivrutti Marga.

Adi Shankara Bhagavatpada incarnated to speak of the attainment of Advaita (Advaita Siddhi) through the Nivrutti Marga. Today’s introduction has become quite philosophical. From tomorrow, it will be entirely stories, told as if for children—how the Kerala/Parasurama Kshetram was created, how the couple Shivaguru and Aryamba prayed, and how Adi Shankara incarnated as their child along with how our Maha Periyava incarnated.

Janaki Kantha Smaranam… Jaya Jaya Rama Rama…

Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – இரண்டாம் பகுதி – சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து

13 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் – முதல் பகுதி – ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்?”

UNGALUDAIYA INDHA ARTICLE PADIKKARAPOTHU,NALLA SANTHANAM, SAAMPIRANI DHOOBATHODU, THULASHI, VILVAM. MARIKKOLUNDHU,MALLIGAI,MULLAI, PICHIPPO–SHENBAGAM, MANORANJITHA POOVODU PERIYAVALAI NAMASKKARAM SEIKIRA SHMARANAIKKU ALAITHU SELKIREERGAL. ENNUM ETHAI ETHAIYO SERTHUNDU PRARTHIKKA VENDUGIREN.
UNGAL ARTICLE, ROMBA ROMBA UTHAMAM.INDHA PUNNIYA KARITHAI SEIYUM UNGAL VAAL NAAL PERUGATTUM-JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.ITHU ADIYENIN ATHMA NIVEDHANAM.

Hope we are all blessed by SHRI ADHI SHANKARAR to hear from you in a simple but reaching and entering the mind like a water flow.May HE shower all the best in this Universe to you and your family

Feeling blessed and light hearted after reading this post. I bookmarked your page to read your post. May all PERIYAVAAs and SIVAN SAR bless you and your family.

Heard your today’s pravachanam on Sri Sankara Vijayam. This definitely kindles my desire to hear mote from you each dsy. I am looking forward to this series. Vanakkam.

நேற்று.

எனது பால்ய கால நண்பரும், ஆன்மிகத்தில் அதிகப் பற்று கொண்டவருமான திரு கணேஷ் என்கிற கண்பதி ஸுப்ரமணியன் உரையை ஒலி வடிவில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

விநாயகரின் துதிகளில் ஒன்றானதும், இராமாயண தியானத் துதிகளில் முதன்மையானதுமானதைக் குறிப்பிட்டார்.

वागीशाद्या सुमनसः सर्वार्थानामुपक्रमे |
यं नत्वा कृतकृत्यास्यु: तं नमामि गजाननम् ||

வாகீ3ஶாத்3யா: ஸுமநஸ: ஸர்வார்தா2நாமுபக்ரமே|
யம் நத்வா க்ருதக்ருத்யா: ஸ்யு:
தம் நமாமி க3ஜாநநம்||

தினமும் இத்துதியை நான் துதித்துக் கொண்டிருந்தாலும், அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததில்லை.

ஆனால், கணேஷ் விவரித்த விதம் சுவாரஸ்யமாய் இருந்தது.

//வாக்குக்கு ஈசன் ஆனா, அதாவது வாக்னா சரஸ்வதி, சரஸ்வதியோட பதியான ப்ரம்மா,

‘ஆத்யா:’ னா முதலிய,

‘ஸுமனஸஹ’ன்னா’ தேவர்கள்’, ப்ரம்மாதி தேவர்கள், (லக்ஷ்மி, நல்ல மனம், மலர், என்றும் பொருள்படும்)

‘சர்வார்த்தானாம்’ எல்லா கார்யத்தின்

‘உபக்ரமே’, ஆரம்பத்தில்,

‘யம் நத்வா’ எவரை வணங்கி,

‘க்ருதக்ருத்யாஸ்யுஹு’ தங்களுடைய கார்யங்கள் நிர்விக்னமாக நிறைவேற பெறுகிறார்களோ,

அந்த ‘கஜானனம்’ அந்த பிள்ளையாரை

‘தம் நமாமி’ நானும் வணங்குகிறேன்.//

இதைக் கேட்டவுடன் ஔவைப் பிராட்டியாரின் பாடல் நினைவுக்கு வந்தது.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

இத்துதியின் பொருள்:

உடலை வருத்திக் கொள்ளாமல் எளிமையான பூக்களைக் கொண்டு தும்பிக்கையான் தாள்களைச் சேர்ந்தோருக்கு சீரிய வாக்கும், நல்ல மனமும், அலைமகளின் பார்வையும் என்றென்றும் உண்டாகும்.

இதையே மாற்றி, சரஸ்வதி/லக்ஷ்மி, நல்ல மனதுள்ளவர்கள், எவரைப் பூக்களால் தொழுது தங்களது கடமைகளை வெற்றிகரமாய் நிறைவேற்றிக் கொள்கிறார்களோ, அந்த தும்பிக்கையானை நானும் வணங்குகிறேன் என்கிற பொருள் வருமாறு ஸம்ஸ்கிருதத் துதியில் கூறப்பட்டிருக்கிறது.

இரண்டு துதிகளும் மிகச் சரியாய்ப் பொருந்திப் போவதைக் கண்டு வியந்தேன்.

எழுதத் தூண்டிய Ganapathy Subramanian Sundaram அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அற்புதம் என்பது மிக சாதாரண சொல் ! ஏனெனில் இதைவிட எளிமையாக நயம் பட சொல்ல முடியுமா? சரஸ்வதி கடாக்ஷம் குரு கடாக்ஷம் பரிபூர்ணம்! மேலும்.உங்கள் வாக்கு மூலமாக சங்கரா சரிதம் கேட்க ஆவலாயுள்ளேன்.

உலகெங்கும் உள்ள மக்களின் மனதில் பயம் நீங்கி, நம்பிக்கை மற்றும் உத்சாகம் தோன்ற அமிர்த மழையாய் அமைந்துள்ளது இந்த உபன்யாசம். ஆதி சங்கரர், ,மகா பெரியவா, பிள்ளையார் என்று பேசப்படும் பொருள் மதுரம், உங்கள் வாக்கும் மதுரம். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இந்த மரத்தை மறைத்தது மாமத யானை படித்தது நினைவுக்கு வந்தது. உங்கள் குரலில் அந்த கதை அதே சந்தோஷம் தருகிறது.

உங்கள் பணி மகத்தானது. இன்னும் நிறைய பேர் இந்த உபன்யாசம் கேட்டு நாடெல்லாம் சங்கர சரித்திரம் ஒலிக்க என் ப்ரார்த்தனை.

மறு முறையும் இன்று பிரவாசனம் அனுபவித்தேன்! தேனினும் இனிய விளக்கம்! விநாயகர் அகவல் வருமா போல் குரு வடிவாக குவலயம் தன்னில் திருவடி வைத்து, ஜனித்து, 100 வருடங்கள் நம்மிடையே வாழ்ந்த பரமேஸ்வரன் பெரியவா!
ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு தாடங்க பிரதிஷ்டா செய்தபோது சிவ சக்ரா, அம்பாள் சக்ரா பிரதிஷ்டை செய்தார் என்று கேட்கும்போது, ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. திருமணமாகாத, தடைப்பட்ட குழந்தைகள் அகிலாண்டேஸ்வரி தாடங்க தரானம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

Namaskarams Anna, Been listening to them in sequence. They are so blissful to hear. So nicely capsuled and easy for us, this generation to learn about our Acharyas. Koti Namaskarams for this Satsangh.

ஸ்ரீ சங்கர விஜயம் ஆரம்பத்திலேயே களை கட்டிவிட்டது. கணபதியான நீங்கள் மஹா கணபதியில் தொடங்கி அவரின் தகப்பனார் அவதாரம் என்றே கருதும் ஸ்ரீ சங்கர பகவத்பாதரை இணைத்து அவரின் ப்ரத்யக்ஷ அவதாரம் என்று நான் உறுதியாக நம்பும் நம் கருணாமூர்த்தி மஹா பெரியவாளையும் இணைத்து ஜம்புகேஸ்வரர் சகதர்மிணி அகிலாண்டேஸ்வரியையும் இணைத்து…..ஆஹா சர்க்கரை பந்தலில் தேன் மழை பெய்தது.. நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் சௌக்கியமாக இருக்க வேண்டுகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.