Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினான்காம் பகுதி – ஸ்தோத்ரங்கள் மூலமாக சங்கர திக்விஜயம்

நேற்றைய கதையில் ஹஸ்தாமலகாச்சார்யாளும், தோடகாச்சார்யாளும் நம்முடைய சங்கர பகவத்பாதாள் கிட்ட வந்து சேர்ந்தது, பக்தி பண்ணிணது எல்லாம் சொல்லிண்டிருந்தேன். நேத்திக்கு சொல்லும் போது நமக்கெல்லாம், ஞானப்பாதை ரொம்ப கடினமானது. பாமரர்களா இருக்க கூடிய நாம், பக்தியினால் தான் பகவானை அடைய முடியும், அப்படீன்னு சொல்லிண்டு இருந்தேன். ஆனா அந்த பக்தியையே, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் போன்ற மஹான்கள், ஞான மார்கம் போல கடைப்பிடிச்சா. பக்தியை ஒரு bed of roses மாதிரி நினைச்சு தன்னையே ஏமாத்திக்காம, பக்தி மார்க்கத்துலேயே ரொம்ப வைராக்கியத்தோட, பகவானை அடையணும் என்கிற தாபம், அதுலயே அவா அந்த குருவாயூரப்பனையே எங்கும் பார்த்து ஞானி ஆயிட்டா. அப்படி பக்தியும் ஞானமும் ஒண்ணு தான்.  அந்த உத்தம பக்திங்கறது தான் ஞானம். அதனால நாமும் ஞானம் அடையறதுக்காக, ஞானத்தோட பக்தி பண்ணணும் அப்படீங்கிறதையும் இன்னைக்கு சேர்த்து சொல்லணும்னு தோணித்து. அந்த higher goal-காகத்தான் பக்தி. ஆதிசங்கரர் காண்பிச்ச அந்த ஜீவன்முக்த நிலையை அடையறதுக்காகத்தான் பக்தி அப்படீன்னு சொல்லணும்னு தோணித்து.

இன்னைக்கு ஆதி சங்கரரோட திக் விஜயத்தை பத்தி சொல்றேன். ஆதிசங்கர பகவத்பாதாள் ஆறாயிரம் சிஷ்யர்களோட பாரத தேசம் முழுக்க, மூணு தடவை, எத்தனையோ மலைகளும், காடுகளும் தாண்டி ஒவ்வொரு க்ஷேத்ரத்துக்கும் போய் ஜனங்களுக்கெல்லாம்  தர்சனம் கொடுத்து, ஜனங்களையெல்லாம் நல்வழி படுத்தி தெய்வங்களின் உக்ர கலையை போக்கி சௌம்ய மூர்த்திகளா மாத்தி,  ஒவ்வொரு கோவில்கள்-லேயும் திருவனந்தபுரம், குருவாயூர், பத்ரிகாஷ்ரமம் போன்ற க்ஷேத்ரங்களில் ஆராதனைகளை சரிபடுத்தினார். இப்பவும் ராவல் அப்படீன்னு நம்பூதிரிகள்மார் தான் பத்ரில பூஜை பண்றா. அப்படி வைதீக பூஜை முறைகள் எல்லாம் கொண்டு வந்து அப்படி திக்விஜயம்னா இதுதான் திக்விஜயம் அப்படின்னு மஹாபெரியவா சொல்றா. ராஜாக்கள் திக்விஜயம் போனா, யுத்தம் பண்ணி, வழியில  நிறைய பேரை வதம் பண்ணிண்டு போவா. ஆனா ஆசார்யாளுடைய திக்விஜயத்துல ஒருத்தர் கூட  இறக்கலை. யாரும் ம்ருதம் ஆகலை. எல்லாருக்கும் அமிர்தத்தை கொடுத்தார். அம்ருதம் அப்படீன்னா  சாகாத நிலை. அமிர்தத்தை கொடுத்தார். அமரத்துவத்தை கொடுத்தார் ஆச்சார்யாள். போற இடத்துலெயெல்லாம் ஞானத்துனால ஜனங்களுக்கு  மோக்ஷத்தை  கொடுத்தார். இப்பேற்பட்ட திக்விஜயம் வேற யாருமே பண்ணதில்லை, அப்படீன்னு பெரியவா சொல்றா.

திருப்பதில தனாகர்ஷண யந்த்ரம் ஸ்தாபனம் பண்ணிணார். ஸ்ரீரங்கத்துல ஜனாகர்ஷண யந்த்ரம் ஸ்தாபனம்  பண்ணிணார். திருவானைக்காவல்-ல அம்பாளுடைய  உக்ர கலையை, ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் அப்படீன்னு ரெண்டு தாடங்கங்களா அம்பாள் காதுலேயே  போட்டு, எதிரில் பிள்ளையாரை பிரதிஷ்டை பண்ணி சௌம்ய மூர்த்தியா ஆக்கினார். காஞ்சிபுரத்துல ஸ்ரீசக்ர பிரதிஷ்டை பண்ணி, எட்டு உக்ர காளிகளா  இருந்தவாளை  எல்லாம் அந்த ஸ்ரீசக்ரத்துக்கே காவல் தெய்வங்களா அங்கேயே அடக்கி வச்சு, அம்பாளை  சௌம்ய மூர்த்தியா ஆக்கினார். திருவொற்றியூர்ல அம்பாளுடைய கோபத்தை  ஒரு கிணத்துக்குள்ள அடக்கி அம்பாளை சௌம்ய மூர்த்தியா ஆக்கினார். அந்த கிணத்துக்கு  இப்ப கூட வட்டப்பாறை அம்மன் அப்படீன்னு சொல்லி, அதுக்கு தனியா வருஷத்துக்கு ஒருநாள் பூஜை பண்றா. கொல்லூர் மூகாம்பிகை க்ஷேத்ரத்துல அம்பாளை சௌம்யமா ஆக்கினார். அப்படி அவர் போன இடத்துல எல்லாம் ஜனங்களுக்கு நல்ல வழியை காண்பிச்சார்.

திருவிடைமருதூர் ல ஒரு புத்த கோஷ்டி “உங்களுடைய இந்த அத்வைதத்துக்கு யார் சாட்சி?” னு கேட்டபோது “பகவானே சாக்ஷி. வாங்கோ” ன்னு சொல்லி திருவிடைமருதூர் மஹாலிங்க க்ஷேத்ரம்-னு பேரு, அங்கே கூட்டிண்டு போனார். எல்லா லிங்கங்களுக்கும் மத்தியமான லிங்கம். அங்க அந்த ஸ்வாமி சன்னிதியேலேயே போய் ஆசார்யாள் “பகவானே நீங்க சாக்ஷி சொல்லுங்கோ” ன்ன உடனே  அசரீரியா “அத்வைதமே சத்யம்” அப்படீன்னு வாக்கு வந்தது. அந்த லிங்கத்துல இருந்து பகவான் ரெண்டு கைகளை  தூக்கி காண்பித்து “அத்வைதமே சத்யம்” அப்படீன்னு பிரகடனம் பண்ணார். பூரி ஜகன்நாத்-ல  போயி அங்க ஸ்வாமிய மீட்டு கொடுத்தார். கேதார்நாத் போயிருக்கார். அப்பறம் கைலாசத்துக்கு போயி பரமேஸ்வரன் கிட்டேயிருந்து ஐந்து லிங்கங்களும், சௌந்தர்யலஹரியும்  வாங்கிண்டு வந்தார், அப்படீங்கிறதை நான் நாளைக்கு விஸ்தாரமா சொல்றேன்.

இன்னிக்கு இந்த ஒவ்வொரு க்ஷேத்ரத்துக்கு போகும் போதும் அந்தந்த ஸ்வாமி மேல  அழகான ஸ்லோகங்கள் சொல்லியிருக்கார். இந்த ஸ்லோகங்கள் எல்லாம் நான் இன்னிக்கு உங்களோட பகிர்ந்துக்கறேன்.

முதல்ல பிள்ளையாரோட ஆரம்பிப்போம். காசியில டுண்டி  விநாயகர் கிட்ட இந்த முதகராத்த மோதகம் பாடி இருக்கலாம். நாம எங்க பிள்ளையாரை பிடிச்சாலும், மஞ்சள்-ல பிடிச்சு வைச்சாக்கூட பிள்ளையார்தான். பிடிச்சு வைச்சா பிள்ளையார்-னு சொல்வா. அப்படி  எங்க நாம பிள்ளையாரை ஸ்மரணம் பண்ணாலும் இந்த முதகராத்த மோதகம் ஞாபகம் வரும்.

டுண்டி விநாயகர்

मुदा करात्तमोदकं सदा विमुक्तिसाधकं कलाधरावतंसकं विलासिलोकरक्षकम्।

अनायकैकनायकं विनाशितेभदैत्यकं नताशुभाशुनाशकं नमामि तं विनायकम्।।

முதா கராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்

கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம் |

அநாயகைகநாயகம் விநாஷிதேபதைத்யகம்

நதாஷுபாஷுநாஷகம் நமாமி தம் விநாயகம் ||

அப்படீன்னு ஒரு அழகான ஒரு ஸ்லோகம்.  ஒவ்வொரு ஸ்தோத்திரத்துலேர்ந்து ஒவ்வொரு ஸ்லோகம் சொல்றேன். முழுக்க சொல்லனும்னா ரொம்ப நேரம் ஆகும். இந்த ஆச்சார்யாள் திக்விஜயம்  பண்ண அந்த order-ல இல்லாம, நான் தெய்வங்களோட order-ல சொல்றேன். பிள்ளையாரை ஸ்மரிச்சோம், முருகனுக்கு திருச்செந்தூர்ல போயி அங்க ஸுப்ரமண்ய புஜங்கம் பாடினார். அந்த ஸுப்ரமண்ய புஜங்கதுலேர்ந்து ஒரு ஸ்லோகம்.

திருச்செந்தூர்

मयूराधिरूढं महावाक्यगूढं मनोहारिदेहं महच्चित्तगेहम्।

महीदेवदेवं महावेदभावं महादेवबालं भजे लोकपालम्।।

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்

மநோஹாரிதேஹம் மஹச்சித்தகேஹம் |

மஹீதேவதேவம் மஹாவேதபாவம்

மஹாதேவபாலம் பஜே லோகபாலம்৷৷

மயூராதிரூடம்- மயில் மேல் ஏறிண்டு இருக்கிறவர்.

மஹாவாக்யகூடம், வேதத்துல இருக்கக்கூடிய  மஹாவாக்யங்களின் மறைப்பொருள் என்னென்னா முருகர் தான் என்கிறார்,

மநோஹாரி தேஹம், மனத்தை கொள்ளை கொள்ளும் குமார வடிவம்,

மஹச்சித்தகேஹம்,  மாஹான்களுடைய சித்தத்தை இருப்பிடமாக, வீடாக வெச்சுண்டு இருக்கார்,

மஹீதேவதேவம் மஹீதேவர்கள் னா, பூஸுரஹ, பூமியில் இருக்கக்கூடிய தேவர்கள், ப்ராஹ்மணர்கள், ப்ராஹ்மணர்களோட தெய்வம் முருகன்,

மஹாவேதபாவம் வேதத்துடைய பாவமே சுப்ரமணிய ஸ்வாமி தான்,

மஹாதேவபாலம் சிவபெருமானுடைய குழந்தை,

பஜே லோகபாலம் – உலகத்தை எல்லாம் காப்பாற்றும்  அந்த முருகனை நான் வழிபடுகிறேன் அப்படீன்னு சொல்றார்.

ஆதி சங்கரர் துவாதச ஜோதிர் லிங்கங்கள்-னு பாரத தேசத்துல இருக்கு, நேபால்லேர்ந்து ராமேஸ்வரம் வரைக்கும், அங்கங்கே ஜ்யோதிஸா இருந்தது, அப்பறம் லிங்க வடிவமா ஆகி அங்க வழிபடறா. ஆசார்யாள் அந்த பன்னிரண்டு லிங்ககளையும் தரிசித்து  துவாதச லிங்க ஸ்தோத்ரம்-னு ஒண்ணு பண்ணியிருக்கார். அதுலேர்ந்து ஒண்ணு ரெண்டு சொல்றேன்.

த்வாதச லிங்க ஸ்தோத்ரம்

सानन्दमानन्दवने वसन्तमानन्दकन्दं हतपापबृन्दम्।

वाराणसीनाथमनाथनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये।।

ஸாநந்தமாநந்த வநே வஸந்தமாநந்தகந்தம் ஹதபாபப்ருந்தம் |

வாராணஸீநாதமநாதநாதம் ஸ்ரீவிஷ்வநாதம் ஷரணம் ப்ரபத்யே ||

அப்படீன்னு இது காசி விஸ்வநாதர் மேல.

श्रीताम्रपर्णीजलराशियोगे निबद्धय सेतुं निशि बिल्वपत्रैः।

श्रीरामचन्द्रेण समर्चितं तं रामेश्वराख्यं सततं नमामि।।

ஸ்ரீதாம்ரபர்ணீ ஜலராஷியோகே நிபத்தய ஸேதும் நிஷி பில்வபத்ரை: |

ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்சிதம் தம் ராமேஷ்வராக்யம் ஸததம் நமாமி ||

அப்படீன்னு ராமரால் பூஜை பண்ணப்பட்ட ராமேஸ்வரத்துல இருக்க கூடிய ராமலிங்கத்தை நமஸ்கரிக்கிறேன், அப்படீன்னு சொல்றார்.

பரமேஸ்வர பரமா நிறைய ஸ்லோகங்கள் பண்ணியிருக்கார். அதுல ரொம்ப ரொம்ப அழகானது இந்த சிவானந்த லஹரி, நூறு ஸ்லோகங்கள். அந்த சிவானந்த லஹரி ஸ்ரீசைலம்ங்கிற க்ஷேத்ரத்துல பண்ணினார், அப்படீன்னு சொல்லுவா. அதுல மல்லிகார்ஜுன  க்ஷேத்ரத்தை குறித்து ரெண்டு மூணு ஸ்லோகங்கள் வறது. ஒரு மலை மேல காட்டுக்குள் இருக்கும் ஸ்வாமி, அந்த சிவானந்த லஹரிலேர்ந்து ஒரு ஸ்லோகம் சொல்றேன்.

ஸ்ரீசைலம்

गलन्ती शंभो त्वच्चरितसरितः किल्बिषरजो दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।

दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं वसन्ती मच्चेतोह्रदभुवि शिवानन्दलहरी ।।

கலந்தீ ஷம்போ த்வச்சரிதஸரித: கில்பிஷரஜோ

தலந்தீ தீகுல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் |

திஷந்தீ ஸம்ஸாரப்ரமணபரிதாபோபஷமநம்

வஸந்தீ மச்சேதோஹ்ரதபுவி ஷிவாநந்தலஹரீ ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம், இதுக்கு மஹா பெரியவா word by word  அர்த்தம் சொல்லியிருக்கா. அதை நான் உங்களுக்கு share பண்றேன்.

ஆச்சார்யாள் இங்க எல்லா க்ஷேத்ரங்களுக்கும் வந்துருக்கார், திருவண்ணாமலையும் வந்து இருப்பார். அங்க தான் அவருக்கு தக்ஷிணாமூர்த்தி தரிசனம் கிடைச்சிருக்கும், இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் பண்ணியிருப்பார், அப்படீன்னு ஒருத்தர் எழுதியிருந்தார். ரொம்ப அழகா இருந்தது.

विश्वं दर्पणदृश्यमाननगरीतुल्यं निजान्तर्गतं

पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया ।

यः साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ।।

விஷ்வம் தர்பணதரிஷ்யமாநநகரீதுல்யம் நிஜாந்தர்கதம்

பஷ்யந்நாத்மநி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயா ||

ய: ஸாக்ஷாத்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மாநமேவாத்வயம்

தஸ்மை ஸ்ரீகுருமூர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயே ||

அப்படீன்னு இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தை படிச்சாலோ, த்யானம் பண்ணினாலோ, பாடினாலோ, இதோட அர்த்தத்தை மனனம் பண்ணினாலோ ஞானம் கிடைக்கும் அப்படீன்னு ஆசார்யாள் பலஸ்ருதி  சொல்லியிருக்கார்.

காசி க்ஷேத்ரத்துலயே விஸ்வநாதரை பாடியிருக்கார், அன்னபூரணியை பாடியிருக்கார், கங்கையை பாடியிருக்கார், யமுனையை பாடியிருக்கார், காலபைரவரை பாடியிருக்கார், இங்க நர்மதையை பாடியிருக்கார், இந்த அன்னபூர்ணாஷ்டகம்-னு ஒரு ஸ்லோகம். அதுலேர்ந்து ரெண்டு ஸ்லோகம் சொல்றேன்.

காசீ அன்னபூரணி

नित्यानन्दकरी वराभयकारी सौन्दर्यरत्नाकरी

निर्धूताखिलघोरपापनिकरी प्रत्यक्षमाहेश्वरी ।

प्रालेयाचलवंशपावनकरी काशीपुराधीश्वरी

भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी ।।

நித்யாநந்தகரீ வராபயகாரீ ஸௌந்தர்யரத்நாகரீ

நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாஹேஷ்வரீ.

ப்ராலேயாசலவம்ஷபாவநகரீ காஷீபுராதீஷ்வரீ

பிக்ஷாம் தேஹி கரிபாவலம்பநகரீ மாதாந்நபூர்ணேஷ்வரீ৷৷1৷৷

அப்படீன்னு  இந்த மாதிரி வரும், எட்டு ஸ்லோகங்கள், ரொம்ப அழகா இருக்கும். இதெல்லாம் வந்து ஒவ்வொரு ஸ்லோகம் சொன்னா, திருப்தியே ஆகமாட்டேங்கறது. முழு ஸ்தோத்ரத்தையும் படிக்கணும்னு தோணறது. இதோட கடைசி ஸ்லோகம்.

अन्नपूर्णे सदापूर्णे शंकरप्राणवल्लभे। ज्ञानवैराग्यसिद्ध्यर्थं भिक्षां देहि च पार्वति।।

माता च पार्वतीदेवी पिता देवो महेश्वरः। बान्धवाः शिवभक्ताश्च स्वदेशो भुवनत्रयम्।।

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே.

ஜ்ஞாநவைராக்யஸித்த்யர்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ৷৷

 

மாதா ச பார்வதீதேவீ பிதா தேவோ மஹேஷ்வர: |

பாந்தவா: சிவபக்தாஷ்ச ஸ்வதேஷோ புவநத்ரயம் ||

எல்லார் ஆத்துலேயும் தினமும் சாதம் வைக்கறதுக்கு முன்னாடி இந்த இரண்டு ஸ்லோகங்கள் சொல்லுவா இல்லையா?

அப்பறம் காஞ்சீ காமாக்ஷி பேர்ல தான் இங்கே இந்த ஸௌந்தர்யலஹரி பண்ணினார் னு மஹா பெரியவா சொல்றா. அப்பறம் மடம் ஸ்தாபனம் பண்ணி, சர்வஞ பீடாரோஹணம் பண்ணிட்டு காமாக்ஷி கூடவே கலந்துட்டார் அப்படின்னு சொல்றார். காஞ்சி தான் முக்தி க்ஷேத்ரம். இங்கே தான் ஆதி சங்கரர் லயம் அடைந்தார் னு சில சங்கர விஜயங்களில் இருக்கு னு பெரியவா சொல்றா. கேதார நாதத்தில் என்று சில புஸ்தகங்களில் இருக்கு. கேதார நாதத்தை தாண்டி யோக மார்க்கமாக கைலாசத்துக்கு போய், பகவானை தரிசனம் பண்ணிட்டு அப்பறம் காஞ்சிபுரம் வந்தார் அப்படின்னு இருக்கு னு அதை quote பண்றா.

இந்த சௌந்தர்யலஹரி ஸ்தோத்ரம், ஸ்வாமிகள் என்னை படிக்க வேண்டாம். உனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் எல்லாம் பிறந்த பின்ன வேணும்னா படி அப்படின்னு சொன்னார். அதுக்குள்ளே இந்த மூக பஞ்ச சதி ஆவர்த்தி பண்ணி எனக்கு இதுலேயே ருசி வந்துடுத்து. ஆனா ஸ்வாமிகளே சௌந்தர்ய லஹரியில் இருந்து ஒரு அஞ்சு ஆறு ஸ்லோகங்கள் சொல்லி குடுத்து இருக்கார். அதெல்லாம் தான் நான் quote பண்றேன். இந்த ‘ஜபோ ஜல்ப:’ ‘த்ருஷா த்ராகீயஸ்யா’ அதெல்லாம் மாதிரி இந்த ஒரு ஸ்லோகம் அவர் விரும்பி சொல்லுவார்.

காமாக்ஷி

त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणस्त्वमेका नैवासि प्रकटितवराभीत्यभिनया।

भयात्त्रातुं दातुं फलमपि च वाञ्छासमधिकं शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ।।

த்வதந்ய: பாணிப்யாமபயவரதோ தைவதகண:

த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீத்யபிநயா |

பயாத்த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்

ஷரண்யே லோகாநாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ৷৷

அம்மா! உன்னைத் தவிர மத்த தெய்வங்கள் எல்லாம் வலது கையால் அபய முத்திரையும் இடது கையால் வரத முத்திரையும், இல்லை மாத்தி இருக்கும். இடது கையால் அபய முத்திரையும் வலது கையால் வரத முத்திரையும் காண்பிக்கரா. நீ தான் காண்பிக்கரதில்லை. காமாட்சிக்கு நாலு கைகள். அதுல பாணம், ஸ்ருணி, பாசம், கார்முகம் – பஞ்ச புஷ்ப பாணங்கள், பாசம், அங்குசம், அப்பறம் கரும்பு வில். அதுனால நீ அபய வரத முத்திரை காண்பிக்கவில்லை. ஆனால் பயாத்த்ராதும் – பயங்களில் இருந்து காப்பதற்கும், தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம் – பக்தர்கள் ஆசைப்படுவதற்கும் மேலான பலன்களை குடுப்பதற்கும், சரண்யே லோகாநாம் – உலகங்கள் எல்லாவற்றுக்கும் புகலிடமான காமாக்ஷி, தவ ஹி சரணாவேவ நிபுணௌ – உன்னுடைய பாதங்களே சாமர்த்தியம் உடையவைகளாக இருக்கே! நீ தனியா எதுக்கு அபய வரத அபிநயம் பண்ணனும் அப்படின்னு ஒரு ஸ்லோகம்.

காஞ்சிபுரத்தில் காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டு ஆசார்யாள் ஏகாம்பரேச்வரரை பார்த்து இருப்பார். ஏகாம்பரேச்வரர் கோவிலில் பின்னாடி மாமரத்தின் அடியில் அம்பாளுக்கும் சுவாமிக்கும் கல்யாண கோலம் ஒரு சந்நிதி இருக்கு, அந்த இந்த ஸ்லோகம் சொல்லி இருப்பார்.

ஏகாம்பரேஸ்வரர்

नमः शिवाभ्यां नवयौवनाभ्यां परस्पराश्लिष्टवपुर्धराभ्यां

नगेन्द्रकन्यावृषकेतनाभ्यां नमो नमः शंकरपार्वतीभ्याम्।।

நம: ஷிவாப்யாம் நவயௌவநாப்யாம்

பரஸ்பராஷ்லிஷ்டவபுர்தராப்யாம் |

நகேந்த்ரகந்யாவருஷகேதநாப்யாம்

நமோ நம: சங்கர பார்வதீப்யாம் ||

சம்ஸ்க்ருதத்துல ஷிவாப்யாம் அப்படின்னு dual னு இருக்கு. அதை வெச்சு ஒரே வார்த்தையில் இரண்டு பேரையும் சொல்றார். ஒருத்தரை ஒருத்தர் ஆலிங்கனம் பண்ணிண்டு இருக்கா என்று வரும் இந்த ஸ்லோகத்தை சொல்லி நமோ நம: சங்கர பார்வதீப்யாம் – இவாளை நமஸ்காரம் பண்ணினால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். சந்தோஷம் ஏற்படும் அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அடுத்தது வரதராஜரை தர்சனம் பண்ணி இருப்பார். ஷட்பதீ ஸ்தோத்ரம் னு ரொம்ப சின்னதா ஒரு ஆறு ஸ்லோகங்கள் கொண்ட ஒரு விஷ்ணு ஸ்துதி இருக்கு. மஹா பெரியவா தெய்வத்தின் குரல் நான்காம் பாகத்துல அதுக்கு ஒரு இருநூறு பக்கங்கள் அந்த ஆறு ஸ்லோகங்களுக்கு அர்த்தம் சொல்லி இருக்கா. அதுலேர்ந்து ரெண்டு ஸ்லோகம் சொல்றேன்.

வரதராஜர்

दामोदर गुणमन्दिर सुन्दरवदनारविन्द गोविन्द।

भवजलधिमथनमन्दर परमं दरमपनय त्वं मे।।

नारायण करुणामय शरणं करवाणि तावकौ चरणौ।

इति षट्पदी मदीये वदनसरोजे सदा वसतु।।

தாமோதர குணமந்திர ஸுந்தரவதநாரவிந்த கோவிந்த |

பவஜலதிமதநமந்தர பரமம் தரமபநய த்வம் மே ||

நாராயண கருணாமய ஷரணம் கரவாணி தாவகௌ சரணௌ |

இதி ஷட்பதீ மதீயே வதநஸரோஜே ஸதா வஸது ||

இந்த ஆறு ஸ்லோகங்கள் ‘மதீயே வதநஸரோஜே’ – என்னுடைய வாய் என்கிற தாமரையில் ‘ஸதா வஸது’, என் மனமாகிய தாமரையில்னு சொன்னா கூட ஸ்லோகம் ஒட்டும். ஆனா நாக்கு நாமத்தை சொன்னால் போதும். இந்த ஸ்லோகங்களை படிச்சுண்டே இருந்தால் போதும், தானாக பகவான் மனசுல வந்து உட்கார்ந்துப்பார், அப்படின்னு பெரியவா இருக்கு அர்த்தம் சொல்லி இருக்கார். இந்த ‘தாமோதர குணமந்திர ஸுந்தரவதநாரவிந்த கோவிந்த’ என்ற வரி நிறைய மெல்லின வார்த்தைகள் இருக்கறதுனால இனிமையாக இருக்கு. கோவிந்த தாமோதர குணமந்திர ஸுந்தரவதநாரவிந்த கோவிந்த தாமோதர குணமந்திர ஸுந்தரவதநாரவிந்த கோவிந்த னு ஜபிச்சுண்டே இருக்கலாம் னு சொல்றா. அப்பறம் மதுரா போயிருப்பார். ப்ருந்தாவனம் போய் இருப்பார். நிறைய விஷ்ணு ஸ்லோகங்களும் பண்ணி இருக்கார். அதுல

ப்ருந்தாவனம்

अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिम्।

श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे।।1।।

அச்யுதம் கேஷவம் ராமநாராயணம்

கருஷ்ணதாமோதரம் வாஸுதேவம் ஹரிம் |

ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்

ஜாநகீநாயகம் ராமசந்த்ரம் பஜே ||

என்று ஆரம்பித்து எட்டு ஸ்லோகங்கள் இருக்கு. ஸ்கூல் program ல எல்லாம் குழந்தைகள் டான்ஸ் ஆட இதை பாடறா. அழகான மெட்டு.

அயோத்யா ல ராமரை தரிசனம் பண்ணின போது ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம் னு ஒண்ணு பண்ணி இருப்பார் னு மஹா பெரியவா சொல்றா.

அயோத்யா

यदावर्णयत्कर्णमूलेऽन्तकाले शिवो राम रामेति रामेति काश्याम्।

तदेकं परं तारकब्रह्मरूपं भजेऽहं भजेऽहं भजेऽहं भजेऽहम्।।

யதாவர்ணயத்கர்ணமூலேந்தகாலே

ஷிவோ ராம ராமேதி ராமேதி காஷ்யாம் |

ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்

பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்৷৷

இந்த ராம என்ற இரண்டு எழுத்துக்களை காசியில் மரிப்பவனுடைய காதுகளில் சிவபெருமான் சொல்லி தாரகம் னா தாண்டவிடறது இந்த சம்சார கடலில் இருந்து தாண்டுவிக்கும் எந்த ராமருடைய நாமங்களை சொல்கிறாரோ, அந்த பரப்ரம்ம ரூபமான ராமரை நான் பஜிக்கிறேன் னு ஒரு ஸ்லோகம்.

இப்படி ஒவ்வொரு க்ஷேத்ரத்துலேயும் அழகழகான ஸ்தோத்ரங்கள் இருக்கு. மதுரையில் மீனாக்ஷி அம்பாள் மேலே மீனாக்ஷி பஞ்சரத்னம் னு ஒரு ஸ்தோத்ரம் பண்ணி இருக்கார். எனக்கு ஒரு ஸ்லோகம் சொன்னா திருப்தி ஆக மாட்டேங்கறது. இந்த ஸ்தோத்ரத்தை முழுக்க சொல்றேன். எங்க அம்மா பேர் மீனாக்ஷி. அப்பா பேர் ஸுந்தரம். மாமா பேர் நாராயணன். என் பேர் கணபதி சுப்ரமண்யம். இந்த நாமங்கள் எல்லாம் இந்த ஸ்லோகத்தில் வரது. அழகான ஸ்லோகம்.

 

மதுரை

उद्यद्भानुसहस्रकोटिसदृशां केयूरहारोज्ज्वलां

बिम्बोष्ठीं स्मितदन्तपङ्क्तिरुचिरां पीताम्बरालंकृताम्।

विष्णुब्रह्मसुरेन्द्रसेवितपदां तत्त्वस्वरूपां शिवां

मीनाक्षीं प्रणतोऽस्मि संततमहं कारुण्यवारांनिधिम्।।1।।

मुक्ताहारलसत्किरीटरुचिरां पूर्णेन्दुवक्त्रप्रभां

शिञ्जन्नूपुरकिंकिणीमणिधरां पद्मप्रभाभासुरम्।

सर्वाभीष्टफलप्रदां गिरिसुतां वाणीरमासेवितां

मीनाक्षीं प्रणतोऽस्मि संततमहं कारुण्यवारांनिधिम्।।2।।

श्रीविद्यां शिववामभागनिलयां ह्रींकारमन्त्रोज्ज्वलां

श्रीचक्राङ्कितबिन्दुमध्यवसतिं श्रीमत्सभानायकीम्।

श्रीमत्षण्मुखविघ्नराजजननीं श्रीमज्जगन्मोहिनीं

मीनाक्षीं प्रणतोऽस्मि संततमहं कारुण्यवारांनिधिम्।।3।।

श्रीमत्सुन्दरनायकीं भयहरां ज्ञानप्रदां निर्मलां

श्यामाभां कमलासनार्चितपदां नारायणस्यानुजाम्।

वीणावेणुमृदङ्गवाद्यरसिकां नानाविधाडम्बिकां

मीनाक्षीं प्रणतोऽस्मि संततमहं कारुण्यवारांनिधिम्।।4।।

नानायोगिमुनीन्द्रहृन्निवसतीं नानार्थसिद्धिप्रदां

नानापुष्पविराजिताङ्घ्रियुगलां नारायणेनार्चिताम्।

नादब्रह्ममयीं परात्परतरां नानार्थतत्त्वात्मिकां

मीनाक्षीं प्रणतोऽस्मि संततमहं कारुण्यवारांनिधिम्।।5।।

உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்வலாம்

பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்திருசிராம் பீதாம்பரா லங்க்ருதாம்

விஷ்ணு ப்ரஹ்ம ஸுரேந்த்ர ஸேவிதபதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஷ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

முக்தாஹார லஸத்கீரிட ருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்

சிஞ்ஜன்னூபுர கிண்கிணீ மணிதராம் பத்ம ப்ரபா பாஸூராம்

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஷ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

ஸ்ரீ வித்யாம் சிவ வாமபாக நிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்ய வஸதிம் ஸ்ரீமத் ஸபா நாயகீம்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனநீம் ஸ்ரீமஜ் ஜகன் மோஹீநீம்

மீனாக்ஷீம் ப்ரணதோஷ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

ஸ்ரீமத் ஸுந்தர நாயகீம் பயஹராம் ஞான ப்ரதாம் நிர்மலாம்

ஸ்யாமாபாம் கமலாஸனார்ச்சிதாம் நாராயண ஸ்யானுஜாம்

வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரஸிகாம் நாதா விதா டம்பிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஷ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந்தி வஸதீம் நாநார்த்த ஸித்தி ப்ரதாம்

நாநாவித புஷ்ப விராஜிதாங்க்ரி யுகளாம் நாராயணேர்ச்சிதாம்

நாத ப்ரஹ்ம மயீம் பராத் பரதராம் நாநார்த்த தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஷ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

இன்னிக்கு மாதங்கி ஜயந்தி னு (சித்திரை மாசம் சுக்ல பக்ஷ த்விதீயை. அக்ஷய திருதியைக்கு முந்தின நாள்) சொல்றா. மீனாக்ஷி தேவியோட இன்னொரு பேர் மாதங்கி. ராஜ மாதங்கி னு அம்பாளோட ஒரு அவஸரம். வீணை வாசிச்சுண்டு சங்கீத தேவதையாக இருக்கா. அந்த மாதங்கி மேலே தான் காளிதாசன் சியாமளா தண்டகம் னு ஒரு ஸ்தோத்ரம் பண்ணி இருக்கார். இன்னிக்கு மீனாக்ஷி தேவியை நாம் ஸ்தோத்ரம் பண்ணினோம்.

இப்படி அழகான ஸ்லோகங்கள். ஒவ்வொண்ணும் ரத்னம். ஹனுமத் பஞ்சரத்னம் னு ஒரு சின்ன 5 ஸ்லோகங்கள் இருக்கற ஒரு ஸ்தோத்ரம். ஸ்வாமிகள் இதை 108 ஆவர்த்தி பண்ணச் சொல்வார். அதைப் பண்ணி பல பேர் க்ஷேமம் அடைஞ்சு இருக்கா. அந்த ஹனுமத் பஞ்சரத்னத்தை சொல்லி பூர்த்தி பண்ணிக்கறேன்.

वीताखिलविषयेच्छं जातानन्दाश्रुपुलकमत्यच्छम्।

सीतापतिदूताद्यं वातात्मजमद्य भावये हृद्यम्।।1।।

तरूणारुणमुखकमलं करुणारसपूरपूरितापाङ्गम्।

संजीवनमाशासे मञ्जुलमहिमानमञ्जनाभाग्यम्।।2।।

शम्बरवैरिशरातिगमम्बुजदलविपुललोचनोदारम्।

कम्बुगलमनिलदिष्टंबिम्बज्वलितोष्ठमेकमवलम्बे।।3।।

दूरीकृतसीतार्तिः प्रकटीकृतरामवैभवस्फूर्तिः।

दारितदशमुखकीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः।।4।।

वानरनिकराध्यक्षं दानवकुलकुमुदरविकरसदृक्षम।

दीनजनावनदीक्षं पवनतपःपाकपुञ्जमद्राक्षम्।।5।।

एतत्पवनसुतस्य स्तोत्रं यः पठति पञ्चरत्नाख्यम।

चिरमिह निखिलान्भोगान्भुङ्क्त्वा श्रीरामभक्तिभाग्भवति।।6।।

1.வீதாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்

ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

2.தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்

ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்

3.சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுலலோசனோதாரம்

கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே

4.தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:

தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி :

5.வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்

தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்

6.ஏதத் பவனஸுதஸ்யஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்

சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி

புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி : – என் முன்னால் ஹனுமாரின் உருவம் பிரகாசிக்கட்டும் னு அவர் பிரார்த்தனை பண்ணின போது ஆசார்யாளுக்கு காசியில் ஹனுமான் காட்ல ஹனுமார் தர்சனம் கொடுத்தார் ன்னு சொல்லுவா.

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

சங்கர திக்விஜயம் (23 min audio file. Same as the script above)

ஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்குஸ்ரீ சங்கர சரிதம் – பதினைந்தாம் பகுதி – காஞ்சியில் சங்கரர் விதேஹ முக்தி >>

2 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் – பதினான்காம் பகுதி – ஸ்தோத்ரங்கள் மூலமாக சங்கர திக்விஜயம்”

பஞ்சாயதன பூஜை பண்ணின பலன் கிடைசுடுத்து! என்ன சம்பவ க்கோர்வை! Route போட்டது போல் வரிசையா, அழகா , நேர்த்தியாக பூத்தொடுத்தார்போல் அழகு! கல்யாண கோலத்தில் அம்மையும் அப்பனும் இருக்கும் ஸ்லோகம் உமா மகேஸ்வர ஸ்லோகம் , அயோத்தியில் சீதா ராம ஸ்லோகம் அயோத்யா புர நேதாரம், மிதிலாபுர நாயிகாம் என்ற ஸ்லோகத்தை ஞாபகப் படுத்துவதாக இருந்தது ! உமா மஹேஸ்வர ஸ்லோகம் ரொம்ப அருமை எனக்குப்.பிடித்த ஸ்லோகம்! பொருள் விலங்கிரார்போல் எளிமை !
சிதம்பரத்தில் சிவகாமி அம்மை சந்நிதியில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்ததாகக் படித்த ஞாபகம் சரியா அது? விளக்கவும்.
பொருட் செறிவும் சம்பவம் கோர்வையும், ஸ்தோத்திர மகிமையும் அபாரம்!
ஜய ஜய சங்கரா….

ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர

அப்பப்பா இன்று எத்தனை எத்தனை ஸ்தோத்ரங்கள் அத்தனையும் ரத்னங்கள். இந்த ரத்னங்களனைத்தையும் ஸ்தோத்ரமாலையாக அருளிய
ஸ்ரீ ஆதி ஆசார்யாள் ஸ்ரீ ஷங்கரரின் பாதக்கமலங்களுக்கு அநேகக்கோடானுக்கோடி நமஸ்காரங்கள்.
இந்த ஸ்ரீ ஷங்கர ஜயந்தி தினத்திலிருந்து இவையெல்லாம் படனம், மனனம் செய்து பக்தி மாலையாக ஸ்ரீ ஆசார்யாளுக்கு சூட்ட ஆசை. ஸ்ரீ ஆசார்யாள் ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹம், ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டுகிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.