107. பரதன் சொன்ன சோகச் செய்தியைக் கேட்டு ராமர் மயக்கம் அடைகிறார். பின் தெளிந்து ‘என் பிரிவால் இறந்த என் தந்தையின் ஈமக் கடன்களைக் கூட நான் செய்ய முடியவில்லையே. தசரதர் இல்லாத அயோத்திக்கு நான் திரும்ப வரப்போவதில்லை. அனாதைகள் ஆகி விட்டோமே லக்ஷ்மணா’ என்று பலவாறு புலம்புகிறார்.
[ராமர் பித்ருசோகம்
மந்தாகினி நதியில் தசரதருக்கு தர்ப்பணம் செய்து, தான் அன்று உண்ட பிண்ணாக்கை தந்தைக்கு பிண்டமாக சமர்ப்பிக்கிறார். இவர்கள் அழும் சத்தம் கேட்டு எல்லோரும் ராமர் அருகில் வருகிறார்கள். அம்மாக்கள் ராம லக்ஷ்மணர்களை கட்டி அணைத்து அன்பு பாராட்டுகிறார்கள். சீதையின் நிலையை எண்ணி கௌசல்யை வருந்துகிறாள்.
[ராமர் பிதுர்தர்ப்பணம் செய்தார்]