Tag: தமிழில் வால்மீகி ராமாயணம்

பரதனின் பிரார்த்தனை

rama and bharatha108. எல்லோரும் ராமருடைய பர்ணசாலையை அடைகிறார்கள். கௌசல்யா தேவி சீதையிடம் தன் சொந்தப் பெண்ணைப் போல் அன்பு பாராட்டுகிறாள். பரதன் ராமரிடம் ‘நம் தந்தை தவறான இந்த ஏற்பாட்டை செய்து விட்டு காலமாகி விட்டார். நாங்கள் அனைவரும் உங்களை அயோத்திக்கு மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம். உன் தம்பியும், சிஷ்யனும், அடிமையுமான என் வேண்டுதலை ஏற்று நீ அயோத்திக்கு திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்க வேண்டும். எனக்கு அரசனாகும் தகுதி கிடையாது. உனக்கு தான் அந்த தகுதி உண்டு’ என்கிறான். ராமர் ‘தாய் தந்தையர்களை அறியாமையினால் குறைவாக பேசாதே. பிள்ளைகளை எந்த விதத்திலும் ஆணையிட அப்பாவிற்கு உரிமை உண்டு. அவர் உனக்கு ராஜ்யத்தையும் எனக்கு வனவாசத்தையும் தந்திருக்கிறார். அதை நாம் அப்படியே ஏற்க வேண்டும். மாற்றக் கூடாது’ என்று கூறுகிறார்.

[பரதனின் பிரார்த்தனை]

Share

ராமர் பிதுர்தர்ப்பணம் செய்தார்

kousalya lakshmana107. பரதன் சொன்ன சோகச் செய்தியைக் கேட்டு ராமர் மயக்கம் அடைகிறார். பின் தெளிந்து ‘என் பிரிவால் இறந்த என் தந்தையின் ஈமக் கடன்களைக் கூட நான் செய்ய முடியவில்லையே. தசரதர் இல்லாத அயோத்திக்கு நான் திரும்ப வரப்போவதில்லை. அனாதைகள் ஆகி விட்டோமே லக்ஷ்மணா’ என்று பலவாறு புலம்புகிறார். மந்தாகினி நதியில் தசரதருக்கு தர்ப்பணம் செய்து, தான் அன்று உண்ட பிண்ணாக்கை தந்தைக்கு பிண்டமாக சமர்ப்பிக்கிறார். இவர்கள் அழும் சத்தம் கேட்டு எல்லோரும் ராமர் அருகில் வருகிறார்கள். அம்மாக்கள் ராம லக்ஷ்மணர்களை கட்டி அணைத்து அன்பு பாராட்டுகிறார்கள். சீதையின் நிலையை எண்ணி கௌசல்யை வருந்துகிறாள்.

[ராமர் பிதுர்தர்ப்பணம் செய்தார்]

Share

பரதனுக்கு ராமர் உபதேசம்

rama-bharat106. ராமர் பரதனுக்கு மேலும் பல ராஜ தர்மங்களை உபதேசிக்கிறார். முடிவாக ‘நம் முன்னோர்கள் சென்ற வழியில் தர்மத்தை முன்னிறுத்தி ஆட்சி செய். நல்ல அரசனுக்கு இவ்வுலகில் கீர்த்தியும் மேலுலகில் சுவர்க்கமும் கிடைக்கும்’ என்று சொல்லி முடிக்கிறார். பரதன் ‘மூத்தவன் நீ இருக்க இளையவனான எனக்கு எப்படி பட்டம் சூட்ட முடியும்? எங்களோடு அயோத்தி திரும்பி வந்து நீ தான் அரசனாக பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும். நீ காட்டிற்கு வந்த பின் உன் பிரிவினால் வருந்தி நம் தந்தையார் காலகதி அடைந்து விட்டார்’ என்று கூறுகிறான்.

[ராமாயணத்தில் அரசாட்சி]

Share

ராமர் ராஜதர்மங்களை உபதேசித்தல்

bharatha and rama105. பரதன் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து வணங்குகிறான். ராமர் அவனை எடுத்து அணைத்து அன்பு பாராட்டுகிறார். பின்னர் தசரதரைப் பற்றியும் தாய்மார்களைப் பற்றியும் விசாரிக்கிறார். அதன் பின் பல்வேறு ராஜ தர்மங்களை எடுத்துக் கூறுகிறார்.

[ராமர் பரதனுக்கு உபதேசித்தல்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

பரதன் ராமரை தரிசித்தான்

bharata meets rama 2104. பரதன் சத்ருக்னனிடம் ‘சந்திரன் போன்ற முகம் படைத்த ராமரையும், லக்ஷ்மணரையும் சீதா தேவியையும் தரிசித்து, ராமருடைய ராஜ லக்ஷணங்கள் பொருந்திய பாதங்களை என் தலையில் தாங்கி, அவரை அழைத்துச் சென்று அயோத்தியில் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் வரை எனக்கு நிம்மதி ஏற்படாது. இந்த மலையும் நதியும் குகைகளும் சீதையும் லக்ஷ்மணரும் தான் பாக்யசாலிகள்’ என்று பலவாறு புலம்பியபடி ராமரைத் தேடுகிறான். பர்ணசாலை வாயிலில் ஜடை பூண்டு மரவுரி அணிந்து அக்னிக்கு நிகரான தேஜஸோடு தர்பையில் அமர்ந்திருக்கும் ராமரை தரிசிக்கிறான்.

[பரதன் ராமரை தரிசித்தல்]

Share

ராமரின் சகோதர பாசம்

Rama_Lakshmana103. பரதன் படையுடன் வருவதைக் கண்ட லக்ஷ்மணன் கோபத்தோடு ‘ராஜ்யத்தில் பேராசை கொண்ட பரதன் நம்மைக் கொல்ல படையோடு வருகிறான். இன்று இவனைக் கொன்று ராஜ்யத்தை உனக்கு அளிக்கிறேன்’ என்று கர்ஜிக்கிறான். ராமர் ‘மகாவீரனும், புத்திமானுமான பரதன் தானே என்னிடம் வரும்போது வில்லிற்கும் கத்திக்கும் என்ன வேலை?  ராஜ்யத்திற்காக அண்ணன் தம்பிகள் யுத்தம் செய்வதா? பந்துக்களுக்கு தீமை விளைந்து அதனால் எனக்கு ஒரு பொருள் கிடைக்குமானால் அது எனக்கு விஷம் போன்றது. உங்களுக்கு இல்லாமல் எனக்கு மட்டும் ஒரு சுகம் கிடைத்தால் அதை நெருப்பு பொசுக்கட்டும். பரதனை ஏன் சந்தேஹப் படுகிறாய்? ராஜ்யத்தை என்னிடம் தருவதற்காகவே வருகிறான். உனக்கு ராஜ்யத்தில் ஆசை இருந்தால் உன்னிடம் தரச் சொல்கிறேன்.’ என்று சொன்னதும் லக்ஷ்ணமன் வெட்கம் அடைகிறான்.

[லக்ஷ்மணர் கோபம் ராமர் சமாதானம்]

Share

சித்ரகூடத்தில் சீதையோடு ராமர்

sitadevi and srirama102. ராமர் சீதையை அழைத்துக் கொண்டு சித்ரகூட மலையில் உள்ள அழகான குகைகள், மரங்கள், மூலிகைச் செடிகள், பூக்கள், பறவைகள், மிருகங்கள், கின்னரர்கள், வித்யாதரர்கள், இவற்றை காண்பிக்கிறார். ‘உன்னோடும் லக்ஷ்மணனோடும் இந்த சித்ரகூடத்தில் நூறு வருடங்கள் இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமுமே தெரியாது. நீங்கள் எனக்கு அனுகூலமாக இருப்பதாலும், இந்த மலையும் நதியும் ரிஷிகளும் உள்ள சூழ்நிலை மிக ரம்யமாக இருப்பதாலும் நான் மிக ஆனந்தமாக இருக்கிறேன். இது அயோத்தியில் அரசாட்சியை விட மேலான சந்தோஷத்தை எனக்கு அளிக்கிறது’ என்று கூறுகிறார். பின்னர் அவர்கள் மந்தாகினி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு ஆஸ்ரமத்தை வந்து அடைகிறார்கள்.

[சித்ரகூடத்தில் சீதையோடு ராமர்]

Share