Categories
Ramayana One Slokam ERC

ராம பக்தி சாம்ராஜ்யம் சால ஸ்வானுபவ வேத்யமே

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் (11 min audio in tamil. same as the script below)

இன்னிக்கு வால்மீகி இராமாயண ஸ்லோகம். பாலகாண்டத்துல பத்தொன்பதாவது ஸர்கத்துல விஸ்வாமித்ரர், தசரதர்கிட்ட, சொல்றார்.

अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम् ।।

वसिष्ठोऽपि महातेजा ये चेमे तपसि स्थिता:।

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்யப்பாக்ரமம் |

வசிஷ்டோsபி மஹாதேஜா: யே சேமே தபஸி ஸ்திதா: ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.இந்த ஸ்லோகத்துக்கு, context என்னன்னா, தசரதருடைய சபைக்கு, விஸ்வாமித்ரர், வறுகிறார். வாசல்ல காவல்காரர்கள் கிட்ட, கௌசிக வம்சத்தோட, விஸ்வாமித்ரர் வந்துருக்கேன்னு, சொல்லு, அப்டீன்ன உடனே, அந்த காவல்காரா எல்லாம், அவருடைய, தேஜஸை பார்த்து, நடுங்கி, ஓடிப் போயி, தசரதர் கிட்ட சொல்றா. தசரதர், உடனே, வசிஷ்டரோட, ஜல பாத்திரங்களை எல்லாம், எடுத்துண்டு, வந்து, விச்வாமித்ரரை, வரவேற்று, அங்கேயே அமர்த்தி, அவருக்கு, பூஜை பண்ணி, அர்க்கியம், பாத்யம், ஆசமநீயம், எல்லாம் கொடுத்து, சபைக்கு, வரவழைச்சு, சபையில, அவரை, ரொம்ப கௌரவமான ஒரு ஆசனத்துல, அமர்த்தி, ரொம்ப அழகான வார்த்தைகளை, தசரதர் பேசறார். “ஒரு குழந்தை இல்லாதவனுக்கு, குழந்தை பொறந்தா மாதிரியும், மழை இல்லாத ஊரில, மழை பெய்த மாதிரியும், ஒரு ரொம்ப ஏழைக்கு, பணம் கிடைச்ச மாதிரியும், எனக்கு, உங்களோட, தரிசனத்துனால, அவ்ளோ சந்தோஷம் ஏற்படறது. புண்ய க்ஷேத்ங்களுக்கு எல்லாம், போயிட்டு வந்தா, எவ்ளோ திருப்தி இருக்குமோ, அவ்வளவு திருப்தி. நீங்களே என்னை தேடி வந்திருக்கேள். அப்பேற்பட்ட பாக்யத்தை நான் இன்னிக்கு அடைஞ்சேன். நான் ராஜாவா இருக்கறதே, உங்களை போன்ற மஹான்களுக்கு, ஏதாவது service பண்றதுக்காக தான். நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்கோ. நான் பண்றேன். அப்படீன்னு சொல்றார். நீங்கள் ராஜாவ இருந்து, அப்புறம் தபஸ் பண்ணி, பிரம்ம ரிஷி ஆனதை நான் தெரிஞ்சுண்டு,இருக்கேன், உங்களுடைய, பெருமை, எனக்கு, தெரியும்”, அப்படீன்னு சொல்றார். “இதி ஹிருதய ஸுகம் ஸ்ருதி ஸுகம் வாக்யம்” காதுக்கும் இனிமையான, மனதுக்கும், இனிமையான இந்த வார்த்தைகளை, கேட்டு, விஸ்வாமித்ரர், சந்தோஷப் பட்டு, நீ வசிஷ்டருடைய சிஷ்யனா இருக்கறதுனால, இவ்வளோ, அழகான, வார்த்தைகளை பேசினாய். நான் ஒரு கார்யமாகத் தான் வந்திருக்கேன். நான் ஸித்தாஸ்ரமம் ங்கிற ஒரு இடத்துல, ஒரு யாகத்தை பூர்த்தி பண்ணி, ஸித்தி அடையணும்னு முயற்சி பண்றேன். ஆனா, மாரீசன்,சுபாஹு,ங்கிற, ரெண்டு ராக்ஷதர்கள் வந்து, அதை தடுத்துண்டே இருக்கா. நீ உன்னுடைய மூத்த பிள்ளை ராமனை, என்னோட அனுப்பு, நான், அவனுக்கு அஸ்த்ரங்கள், எல்லாம், உபதேசம் பண்ணி, அவன் மூலமா, நான், என்னோட யாகத்தை, காப்பாத்திக்கறேன்” அப்படீன்னு சொல்றார்.

இந்த வார்த்தைகளை, கேட்ட உடனே, தசரதர், ரொம்ப பயந்து போயிடறார். அப்புறம், வசிஷ்டர் சமாதானம் பண்ணி, அப்புறம், ராமரை,விஸ்வாமித்ரர் கூட அனுப்பறார். அது, அப்புறம் கதை. இந்த இடத்துல அந்த ஸ்லோகம் வரது

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்யப்பாக்ரமம் |

வசிஷ்டோsபி மஹாதேஜா: யே சேமே தபஸி ஸ்திதா: ||

“நான் இந்த ராமனை, உள்ளபடி யாரென்று தெரிந்து கொண்டு இருக்கிறேன். வசிஷ்டர் போன்ற, தபஸ் பண்ணின ஞானிகளுக்கு தான், அவன் யாரென்று தெரியும், அதனால, நீ அவனை, உன்னோட பிள்ளை னு நினைச்சு, பாசத்துனால தடுமாறாதே”, அப்படீன்னு சொல்றார். அதாவது, “ராமர் சாக்ஷாத் விஷ்ணு பகவான் தான், பூமியில ராமராக அவதாரம், பண்ணியிருக்கார்”ங்கிற ரஹஸ்யம், தபஸ்விகளுக்கு தான் தெரியும், எல்லாருக்கும், தெரியாது, அப்படீங்கிறது, விஸ்வாமித்ரர் அப்படிசொல்றார்.

இன்னிக்கு இந்த ஸ்லோகத்தை, வெச்சுண்டு, நான் பார்த்து, மஹான்கள், எப்படி, ராமரை அனுபவிச்சு இருக்கா அப்படின்னு சொல்றேன்.

மஹாபெரியவா, ஒவ்வொரு வருஷமும், ராமா நவமியை, விசேஷமா, கொண்டாடி இருக்கா. தன்னுடைய, (பூர்வாச்ரம) சொந்த தங்கையுடைய பிள்ளை, சந்திரமௌலி மாமா, நான் அவரை பார்த்து இருக்கேன். அவர் கிட்ட, மஹாபெரியவா ஒரு நாள் வால்மீகி ராமாயணம் புஸ்தகத்தை குடுத்து “பாராயணம் பண்ணு. இங்க உட்கார்ந்து பண்ணிண்டே இரு, நான் வரேன். நான் ஸ்நானம் பண்ணிட்டு வரேன். ராம ஜனனம் கட்டத்தும் போது என்னை கூப்பிடு” ன்னு சொல்லி, அந்த ராம ஜனன கட்டத்தும் போது, வந்து உட்கார்ந்துண்டு, முழுக்க கேட்டுட்டு, “நீ தினமும், ஒரு ஸர்க்கமாவது, படிச்சுண்டு வா”, அப்படீங்கறார். இவர், தொண்ணூறு வயசுல, “நான் ஒரு ஸர்க்கமாவது படிக்கறேன், நேர இருக்கும்போது, கூட, படிச்சிருக்கேன், ஒரு ஸர்க்கமாவது படிச்சிருக்கேன்”, அப்படீன்னு சொல்றார். அவர், ராம அனுக்ரஹத்தில் க்ஷேமமாக  இருந்தார். அப்படி, மஹா பெரியவா, தனக்கு  நெருங்கின ஒருத்தருக்கு, இந்த இராமாயணத்தை, உபதேசமா எடுத்து, வெச்சு, நித்யம் அவரை, பாராயணம் பண்ண வெச்சிருக்கார்.

மஹாபெரியவா ஒரு வாட்டி பேசும்போது சொல்றா, நான் ராமருடைய காலத்துல பொறக்கல. ஏன்னா ராமர் வந்து, ரிஷிகளை தேடித் தேடி போயி நமஸ்காரம் பண்றார். நான் ராமர் காலத்துல பொறந்துருந்தேன்னா, ஸந்யாசியா வேற இருக்கேன், அவர் வந்து என்னை நமஸ்காரம் பண்ணியிருப்பார். இப்போ, நான் ராமரை நமஸ்காரம் பண்ணி பண்ணி சந்தோஷப் படறேன்”, அப்படீன்னு சொல்றா பெரியவா.

அதே மாதிரி, “நம்முடைய தேசத்துல, ஒரு நாடகம் போட்டாலும் சரி, ஒரு கவிதைகள்லயும் சரி, literatureலயும் சரி, ஒரு கதகளியோ, ஒரு சங்கீத கச்சேரியோ, எல்லாத்துலயும் ராமனையே பேசறாளே, அப்படீன்னு தோன்றது, ஆனா பாயஸம் யாராத்துல பண்ணிணாலும் அதுல சக்கரை தானே போட்டாகணும், அதனால, இனிமையான வஸ்து ராமன்தான். அவனைத் தான் பேசணும், அப்படீங்கறா. இப்படி, ராமனை வந்து பெரியவா, அனுபவிச்சிருக்கா.

சிவன் சார்  ஏணிப்படிகளில் மாந்தர்கள்லயும், பகவான், ராமராக, அவதாரம் பண்ணி, நம்முடைய வாழ்கையில, நாம எப்படி நடந்துக்கணும், அப்பாக்கு பிள்ளை, எப்படி நடக்கணும், அண்ணாக்கு தம்பி எப்படி நடக்கணும், தம்பிகிட்ட, அண்ணா எப்படி, நடந்துக்கணும்னு, இப்படி, கணவன், மனைவி, நண்பர்களுக்குள்ள, ஒருத்தரை ஒருத்தர், எப்படி நடத்தணும், இதெல்லாம், வாழ்ந்து, காண்பிக்கறதுக்காக பகவான், பூமியில, அவதாரம், பண்ணார். அவருடைய, அந்த சரித்ரத்தை, நாம அடிக்கடி ஸ்ரவணம் பண்ண வேண்டும். இராமாயணத்தை, அடிக்கடி, ஸ்ரவணம் பண்ணனும், அப்படீன்னு, சார் எழுதி இருக்கார்.

(நமது ஏராளமான தெய்வீக புராணங்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கூட, ராமாயணத்தை மட்டும் இடைவிடாமல் திரும்பத் திரும்ப ச்ரவணம் செய்து வரும் வழக்கத்தை ஏற்று வருகிறோம். காரணம், பல விதமான துறைகளில் வாழ்க்கையை ஏற்று வரும் உலகப் பற்றுள்ள நாம் உத்தமர்களாக இயங்க வேண்டிய முறைகளை சித்தரித்திருப்பதே ராமாயணமாகும். அதாவது இந்த ஓர் அவதாரத்தில்தான் பகவான் ஓர் ஸாதாரண மனிதராகவும் ஆனாலும் ஓர் சிறந்த விவேகியின் தன்மைகளைக் கொண்ட ராஜகுமாரனாகவும் பிறந்தார். தெய்வீக சக்திகளைக் கொண்ட அவதார மகானாகவோ, அமானுஷ்யமான துறவியாகவோ அவர் இயங்கவில்லை. சிற்சில ஸமயங்களில் தனது உண்மையான ஸ்வயரூபத்தை காட்டி வந்த கிருஷ்ணனை போலவும் இயங்கவில்லை. எனவே அவர் ஸாதாரண மானிடர்களைப் போல ஸுகதுக்கங்களுக்கும் இலக்காகி வந்தார். ஆகவே லங்கேச்வரனிடம் யுத்தம் புரிய வேண்டியதின் பொருட்டு ஸுக்ரீவனுடனுடைய தயவை நாட நேரிட்டுவிட்டது. நிற்க, வாலி ஸம்ஹாரத்தை பற்றிய சர்ச்சையில் தற்காலத்திய சிறிய மனிதர்கள் இறங்கியிருக்கின்றனர். இது தேவையில்லை. தவறான நடவடிக்கையைக் கொண்ட ஒருவனை தண்டிக்க அரசனுக்கு உரிமை உண்டு. வாலியை நேரிடையாக ஸம்ஹரிப்பதில் ஓர் இக்கட்டு இருந்தாலும், ராமர் அவதார மகானாகவோ அல்லது பகவானுடைய ப்ரத்யேக அவதாரமாகவோ தோன்றியிருந்தால் அந்த இக்கட்டு ராமபிரானிடத்தில் செல்லாது. ஆனால் ராமர் ஓர் மானிட அரசராக இருந்ததினாலும் தகாதவர்களை தண்டிக்க ராஜதந்திரம் அல்லது உபாயத்தை நாட அரசர்களுக்கு உரிமை அளிக்கப் பட்டிருப்பதாலும், ராமர் மறைந்திருந்து வாலியை ஸம்ஹரித்ததில் நியாயத்தை கொள்ளாமல் இருக்கக் கூடாது. (ஏணிப் படிகளில் மாந்தர்கள் – ஸ்ரீ சிவன் சார்)

அப்படி, பகவானாக, நினைச்சு, ராமர்கிட்ட பக்தி பண்ணனும், இராமாயணத்தை, அடிக்கடி வாசிக்கணும். நம்முடைய, மனசு, பண்படும். அப்படீன்னு சிவன் சார், எழுதியிருக்கார்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், வால்மீகி ராமாயணத்தையே வாழ்ந்தார். வால்மீகி ராமாயணத்துக்காகவே வாழ்ந்தார்.

அப்படி தபஸ் பண்ண மஹான்கள் தான், ராமரை, பகவானாக உணர்ந்து, வழிபட்டு, க்ஷேமம் அடைஞ்சா. எதுக்கு, இதை சொல்றேன்னா, இப்பல்லாம் வர புஸ்தகங்கள் ல ராமாயணத்துல, ராமரை, மனுஷனாதான் சொல்லியிருக்கா. ஏதோ பால காண்டத்துல, ஒரு ஸர்கம் சேர்த்து, விஷ்ணு, அவதாரம் பண்ணார்னு, சொல்லி, யுத்த காண்டத்துல ஒரு ஸர்கம், சேர்த்து, ராமரை, கடவுள் ஆக்கிட்டா. பாலகாண்டமே இடைச்செருகல், அயோத்தியா காண்டத்துல இருந்துதான், கதை ஆரம்பிக்கறது, இப்படியெல்லாம், ஆராய்ச்சி புத்தியோட இராமாயணத்தை பாக்கறா. ஸ்வாமிகள், அப்படி பண்ணக் கூடாதுன்னு, என்னை தடுத்தார். அதனால நான் பிழைச்சேன். அந்த மாதிரி, பாக்கறதுனால, லாபமே இல்லை. இப்ப ஒரு மாசமா நான் ராமாயணம் சொல்றேன். எவ்வளவோ பேர் கேட்டு, ரொம்ப ஆனந்தபட்டு, “இதுலேயிருந்து நிறைய தெரிஞ்சுக்கறோம்”, அப்படீன்னு, என் கிட்ட சொல்றா. இது பக்தியோட, ராமாயணத்தை approcah பண்ணதுனால, இவ்வளோ லாபம், நமக்கு, என் வாழ்க்கை முழுக்க எனக்கு, வழிகாட்டியாக, ராமாயணம் இருக்கு. அப்படி இல்லாம, ஆராய்ச்சி பண்ணி, ராமாயணம், வந்து 3௦௦௦B.C ல தானே எழுதினது, யுகக் கணக்கெல்லாம் ஆகலை, அப்படீன்னு சொல்லி, என்ன பிரயோஜனம்? அதைப் தெரிஞ்சுண்டு, என்ன பிரயோஜனம்? ராமகிருஷ்ண பரமஹம்சர், சொல்றார், “ஒரு தோட்டத்துக்குப் போனா, எவ்வளோ மரங்கள், அதுல எவ்வளோ கிளைகள், இந்த ஆராய்ச்சி உனக்கு என்னத்துக்கு, பழத்தை எடுத்தியா சாப்பிட்டியா, சந்தோஷப் பட்டயான்னு, இந்த பூமியில, கொஞ்ச நாள் நாம இருக்கப் போறோம், இதுல, எதுக்கு ஆராய்ச்சி பண்றே? பகவானை, அனுபவிக்கறதுக்கு. வந்திருக்கே, அனுபவிச்சுட்டுப் போ”, அப்படீன்னு சொல்றார்.

அப்படி ராமாயணத்தை, நாம பக்தியோட, படிச்சோம்னா ரொம்ப நிறைய நல்லது தெரிஞ்சுக்கலாம், நமக்கு ராம அனுக்ரஹம் கிடைக்கும். இராவணன் ராமரை, ரொம்ப சாதாரணமா எடை போட்டான். சீதாதேவியை தூக்கிண்டு வந்து, சிறை வெச்சுட்டு, ஒரு எட்டு பேரை கூப்பிட்டு, “ஜனஸ்தானத்துல யாரோ, ராமன்னு, ஒருத்தன் வந்திருக்கான், அவன் எனக்கு, எதிரி ஆயிட்டான். அவனை போயி நீங்க வதம் பண்ணிடுங்கோ”, அப்படீன்னு அனுப்பறான், அவ்வளோ lightஆ எடுத்துக்கறான்.

அப்புறம், ஹனுமார் வந்துட்டு, போன பின்ன,கொஞ்சம் பயப்படறான். ராமரே பாலம் கட்டி, வந்த பின்ன, என்னடான்னு கவலைப் பாட்டு, யுத்தத்துக்கு ஏற்பாடு எல்லாம் பண்றான். அப்பக் கூட, அவனுக்கு, நல்லது, சொல்றவா, எல்லாரையும் திட்டறான். விபீஷணனை விரட்டி அனுப்பிச்சுடறான். மால்யவான்ன்னு ஒரு மாமா தாத்தா. அவன்கிட்ட “இது வந்துருக்கறது பெரிய எதிரி, நீ பணிஞ்சு போ அப்படீன்னா போது, இந்த ராவணனை வெட்டி போட்டாலும், இன்னொருர்த்தர் கிட்ட தலை வணங்க மாட்டான், அப்படீன்னு கர்வமா பேசறான். அப்புறம், அவனோட தம்பிகும்பகர்ணன் வதமாயிடறான். அவனுடைய சேனாதிபதி பிரஹஸ்தன் வதமாயிடறான், அவனுடைய பிள்ளைகள் எல்லாம், வதமாகறா. இதெல்லாம், பார்க்கும் போது தான், “ஆஹா, வந்திருக்கறது, சாக்ஷாத் நாராயணன்தான், விஷ்ணு பகவானே வந்திருக்கார்னு நான் நினைக்கிறேன்”, அப்படீன்னு, சொல்றான். அப்புறம், இந்த்ரஜித் வதமாயிடறான். அப்புறம் இவனும் போயி, உயிரை விடறான். ஏதோ,  க்ஷத்ரிய தர்மத்தை கடைபிடிச்சு, யுத்தம் பண்ணா, அதுல கடைசி வரைக்கும் இருந்து, உயிரை விடணும்னு விட்டான். அதனால, ராமர் “அவனுக்கு நீ ஸம்ஸ்காரம் பண்ணு” என்று விபீஷணன்கிட்ட சொல்றார்.

அப்படி ராமரை, எளிமையா எடை போட்டதுனால, அவனுக்கு அழிவே ஏற்பட்டது. நாம ராமர் கிட்ட பக்தி பண்ணுவோம். ஆராய்ச்சி புத்தியோட அணுகாமல், ராமாயணத்தை பக்தியோட புரிஞ்சுண்டு, ஸ்ரீ ராம நவமி வர்றது. பத்ரம், புஷ்பம், பலம், தோயம், அப்படீன்னு, ஜலம், ரெண்டு புஷ்பம், ரெண்டு துளசி, பழங்கள், இவ்ளோ தான் பகவான் கேட்கறார். ஒரு நீர் மோர், பானகம், அதை நைவேத்யம்  பண்ணி, இந்த பூஜாவிதானத்துல இருக்கற ராமரோட அஷ்டோத்தரத்தை சொல்லி, ஒரு கற்பூரம், காண்பிச்சு,ஒரு நமஸ்காரம், பண்ணா, ராமர், அனுக்ரஹம் பண்ண போறார். நமக்கு அந்த பக்தி வேணும் அவ்வளோதான். எல்லாரும் நாளைக்கு, ஸ்ரீ ராம நவமியை நன்னா கொண்டாடுவோம்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.